இன்று நாடார்கள் பலருக்கும் வரலாற்று ரீதியாக எந்த தெளிவும் புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். நாடார்கள் பலர் தங்கள் பூர்வீகம் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லாததே காரணம். இதனால் வரலாற்று திரிபு அதிகம் நடக்கிறது.
அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த கமுதி கலவரம்.
இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தாமன கமுதி மீனாட்சி அம்மன் கோயிலில் நாடார்கள் நுழைய உரிமை இல்லை என்றும் நாடார்கள் அனுமதி கேட்ட போது சேதுபதி மன்னர் மறுத்தார் என்றும் மீறி நுழைந்ததால் தீட்டுப்பட்டது என்று மன்னர் அபராதம் விதித்தார் என்றும் அதை எதிர்த்து நாடார்கள் நீதிமன்றம் நாடிய போதும் நாடார்களுக்கு பாதகமாகவே தீர்ப்பு வந்தது என்று கூறி இத்தகைய கொடுமையை அனுபவித்தவர்கள் நாடார்கள் என்று உருட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சில கேள்விகள்.
தடைக்கு முன் கோயிலுக்குள் நாடார்கள் சென்று வழிபாடு செய்து வரவில்லையா?
யார் யாரின் தூண்டுதலால் நாடார்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று சேதுபதி மன்னரிடம் நிர்பந்திக்கப்பட்டது?
பொறையாறு ரத்தினசாமி நாடார் அவர்கள் இலங்கையில் வைத்து சேதுபதி மன்னரிடம் போட்ட ஒப்பந்தத்தை ஆங்கிலேயர்கள் என்ன சொல்லி அதை ரத்து செய்ய சேதுபதி மன்னரிடம் நிர்பந்தித்தார்கள்?
நாடார்களுக்கு ஆதரவாக வழக்காடிய வழக்கறிஞர் எந்த சமூகம்?
நாடார்களுக்கு ஆதரவாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிராமணர்கள் உட்பட மேலும் சில பிராமணர்கள் ஏன் சாட்சியம் அளித்தனர்?
இந்த பிரச்சனை நடந்த அதே காலக்கட்டத்தில் கும்பகோணம் கோயிலின் அறங்காவலராக ஒரு நாடார் இருந்ததை ஏன் இவர்கள் குறிப்பிடவதில்லை?
அதே இராமநாதபுரம் சமஸ்தானத்தில் நாடார்களுக்கு மட்டும் வெண்கொற்றக்குடை உபயோகிக்கும் உரிமை உள்ளதை சமஸ்தான செப்பேடில் உள்ளதை ஏன் பதிவு செய்ய மறுக்கிறார்கள்?
இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இராமேஸ்வரம் கோயிலில் வட பிராமணர்களுக்கும் சிவாச்சாரிய பிராமணர்களுக்கும் பூஜை தொடர்பான பிரச்சனையை தீர்த்து வைக்கும் குழு ஒன்றை உத்தம பணிக்கன் மயிலேறி நாடான் என்பவர் தலைமையில் ஒரு குழு இருந்ததையும் ஏன் பேசுவதில்லை?
நாடார்கள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தீட்டு இனம் என்றால் ஏன் நாடார் தலைமையிலான குழுவில் வெள்ளாளர், நாயுடு, செட்டியார் ஆகியோர் இருந்தனர்?
அந்த தலைமையை மேற் குறிப்பிட்ட சமூகத்தினர் ஏன் ஏற்க வேண்டும்?
அந்த குழுவில் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் சாதியான செம்பநாட்டு மறவர் என்கிற சிறுதாலிகட்டி மறவரும் இல்லை மறவரின் மற்றொரு பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவரும் இல்லையே ஏன்?
சமஸ்தானத்தின் மன்னருக்கும் அவரது சமூகமான சிறுதாலிக்கட்டி மறவருக்கும் மறவரின மற்றொரு பிரிவான கொண்டையங்கோட்டை மறவருக்கும் இராமேஸ்வரம் கோயிலில் எந்த ஒரு உரிமையும் இல்லையே அது ஏன் மற்றும் எதனால்?
இந்த கேள்விக்கெல்லாம் பதில் “கோயிலுக்குள் நுழையாதே” என்ற புத்தகத்தில் விலாவரியாக தகுந்த ஆதாரங்களுடன் உள்ளது. படித்து உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
எவன் ஒருவன் தான் பிறந்த தன் சாதியை பற்றி தவறாக பேசுகிறானோ அவன் தன்னை பெற்றெடுத்த தாயை வேசி என்பதற்கு சமம்!
Comments
Post a Comment