Skip to main content

Posts

Showing posts with the label பயனுள்ள கட்டுரைகள்

ARUMUGANERI FREEDOM FIGHTERS

தியாக பூமியின் சுதந்திரப்போராட்டத் தியாகிகள் கே.டி.கோசல்ராம்த.பெ. தூசிமுத்து நாடார் 1930 இல் தம்முடைய 15 ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதில் வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவருடைய சிறுவயதினை மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவாரம் வரை சப்ஜெயிலில் வைத்து அடித்து விரட்டி விட்டனர். 1942 போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதிவழக்கில் 1வது எதிராளியாகச் சேர்க்கப்பட்டு 21 மாதங்கள் சப் ஜெயிலில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். சாக்குச் சட்டையை அணியச் செய்து இரவும் பகலும் கை விலக்கு மாட்டி தனி அறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்யப்பட்டு தஞ்சை வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலைப் பெற்றார். ஆலயப்பரவேசம் :தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேசச் சட்டம் வரும் முன்பாகத் திருச்செந்தூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்ற...

நெடுவாசல்

மங்கலாதேவி கோவிலையும் கண்ணகியின் பயண வழித்தடத்தையும் கண்டறிந்தவர்

மங்கலாதேவி கோவிலையும் கண்ணகியின் பயண வழித்தடத்தையும் கண்டறிந்தவர் : சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள். குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவர், சி.கோவிந்தராசனார். 1945 ஆம் தொடங்கிய பயணம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் அந்த இனிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார். கடந்த 2012 டிசம்பரில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பித்தார். கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு? என்பது குறித்து தினமணி நாளிதழுக்கு திரு.கோவிந்தராசனார் அளித்த பேட்டி.. ’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்...

கொற்கை தமிழனின் அடையாளம்

கொற்கை தமிழனின் அடையாளம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முக்காணியிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.ஏரல் வழியாகவும் பழைய காயல் வழியாகவும் வருவதற்கு அரசு பஸ்களும், மினி பஸ்கள் உண்டு.ஆட்டோ மூலமும் வரலாம்.... தற்போதைய கொற்கை.பசுமையான வயல்வெளி.வாழத் தோட்டங்கள் காணுமிடங்களிலெல்லாம் சிப்பிகளும் சங்குகளும் குவியல் குவியலாக. முத்தால் உலகத்தை தன்னிடம் ஈர்த்து வைத்திருந்த கொற்கையா இது.....வாளும் வேலும் வீசி விளையாடிய வீதிகளா இவை.... சங்ககாலம் தமிழனின் பொற்காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரை , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய சிறிய படகுத் துறைகளாக காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் ஏரல்,உமரிக்காடு ,வாழவல்லான், முக்காணி,த்தூர் , ஆறுமுகநேரி , பழையகாயல் , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்கள் . கொற்கைக் குடாக்கடல...

ஆதித்தநல்லூர் பறம்பு (தொல்லியல் பார்வை)

ஆதித்தநல்லூர் பறம்பு (தொல்லியல் பார்வை)   ” நம்ம பறம்புலே தங்கம் கிடைக்குதாம்ல “ ஆடு மேய்ப்பவரின் குரல் கேட்கிறது .   தூத்துக்குடி மாவட்டம் , ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மணல்மேடு பகுதியில்தான் இந்த குரல் கேட்குது.     தமிழர் வரலாற்றில் , வரலாற்றுக்கு முந்தைய காலமான (prehistoric) கி.மு. 1000 இற்கு முற்பட்ட தமிழன் வாய்ந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளது இப்பகுதி.ஆச்சரியமா இருக்கா,,,, . 114 ஏக்கர் பரப்பளவுள்ள இம்மேடு ” ஆதித்தநல்லூர் பறம்பு “ என்றழைக்கப்படுகிறது .இம்மேட்டினுள் புதைந்து கிடக்கும் பொருட்கள்தான் எவை எவை?..... தாழிகள்       தாழிகளப் பற்றி முதல்ல தெரிஞ்சுக்குவோம்.நம்ம வீடுகளில் இருக்கும் நெல் தாழியைப் போலதான் இருக்கும் முதுமக்கள்.தாழிகள்.இவைகள் சுடுமண்ணால் ஆனவை.. ஆற்றங்கரை , குளக்கரையில் கிடைக்கும் களிமண்ணால் செய்யப்பெற்று வெயிலில் உலரவைத்து , நன்றாக காய்ந்தபின்பு சூளையினுள் வைத்து சுட்டு எடுப்பர் . மண்பாண்டங்களும் இவ்வாறே செய்யப்படுகின்றன . ...

