Skip to main content

Posts

Showing posts with the label TEMPLE

கமுதி கலவரம். ( நன்றி - ஜெகதீஷ் பாண்டியன்)

இன்று நாடார்கள் பலருக்கும் வரலாற்று ரீதியாக எந்த தெளிவும் புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். நாடார்கள் பலர் தங்கள் பூர்வீகம் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லாததே காரணம். இதனால் வரலாற்று திரிபு அதிகம் நடக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த கமுதி கலவரம். இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தாமன கமுதி மீனாட்சி அம்மன் கோயிலில் நாடார்கள் நுழைய உரிமை இல்லை என்றும் நாடார்கள் அனுமதி கேட்ட போது சேதுபதி மன்னர் மறுத்தார் என்றும் மீறி நுழைந்ததால் தீட்டுப்பட்டது என்று மன்னர் அபராதம் விதித்தார் என்றும் அதை எதிர்த்து நாடார்கள் நீதிமன்றம் நாடிய போதும் நாடார்களுக்கு பாதகமாகவே தீர்ப்பு வந்தது என்று கூறி இத்தகைய கொடுமையை அனுபவித்தவர்கள் நாடார்கள் என்று உருட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சில கேள்விகள். தடைக்கு முன் கோயிலுக்குள் நாடார்கள் சென்று வழிபாடு செய்து வரவில்லையா? யார் யாரின் தூண்டுதலால் நாடார்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று சேதுபதி மன்னரிடம் நிர்பந்திக்கப்பட்டது? பொறையாறு ரத்தினசாமி நாடார் அவர்கள் இலங்கையில் வைத்து சேதுபதி மன்னரிடம் ப...

அருள்மிகு மகாபத்திரகாளி

#திருவாலங்காட்டில் வாழும் #மஹாபத்ரகாளி      காரைக்கால் அம்மையார்க்கு வழிகாட்டிய ஆலங்காட்டு பத்ர காளி! காளி பீடம்: 51 சக்தி பீடங்களில் காளி பீடம், காளியுடன் சிவன் ஆடிய தாண்டவம், காரைக்கால் அம்மையார்க்கு வழிகாட்டிய திருவாலங்காடு பத்ர காளி. மண்ணில் மக்கள் நல்ல வண்ணம் வாழ அம்பிகை பராசக்தி பல்வேறு ரூபங்கள் கொண்டு துஷ்டர்களை சம்ஹாரம் செய்து நம்மை காத்து இரட்சித்து வருகிறாள். அவளுடைய கருணை அளவிடற்கரியது. ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு சிறப்பினை கொண்டது. காளி என்றாலே நம் நினைவில் வருவது உக்ர ரூபம் தான். ஆனால் நாம் அஞ்ச தேவையில்லை. காளி துஷ்டர்களையும், அரக்கர்களையும் மட்டுமே கொன்று குவிப்பாள். தம் குழந்தைகளை தாயாய் இருந்து காப்பாள். நற்கதிக்கு வழி தெரியாது தடுமாறி கிடக்கும் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுபவள். அவளே காரைக்கால் அம்மையாருக்கும் சிவத்தை அடைய வழிகாட்டினாள். இன்றும் தடுமாறும் மனதிற்கு நற்கதி அடைய வழிகாட்டுபவளே “திருவாலங்காட்டு பத்ர காளி” ஆவள். திருவாலங்காட்டு காளி தலபுராணம் இந்த ஊர் ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலங்காடு என்ற பெயர்ப் பெற்றது. பழையனூர் எனவும் இதற்கு பெயருண்டு. ...