Skip to main content

Posts

Showing posts with the label ஆன்மீகம்

அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் . தூத்துக்குடி மாவட்டம்

அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் . தூத்துக்குடி மாவட்டம் கோயிலின் மூலவர் உற்சவர் விபரம் மூலவர் - அருள்மிகு பாலசுப்பிரமணியர் உற்சவர் - அருள்மிகு சண்முகர், ஜெயந்திநாதர், குமாரவிடங்கப்பெருமாள், அலைவாய் உகந்தபெருமாள் அம்மன் - அருள்மிகு வள்ளி ,அருள்மிகு தெய்வானை தீர்த்தம் - கந்தபுஷ்கரணி [நாழிக்கிணறு],சரவண பொய்கை தலமரம் - பன்னீர் மரம் பாடியவர்கள் - நக்கீரர், பகழிக்கூத்தர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வென்றிமாலைக் கவிராயர் பழமையும் சிறப்பும் - பெயர்க் காரணமும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தின் தென் கோடியில் தலைசிறந்த கடற்கரைப்பட்டினமாக விளங்கிய கபாடபுரம், இன்றைய திருச்செந்தூர். திருச்செந்தூர் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப் பகுதியாகும். ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருந்ததால்அலைவாய் என்றும் முற்காலத்தில் அழைக...

நவ திருப்பதி

நவ திருப்பதி:   ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன. நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள். 1.ஸ்ரீவைகுண்டம்,  2-நத்தம், 3. திருப்புளியங்குடி, 4.தொலைவில்லி மங்கலம், 5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது).  6.பெருங்குளம், 7. தென்திருப்பேரை,  8. திருக்கோளூர், 9. ஆழ்வார் திருநகரி. ஒவ்வொரு தலத்தின் சிறப்புகளையும் காண்போம். 1. ஸ்ரீவைகுண்டம்:   திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது.  நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில் வைகுண்டநாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டாராம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்க...

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்   ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்: சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே. - அகத்தியர் மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.   ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்: Maha Yogi Śrī Agastiyar Agastyar Kovil, Agastyar Falls, Papanasam Śrī Murugan teaches the Tamil language to Agastiyar சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும். ரஹணபவச - என தொடர்ந்து ஜெ...