Skip to main content

Posts

Showing posts with the label TEMPLES

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. -சான்றார்கள்

""பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே.... சீனக் குடை பிடிக்க அனுமதி "" செய்தி சொல்லும் கல்வெட்டு.... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சீனாக்குடை என்றால்... பட்டுக்குடை என்றொரு சொல் வழக்குண்டு". அதுபற்றிய அடியேனின் பின்னூடம் இஃது. தினமலர் நாளிதழின் இணயப்பக்கத்தில், 25 - 6 - 2010 ஆம் நாள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் அன்பர் கணேசன் அவர்களின் பேட்டி புகைப்படத்துடன் வந்துள்ளது. அதனை அப்படியே அன்பர்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத் தொடர்பு: அவினாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு. மாற்றம் செய்த நாள்: ஜூன் 25,2010 03:12 அவினாசி: ""தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு இருந்துள்ள செய்தி பற்றி, அவினாசியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன,'' என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். அவினாசி, வ.உ.சி., குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேசன்; ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியரான இவர், கொங்கு மண்டலக் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகி...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதர் ,  திருவேங்கடமுடையான் மண்டபத்தில் சிற்பங்கள் மிக அழகாக விளங்குகின்றன. ஆளுயரத்துக்கும் பெரிய ராம லக்ஷ்மண அகோர வீரபத்திரர் சிலைகள். பிரம்மாண்டமான சிம்மங்கள் யாளிகள் . மண்டபத்தின் சுற்றுச்சுவர்களின் கீழ்ப்பகுதிகளில் வானர சேனை பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும் சிற்பங்கள் உள்ளன.  இராமபிரான் சுக்ரீவனை அணைத்தபடி நிற்கும் சிற்பமும், லக்ஷ்மணன் அனுமனை அணைத்தபடி நிற்கும் சிற்பமும் (அருகே அங்கதன் வணங்கும் கோலத்தில்) சிறப்பு.  அகோரவீரபத்திரரின் பாதத்தில் நரம்புகள் புடைத்திருப்பதையும் செதுக்கியிருக்கும் அற்புதம். மேல் தளத்தில் மர சிற்பங்களோ  என எண்ண வைக்கும் கல் வேலைப்பாடுகள்.    மண்டபத்தில் இருக்கும் யாளி சிற்பங்களின் வால்  சுழிப்புகள் ஒரு கச்சிதமான வட்டமாக அமைந்திருக்கின்றன. அதில் ஒரே ஒரு சிற்பத்தில்  மட்டும், அந்த வட்டத்துக்குள் ஒரு சிற்பம் இருக்கிறது.அநேகமாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கும் அது. திகைக்க வைக்கும் வேலைப்பாடு..நாய் முயல், ஒட்டகம் என்று பல வகை மிருகங்களும் அங்கே சிற்பங்களாக உள்ளன. ...

பிரதோஷம் வழிபாடு

ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் இன்று தேய்பிறை பிரதோஷம் ( 02/12/2021) 🙏ஓம் நமசிவாய 🕉பிரதோஷம் என்றால் என்ன..? 🕉சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. 🕉சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன...

வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தீஸ்வரன்_கோவில் *************************************** நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்... பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்... 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு... மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்... தல வரலாறு ******************** சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோவில் ஆகும்.... இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும், அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்... இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு #புள்ளிருக்கு_வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது... #புள் என்ற சடாயு பறவை ராஜனும், #இருக்கு என்ற வேதமும், #வேள் என்ற முருகப்பெருமானும், #ஊர் என்ற சூரியன் ஆகிய நால்வரும், இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது... கோவிலின் குளம் சித்தாமிர்தம் குளம் என்று அழ...

ஜென்ம நட்சத்திரம் வரும்போது..

     நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு  அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள்  குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம்  செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்......................... உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது?  எப்படி செல்ல வேண்டும்?  அங்கு சென்றால் கிடைக்கும்  பலன் என்ன! ............... *1)   அசுவினி* கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லி...

