பாண்டிய, சோழ விசயநகர மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் (தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும், தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை)
மெய்க்கீர்த்திகள் - 1
1. பாண்டிய மன்னர் மெய்க்கீர்த்திகள்
1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி.
1.1.1 (01)
கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத | 5 |
கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக் கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் | 10 |
அளவரிய ஆதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன்முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வௌிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் | 15 |
கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கிச் செங்கோ லோச்சி வெண்குடை நீழற் றங்கொலி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பா லுரிமை திறவிதின் நீக்கித் தன்பா லுரிமை நன்கன மமைத்த- | 20 |
மானம் பேர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன் மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி மலர் மங்கையொடு மணனயர்ந்த | 25 |
அற்றமிலடர் வேற்றானை யாதிராச னவனிசூளாமணி எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்மன்; மற்றவர்க்கு மருவினியவொரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வௌிப்பட்டு விலங்கல்வெல்பொறி வேந்தர்வேந்தன் சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன் | 30 |
மற்றவற்குப் பழிப்பின்றி வழித்தோன்றி உதயகிரி மத்யமத் துறுசுடர்போலத் தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வௌிப்பட்டுச் சூழியானை செலவுந்திப் பாழிவா யமர்கடந்து வில்வேலி கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும் | 35 |
விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும் அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செருவென்றும் பாரளவுந் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும் உரிமைச்சுற்றமோ டவர்யானையும் புரிசையுமதிற் புலியூரும் | 40 |
பகல்நாழிகை யிறவாமை இகலாழியுள் வென்றுகொண்டும் வேலாழியும் வியன்பறம்பு மேலாமைசென் றெறிந்தழித்தும் இரணியகர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்தும் அந்தணர்க்கும் அசக்தர்க்கும் வந்தணைகவென் றீத்தளித்த மகரிகையணி மணிநெடுமுடி அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்மன் | 45 |
மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்திப் பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித் தாய்வேளை யகப்படஎய் யென்னாமை யெறிந்தழித்துச் செங்கொடியும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக் கொங்கலரும் நறும்பொழில்வாய்க் குயிலொடு மயிலகவும் | 50 |
மங்கலபுரமெனு மாநகருண் மகாரதரை எறிந்தழித்து அறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச் சிலையும் புலியுங் கயலுஞ் சென்று நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய் மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோல் | 55 |
தென்ன வானவன் செம்பியன் சோழன் மன்னர் மன்னன் மதுரகரு நாடகன் கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற் கொங்கர்கோமான் கோச்சடையன்; மற்றவற்குப் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக் | 60 |
கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்து கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து மன்னிக்குறுச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து மேவலோர் கடற்றானையோ டேற்றெதிரே வந்தவரைப் பூவலூர்ப் புறங்கண்டும் | 65 |
கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார் கடும்பரியுங் கடுங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும் செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட் டேசழிய எண்ணிறந்த மால்களிறும் இவுளிகளும் பலகவர்ந்தும் தரியலராய்த் தறித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும் | 70 |
பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்டு அழகமைந்த வார்சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப் பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப் பசுபதியது பதும பாதம் பணிந்தேத்திக்- | 75 |
கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுத்திட்டுங் கொங்கர்வன் நறுங்கண்ணிக் கங்கராசனொடு சம்பந்தஞ்செய்தும் எண்ணிறந்தன கோசகசிரமும் இரணியகர்ப்பமுந் துலாபாரமும் மண்ணின்மிசைப் பலசெய்து மறைநாவினோர் குறைதீர்த்தும் கூடல்வஞ்சி கோழியென்னு மாடமா மதில்புதுக்கியும்- | 80 |
அறைகடல் வளாகங் குறையா தாண்ட மன்னர் மன்னன் றென்னவர் மருகன் மான வெண்குடை மான்றேர் மாறன்; மற்றவற்கு மகனாகி மாலுருவின் வௌிப்பட்டுக் கொற்றமூன் றுடனியம்பக் குளிர்வெண்குடை மண்காப்பப் | 85 |
பூமகளும் புலமகளும் நாமகளும் நலனேத்தக் கலியரைசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக் கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையைப் | 90 |
பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேல் தண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும் தீவாய் அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையுங் குறும்பரையு மடலமரு ளழித்தோட்டிக் காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செருவென்றும் | 95 |
அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய சிலைமலி தடக்கைத் தென்ன வானவன் அவனே சிரீவரன் சிரீமனோகரன் சினச்சோழன் புனப்பூழியன் வீதகன்மஷன் விநயவிச்ருதன் விக்ரமபாரகன் வீரபுரோகன் மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்தித வீரன் | 100 |
கிரிஸ்திரன் கீதிகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன் கலிப்பகை கண்டகநிஷ்டூரன் காரியதட்சிணன் கார்முகபார்த்தன் பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூர்ணன் பாபபீரு குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிறுகியன் கூடணிற்ணயன் நிறையுறு மலர் மணிநீண்முடி நேறியர்கோ னெடுஞ்சடையன் | 105 |
மற்றவன்றன் ராஜ்யவத்சரம் மூன்றாவது செலாநிற்ப ஆங்கொரு நாண்மாட மாமதில்..... |
2. சீவரமங்கலச் செப்பேட்டுப் பகுதி
1.1.2 (02)
அன்ன னாகிய அலர்கதிர் நெடுவேற் றென்னன் வானவன் செம்பியன் வடவரை யிருங்கய லாணை ஒருங்குட னடாஅய் ஒலிகெழு முந்நீ ருலகமுழு தளிக்கும் வலிகெழு திணிதோண் மன்னவர் பெருமான் | 5 |
றென்னல ராடி தேம்புனற் குறட்டிப் பொன்மலர் புறவில் வெள்ளூர் விண்ணஞ் செழியக் குடியென் றிவற்றுட் டெவ்வ ரழியக் கொடுஞ்சிலை அன்றுகால் வளைத்தும் மாயிரும் பெரும்புனற் காவிரி வடகரை | 10 |
