Skip to main content

Posts

Showing posts with the label கல்வெட்டுக்கள்

இராஜராஜ சோழரின் பள்ளிப்படை

இராஜராஜ சோழரின் பள்ளிப்படை எங்கே இருந்தது, உடையாளூர் அருகே ஒரு லிங்கம் உள்ளது அதை தான் அவரது பள்ளிப்படை என்கிறார்கள் அதிலும் உறுதி தன்மை கிடையாது, சமிபத்தில் தஞ்சையில் தான் அவருக்கு பள்ளிப்படை இருந்தது, அந்த கல்வெட்டு அனைத்தும் இராஜராஜ சோழரின் அருங்காட்சியகத்தில் உள்ளது என்கிறார்கள், பள்ளிப்படை கோவிலை புனரமைப்பு செய்ததாகவும் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டும் உள்ளது. தகவல் தெரிந்தவர்கள் இந்த சந்தேகத்தை தீர்க்கவும். இராஜராஜரின் பள்ளிப்படை கல்வெட்டு. ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில் பெரியதிருமண்டபமுன்...டுப்பு ஜீ(ர்) நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர் யகம் செய்துநின்ற ஜயசிங்ககுல கா வளநாட்டு குளமங்கல நாட்டு சா மங்கலத்து சாத்தமங்கலமுடை ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ டன் விரதங்கொண்டு செய்தார் இ (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ யமந அறங்காட்டிப்பிச்...

கோவை அருகே உள்ள வேடபட்டியில் தமிழ் பிராமி எழுத்து பெறிப்பு கண்டுபிடிப்பு தமிழகத்தில் முதன் முதலாக ஈம தாழி என்று எழுத்து கிடைத்தது உள்ளது

கற்கால மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 5 குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல சிறிய குகைகள் உள்ளன. அவற்றில் 3 குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் அமைந்துள்ளன. இந்த பாறை ஓவியத்தில் வேட்டைகாட்சிகள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்கள் சிலர் ஒரு புலியை சுற்றி வளைத்து தாக்குவது போன்ற காட்சி சிறப்பாக தீட்டப்பட்டுள்ளது.மற்றொரு கூட்டத்தினர் விலங்கை சுற்றி வளைத்து பிடித்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்கிற காட்சியையும், கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதர்களையும் சூரியன் காட்சியையும் வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்துக்கொண்டு வரும் மனிதனையும் வரைந்துள்ளனர்.மேலும் யானையின் உருவத்தையும் கருவுற்ற விலங்குகளின் உருவத்தையும் தீட்டி இருக்கின்றனர்.இதை தொல்லியல் ஆய்வாளரும் தமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் கண்டுபிடித்துள்ளார். நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், இடைக்காலம் என தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான சான்ற...

வெங்கடாசலபுரம் செக்கு கல்வெட்டு

தஞ்சை பெரிய கோயில்

தமிழக கோயிற்கலை வரலாற்றில், தஞ்சை பெரிய கோயில் திருச்சுற்று மாளிகையில் எடுக்கப்பெற்ற பரிவார ஆலயமான உமா பரமேஸ்வரி ஆலயமே தனியாக அம்மன் கோயில் உருவாக்கும் மரபை தோற்றுவித்த முதற் கோயில் எனக் கூறலாம்.இந்த மரபை தோற்றுவித்த அம்மன்னன் அதற்குரிய கல்வெட்டு சான்றுகளை யும் நமக்கு விட்டுச்சென்றுள்ளார்.வடக்கு திருச்சுற்று மாளிகையில் காணப்பெறும் கல்வெட்டு ஒன்று இந்த செய்தியை நமக்கு தெரிவிக்கின்றது. கல்வெட்டு உள்ள இடம்:- பிற்கால பாண்டியர் காலத்து அம்மன் ஆலயத்திற்கு நேர் பின்புறத்தில் வடக்கு திருச்சுற்று மாளிகை. மன்னன்:- முதலாம் இராசராசன். காலம்:- இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டு. கி.பி.1014. 1. ஸ்வஸ்திஸ்ரீ: உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வர.... 2. ம் உடையார்க்கு ஸ்ரீகாரியம் செய்கின்.... 3. ற ஆற்றூடையான் நக்கன் தோன்றி.... 4. உடையார் கோயிலில் திருச்சுற்று மாளி.... 5. கையில் ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு.... 6. உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்.... 7. பதாவது வரை கொடுத்தன கல்லில் வெட்டியபடி ஆல.... 8. யத்து உமாபரமேஸ்வரியார்க்கு சாத்தி அருளக் குடுத்த தாலி.... 9. ஒன்று பொன் ஆடவல்லானால் இருகழஞ்சரை இவர்க்கே ஸ்ர...

தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப் பட்ட மிக அரிய தமிழ்க் கல்வெட்டு

தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப் பட்ட மிக அரிய தமிழ்க் கல்வெட்டு இதுவாகும். பெருந்துறைமுகமாகவும் மாநகரமாகவும் வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கிய கேண்ட்டன் என்னும் நகரம் தென்சீனாவின் மிக முக்கியமான பட்டினம். இந்தக் கல்வெட்டு கேண்ட்டன் நகருக்கும் வடக்கே 500 மைல் தூரத்தில் உள்ள ச்சுவான் ச்சௌ என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. ச்சுவான் ச்சௌ என்பதும் ஒரு முக்கிய துறை முகப்பட்டினமாக ஒரு காலத்தில் விளங்கியது. தமிழகத்துக்குச் சீனாவுடன் நேரடியாகவும் மற்ற நாடுகளின் மூலமும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கேண்ட்டன் முதலிய பட்டினங்களில் தமிழர்கள் குடியேற் றங்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர். குறிப்பாக வர்த்தக நிறுவனங்களும் கூட்டுற வுக் கழகங்களும் வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குப்லாய்கான் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய அரசனான செங்கிஸ்கானுடைய நான்காவது மகனின் மூன்றாவது மகன். இவர் தான் பெய்ஜிங் நகரைக் கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினார். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவர் திகழ்ந்தார். புகழ்பெற்ற யுவான் அரச மரபை தொடங்கியவர். தமிழ்நாட்டில் பிற்காலப்...

Isai (Music) Tamil inscription

Ancient Tamil Civilization's photo. Ancient Tamil Civilization's photo. Ancient Tamil Civilization's photo. Ancient Tamil Civilization's photo. Arachalur Music Inscription The cave inscriptions in Arachalur town, about 20 km from Erode. These are Isai Tamil – one of the three literary divisions of Tamil – inscriptions which date to the 2nd century B.C. The inscriptions, which were discovered by Raju, are important as they talk about dancing notes (tala). Isai (Music) Tamil inscription in ruins The oldest Isai Tamil inscription, dating back to the 2nd century, is no longer visible clearly. Soot, ash and stones have rendered illegible the inscription, which is in Tamili. It is in a cave, on the western end of the hillock in Arachalur. The inscriptions are tala notes (adavu) that a Bharatnatyam dancer dances to. It has five lines and as many rows, resembling a five-row - five-column matrix. It has been arranged in such a way that read either from left to right or ...

திருக்கோவிலூர் கபிலக்கல் கல்வெட்டு

கீழூர் வீரட்டானேசுவரர் கோயில் கல்வெட்டில் பாரியின் பெண்களை மலையமானுக்கு அளித்தபின் கபிலர் தீப்பாய்ந்து இறந்த விபரம் கூறப்படுகிறது. அக்கல்வெட்டு உள்ள கல் ‘கபிலக்கல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. ‘முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை அலைபுனல் அழுவத்து அந்தரிட் சஞ்செல மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக் கனல்புகும் கபிலக்கல்’ என்பது அக்கல்வெட்டாகும். Thanks-Vijay pallava

கங்கை கொண்ட சோழனின் மெய்க்கீர்த்தி

கங்கை கொண்ட சோழனின் மெய்க்கீர்த்தி ஸ்வஸ்திஸரீ திருமன்னி வளர இருநில மடந்தையும் போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும் தன்பெருந் தேவியர் ஆகி இன்புற நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும் துடர்வன வேலிப் படர்வன வாசியும் - - - - - - - - 5 சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும் நண்ணற்கு அருமரண் மண்ணைக் கடக்கமும் பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த - - - - - - - -10 சுிந்தர முடியும் இந்திரன் ஆரமும் தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும் எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும் குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத் - - - - -15 தொல் பெருங்காவல் பல்பழந் தீவும் செருவில் சினவி இருபத்து ஒருகால் அரைசு களைகட்ட பரசு ராமன் மேவரும் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும் - - - 20 பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியல் இரட்ட பாடி ஏழரை இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் - - - - - - - 25 முதிர்பட வல்லை மதுர மண்டலமும் காமிடை வளைய நாமணை...

