Skip to main content

Posts

Showing posts from February, 2023

கமுதி கலவரம். ( நன்றி - ஜெகதீஷ் பாண்டியன்)

இன்று நாடார்கள் பலருக்கும் வரலாற்று ரீதியாக எந்த தெளிவும் புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். நாடார்கள் பலர் தங்கள் பூர்வீகம் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லாததே காரணம். இதனால் வரலாற்று திரிபு அதிகம் நடக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த கமுதி கலவரம். இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தாமன கமுதி மீனாட்சி அம்மன் கோயிலில் நாடார்கள் நுழைய உரிமை இல்லை என்றும் நாடார்கள் அனுமதி கேட்ட போது சேதுபதி மன்னர் மறுத்தார் என்றும் மீறி நுழைந்ததால் தீட்டுப்பட்டது என்று மன்னர் அபராதம் விதித்தார் என்றும் அதை எதிர்த்து நாடார்கள் நீதிமன்றம் நாடிய போதும் நாடார்களுக்கு பாதகமாகவே தீர்ப்பு வந்தது என்று கூறி இத்தகைய கொடுமையை அனுபவித்தவர்கள் நாடார்கள் என்று உருட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சில கேள்விகள். தடைக்கு முன் கோயிலுக்குள் நாடார்கள் சென்று வழிபாடு செய்து வரவில்லையா? யார் யாரின் தூண்டுதலால் நாடார்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று சேதுபதி மன்னரிடம் நிர்பந்திக்கப்பட்டது? பொறையாறு ரத்தினசாமி நாடார் அவர்கள் இலங்கையில் வைத்து சேதுபதி மன்னரிடம் ப