Skip to main content

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காஞ்சிவிஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் திருக்கோயில்

#குலசேகரன்பட்டினம் #அருள்மிகுகாஞ்சிவிஜயகச்சிகொண்டபாண்டீசுவரர்திருக்கோயில் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்கு தெற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் உள்ளது.சங்கத் காலத் துறைமுகமாக திகழ்ந்தது. குலசை என்று அன்புடன் அழைக்கப்படுகிறது. #மானவீரவளநாட்டுகுலசேகரன்பட்டினம் என்று இக்கோயிலில் காணப்படுகின்ற கல்வெட்டு கூறுகின்றது.கி.பி 17 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் மீது பாடப்பெற்ற #அறம்வளர்த்தநாயகிபிள்ளைத்தமிழ் இவ்வூரை வீரவளநாடு, தமிழ்க்குலசை, #தமிழ்தென்குலசை என்று போற்றிப்பாடுகிறது குலசையின் வடபுறம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் ஆதவன் திசை நோக்கியவாறு உள்ளார். இவருடன் உலக அறங்களை நெறிப்படுத்த அன்னை #அருள்மிகுஅறம்வளர்த்தநாயகி அருள் வழங்கிக்கொண்டு இருக்கிறார். கி.பி 13 இல் சோழரிடம் இழந்து போன பாண்டிய நாட்டரசை மீட்டெடுத்த பாண்டியன் [முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்] கி.பி.1216-1244 இல் அவரது வெற்றியின் நினைவுச் சின்னமாக இத்திருக்கோயிலின் திருப்பணிகளைச் செய்துள்ளார். இப்பாண்டியனின் போர்க்களக் காட்சிகள் புடைச்சிற்பமாக சுவாமியின் சன்னிதி முன்பாக மகாமண்டபத்தின் விதானப்பகுதியில் காட்சி தருகிறது. கருவறை மூலவரான அருள்மிகு காஞ்சி விஜயகச்சி பாண்டீசுவரருக்கு கீழ்பகுதியில் அடுக்கடுக்காக பன்னிரண்டு சிவலிங்கங்கள் இருப்பது உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டைக் குறிப்பதாக உள்ளது . மூலவருக்கு அருகே குண்டலினிச் சக்தி அம்மன் நிற்கிறார். நீள் சதுரவடிவில் கருவறை. கருவறையைச் சுற்றிலும் அரைத்தூண் அமைப்பும், பாண்டியர்கால வெட்டுப் போதிகையும் உள்ளன .அதிட்டானம், சுவர் பிரஸ்தரம், கீரிவம், சிகரம், ஸ்தூபி அமைப்புகள் உள்ளன. அழகிய பிரணாள அமைப்பும் உள்ளது. பட்டிகை மற்றும் ஜெகதி பகுதியில் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கருவறைக்கு வெளியே அர்த்தமண்டபத்தில் அருள்மிகு விநாயகரும் அருள்மிகு ஆறுமுகப்பெருமானும் அமர்ந்து அருளாட்சி செய்கின்றனர். அடுத்து அருள்மிகு உற்சவமூர்த்திகள் கொலுவீற்றுள்ளனர். அதற்கு அடுத்த சன்னிதியில் அருள்மிகு நடராஜப் பெருமானும் அன்னை சிவகாமியும் மலர்ந்த முகத்தோடு காட்சி தருகின்றனர். முகமண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கி ஒளிவீசும் அருள்மிகு அறம் வளர்த்த அம்மனின் கருவறை உள்ளது. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூவகை அறத்திற்கும் காவலாக ஆணிவேராகத் தாயுள்ளத்துடன் விளங்கும் அன்னை கோடி சூரியனாகக் காட்சி தருகிறாள், வலது கையில் செண்டு இடது கையில் எழிலாகத் தொங்கவிட்டவாறு பூவுலகைக்காத்து வருகிறாள். அம்மனின் சந்நிதிக்கு இடதுபுறம் பள்ளியறை உள்ளது. மூலவரின் சன்னிதிக்கு முன்பாக முகமண்டபத்திலிருந்து கீழே இறங்கினால் முதல் பிரகாரத்தில் #அருள்மிகுஅதிகாரநந்தி பணிவுடன் இருகரம் கூப்பிய நின்ற நிலையில் காணப்படுகிறார். அவருக்கு இடதுபுறம் அருள்மிகு சூரியபகவான் ஒளிவிடுகிறார். நேராக மேற்கே சென்றால் சுவாமியின் கருவறையின் தெற்குப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் உலகாளும் ஈசனைக்கும்பிட்ட நிலையில் உள்ளனர். 63 நாயன்மார்கள் மண்டபத் தூண்களுள் மூன்றில் அரசகுலத்தோற்றம் கொண்ட மூவர் கருவறையை நோக்கி கும்பிட்டவாறு உள்ளனர். மூவரில் உயமானவர் பாண்டிய மன்னன் ஆவார். இக்கோயிலுக்குத் திருப்பணி செய்து காஞ்சி விஜயகச்சி கச்சிகொண்ட பாண்டீசுவரர் என்று பெயருமிட்டவர்.