Skip to main content

Posts

Showing posts from 2016

VAO கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்

VAO கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் கிராமக் கணக்குகள் பராமரித்தல் பற்றி அரசானை எண். 581 – நாள் 3-04-1987-இன் படி பணிகள் அட்டவணை உருவாக்கப்பட்டது. இக்கணக்குகள் அனைத்தும் நிலம் சம்பந்தப்பட்டது ஆகும். புல எண் (Survey Number): ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர். நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன. 1. பதிவுத்துறை 2. வருவாய்த்துறை அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்.  1. பதிவுத்துறை: நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.  2. வருவாய்த்துறை: இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும். பட்டா (Patta) சிட்டா (Chitta) அடங்கல் (Adangal) அ’ பதிவேடு (‘A’ Register) நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)  பட்டா (