Skip to main content

Posts

Showing posts from 2018

இராஜராஜ சோழரின் பள்ளிப்படை

இராஜராஜ சோழரின் பள்ளிப்படை எங்கே இருந்தது, உடையாளூர் அருகே ஒரு லிங்கம் உள்ளது அதை தான் அவரது பள்ளிப்படை என்கிறார்கள் அதிலும் உறுதி தன்மை கிடையாது, சமிபத்தில் தஞ்சையில் தான் அவருக்கு பள்ளிப்படை இருந்தது, அந்த கல்வெட்டு அனைத்தும் இராஜராஜ சோழரின் அருங்காட்சியகத்தில் உள்ளது என்கிறார்கள், பள்ளிப்படை கோவிலை புனரமைப்பு செய்ததாகவும் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டும் உள்ளது. தகவல் தெரிந்தவர்கள் இந்த சந்தேகத்தை தீர்க்கவும். இராஜராஜரின் பள்ளிப்படை கல்வெட்டு. ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில் பெரியதிருமண்டபமுன்...டுப்பு ஜீ(ர்) நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர் யகம் செய்துநின்ற ஜயசிங்ககுல கா வளநாட்டு குளமங்கல நாட்டு சா மங்கலத்து சாத்தமங்கலமுடை ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ டன் விரதங்கொண்டு செய்தார் இ (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ யமந அறங்காட்டிப்பிச்