அறச்சலூர் இசைக் கல்வெட்டு

அறச்சலூர் இசைக் கல்வெட்டு 

மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு கல்வெட்டு :- .. மைசூர் மன்னர் கந்திருவ நரச ராஜாவுக்கும் மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடையே நடந்த மூக்கறுப்பு போர் நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. எ வாயேஜ் டு தி ஈஸ்ட் இண்டியா என்னும் நூலை எழுதிய ஜெ.எச்.குரோஸ் மைசூர் படையின் தனித்துவமாக மூக்கறுப்பு இருந்தது. அவர்கள் மிகச்சாமார்தியமாகவும் எளிதாகவும் மூக்கை அறுத்து மைசூருக்கு அனுப்பி வைத்தனர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் 1679 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்து தீர்மானம் ஒன்றில் மூக்கறுப்பு செயல்பாடு பற்றிய குறிப்பொன்றும் இடம் பெற்றுள்ளது (மதுரை நாயக்கர் வரலாறு ,பக்கம் 147 ஆசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர்) இவை மட்டுமே மூக்கறுப்பு போருக்கு ஆதாரமாய் இருந்தன...கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை. மதுரை மீது வலிந்து சண்டைக்கு போன மைசூர் அரசர் கந்திருவ நரச ராஜா 1656 ல் சத்திய மங்கலத்துக்குள் ஊடுருவ உத்தரவிட்டார். இந்த சத்தியமங்கலம் சேலம் மாவட்டத்தில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாய் இப்போதும் 1652 ஆம் ஆண்டின் சேலம் மாவட்டத்து எருமைப்பட்டி கல்வெட்டு சான்றாக உள்ளது. 1655-56 ஆம் ஆ...

உடுமலை அருகே தளிஞ்சியில் புதிய கல்வெட்டுகளும் பெருங்கற்படை ஈமச் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உடுமலை மூணாறு சாலையில் சின்னாறு சோதனைச் சாவடியைக் கடந்து,  சம்பக்காட்டில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு நடந்து சென்றால் வரும் மலைவாழ் கிராமம் தளிஞ்சி. பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த ஊரில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம், தொல்லியல் ஆர்வலர் ஜான்சன் கொடுத்த தகவலின்படி தளிஞ்சியில் ஆய்வு செய்தார். அவர் தெரிவித்த தகவல்கள்: தளிஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களின் நடுவில் ஓரிடத்தில் கல் சிற்பங்கள் சிதறிக் கிடந்தன. அருகே இரண்டு துண்டாக உடைந்த கல்வெட்டு வரிகளுடன் கூடிய பலகைப் பாறைக்கல் இருந்தது. 2 நந்தி சிலைகளும், ஒரு பெண் தெய்வச் சிற்பமும், ஒரு நாகர் சிற்பமும், நந்தியின் தலைப்பகுதிச் சிற்பமும் குவியலாகக் கிடந்தது. பெண் தெய்வச் சிற்பம் மூன்றாக உடைந்து கிடந்தது. பீடத்தோடு கூடிய பாதப்பகுதி, தலை மற்றும் உடல் பகுதி கிடந்தது. நந்தி சிலை கிடந்ததால் இங்கு சிவன் கோவில் இருந்திருக்க வாய்ப்புண்டு. இக்கல்வெட்டுகளை ஆய்வு செய்ததில், தென்கொங்கு பகுதியை ஆட்சி செய்த வீரகேரள அரசனா...

