வரலாற்றுச் சிறப்பு கொண்ட நம்ம மாவட்டம்
தமிழகத்தில் தொல் பழமையும் , வரலாற்று சிறப்பும்
பெற்ற நமது மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் .
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி , திருச்செந்தூர் , கோவில்பட்டி ஆகிய
3 வருவாய் கோட்டங்களையும் , எட்டயபுரம் , கோவில்பட்டி , ஓட்டப்பிடாரம் , சாத்தான்குளம்
, தூத்துக்குடி , திருச்செந்தூர் , ஸ்ரீவைகுண்டம் , விளாத்திகுளம் ஆகிய 8 தாலுகாக்களையும்
, 468 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது . தமிழகத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது
. கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் மன்னார்வளைகுடா கடல் உள்ளது .
மொத்தம் 4 ஆயிரத்து 621 சதுர கி.மீ . பரப்பரளவு
கொண்ட தூத்துக்குடியில் கடந்த 2001 – ம் ஆண்டு கணகெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை
15 லட்சத்து 72 ஆயிரத்து 273 பேர் . அதில்
7 லட்சத்து 66 ஆயிரத்து 823 பேர் ஆண்கள் . 8 லட்சத்து 5 ஆயிரத்து 450 பேர் பெண்கள்
.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு
பின் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி புதிதாக
உருவாக்கப்பட்டு உள்ளது . இந்த மாவட்டத்தில் இருக்கும் ஒரே பாராளுமன்ற தொகுதி இதுதான்
. சட்டசபை தொகுதிகளைப் பொறுத்தவரை சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டு தூத்துக்குடி
, விளாத்திக்குளம் , ஓட்டப்பிடாரம் , கோவில்பட்டி , ஸ்ரீவைகுண்டம் , திருச்செந்தூர் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன .
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு என்றால் 1, மாநகராட்சி
, 2 நகரசபை ( கோவில்பட்டி, காயல்பட்டினம் ) , 12 யூனியன்கள் , 19 நகரப் பஞ்சாயத்துக்கள்
, 408 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன . இதில் தூத்துக்குடி நகரசபை கடந்த 5-8-2008 அன்று
மாநகராட்சியாக தரம் உயர்ந்தது .மாவட்டப் பஞ்சாயத்து நிர்வாகமும் உள்ளது .
மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் , மீன்பிடித்தல்
, உப்பு உற்பத்தி ஆகியவை உள்ளது .மேலும் கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிலும்,புதியம்புத்தூரில்
ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பும் உள்ளது .
துத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் , ஸ்பிக் தொழிற்சாலை
, கனநீர் திட்டம் , அனல்மின்நிலையம் , ஆறுமுகநேரி சாகுபுரத்தில் உள்ள தாரங்கதாரா ரசாயன
தொழிற்சாலை ஆகியவை நம்ம மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகளாகும். இதுதவிர தூத்துக்குடியில்
உள்ள துறைமுகமும் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது . இந்த துறைமுகத்தின்
மூலம் வெளிநாடுகளுக்கு பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன . பதப்படுத்தப்பட்ட
கடல் உணவுகள் அவற்றுள் முக்கியமானது. .
தூத்துக்குடி
என்றதுமே முத்துதான் நம் நினைவுக்கு வரும்.
இங்கு முத்துக்குளியல் தொழில் சிறந்து விளங்கியது . தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில்
வளர்ச்சியை கருத்தில் கொண்டே தூத்துக்குடி
அருகே வாகைக்குளத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னைக்கு தினசரி
விமான சேவை உண்டு.
அரசு மருத்துவக்கல்லூரி ஒன்று ( தூத்துக்குடி
) , 6 என்ஜினீயரிங் கல்லூரிகள் ஒரு வேளாண்மை கல்லூரி ( கிள்ளிகுளம் ) . மீன்வளக் கல்லூரி
( தூத்துக்குடி ) , 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் , சிறப்பு கல்லூரி ஒன்று ,
3 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் உள்ளன .
1.076 தொடக்கப்பள்ளிகளும் , 284 நடுநிலைப் பள்ளிகளும்
, 73 உயர்நிலைப் பள்ளிகளும் , 97 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன . இதுதவிர 2 இடங்களில்
அரசு பாலிடெக்னிக் நிறுவனங்களும் உள்ளன . மருத்துவ வசதிக்காக ஆரசு ஆஸ்பத்திரிகள்
10 , ஆரம்ப சுகாதார நிலையங்கள் 47 , துணை சுகாதார
நிலையங்கள் 249 ஆகியவை உள்ளன . 196 அரசு மருத்துவர்கள்
மருத்துவ சேவையாற்றுகிறாற்கள் . இந்திய மருத்துவம் சார்ந்த 2 ஆஸ்பத்திரிகள் உள்ளன
.
நமது மாவட்டத்தின் முக்கிய கோவில்களாக திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவில் , நவ திருப்பதி கோவில்கள் , குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
கோவில் , ஏரல் அருணாசல சுவாமி கோவில் ,சிந்தலக்கரை காளிபராசக்தி கோயில், தூத்துக்குடி
பனிமயமாதா ஆலயம் , புளியம்பட்டி ஆந்தோணியார் ஆலயம் ஆகியன குறிப்பிடத்தக்கவை . இந்த
கோவில்கள் மற்றும் ஆலய திருவிழாக்களின் போது இங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்
.
ஏரல் அருகே உள்ள கொற்கை 12 – ஆம் நூற்றணடில் துறைமுகமாக
விளங்கியது . பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இந்த துறைமுகத்தில் இருந்துதான் பல வெளி
நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து மூலம் வாணிபம் நடைபெற்றது . இந்த பழமையான துறைமுகம்
தற்போது அழிந்துவிட்டது . இப்போது இங்கு கொற்கை என்னும் கிராமம் மட்டுமே இருக்கிறது
.இருப்பினும் 12 – ஆம் நூற்றாண்டில் இருந்த புன்னை மரம் ஒன்று இப்போதும் உள்ளது . திருச்செந்தூரில்
இருந்து 10 கி.மீ. தொலைவில் மேலப்புதுக்குடி சுனை என்னும் பகுதி உள்ளது . இங்குள்ள
தேரியில் இருக்கும் நீருற்று மிகவும் சிற்ப்புவாய்ந்தது . இங்கு புகழ்பெற்ற அருஞ்சுனை
காத்த அய்யனார் கோவில் உள்ளது .
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலையில் அரிய வகை
இனமான வெளிமான் அதிகமாக உள்ளன . இந்த மலையில் உள்ள தட்பவெப்ப நிலையும் , ஏராளமான மரங்களும்
வெளிமான்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையில் உள்ளதால் அவற்றுக்கு இங்கு வனத்துறை சார்பில்
சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது . நெல்லையில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் வல்லநாடு
உள்ளது .
மேலும் இங்கு தமிழ்நாடு காவல் துறையின் சார்பில்
துப்பாக்கி சுடுதளம் உள்ளது . இந்தியாவில் உள்ள தலைசிறந்த துப்பாக்கி சுடுதளத்தில்
இதுவும் ஒன்று . பழமையான கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை , அவர் தூக்கிலிடப்பட்ட
கயத்தாறு நினைவுச்சின்னம்,,எட்டையபுரம் மகாகவி பாரதியார் வீடு,ஓட்டப்பிடாரத்தில் வ.ஊ.சி
யின் வீடு,ஆகியன பார்க்கவேண்டியனவாகும்.
Comments
Post a Comment