தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதர் , திருவேங்கடமுடையான் மண்டபத்தில் சிற்பங்கள் மிக அழகாக விளங்குகின்றன. ஆளுயரத்துக்கும் பெரிய ராம லக்ஷ்மண அகோர வீரபத்திரர் சிலைகள். பிரம்மாண்டமான சிம்மங்கள் யாளிகள் .
மண்டபத்தின் சுற்றுச்சுவர்களின் கீழ்ப்பகுதிகளில் வானர சேனை பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும் சிற்பங்கள் உள்ளன. இராமபிரான் சுக்ரீவனை அணைத்தபடி நிற்கும் சிற்பமும், லக்ஷ்மணன் அனுமனை அணைத்தபடி நிற்கும் சிற்பமும் (அருகே அங்கதன் வணங்கும் கோலத்தில்) சிறப்பு.
அகோரவீரபத்திரரின் பாதத்தில் நரம்புகள் புடைத்திருப்பதையும் செதுக்கியிருக்கும் அற்புதம். மேல் தளத்தில் மர சிற்பங்களோ என எண்ண வைக்கும் கல் வேலைப்பாடுகள்.
மண்டபத்தில் இருக்கும் யாளி சிற்பங்களின் வால் சுழிப்புகள் ஒரு கச்சிதமான வட்டமாக அமைந்திருக்கின்றன. அதில் ஒரே ஒரு சிற்பத்தில் மட்டும், அந்த வட்டத்துக்குள் ஒரு சிற்பம் இருக்கிறது.அநேகமாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கும் அது. திகைக்க வைக்கும் வேலைப்பாடு..நாய் முயல், ஒட்டகம் என்று பல வகை மிருகங்களும் அங்கே சிற்பங்களாக உள்ளன.
Comments
Post a Comment