இவருக்கு முன்புறம் கருவறையின் தேவகோட்டத்தில் ஐந்து அடி உயரமுள்ள #அருள்மிகுதட்சிணாமூர்த்தி கருணை வடிவாகக் காட்சி தருகிறார்.இவருக்கு வலப்புறம் சுற்றில் பாண்டியன் சிவனை வழிபடுவதாக சிறிய புடைப்புச் சிற்பம் உள்ளது.தென்மேற்கு கன்னி மூலையில் அருள்மிகு #கன்னிவிநாயகர் மூன்றடி உயரத்தில் எழிலாக அமர்ந்துள்ளார் .இவரது துதிக்கையின் மடிப்புகள் சிற்பியின் சிற்ப நுட்பத்திற்குச் சான்றாகும். இப்பிரகாரத்தில் அருள்மிகு காசிவிசுவநாதர் , அருள்மிகு நாகராஜர், அருள்மிகு வேதபுரீசுவரர், அருள்மிகு உண்ணாமுலை அம்மன் உடனாய அருள்மிகு அண்ணாமலையார் ஆகியோர் அருளீந்து கொண்டிருக்கின்றனர். மேற்கு தேவக்கோட்டத்தில் குழலூதும் அருள்மிகு கண்ணனின் நுட்பமிகு சிற்பம் உள்ளது. இது பிற்காலத்தில் பொருத்தப்பட்டது போல காட்சி தருகிறது. அருள்மிகு சண்டிகேசுவரரை வழிபட்டுச் சென்றால் இவருக்கு வடக்கே தெற்கு நோக்கியவாறு தலவிருட்சமான மாமரமும் அதனடியில் அருள்மிகு #மாவடிஅம்மன் பக்தர்களுக்கு அருளீந்து கொண்டிருக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த அம்மனை வழிபட்டு வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் தலவிருட்சமாக இருந்த பெரிய மாமரத்தில் காய்த்த மாங்கனியைப் பறித்து மாவடி அம்மனின் பாதத்தில் படைத்து வழிபட்டு உண்டு வந்தால் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் . தற்போது தலவிருட்சமான மாமரம் இல்லாத காரணத்தால் மாங்கனியை அம்மனுக்கு படைத்துச் செல்கின்றனர். நீண்டகாலமாக திருமணம் நடக்காமல் திருமணத்தடை உள்ளவர்கள் அம்மனை வழிபட்டு அம்மனுக்கு மஞ்சள்நீராட்டி பட்டு வழங்கினாலும் வளையல்களைப் படைத்து வழிபட்டாலும் விரைவில் திருமணம் நடக்கிறது என்று பக்தர்கள் கூறுகின்றனர். மாவடி அம்மன் சன்னிதிக்கு அடுத்து அருள்மிகு சனிபகவன் உள்ளார். அவருக்கு இடப்புறம் சூரியனின் அம்சமான #அருள்மிகுகாலபைரவர் சன்னிதி உள்ளது. ஐந்து அடி உயரத்தில் நின்ற நிலையில் அக்கினி ஜுவாலை வீசும் கோலத்தில் உள்ளார். பில்லி, சூனியம், தீராத வியாதிகள் நீங்குகின்றன. பைரவருக்கு அஷ்டமி நாளில் எண்ணைய்க் காப்பு செய்து, புனுகு, சாத்தி, புத்தாடை அணிவித்து பூமாலைகளால் வழிபட்டாலும், சாம்பார் சாதம் படைத்து வழிபட்டாலும் நல்லதை நடத்தி வைப்பவராக அருள்மிகு காலபைரவர் கருணை உள்ளமிக்கவராக உள்ளார். இவரை வழிபட்டுத் திரும்பினால் அருள்மிகு சந்திரபகவான் ஈசனைக் கும்பிட்டவாறு பணிந்து நிற்கிறார். இந்த மண்டபத்திலிருந்து கீழே இறங்கினால் அருள்மிகு நந்திபகவான், பலி பீடம், நெடிதுயர்ந்த கொடிமரம் மெய்சிலிர்க்க வைக்கும். வலமாகச்சென்றால், இந்த கோயிலில் பாடிப்பாடித் தொண்டாற்றிய ஓதுவாமூர்த்திகளான குமாரசுவாமி, பண்டார சிவாசுவாமி, சரவணசாமி, சிவசிதம்பரசாமி, ஆகியோரின் ஆறடி உயரச்சிலைகள் சிவனைப் பணிந்தவாறு கரங்களைக் கூப்பியவாறு உள்ளனர். மேற்கே சென்றால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது, மண்டபத்தின் பின்புறம் அருள்மிகு கல்யாண வினாயகர் காட்சி தருகிறார். வடகிழக்கு மூலையில் அருள்மிகு தில்லை நடராஜப்பெருமானின் ஆனந்தத்தாண்டவக் காட்சி எழிலாக அமைந்துள்ளது. அருள்மிகு நடராஜர், அருள்மிகு அம்பிகை, அருள்மிகு பதஞ்சலிமுனிவர், அருள்மிகு வியாக்கிரபாதர், தாளமிடும் நந்தியெம்பெருமான், ஆகியோருடன் ஈசனின் திருநடனத்தை அருள்மிகு #காரைக்காலம்மையார் பண்ணிசைப்பதாய் அமர்ந்த நிலையில் உள்ளார். திருநடனம் காணும் இச்சித்திரசபைக்கு எதிரே உலகத்தைக் காக்கும், அண்டத்தைக்காக்கும் நவகிரகநாயகர்கள் உள்ளனர். ஒன்பது கிரகங்களுடன் அருள்மிகு சூரியபகவான் தமது துணவியரான அருள்மிகு சாயதேவி, அருள்மிகு சமிக்ஞா தேவி ஆகியோருடன் அருள் வழங்கியவாறு உள்ளனர். இக்கோயிலுக்கு சிறப்பு வாய்ந்த இரு தீர்த்தக் தெப்பக்குளங்கள் உள்ளன. தலவிருட்சமாக