Skip to main content

Posts

Showing posts from April, 2021

சாத்தான்குளம்-கொம்பன்குளம்

#தூத்துக்குடிமாவட்டம் #சாத்தான்குளம் அருகே #கொம்பன்குளம் #ஸ்ரீகோதாசமேதாராஜகோபாலசுவாமி கோயிலில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான      கல்வெட்டு கண்டறியப் பெற்றது.    சாத்தான்குளத்திலிருந்துசுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் கொம்பன்குளம்  என்ற சிற்றூர் உள்ளது.  இங்கு ஸ்ரீ கோதா சமேதா ராஜ கோபாலசுவாமி திருக்கோயில் சிற்பக்கலை நயத்துடன் அமைந்துள்ளது. பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்று, விஜயநகர காலத்தில் மண்டபங்களும் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் பெரும்பகுதி வெள்ளைக் கற்களால் அமையப்பெற்றது.      மூலவராக ஸ்ரீ ராஜ கோபாலசுவாமி நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். வலப்புறம் ஸ்ரீ கோதாநாச்சியார் இடப்புறம் பெரிய திருவடியான கருடாழ்வார் கை கூப்பி சுவாமியைக் கும்பிட்டவாறு உள்ளார். இக்கோயிலின் மற்றொரு சிறப்பு #சக்கரத்தாழ்வார் தனிசன்னிதியில் அருள் பாலிப்பது. திருமாலின் ஆயுதங்கள் ஐந்து. ஐம்படைகளெனப்படும். அவை சங்கு, சக்கரம், கதை,வில், மற்றும் வாள் ஆகியனவாகும்.சங்கு பாஜ்சசைன்னியம் என்றும் சக்கரம் சுதர்சனம் என்றும் கதை கெளமேதகி என்றும் வில் ச

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காஞ்சிவிஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் திருக்கோயில்

#குலசேகரன்பட்டினம் #அருள்மிகுகாஞ்சிவிஜயகச்சிகொண்டபாண்டீசுவரர்திருக்கோயில் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்கு தெற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் உள்ளது.சங்கத் காலத் துறைமுகமாக திகழ்ந்தது. குலசை என்று அன்புடன் அழைக்கப்படுகிறது. #மானவீரவளநாட்டுகுலசேகரன்பட்டினம் என்று இக்கோயிலில் காணப்படுகின்ற கல்வெட்டு கூறுகின்றது.கி.பி 17 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் மீது பாடப்பெற்ற #அறம்வளர்த்தநாயகிபிள்ளைத்தமிழ் இவ்வூரை வீரவளநாடு, தமிழ்க்குலசை, #தமிழ்தென்குலசை என்று போற்றிப்பாடுகிறது குலசையின் வடபுறம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் ஆதவன் திசை நோக்கியவாறு உள்ளார். இவருடன் உலக அறங்களை நெறிப்படுத்த அன்னை #அருள்மிகுஅறம்வளர்த்தநாயகி அருள் வழங்கிக்கொண்டு இருக்கிறார். கி.பி 13 இல் சோழரிடம் இழந்து போன பாண்டிய நாட்டரசை மீட்டெடுத்த பாண்டியன் [முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்] கி.பி.1216-1244 இல் அவரது வெற்றியின் நினைவுச் சின்னமாக இத்திருக்கோயிலின் திருப்பணிகளைச் செய்துள்ளார். இப்பாண்டியனின் போர்க்களக் காட்சிகள் புடைச்சிற்பமாக சுவாமியின் சன்னிதி முன்பாக மகாமண்ட

திருச்செந்தூர் கோவில் வள்ளி அம்மன் கோயில் கல்வெட்டு

திருச்செந்தூர் கோயில் - வள்ளி அம்மன் குகைக் கல்வெட்டு  1] முருகன் அருளால் நட                                                                          2] ந்து வருகின்றன கந்                                                          3] த கடவுளாருக்கு வல்                                                                                 4] லியை மணம் செய்ய வே                                                             5] னுமென்று சம்புவை                                                                                 6] ஆறாதித்தனள் உடனே லிங்                                                                     7] சுரூபிலாயினர் லிங்                                                                                  8] க விழவின்றாகிய சிவபெரு                                                                           9] மான் சதாதேவனாய்ப்                                                                          10] பூஜை செய்யும் இடத்துக்