Marirajan Rajan நன்றி " குடவோலைத் தேர்தல் " இது தேர்தல் நேரம்.. வழக்கமாய் இந்த நேரத்தில் ஒரு கல்வெட்டுச் செய்தியை பகிர்வோம்.. தமிழர்களின் பண்டைய குடவோலைத் தேர்தல் முறை. உத்ரமேரூர் கல்வெட்டு. குடவோலைத் தேர்தல் முறை சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகிறது. காலத்தால் மிக மூத்த தொல்லியல் ஆவணமாக முற்கால பாண்டியன் மாறஞ்சடையனின் மானூர் கல்வெட்டு குடவோலை தேர்தல் பற்றிக் கூறுகிறது. உத்ரமேரூர் பராந்தகச்சோழனின் கல்வெட்டு குடவோலை முறையை விரிவாகப் பதிவு செய்கிறது. உத்ரமேரூர் ஊர்சபை 12 சேரிகளாகவும்., 30 குடும்புகளாகவும் ( வார்டு) பிரிக்கப்பட்டு வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் .. 1. ஆண்டு வாரியம். 2. ஏரி வாரியம். 3.பொன் வாரியம். 4 பஞ்சவாரியம். போன்ற வாரிய உறுப்பினர்களாக ஊர்சபையின் பணியாளர்களாக இருப்பார்கள்.. இவ்வாரிய உறுப்பினர்கள் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தலில் நிற்பதற்கானத் வேட்பாளர்களின் தகுதி. தேர்தல் நடைபெற்ற முறை ஆகிய செய...
ART - LITERATURE - CULTURE