ஆதித்தநல்லூர்
பறம்பு (தொல்லியல் பார்வை)
” நம்ம பறம்புலே தங்கம் கிடைக்குதாம்ல
“ ஆடு மேய்ப்பவரின் குரல் கேட்கிறது .
தூத்துக்குடி மாவட்டம்
, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தாமிரபரணி
ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மணல்மேடு பகுதியில்தான் இந்த குரல் கேட்குது.
தமிழர் வரலாற்றில் , வரலாற்றுக்கு முந்தைய காலமான
(prehistoric) கி.மு. 1000 இற்கு முற்பட்ட தமிழன் வாய்ந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளது
இப்பகுதி.ஆச்சரியமா இருக்கா,,,, . 114 ஏக்கர் பரப்பளவுள்ள இம்மேடு ” ஆதித்தநல்லூர்
பறம்பு “ என்றழைக்கப்படுகிறது .இம்மேட்டினுள் புதைந்து கிடக்கும் பொருட்கள்தான் எவை
எவை?.....
தாழிகள்
தாழிகளப் பற்றி
முதல்ல தெரிஞ்சுக்குவோம்.நம்ம வீடுகளில் இருக்கும் நெல் தாழியைப் போலதான் இருக்கும்
முதுமக்கள்.தாழிகள்.இவைகள் சுடுமண்ணால் ஆனவை.. ஆற்றங்கரை , குளக்கரையில் கிடைக்கும்
களிமண்ணால் செய்யப்பெற்று வெயிலில் உலரவைத்து , நன்றாக காய்ந்தபின்பு சூளையினுள் வைத்து
சுட்டு எடுப்பர் . மண்பாண்டங்களும் இவ்வாறே செய்யப்படுகின்றன .
இப்பானை மற்றும் தாழிகளில்
அக்காலத்தில குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள் , உருவங்கள் பொறிக்கப்படும் . தானியங்களையும்
, விளைபொருட்களையும் வைத்துப் பாதுகாக்கும் தாழிகள் 3 அடி உயரத்திலிருந்து 5 அடி உயரம்
வரை செய்யப்பெற்றன . இறந்தவர்களை வைத்துப் புதைக்கும் தாழிகள் 3 அடி உயரத்திலிருந்து
4 அடி உயரம் வரை செய்யப்பட்டன . தாழியின் வாயளவு 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை
அமைந்தன .
பெருங்கடற்படைச்
சின்னங்கள்
ஆதித்தநல்லூரில் காண்ப்பெறும்
முதுமக்கள் தாழிகள் மற்றும் அதனுள் காணப்பெறும் தங்கம் , இரும்பு , வெண்கலம் ஆகியவற்றில்
செய்யப்பெற்ற பொருட்களைக் கொண்டு அக்கால மக்கள் உலோகத்தின் பயனைத் தெரிந்திருந்தனர்
என்பதை நாம தெரிஞ்சுக்கலாம். கி.மு . 1000 முதல் கி.மு . 300 வரையிலான காலம் தமிழகத்தின்
இரும்புக்காலம் அல்லது பெருங்கடற்படைச் சின்னக்காலம் (Megalithic) ஆகும் . இக்காலத்தில்
இறந்தவர்கள் தாழியில் புதைக்கப்பட்டனர்; கற்பதுக்கைகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .
இத்தாழிகளுல் ஆயுதங்கள்
, அணிகலன்கள் , தொழில்நுட்ப உபகரணங்கள் , வெண்கலப் பொருட்கள் , விவசாயத்திற்குரிய உபகரணங்கள்
, உணவுப்பொருட்கள் , மணி , மிருகங்களின் வடிவத்திலான பொம்மைகள் , பூக்கள் , சட்டிகள்
, குடுவைகள் , விளக்குகள் ஆகியன வைக்கப்பட்டன .
இதிலே சிறப்பு என்னன்னா
அயல்நாட்டு உரோம நாணயங்கள் , நவரத்தின மணிகளும் கிடைச்சிருக்கு.இதிலேயிருந்து வெளிநாட்டுத்
தொடர்பு நம்மபகுதிக்கு இருந்திருக்குன்னு அறிய முடியுது. .
2004 இல் இந்திய தொல்லியல்
துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் , ஆதித்தநல்லூர் பறம்பில் உள்ள முதுமக்கள் தாழியின்
கல்லறைகள் மூன்று அடுக்குகளாக இருந்ததையும் கீழே உள்ள முதல் அடுக்கு 10 அடி ஆழத்திற்குக்
கீழாகவும் மேலே 10 அடிக்குள் இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டன
. தொல்லியல் அறிஞர் தி . சத்தியமூர்த்தி இவ் அகழ்வாய்வினைத் தமது குழுவினருடன் மேற்கொண்டார்
. 157 தாழிகள் எடுக்கப்பட்டன் . 50 தாழிகள் உடையாமல் எடுக்கப்பட்டது . 15 தாழிகளில்
மனித எலும்புக் கூடுகள் , சிலவற்றில் உமி , நெல் கொண்ட சிறுகலயங்கள் , இரும்புக் கருவிகள்
, வேல்முனைகள் , கட்டாரிகள் இருந்தன . பானையொன்றில் காணப்பெற்ற கோட்டுவங்களில் மான்
, முதலை , நாரை , பல்லி , நெற்கதிர் , பெண்ணின் உருவம் கண்டறியப்பெற்றன . தாழிகள் மீது
காணப்பெற்ற வரவுகள் (Motifs) தருமபுரி , ஈரோடு மாவட்டத்திலுள்ள குகைகளில் காணப்படும்
குகை ஓவிய கோட்டுவங்கள் போல அமைந்துள்ளன . ஆதித்தநல்லூரில் மேலும் அகழ்வாய்வுகள் தொடர்ந்து
செய்யப்பட்டால் , தொல்லியல் உலகம் ஆச்சரியப்படும் அளவிற்கு உலக வரலாற்றுக்கான ஆதாரங்கள்
வெளிவரும் .