அருள்மிகு காசி விஸ்வநாதர் . .திருக்கோவில்...தென்காசி..!

காசி விஸ்வநாதர் .. திருக்கோவில்...தென்காசி..!! தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில், தென்றல் வீசும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த தலத்தில் காலடி எடுத்து வைத்தவுடனே மூலிகை நறுமணம் நம்மை வரவேற்கும். இது கேரள நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வரும் நுழைவு வாயில். இந்த கோவில் ஆயிரம் வருட பாரம்பர்யம் கொண்டது. இதன் சிற்ப வேலைப்பாடுகள் அதிசயத்தக்க வகையில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஈஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி இருப்பது மிகவும் விசேஷம் என்கின்றனர். வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை தரிசித்த பலனும், சக்தியும் இங்குள்ள ஈஸ்வரனை தரிசித்தால் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.  இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் என்பது ஆகும். இந்த கோவில் சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதை கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியப் படுகிறது. இந்த இடத்தை முன்பு ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டிய மன்னன் தீர்த்த யாத்திரையாக வடக்கே உள்ள காசிக்கு புறப்படத் தயாரானார். அன்று இரவு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, பக்தனே! என்னைக் காண பல நூ...

தென்னாட்டு சிவாலயங்கள்

தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்* தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.  அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். *1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்* இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்  இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் க...

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காஞ்சிவிஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் திருக்கோயில்

#குலசேகரன்பட்டினம் #அருள்மிகுகாஞ்சிவிஜயகச்சிகொண்டபாண்டீசுவரர்திருக்கோயில் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்கு தெற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் உள்ளது.சங்கத் காலத் துறைமுகமாக திகழ்ந்தது. குலசை என்று அன்புடன் அழைக்கப்படுகிறது. #மானவீரவளநாட்டுகுலசேகரன்பட்டினம் என்று இக்கோயிலில் காணப்படுகின்ற கல்வெட்டு கூறுகின்றது.கி.பி 17 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் மீது பாடப்பெற்ற #அறம்வளர்த்தநாயகிபிள்ளைத்தமிழ் இவ்வூரை வீரவளநாடு, தமிழ்க்குலசை, #தமிழ்தென்குலசை என்று போற்றிப்பாடுகிறது குலசையின் வடபுறம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் ஆதவன் திசை நோக்கியவாறு உள்ளார். இவருடன் உலக அறங்களை நெறிப்படுத்த அன்னை #அருள்மிகுஅறம்வளர்த்தநாயகி அருள் வழங்கிக்கொண்டு இருக்கிறார். கி.பி 13 இல் சோழரிடம் இழந்து போன பாண்டிய நாட்டரசை மீட்டெடுத்த பாண்டியன் [முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்] கி.பி.1216-1244 இல் அவரது வெற்றியின் நினைவுச் சின்னமாக இத்திருக்கோயிலின் திருப்பணிகளைச் செய்துள்ளார். இப்பாண்டியனின் போர்க்களக் காட்சிகள் புடைச்சிற்பமாக சுவாமியின் சன்னிதி முன்பாக மகாமண்ட...

The temple of Swami Nellaiappar and Sri Kanthimathi Ambal

The temple of Swami Nellaiappar and Sri Kanthimathi Ambal is situated in the heart of the city. The river Tambravarani referred to by poets as "Porunai" flows round the town. In the distant past the town was a bamboo forest; hence it was known in those days as "venuvanam". One of the famous temples in Tamil Nadu steeped in tradition and history and also known for its musical pillars and other brilliant sculptural splendours, this is one of the largest temples in South India. Siva is said to have been worshipped by Agastya in a bamboo grove and by Rama after having killed Mareecha some nine miles away at Manoor. There is also a shrine to Vishnu near the sanctum, signifying the belief that Nellai Govindan (Vishnu) visited Tirunelveli to officiate the divine marriage of Shiva and Kantimathi. A little to south of Swami Nellaiappar Gopuram stands the Gopuram of Sri Kanthimathi Ambal temple. Thanks-Athma Nathan

KUDUMIYAN MALAI. PUDUKKOTTAI.

Thanks-Thomas Alexander