ஆயிர வேலி அயிரூர் தன்னிலும் புகழி யூரிலுந் திகழ்வே லதியனை ஓடுபுரங் கண்டவ னொலியுடை மணித்தே ராடல் வெம்மா அவைஉடன் கவர்ந்தும் பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப் | 15 |
பல்படையொடு பார்ஞௌியப் பவ்வம்மெனப் பரந்தெழுந்து குடபாலும் குணபாலும் மணுகவந்து விட்டிருப்ப வெல்படையொடு மேற்சென்றங் கிருவரையும் இருபாலும் இடரெய்தப் படைவிடுத்துக் குடகொங்கத் தடன்மன்னனைக் கொல்களிற்றொடுங் கொண்டுபோந்து | 20 |
கொடியணிமணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்துக் கங்கபூமி யதனளவுங் கடிமுரைசுதன் பெயரறையக் கொங்கபூமி யடிப்படுத்துக் கொடுஞ்சிலைபூட் டிழிவித்துக் பூஞ்சோலை அணிபுறவிற் காஞ்சிவாய்ப்பே ரூர்புக்குத் திருமாலுக் கமர்ந்துறையக் குன்றமன்னதோர் கோயிலாக்கியும் | 25 |
ஆழிமுந்நீ ரகழாக அகல்வானத் தகடுரிஞ்சும் பாழிநீண்மதில் பரந்தோங்கிப் பகலவனு மகலவோடும் அணியிலங்கையி லரணிதாகி மணியிலங்கும் நெடுமாட மதில்விழிஞ மதுஅழியக் கொற்றவேலை உறைநீக்கி வெற்றத்தானை வேண்மன்னனை | 30 |
வென்றழித்தவன் விழுநிதியொடு குன்றமன்ன கொலைக்களிரிங் கூந்தன்மாவுங் குலதனமும் நன்னாடுங் அவைகொண்டும் அரவிந்த முகத்திளையவ ரறிநெடுங்கண் ணம்புகளாற் பொரமைந்தர் புறம்பெய்தும் பொன்மாட நெடுவீதிக் கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்றதோர் கல்லகழொடு | 35 |
விசும்புதோய்ந்து முகிறுஞ்சலில் அசும்பறாத வகன்சென்னி நெடுமதிலை வடிவமைத்தும் ஏவமாதி விக்ரமங்க ளெத்துணையோ பலசெய்து மணிமாடக் கூடல்புக்கு மலர்மகளொடு வீற்றிருந்து மநுதர்சித மார்கத்தினால் குருசரிதம் கொண்டாடிக் | 40 |
கண்டக சோதனை தான்செய்து கடன்ஞாலம் முழுதளிக்கும் பாண்டிய நாதன் பண்டித வத்சலன் வீர புரோகன் விக்ரம பாரகன் பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி நின்றிலங்கும் மணிநீண்முடி நிலமன்னவனெடுஞ் சடையற்கு | 45 |
ராஜ்யவர்ஷம் பதினேழாவது பாற்பட்டு செல்லாநிற்க . . . . . . |
3. சின்னமனூர் சிறிய செப்பேட்டுப் பகுதி
1.1.3 (03)
ஸ்வஸ்திஸரீ அமிர்தகிரணன் அன்வயத்தில் ஆகண்டலனது அழிவகல சமர்முகத் தசுரகணந் தலையழியச் சிலைகுனித்து வடவரையது வலாரசூளிகை மணிக்கெண்டைப் பொறிசூட்டியுந் தென்வரைமிசைக் கும்போத்வனது தீந்தமிழிற் செவிகழுவியும் ஹரிஹயன தாரம்பூண்டும் அர்தாசன மாவனோடேறியும் | 5 |
சுரிவளையவன் றிருமுடிமிசைத் தூணிபலபடத் தோளேச்சியும் ஓதமீள வேலெறிந்து மோராயிரங் கிரதுச்செய்தும் பூதகணம் பணியாணடும் புவனதலம் பொதுநீக்கியும் யானையாயிர மையமிட்டும் அபரிமிதமதி செயங்கள்செய்து ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்- | 10 |
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகிப் பகைப்பூபர் தலைபணிப்பப் பரமேசுரன் வௌிப்பட்டு அரிகேசரி அசமசமன் அலங்கிய விக்ரமன் அகாலகாலலெனத் தனக்குரியன பலகுணநாம முலகுமுழு துகந்தேத்தப் பராவனிப குலமிறைஞ்சப் பாரகலம் பொதுநீக்கி | 15 |
தராசுரரது இடரகலத் தனவருஷம் பொழிதற்கு வலாஹகத்தின் விரதம்பூண்டு துலாபாரம் மினிதேறிச் சரணிபனா யுலகளித் திரணியகர்ப்ப மிருகால்புக்கு கோசகசிரத் தொடக்கத்துக் குருதானம் பலசெய்து வாசவன்போல் வீற்றிருந்தனன் வசுதாபதி மாறவர்மன் | 20 |
மற்றவர்கு மகனாகி மதிபுரையும் குடைநீழல் அற்றமின்றி அவனிமண்டலமுடனோம்பி அருள்பயந்த கற்பகத்தின் விரதம் கொண்டு கலிகலுஷ மறநீக்கி அற்பமல்லாத் திரவியங்கொடுத் தவனிசுர ரிடர்நீக்கி கருதாது வந்தெதிர்த்த கழல்வேந்த ருடனவிய | 25 |
மருதூரொடு குவளைமலையு மத்தவேழஞ் செலவுந்தி. . . . |
தளவாய்புரச் செப்பேட்டுப் பகுதி
1.2.1 (04)