தற்போது கிடைத்துள்ள
முதுமக்கள் தாழியின் உட்புறம் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ளும் விதத்தில் கைப்பிடி
போன்ற வடிவமைப்பு உள்ளது . இவ்வடிவம் இதுவரை வேறெங்கும் கிடைக்காத அமைப்பாகும் . வயது
முதிந்தவர்களை நோயாளிகள் தாழியினுள் வைக்கப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டனர் என்பதை
இத்தாழி உறுதிசெய்கிறது .
மக்களின்
தொழில்
அக்கால மக்கள் விவசாயத்தை
அடிப்படையாக கொண்டும் , மாடு , ஆடுகளை வளர்த்தும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பனத் தாழிகளுள்
கிடந்த மண்வெட்டி , கலப்பைக்கொழு , அறிவாள் , கடப்பாறை ஆகியன் மூலம் அறியலாம் .
தொழில்நுட்பக்
கருவிகள்
நுட்பமான வேலைகளைச்
செய்வதற்கு ஊதுகுழல் , குறடு , சுத்தியல் , அறம் , உளி , இளைப்புளி முதலிய பயன்படு
பொருட்கள் கிடைத்துள்ளன .
வெண்கலப்
பொருட்கள்
வெண்கலத்தால் ஆன
பாத்திரங்கள் , பூக்கிண்ணங்கள் , யானை , புலி , மான் , எருமை , மாடு , ஆடு ஆகிய உருவங்களும்
ஒலி எழுப்பும் மணியும் கிடைத்துள்ளன .
அணிகலன்கள்
மக்கள் அணியும் அணிகலன்களான
வளையல் , காப்பு , கடாகல் , மோதிரம் , நவராத்தின மணிகள் தாழியினுள் கிடைத்துள்ளன .
ஏற்றுமதித்
துறைமுகம்
கி.மு. 300 ஆண்டுகளுக்கு
முன்பாகவே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மக்கள் , தங்கம் , வெண்கலம் , இரும்பு , ஆகிய உலோகத்தினைப்
பயன்படுத்தியுள்ளனர் .பண்பட்ட நாகரீகத்தின் வெளிப்பாடுகளே இவைகள் . தென்கிழக்காசிய
நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்றுள்ளன என்பதற்காதாரமாக உரோம நாணயங்கள் கிடைத்துள்ளன
. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களின் நாகரீகம் ஆற்றங்கரை நாகரீகம் அல்லது நதிக்கரை நாகரீகம்
ஆகும் . தாமிரபரணி கடலில் கலந்த கொற்கைக் குடாப் பகுதியின் கொற்கை தலைசிறந்த துறைமுகப்பட்டினமாகத்
திகழ்ந்து தாமிரபரணி ஆறு, ஆதித்தநல்லூர் வழியாக ஓடிச்சென்று கொற்கையையும் , குடாவையும்
இணைத்தது . கொற்கை வளைகுடா நிலப்பகுதிக்குள் ஐந்து மைல் உள்வாங்கியிருந்தத்து . கொற்கைத்
துறைமுகம் வந்த சிறிய கப்பல்களும் படகுகளும் ஆதித்தநல்லூர் வரை வந்தன . படகுத்துறை
போன்ற அமைப்பும் அழமான பகுதியும் இப்பறம்பினருகே இருக்குங்க. ஆதித்தநல்லூர் பறம்பிலும்
வல்லநாடு மலைப்பகுதியிலும் இரும்பை உருக்கி எடுத்ததற்கான ஊது உலைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் இரும்பு கழிவுகளும் ஏராளமாகக் குவியலாகக் காணப்பெறுகின்றன
. இவற்றின் மூலம் இரும்பு ஆயுதத் தொழிற்சாலை இங்கிருந்து என்பதைக் காட்டுகிறது .
ஆயுதங்கள்
வாள் , கத்தி , கட்டாரிகள்
, வேல் திரிசூலம் , எகு , இருபுறம் கூர்மையான வாள் , மீனெறி வேல் , எறிவேல் ஆகியனவும்
எதிரிகள் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு மீண்டும் எறிந்தவர் கைக்குத் திரும்பிவரும்
“ பூமராங் “ என்னும் ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் தாழிகளுள் கிடைத்துள்ளன
.
” ஆதிச்சநல்லூர்
” ஊரும் பறம்பும் வடநாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்திருக்குமேயானால் , மிகப் பழமையான
சிறப்பு போற்றப்பட்டிருக்கும் . உலகப் பாரம்மரியச் சின்னங்களுள் ஒன்றாகிப் போயிருக்கும்
. இப்பொழுதுள்ள ஆடு மாடு மேயுமிடமாக இருக்காது.வடநாட்டான் தமிழனின் சிறப்பை போற்றான்..
தற்போது தமிழக அரசு
அங்கு கிடைத்த அரிய பொருட்களை அவ்விடத்திலேப் பாதுகாத்திட அகழ்வைப்பக அருங்காட்சியகம்
அமைத்துள்ளது.அவசியம் ஒருமுறை பார்க்க வேண்டிய இடம்.
Comments
Post a Comment