மாமரம் உள்ளது. திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை அகல, செய்வினைக் கோளாறுகள் தீர குலசேகரன்பட்டினம் அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீசுவரர் திருக்கோயிலுக்கு குடும்பத்துடன் வாருங்கள். இக்கோயில் அருகில்தான் உலகம்முழுவதும் போற்றும் #தசரா விழாவிற்கு பெயர் பெற்ற #அருள்மிகு #முத்தாரம்மன் திருக்கோயிலும் உள்ளது. கோயில் நகரமாதலால் ஏராளமான கோயில்களைக் காணலாம். #முனைவர்தவசிமுத்துமாறன் #Kulasekaranpattinam #PondieesvararTemplewithArulmiguKanchiVijayakachi Kulasekaranpattinam is located 13 km south of Tiruchendur, the second of the six battalions. The inscription found in the temple says that Manaveeravalanadu is Kulasekaranpattinam. On the north side of the Kulasa is the PondieesvararTemple with Arulmigu Kanchi Vijayakachi facing the direction. Pandian restores the lost Pandyan kingdom to the Cholas in 13 AD #Maravarman_I_Sundarapandian rebuilt the temple to commemorate his victory in 1216-1244 AD. The battle scenes of Ipandian are sculpted in front of the Swami's shrine in the canopy of the Mahamandapam. The presence of twelve Shivalingas in layers below the, the source of th Pondieesvarar Temple with Arulmigu Kanchi Vijayakachi sanctum sanctorum, refers to the twelve scriptures. The Goddess of Kundalini stands near the source. Rectangular sanctuary. The sanctum sanctorum is surrounded by a half-pillar structure and a Pandyan-era cut-outThere is a pedestal, a wall, a girdle, a spire, and a stupa. Inscriptions are found in the Pattika and Jagati area. Arulmigu Ganesha and Arulmigu Arumugapperuman sit in the Arthamandapam outside the sanctum sanctorum. Next the Arulmigu celebrants are killed. At the next meeting, Arulmigu Nadarajaperuman and Annai Sivagami are seen with a flowery face. To the left of the faade is the sanctum sanctorum of the Goddess of Virtue, glowing towards the south. Mother Kodi, who is anchored as a guardian to the threefold virtue of creation, love and destruction, is depicted as the sun, with her right hand hanging from her left hand.She is protecting the world. To the left of the Sannidhi of the Goddess is the school room. Going down from the faade in front of the Moolavar Sannidhi, in the first prakaram, Arulmigu Adhikari Nandi is seen standing with both hands folded in obedience. To his left shines the graceful sun-god. Going straight west there are sixty-three Nayans in the southern part of the Swami's sanctum sanctorum The world is in a state of ecstasy. The 63 Nayans are bowed towards the sanctum sanctorum by three of the three pillars on the pillars of the hall. The tallest of the three is the Pandya king. In the Devakottam of the sanctum sanctorum, Arulmigu Dakshinamoorthy, five feet tall, is depicted as a figure of mercy. Arulmigu Kasivisuvanathar, Arulmigu Nagarajar, Arulmigu Vedapurisuvar and Arulmigu Annamalaiyar with Arulmigu Unnamulai Amman are blessing in this field. There is a subtle sculpture of Arulmigu Kannan in the western Devakottam. It looks like a sack that encloses with a drawstring If you go to worship Arulmigu Chandikeswara, you will see a dazzling mango tree facing north and south under him. People