ஸ்வஸ்தி ஸரீ ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழ் மலர்நெடுங்கட் டிசைமகளிர் மெய்க்காப்ப விண்ணென் பெயரெய்திய மேகஞாலி விதானத்தின் தண்ணிழற்கீழ் சகஸ்ரபண மணிகிரணம் விளக்கிமைப்ப புஜங்கம புரஸ்ஸர போகிஎன்னும் பொங்கனை | 5 |
மீமிசைப் பயந்தரு தும்புரு நாரதர் பனுவ னரப்பிசை செவியுறப் பூதல மகளொடு பூமகள் பாதஸ்பரி சனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் திண்படைமால் ஸரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநாபி மண்டலத்துச் | 10 |
சோதிமரகத துளைத்தாட் சுடர்பொற் றாமரைமலர்மிசை விளைவுறு களம கணிசமென மிளிர்ந்திலங்கு சடைமுடியோ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலையோடு தோன்றின சதுர்புஜன் சதுர்வக்த்ரன் சதுர்வேதி சதுர்த்வயாக்ஷன் மதுகமழ்மலர்க் கமலயோனி மனந்தந்த மாமுனிஅத்ரி | 15 |
அருமரபிற் பலகாலந் தவஞ்செய்வுழி அவன்கண்ணில் இருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணன் வௌிப்பட்டனன் மற்றவர்க்கு மகனாகிய மணிநீள்முடிப் புதனுக்குக் கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோள் இளனொருநா ளீசனது சாபமெய்திப் | 20 |
பூந்தளவ மணிமுறுவுற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவற்பின் பார்வேந்த ரேனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலவியசெழு மகரக்குலம் விசையொடு விண்மீனொடு போர்மிக்கெழுந்த கடற்றிரைகள் | 25 |
சென்றுதன் சேவடிபணிய அன்றுநின்ற ஒருவன்பின் விஞ்சத்தின் விஜம்பணையும் பெறல்நகுக்ஷன் மதவிலாசமும் வஞ்சத்தொழில் வாதாவி சீராவியும் மகோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரதையும் ஒருங்குமுன்னாள் மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன் | 30 |
மடலவிழ்பூ மலயத்து மாமுனி புரோசிதனாகக் கடல்கடைந்து அமிர்துகொண்டுங் கயிலிணைவட வரைபொறித்தும் ஹரிஅயன தாரம்பூண்டு மவன்முடியொடு வளைஉடைத்தும் விரிகடலை வேலின்மீட்டும் தேவாசுரஞ் செருவென்றும் அகத்தியனொடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடை வேந்தழித்தும் | 35 |
தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர் படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும் மடைமிகுவேல் வானரத்வஜன் வசுசாப மகல்வித்தும் அரிச்சந்திர னகரழித்தவன் பரிச்சந்தம் பலகவர்ந்தும் நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன் னியதிநல்கி | 40 |
நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடா யிரம்வழங்கியும் உரம்போந்த திண்டோளரைசுக சுரம்போகித் துறக்கமெய்தியும் பொன்னிமையப் பொருப்பதனில் கன்னிமையிற் கயலெழுதியும் பாயல்மீ மிசைநிமிர்ந்து பல்லுண்டி விருப்புற்றும் காயல்பாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும் | 45 |
மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செயதும் அங்கதனி அருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாயிறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் முடிசுடிய முரண்மன்னர் ஏனைப்பலரு முன்னிகந்தபின் | 50 |
இடையாறையும் எழில்வெண்பைக் குடியிலும்வெல் கொடிஎடுத்த குடைவேந்தன் றிருக்குலத்துக் கோமன்னர் பலர்கழிந்தபின் காடவனைக் கருவூரில் கால்கலங்க களிறுகைத்த கூடலர்கோன் ஸரீபராந்தகன் குரைகடற்கோச் சடையற்குச் சேயாகி வௌிப்பட்ட செங்கண்மால் ஸரீவல்லபன் | 55 |
