Skip to main content

Posts

Showing posts from 2022

திண்ணை

எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிநிலையில் தன

ARUMUGANERI FREEDOM FIGHTERS

தியாக பூமியின் சுதந்திரப்போராட்டத் தியாகிகள் கே.டி.கோசல்ராம்த.பெ. தூசிமுத்து நாடார் 1930 இல் தம்முடைய 15 ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதில் வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவருடைய சிறுவயதினை மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவாரம் வரை சப்ஜெயிலில் வைத்து அடித்து விரட்டி விட்டனர். 1942 போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதிவழக்கில் 1வது எதிராளியாகச் சேர்க்கப்பட்டு 21 மாதங்கள் சப் ஜெயிலில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். சாக்குச் சட்டையை அணியச் செய்து இரவும் பகலும் கை விலக்கு மாட்டி தனி அறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்யப்பட்டு தஞ்சை வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலைப் பெற்றார். ஆலயப்பரவேசம் :தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேசச் சட்டம் வரும் முன்பாகத் திருச்செந்தூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்ற

ஆறுமுகனேரி

ஆறுமுகனேரி வரலாறு எல்கை எழில் மிகு ஆறுமுகநேரியின் எல்கைகளாக தொன்மைச்சிறப்புமிக்க நான்கு ஊர்கள் அமைந்துள்ளன. அவை கிழக்கே காயல்பட்டினம் மேற்கே மூலக்கரை தெற்கே வீரபாண்டியன்பட்டினம் வடக்கே ஆத்தூர் எனும் ஊர்கள் ஆகும். ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் காயல்பட்டினம் தென்பாகம் வடபாகம் என்ற நான்கு வருவாய் கிராமங்களின் தொகுப்பே இன்றைய ஆறுமுகநேரி. வடக்கு 8.57 கிழக்கு 78.12 எனும் பாகைகளில் அமைவிடம் உள்ளது. பண்டைக் காலத்தில் கொற்கையைத் தலைமையிடமாகக் கொண்ட குட நாடு என்ற பிரிவில் இவ்வூர் இருந்தது. 1986 வரை திருநெல்வேலி மாவட்டப் பிரிவிலும் இப்போது தூத்துக்குடி மாவட்டப் பிரிவிலும் உள்ளது. ஐவகை நிலங்களான குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தனுள் மருதமான வயல்வெளியும் நெய்தலான கடற்கரைப் பகுதியும் திரிந்த (சேர்ந்த) பகுதியாக உவர் நிலமாக ஆறுமுகநேரி அமைந்துள்ளது. சங்க காலத்திற்கு முன்னும் பின்னும் மக்கள் வாழ்ந்ததற்கான பானை ஓடுகள் உடைந்த தாழிகள் கிடைக்கின்றன. முற்காலச் சிறப்புகள் உப்பளமாக மண் மேடிட்டுப் போயின. சுனாமி வெள்ளம் போன்ற பேரழிவுகளால் தாமிரபரணி தடம் மாறியது கடல் மண் மேடுகளால் பின் வாங்கிப் ப

ஆல்பர்ட் நாடார் குடும்பத்தினர்- ( நன்றி-கொடுமுட்டி பால்பேக்கர்)

இந்த புகைப்படம் 1910களில் திருவந்தபுரத்தின் முதல் தொழில் சார்ந்த புகைப்படம் கலைஞர் (professional photographer) வாசலாம் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த பாடத்தில் இருப்பது குமரி மாவட்டம் தேவிக்கோடு பகுதியை சார்ந்த பாக்கியநாதன் நாடார் (ஆசிரியர்)குடும்பம் இவர்கள் 1880களில் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் குடியாமர்ந்தானர் .நடுவில் தலைப்பாகை கட்டி அமர்ந்து இருப்பவர் ஆல்பர்ட் நாடார் இவர் திருவாங்கூர் கருவூலத்தில் பணியாற்றியவர். இந்த பாடத்தில் மேல் இருந்து வலது பக்கம் முதலில் நிற்பவர் கொடுமுட்டியை சார்ந்த ஞானஆபிரகாம் நாடார் (காண்டிராக்டர்) (தேவிக்கோடு குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார் ). இப்போ எதற்கு இந்த புகைப்படம் என்றால் நாடார்கள் 1910யில் இருந்ததையும் 1910யில் எட்கர் தர்ஸ்டன் எழுதிய caste and tribes of south india வில் பதிவு செய்த வேறு இன மக்களின் புகைப்படத்தையும் பார்க்கவும்.

சான்றோர்-நாடான் (இலக்கியவாணன் நாடார்)

திருவாலவாய நாடார் கல்விச் சேவை

1910ல்  விருதுநகரில் 1ம், 2ம் வகுப்பு நடத்தும் நோக்கில் பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை திருவாலவாய நாடார் என்பவர் தொடங்கி இருக்கிறார். வீடு வீடாகப் போய் பெற்றோரிடம் கெஞ்சி பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்து படிக்க வைத்திருக்கிறார். 1916லேயே 5ம் வகுப்பு வரை,பின்னர் 1922ல் 7ம் வகுப்பு வரை என வளர்ந்த பள்ளி "க்ஷத்ரிய பெண்கள் பள்ளி" என்ற பெயரால் அழைக்கப்பட்டு இன்று 110 வருடங்களைக் கடந்து நிற்கிறது. இங்கே காமராஜரின் தங்கை நாகம்மாளும் சில வருடங்கள் படித்ததாகக் கூறப்படுகிறது.  சரி, இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? பொதுவாகவே தமிழ்நாட்டில் பெண் கல்வி, பெண்ணுரிமை இது பற்றியெல்லாம் நீதிக்கட்சியும் பெரியாரும் மட்டுமே பேசியது போல் திராவிட ஆதரவாளர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீதிக்கட்சியும் பெரியாரும் பேசுவதற்கு முன்பே பாரதியார் பேசினார் என்பது ஒருபுறம். மறுபுறம்,1913ல் திராவிட சங்கம் உருவானது. பின்னர் 1916ல்தான் அது நீதிக்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதற்கெல்லாம் முன்பே 1910ல் இப்படி பெண்கள் பள்ளி உருவாகி இருக்கிறது என்ற தகவல் தெரிந்தால், "திராவிட