say that if those who want to have a child worship this goddess, they will get a child blessing.They will have a child if they pluck the dried mango from the big tree that was dizzy in the past and worship it at the feet of the goddess Mawdi. Due to the lack of a dizzying mango tree at present, mangoes are being made for the goddess. Devotees say that those who have been barred from getting married for a long time worship the goddess and give her yellow silk and bangles to get married soon. Next to the Mawdi Amman Sannidhi is Arulmigu Sanibagavan. To his left is the Arulmigu Kalabhairava Sannidhi, an aspect of the sun. Standing at a height of five feet, he is on the verge of throwing a fiery flame. Voodoo, witchcraft, incurable diseases disappear. Back up oil on Ashtami day for Bhairav, Arulmigu Kalabhairava is a compassionate person who worships Punuku, Satti, Puttada and worships with garlands and worships with sambar rice. When he returns to worship, Arulmigu Chandrabhagavan bows down to Aesan. If you go down from this hall. Arulmigu Nandi Bhagavan, the altar, the long flagpole will amaze. To the right, the six-storied statues of the reciters Kumaraswamy, Bandarasivaswamy, Saravanasamy and Sivasithambarasamy, who chanted in this temple, are worshiped with folded arms. To the west is the Tirukkalyana Mandapam, with Arulmigu Kalyana Ganesha at the back of the hall. Arulmigu Thillainadarajaperuman's joyous scene is located in the northeast corner. Arulmigu Natarajar, Arulmigu Ambikai, Arulmigu Patanjalimunivar, Arulmigu Karaikkalammaiyar is seated with Arulmigu Vyakkirapadar and rhythmic Nandiyemperuman, who is performing Eesan's dance. There are Navagrahanayakas who protect the world and the universe against this church which sees the transfiguration. The nine planets are blessed by Arulmigu Surya Bhagavan along with his consorts Arulmigu Sayadevi and Arulmigu Samikna Devi. The temple has two special theertha pools. The dizziness is mango. Marriage Prohibition, Child Abstinence Width, Functional Disorders Nearby is the Arulmigu Mutharamman Temple, which is famous for the Dasara festival which is celebrated all over the world. Numerous temples can be seen in the temple town. #DrThavasimuthumaran

Comments

Popular posts from this blog

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ...

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா...

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்                                                      தொல் பழங்காலத்திற்கு முன்பாகவே தமிழர்கள் தங்களுடைய கலை மற்றும் அழகுணர்ச்சியை அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.    இயற்கையைத் தெய்வமாகவும் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட தமிழ் இன மக்கள் தங்களுடைய முதல் அணிகலனை இயற்கையின் எழில்மிகு கற்கள் , பூக்கள் ,   கொடி , ஓலை[1]ஆகியனவற்றை அணிந்து மகிழ்ந்தான். இது தொடர்ச்சியாக உலோகங்களுக்கும் அடிகோலின. கலைத்திறனை வெளிப்படுத்தும் பயன்படு பொருளாகவும் ஒவ்வொரு காலத்திலும் அணிகலன்கள் விளங்குகின்றன.          மனிதகுலத்திற்கு    புலன்கள் அவசியமாக கருதப்பெற்றன.தமிழன் அப்புலன்களின் உறுப்புகளுக்கு அழகூட்டிட அணிகளால் சிறப்புற மெருகூட்டினான்.சங்க இ...