வரலாற்று சிறப்பும் பெற்ற தூத்துக்குடி மாவட்டம் .

           வரலாற்றுச் சிறப்பு கொண்ட நம்ம மாவட்டம்        தமிழகத்தில் தொல் பழமையும் , வரலாற்று சிறப்பும் பெற்ற நமது மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் .           தூத்துக்குடி மாவட்டம்,  தூத்துக்குடி , திருச்செந்தூர் , கோவில்பட்டி ஆகிய 3 வருவாய் கோட்டங்களையும் , எட்டயபுரம் , கோவில்பட்டி , ஓட்டப்பிடாரம் , சாத்தான்குளம் , தூத்துக்குடி , திருச்செந்தூர் , ஸ்ரீவைகுண்டம் , விளாத்திகுளம் ஆகிய 8 தாலுகாக்களையும் , 468 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது . தமிழகத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது . கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் மன்னார்வளைகுடா கடல் உள்ளது .      மொத்தம் 4 ஆயிரத்து 621 சதுர கி.மீ . பரப்பரளவு கொண்ட தூத்துக்குடியில் கடந்த 2001 – ம் ஆண்டு கணகெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 15  லட்சத்து 72 ஆயிரத்து 273 பேர் . அதில் 7 லட்சத்து 66 ஆயிரத்து 823 பேர் ஆண்கள் . 8 லட்சத்து 5 ஆயிரத்து 450 பேர் பெண்கள் .    தூத்துக்குடி மாவட்டத்தில் த...

தாலாட்டுப் பாடல்களில் தமிழர் பண்பாடு

தாலாட்டுப் பாடல்களில் தமிழர் பண்பாடு தாலாட்டு உறங்கவைக்கும் பாட்டு என்றாலும் கிறங்கவைக்கும் பாட்டும் ஆகும். தாயின் இசையில் குழந்தை அடம்பிடிக்காமல் கண்ணயரும். இத ்தகைய வல்லமை கொண்ட பாடல்களில் இலக்கண இலக்கிய அமைதி அறியாத ஒரு கிராமத்துத் தாயின் சிந்தனையில், தமிழரின் பண்பாடு எவ்வாறெல்லாம் உறைந்து கிடக்கின்றது என்பதனைப் பாருங்கள். தமிழ் மண்ணுக்கென்று தனிக் கலாச்சாரம் உண்டு. உறவுமுறை கொண்டாடுவதில், பல்லுயிர் காத்தலில், விருந்தோம்பலில், மண்ணைப் போற்றலில், ஆடையில், வாழ்க்கையில் எனத் தமிழரின் பண்பாடு விரிந்துகொண்டே செல்லும் இவையெல்லாம் தாலாட்டுப் பாடல்கள்வழி வெளிப்படுவதனைக் கண்டறிவதே இப்பதிப்பின் நோக்கம். தாலாட்டு தமிழ்ப் பண்பாட்டின் முதற்பாட்டு. தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். இத்தகைய தாலாட்டில் தமிழர் பண்பாட்டினைக் காண்போம். தமிழன் வாழ்ந்த இடம் நிலவளமும், நீர்வளமும் நிறைந்தது. இதனை ஒரு தாய், புதிதாய்ப் பிறந்த தன் குழந்தைக்குப் பாட்டாகச் சொல்லிப் பூரிக்கின்றாள். "மாடுகட்டிச் சூடடித்தால் என்னரசே மாளாது கதிர்களென்று க...

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்                                                      தொல் பழங்காலத்திற்கு முன்பாகவே தமிழர்கள் தங்களுடைய கலை மற்றும் அழகுணர்ச்சியை அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.    இயற்கையைத் தெய்வமாகவும் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட தமிழ் இன மக்கள் தங்களுடைய முதல் அணிகலனை இயற்கையின் எழில்மிகு கற்கள் , பூக்கள் ,   கொடி , ஓலை[1]ஆகியனவற்றை அணிந்து மகிழ்ந்தான். இது தொடர்ச்சியாக உலோகங்களுக்கும் அடிகோலின. கலைத்திறனை வெளிப்படுத்தும் பயன்படு பொருளாகவும் ஒவ்வொரு காலத்திலும் அணிகலன்கள் விளங்குகின்றன.          மனிதகுலத்திற்கு    புலன்கள் அவசியமாக கருதப்பெற்றன.தமிழன் அப்புலன்களின் உறுப்புகளுக்கு அழகூட்டிட அணிகளால் சிறப்புற மெருகூட்டினான்.சங்க இ...