Skip to main content

Posts

Showing posts from August, 2013

நாடார்கள் கோயில்களிலே திருவிழாக்கள் தொடங்கி விட்டன

நாடார்கள் கோயில்களிலே திருவிழாக்கள் தொடங்கி விட்டன

மதுரை

மதுரை பெயர்க் காரணம்: மதி உறை / மதில் நிரை / மருதை / மதிரை / மதுரை மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த  ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். "மதுரை" இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றி யதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில ... குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர். பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப் புறங்களில்குல தெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம்.

தமிழ்ப் பிராமி

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்:- வெளிநாடுகள் (எகிப்து, தாய்லாந்து, ஓமன்):- எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் "பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள். இலங

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..! தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோண ல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும், இன்னும் தமிழர்கள் செய்த அற்புதமான கட்டடக்கலை, அழகுக்கலைபற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?! 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முனை 1/9585244364800

காரிய சித்தி மந்திரங்கள்

காரிய சித்தி மந்திரங்கள் காரிய சித்தி மந்திரங்கள் விநாயகர் விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்: விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணியின் கனிந்து பொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம். எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம். சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது. எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இ