முத்தொள்ளாயிரம் 1. கடவுள் வாழ்த்து. மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் ஊர்திரைநீர் வேலி உலகு ! சேரன் 2. அடைப்பும் திறப்பும் தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலா வண்டுலா அங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு ! 3. இழந்தலும் பெற்றதும் வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர் மாமையே யன்றோ இழப்பது- மாமையிற் பன்னுாறு கோடி பழுதோ! என் மேனியிற் பொன்னுாறி யன்ன பசப்பு! 4. முடிந்ததும் முடியாததும் கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில் அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல் ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார் வாயும் அடைக்குமோ தான்! 5. பழிக்காப்பு வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும் நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார் தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என! 6. கனவுப் புணர்ச்சி புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்றலரு நல்நாடன்-என் னாகம் கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான் என்கொல் இவரறிந்த வாறு! 7. நெஞ்சு விடு துாது கடும்பனி...
ART - LITERATURE - CULTURE