Skip to main content

Posts

Showing posts from March, 2017

ஆழ்வார் திருநகரி

பலகணி (ஜன்னல் ) கலைநுணுக்கத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. - ஆழ்வார் திருநகரி. Thanks- K.Govindarajan

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.திருநெல்வேலி மாவட்டம்

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.திருநெல்வேலி மாவட்டம்

The temple of Swami Nellaiappar and Sri Kanthimathi Ambal

The temple of Swami Nellaiappar and Sri Kanthimathi Ambal is situated in the heart of the city. The river Tambravarani referred to by poets as "Porunai" flows round the town. In the distant past the town was a bamboo forest; hence it was known in those days as "venuvanam". One of the famous temples in Tamil Nadu steeped in tradition and history and also known for its musical pillars and other brilliant sculptural splendours, this is one of the largest temples in South India. Siva is said to have been worshipped by Agastya in a bamboo grove and by Rama after having killed Mareecha some nine miles away at Manoor. There is also a shrine to Vishnu near the sanctum, signifying the belief that Nellai Govindan (Vishnu) visited Tirunelveli to officiate the divine marriage of Shiva and Kantimathi. A little to south of Swami Nellaiappar Gopuram stands the Gopuram of Sri Kanthimathi Ambal temple. Thanks-Athma Nathan

அழகர்மலைப் பாறை ஓவியங்கள்

அழகர்மலைப் பாறை ஓவியங்கள்: மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அழகர் மலையில் பஞ்சபாண்டவர் குகை என அழைக்கப்படும் குகையில் செந்நிறப் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்படுக்கை, தீர்தங்கரர் சிற்பம் போன்ற வரலாற்றுக்கு முதன்மையான பதிவுகள் உள்ளன. இவற்றைப்பார்க்க நாம் போயிருந்தபோது நமக்கு அருகிலுள்ள உப்போடைப்பட்டி எனும் ஊரைச்சேர்ந்த பூசாரி செல்வம் நமக்கு வழிகாட்டி அழைத்துச்செல்ல, உடன் அவரின் ஆறு வயது மன் பெரியகருப்புவும் ஆர்வத்துடன் வந்துக்கொண்டிருந்தான். இவற்றைக்காண்பதற்குச் செல்ல கற்களால் படிக்கட்டுகள் போன்று அமைக்கப்பட்டும், இரும்பு ஏணிகள் பொறுத்தப்பட்டும் உள்ள கடினமான பாதையில் செல்ல வேண்டும். மலையின் பெரியபாறைப் பகுதிகளுக்கிடையே இயற்கையாகவே அமைந்த அழகிய சுனையுடன் கூடிய குகையின் பாறைச்சுவரில் ஆங்காங்கே பதிமூன்று இடங்களில் சிவப்புநிறத்தில் வரையப்பட்ட ஓவியங்களைக் காணலாம். இவற்றுள் பல சிதைந்துவிட்டிருக்கின்றன. இவற்றுள் முதன்மையானவை மனித உருவமும், குதிரைப் போன்ற விலங்கின் மீதமர்ந்த நிலையிலுள்ள ஒருவனை மற்றொருவன் அழைத்துச்செல்வதுபோல வரையப்பட்டதும் ஆகும். இதில் மனித உருவத்தைப் பொருத்தவரை அந்த உருவம

சோழர் காலத்தில் கட்டப்பட்ட மதகு

இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட சோழ கங்கம் ஏரி.தற்போது வறண்ட நிலையில்.மேலும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மதகு அமைப்பு. Thanks-Anbalagan Aarumugam

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் திருவாயிலில் மாமன்னன் ராஜராஜன் சிற்பம்.......ஓர் ஆய்வு.

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் திருவாயிலில் மாமன்னன் ராஜராஜன் சிற்பம்.......ஓர் ஆய்வு. தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு நுழைவு வாயில்கள் , ராஜ கோபுரங்கள ,முறையே கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் எனப்படுகின்றன. இரண்டாவதாக உள்ள ராஜராஜன் திருவாயில் பிரமாண்டமான இரண்டு துவாரபாலகர்களுடன் ,பல புராண சிற்பங்கள்,எண்திசை காவலர்கள்,வினாயகர், முருகன்,துர்க்கை,என பல தெய்வ வடிவங்களையும் ,முனிவர்கள் சிலைகளையும் தாங்கி நிற்கின்றது. இதில் இரண்டு தளங்களுக்கு மேலுள்ள சிகரத்தின் மையத்தில் உள்ள மாடத்தில், சிவபெருமான் இடது தொடையில் உமையவள், எதிரில் வணங்கிய நிலையில் நின்று கொண்டு இருப்பவரை பார்த்தவண்ணம் அமர்ந்து இருக்கிறாள். இந்த உயர்ந்த இடத்தில, நின்று ராஜராஜீஸ்வரம் உடையாரை வணங்கிக் கொண்டிருப்பது யார், ? மன்னனாகத்தானே இருக்கமுடியும்..? சில் ஆய்வாளர்கள் இவரை, நாயக்க மன்னன் செவ்வப்பனாக இருக்கலாம் என்கின்றனர். இதே கோபுரத்தில் உள்ள முருகன் வடிவத்திற்கு அருகில் இருப்பவரும் செவ்வப்பன் என்கிறனர். தலையில் உள்ள சாய்வு கொண்டையயை வைத்து இக்கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.வேறு ஆதாரம் ஏ

KUDUMIYAN MALAI. PUDUKKOTTAI.

Thanks-Thomas Alexander