பாசனக் கல்வெட்டு-சாத்தான்குளம்,மூப்பனார் புதுக்குளம்.08.03.14

பாசனக் கல்வெட்டு-சாத்தான்குளம்,மூப்பனார் புதுக்குளம்.08.03.14

சாத்தான்குளம் அருகே கொம்பன்குளத்தில் ஸ்ரீ கோதா சமேதா ராஜகோபாலசுவாமி கோயிலில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்பன்குளத்தில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கல்வெட்டுக்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஆறுமுகநேரி முனைவர் த.த.தவசிமுத்து தெரிவித்ததாவது, சாத்தான்குளத்திலிருந்துசுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் கொம்பன்குளம் என்ற சிற்றூர் உள்ளது.இங்கு ஸ்ரீ கோதாசமேதா ராஜகோபாலசுவாமி திருக்கோயில் சிற்பக்கலை நயத்துடன் அமைந்துள்ளது.பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்று, விஜயநகர காலத்தில் மண்டபங்களும் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் பெரும்பகுதி வெள்ளைக்கற்களால் அமையப்பெற்றது. மூலவராக ஸ்ரீராஜகோபாலசுவாமி நின்ற திருக்கோலம்.கிழக்கே திருமுக மண்டலம்.வலப்புறம் ஸ்ரீகோதாநாச்சியார் இடப்புறம் பெரிய திருவடியான கருடாழ்வார் கை கூப்பி சுவாமியைக் கும்பிட்டவாறு உள்ளார்.இக்கோயிலின் மற்றொரு சிறப்பு சக்கரத்தாழ்வார் தனிசன்னிதியில் அருள் பாலிப்பது. திருமாலின் ஆயுதங்கள் ஐந்து.ஐம்படைகளெனப்படும்.அவை சங்கு, சக்கரம், கதை,வில்,மற்றும் வாள் ஆகியனவாகும்.சங்கு பாஜ்சசைன்னியம் என்றும் சக்கரம் சுதர்சனம் என்றும் கதை கெளமேதகி என்றும் வில் சாரங்கம் என்றும்...

பன்னம்பாறையில் பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் விளையாடிய பழமையான பல்லாங்குழி கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாத்தான்குளம் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது பன்னம்பாறை சிற்றூர்.தொன்மையான குலதெய்வ வழிபாட்டு மரபுகளுடன் ஊரைச்சுற்றிலும் கோயில்களுடனும் அமைந்துள்ளது. இவ்வூரின் நிலவியல் அமைப்பு பல இலட்சம் ஆண்டுள் பழமையான பாறைகளால் சூழப்பெற்றதாகும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தாங்கள் குடியிருந்த இடங்களுக்குப் பெயர்களை இட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.அவ்வகையில் பன்னம்பாறை என்ற பெயர் குறித்து இங்குள்ள மக்கள் கூறுவதாவது,முற்காலத்தில் பனைகள் நிறைந்திருந்தபடியால் பனைப்பாறையே பன்னம்பாறை என்று திரிபு ஆனது என்றும்,பன்னம் என்றால் சுண்ணாம்பு., சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டபடியால் பன்னம்பாறை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். தொல்காப்பியம் நூலிற்கு ’’வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி…..’’ என பதினைந்து அடிகளில் பாயிரம் எனப்படும் முன்னுரை எழுதியதோடு தொல்காப்பியம் நூல் திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியையும் ப...

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையில் 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக் கண்டெடுப்பு

சாத்தான்குளம் அருகே திருச்செந்தூர் சாலையில் பன்னம்பாறை என்ற கிராமம் உள்ளது.சமீபத்தில் இவ்வூரின் வடக்குப் பகுதியிலுள்ள பல்லாங்குழி ஓடைப்பாறையில் சங்ககாலத்திற்கு முற்பட்ட பல்லாங்குழி, மற்றும் பெருவழிப் பாதையைச் சுட்டிக்காட்டும் குழிகளும் கண்டறியப்பட்டன. தற்போது இங்குள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பன்னம்பாறையின் வடக்குப்பகுதியில் உள்ள ஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலின் படிக்கட்டு ஒன்றில் எழுத்துக்கள் இருப்பது கண்ட கோயிலின் பரம்பரை பூசாரி எஸ்.பரமசிவம் , தமிழக அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பயிற்சி பெற்றவரான முனைவர் த.த.தவசிமுத்து அவர்களிடம் கூறினார்..            இது பற்றி முனைவர் த.த.தவசிமுத்து கூறியதாவது,கோயிலின் படிக்கட்டாக இருந்த கல்வெட்டு ,முக்கால் அடி அகலமும் மூன்றே கால் அடி உயரமும் கொண்ட வெள்ளைக்கல்லிலான அப்பலகைக் கல்லில் ஐந்து வரிகளில் எழுத்து சிதைந்து காணப்பட்டது.இப்பலகைக் கல்லானது கல்வெட்டின் பின்தொடர்ச்சிப் பகுதி. முன்பகுதி கிடைத்தால் செய்தியை அறிந்து கொள்ள முடியும் என்ற போது,பூசாரி தாங...

பாண்டிய, சோழ விசயநகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் (தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும், தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை)

  மெய்க்கீர்த்திகள் - 1 1. பாண்டிய மன்னர் மெய்க்கீர்த்திகள் 1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி. 1.1.1 (01) கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத 5 கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக் கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் 10 அளவரிய ஆதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன்முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வௌிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் 15 கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கிச் செங்கோ லோச்சி வெண்குடை நீழற் றங்கொலி நிறைந்த தரணி மங்கையைப் பி...