வேய்போலும் தோளியர்கேள் வித்யாதர ணிரண்யகர்பன் குண்ணுரில மர்வென்றுங் குரைகடலீ ழங்கொண்டும் விண்ணாள வில்லவற்கு வழிஞத்து விடைகொடுத்தும் காடவனைக் கடலாணுர்ப் பீடழியப் பின்னின்றும் குடகுட்டுவர் குணசோழர் தென்கூபகர் வடபுலவர் | 60 |
அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் களிறொன்று வண்குடந்தைக் கதிகாட்டி யம்புரசீலன் ஒளிறிலைவேல் உபாய பஹுலன் உம்பர்வான் உலகணைந்தபின் மற்றவர்க்கு மகனாகிய கொற்றவனெங் கோவரகுணன் பிள்ளைப்பிறைச் சடைக்கணிந்த பினாகபாணிஎம் பெருமானை | 65 |
உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில் அரவரைசன் பல்லுழி ஆயிமா யிருந்தலையால் பெரிதரிதின் பொறுக்கின்ற பொரும்பொறைமண் மகளைத்தன் தொடித்தோளி லௌிதுதாங்கிய தொண்டியர்கோன் துளக்கில்லி வடிப்படைமா னாபரணன் திருமருகன் மயிலையர்கோன் | 70 |
பெத்தப்பிக் குலச்சோழன் புகழ்தரு சிரீகண்டராசன் மத்தமா மலைவலவன் மணிமகள்அக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸரீபராந்தக மகாராசன் விரைபரித்தேர் வீரநாரணன் முன்பிறந்த வேல்வேந்தனைச் செந்தாமரை மலர்பழனச் செந்நிலந்தைச் செருவென்றும் | 75 |
கொந்தார்பூம் பொழிற்குன்றையும் குடகொங்கிலும் பொக்கரணியும் தென்மாயலுஞ் செழுவெண்கையமுf பராந்தகத்துஞ் சிலைச்செதிர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வஸ்துவா கனங்கொண்டும் ஆறுபல தலைகண்டும் அமராலயம் பலசெய்தும் சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ நகர்கொண்டும் | 80 |
கொங்கினின் தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கோண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும் எண்ணிறந்த பிரம்மதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்த லியற்றுவித்தும் நின்ற பெரும் புகழாலும் நிதிவழங்கு கொடையாலும் | 85 |
>வென்றிபொர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கதிரார் கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டருள்கண்டன் மதுராபுர பரமேச்வரன் மாநிதி மகரகேதனன்தன் செங்கோல்யாண்டு நாற்பதின்மேல் மூன்றோடீர்யாண்டில் . . . . . |
சின்னமனூர் பெரிய செப்பேட்டுப் பகுதி
1.3.1 (05)
ஸ்வஸ்திஸரீ திருவொடுந்தெள் ளமிர்தத்தொடுஞுf செங்கதிரொளிக் களஸ்துபத்தொடும் அருவிமதக் களிறொன்றுடந் தோன்றிஅர னவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்தங்கள் முதலாக வௌிப்பட்டது நாற்றிசையோர் புகழ்நீரது நானிலத்தி னிலைபெற்றது திருவொடுால் நேரஸ்துதிக் கப்பட்டது | 5 |
விரவலர்க் கரியது மீனத்வய சாசனத்தது பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனா கப்பெற்றது ஊழியூழி தோறுமுள்ளது நின்றஒரு வனைஉடையது வாழியர்பாண் டியர்திருக் குலமிதனில் வந்துதோன்றி வானவெல்லை வரைத்தாண்டும் அலைகடல்கடைந் தமிர்துகொண்டும் | 10 |
நானில்த்தோர் விஸ்மயப்பட நாற்கடலொடுபகலாடியும் மறுவிலொளிர் மணிமுடியொடுசங்கவெள்வளைதரெத்தும் மறுவிலொளிர் மணிமுடியொடு சங்கவெள் வளைதரித்தும் நிலவுலகம் தூதுய்த்தும் பாகசாசன னாரம்வவ்வியுஞ் செம்மணிப்பூ ணெடுதோன்றித் தென்றமிழின் கரைகண்டும் | 15 |
வெம்முனைவே லொன்றுவிட்டும் விரைவரவிற் கடல்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன் றாயிரம்வீசியும் பாழியமபா யகினிமர்ந்தும் பஞ்சவனெனும் பெயர்நிறீயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும் உளமிக்க மதியதனா லொண்டமிழும் வடமொழியும் | 20 |
பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் மாரதர்மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும் விசயனைவசு சாபம்நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும் வாசயில் மாக்கயல்புலிசிலை வடவரைநெற்றியில் வரைந்தும் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் | 25 |
அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியந் தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற் றைதுமிதித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும் மகாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாராசரும் சார்வபௌமரும் மகிமண்டலங் காத்திகந்தபின் | 30 |
வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற்சங் கரமங்கைப் பல்லவனையும் புரங்கண்ட பராங்குசன்பஞ் சவர்தோன்றலும் மற்றவற்கு பௌத்ரனாயின மன்னபிரா னிராசசிங்கனும் கொற்றவர்க டொழுகழற்காற் கோவரகுண மகராசனும் ஆங்கவர்காத் மசனாகி அவனிதலம் பொறைதாங்கித் | 35 |
தேங்கமழ்பொழிற் குண்ணூரிலும் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகைசூடிக் கோடாதசெங் கோனடாவிக் கொங்கலர்பொழிற் குடமுக்கிற் போர்குறித்து வந்தெதிர்ந்த கங்கபல் லவசோழ காலிங்க மாகதாதிகள் குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கனை தொடைநெகிழ்த்துப் | 40 |
பதிதியாற்ற லொடுவிளங்கின பரசக்கிர கோலாலனுங் குரைகழற்கா லரைசிறைசக் குவலயதலந் தனதாக்கின வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மனும் மற்றவனுக் கிளையனான மனுசரிதன் வாட்சடையன் பொற்றடம்பூண் சிரிபராந்தகன் புனைமணிப்பொன் முடிசூடிக் | 45 |
கைந்நிலந்தோய் கரிக்குலமும் வாஜிப்ருந்தமுங் காலாலுஞ் சென்னிலத்தி னிலஞ்சோரத் திண்சிலைவாய்க் கணைசிதறியும் கரகிரியிற் கருதாதவர் வரகரிக்குல நிரைவாரியும் நிலம்பேர நகர்கடந்துந் நெடும்பெண்ணா கடமழித்தும் ஆலும்போர்ப் பரியொன்றா லகன்கொங்கி லமர்கடந்தும் | 50 |
தேவதானம் பலசெய்தும் பிரமதேயம் பலதிருத்தியும் நாவலந்தீ வடிப்படுத்த நரபதியும் வானடைந்தபின் வானவன்மகா தேவியென்னு மலர்மடந்தை முன்பயந்த மீனவர்கோ னிராசசிங்கன் விகடவா டவனவனேய் அகிபதியா யிந்தலையால் அரிதாகப் பொறுக்கின்ற | 55 |
மகிமண்டலப் பெரும்பொறைதன் மகாபுஜபலத் தாற்றாங்கி புசகநாயக தரணிதாரண ஹரணராசித புசபலனாய் உலப்பிலிமங் கலத்தெதிர்ந்த தெவ்வருடல் உகுத்தசெந்நீர் நிலப்பெண்ணிற் கங்கராக மெனநீவப் பாணிதந்தும் மடைப்பகர்நீர்த் தஞ்சசையர்கொன் தானைவரை நைப்பூரிற் | 60 |
படைப்பரிசா ரந்தந்து போகத்தன் பணைமுழக்கியுங் கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேல்கொண்டும் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும் | 65 |
சேவலுயர் கொடிக்குமர னெனச்சீரித் தென்றஞ்சைக் காவலனது கரிதுரக பதாதிசங்கங் களத்தவியப் பூம்புனனா வற்பதியில் வாம்புரவி பலங்காட்டியும் விஜயத்துவஜம் விசும்பணவச் செங்கோறிசை விளிம்மணவக் குசைமாவுங் கொலைக்குன்றமுங் குருதியார முங்கொணர்ந்தும் | 70 |
குலவர்தன ரடிவணங்க மகேந்திரபோக மனுபவித்த விகடவாடவன் சிரிகாந்தன் மீநாங்கித சைலேந்திரன் இராசசிகா மணிதென்னன் ராசித குணகணுங்கோன் எண்ணறிந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணறிந்த பள்ளிச்சந்தமும் எத்திசையு மினிதியற்றி | 75 |
உரம்பிலொதி ஒலிகடல்போ லொருங்குமுன்னந் தானமைத்தவல் இராசசிங்கப் பெருங்குளக்கீழ் சூழல்நக ரிருந்தருளி இராஜ்யவர்ஷம் இரண்டாவதன் எதிர்பதினான் காம்யாண்டில். . . . . |
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி
1.4.1 (06)
ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல முழுதாண்டுபண்டு இந்திரன்முடி வளையுடைத்தும் இமயத்துக் கயலெழுதியும் ஆனையாயிர மையமிட்டும் அகத்தியனொடு தமிழ்தெரிந்தும் வானவர்க்குத் தூதுசென்றும் மால்கடலின் வரவுமாற்றியும் ஈண்டியவக் கடல்கடைந்தும் இன்னனபல திறல்செய்த | 5 |
பாண்டியபர மேச்வரராள் பரம்பரையில் வந்துதோன்றினன் மன்னவர்க்கோன் இராசமல்லன் மணிமுடிமா னாபரணன் தென்னவர்க்கோன் மற்றவற்குச் சேரலன்றன் மடப்பாவை சீர்திகழு மணிபயிலிச் செழுநிலந்தொழ வௌிப்பட்ட வீரகேரளன் வீரபாண்டியன் விநயகஞ்சுகன் விசாலசீலன் | 10 |
தன்னுடைய குலம்விளங்கத் தன்தேயத் தமிழ்கூடலில் மன்னியமணி முடிகவித்து மகாபிஷேக மகிழ்ந்தநாளில் மேதகுசா சனசுலோகம் விதிகிடந்தவா செய்யவல்ல பூசுரமத் திவன்னதுதன் பூம்பொருநம் புடைவர்க்கும் சீர்திகழ்தரு முள்ளிநாட்டுத் தென்வீரதர மங்கலத்து | 15 |
ஏர்திகழும் பெருந்தன்மை ராதிதர கோத்திரத்தில் அளப்பரிய பேரொழுக்கத் தாச்வலாயன சூத்திரத்து விளக்கமுற வந்துதோன்றி விப்ரர்க்கோர் விளக்காயின ஒருதன்மை இருபிறப்பில் முச்செந்தீ நால்வேதத்து அருமரபில் ஐவேள்வி ஆறங்கத் தந்தணாளன் | 20 |
கோவிந்தஸ்வாமி பட்டர்க்குச் சோமாசிதன் குலவரவில் வாசுதேவ பீதாம்பர பட்டனென்ற மறைவாழ்நனை மதித்தருளி நீசெய்கென மற்றவனு மனமகிழ்ந்து விதித்தமைத்த அநுஷ்டுப்பின் விழுப்பநோக்கி மிகமகிழ்ந்து தனக்கிரண்டாமாண்டின் எதிராமாண்டில் | 25 |
அண்டநாட்டு மின்னுக்கொடி நெடுமாடவீதி. . . . . |
1.5.1 (07)
ஸ்வஸ்திஸரீ
திருமடந்தையும் சயமடந்தையும் திருப்புயங்களில் னிதிருப்ப
ருநிலமும் பெருமைஎய்த எண்டிசையும் குடைநிழற்ற
மன்னவரெல்லாம் வந்திறைஞ்ச மரபிலேவரு முடிசூடித்
தென்குமரி முதலாகிய திரைகடல் எல்லையாகப்
பார்முழுதுங் கயலானை பரந்துசெங்கோ லுடன்வளர - 5
மன்னிய வீர சிம்மா சனத்து
உலகுமுழு துடையா ளுடன்வீற் றிருந்தருளி
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சடைய பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
சீ வல்லப தேவர்க்கு யாண்டு 4 ஆவது - 10
1.5.2 (08)
ஸ்வஸ்திஸரீ
திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப
இருநிலத் தொருகுடை நிற்பப் போர்வலி
செம்பியர் சினப்புலி ஒதுங்க அம்புயர்
மேருவில் கயல்விளை யாடப் பார்மிசை
மந்த... ... ... ... ... ... மாற்றி - 5
நாற்றிசை மன்னவர் திறைமுறை அளப்ப
மன்னவ . . . . . . . . .ந் தருளும்
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சடைய பன்மரான உடையார் சீ வல்லப
தேவர்க்கு யாண்டு ஆறாவது. . . .
1.6.1 (09)
ஸ்வஸ்திஸரீ
திருமகள் புணரப் பூமகள் விளங்க
விக்கிரம சயமகள் பொற்புயத் திருப்பக்
கனக மேருவிற் கயல்விளை யாட
ருநிலத் தொருதனி வெண்குடை நிழற்ற
உயரும் மணிமுடிதன் உரிமையிற் சூடி - 5
உலகுபொது நீங்க ஓருகோ லோச்சி
வஞ்சி மன்னரும் வடபுல வேந்தரும்
அஞ்சிவந் திறைஞ்சி அடிமலர் சூட
மன்னிய வீர சிம்மா சனத்து
உலகு முழுதுடை யாரொடும் வீற்றிருந் - 10
தருளிய மாமுதல் மதிக்குலம் விளக்கிய
கோமுதல் கோமாற பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ பராக்கிரம
பாண்டிய தேவர்க்கு யாண்டு...................
1.7.1 (10)
ஸ்வஸ்திஸரீ
திருவளரச் செயம்வளரத் தென்னவர்தம் குலம்வளர
அருமறைநான் கலைவளர அனைத்துலகும் துயர்நீங்கத்
தென்மதுரா புரித்தோன்றித் தேவேந்தினோ டினிதிருந்த
மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளி
மாக்கடலை யெறிந்தருளி மலையத்துக் கயல்பொறித்துச் - 5
சேரலனைச் செருவில்வென்று திறைகொண்டு வாகைசூடிக்
கூபகர்கோன் மகட்கொடுப்பக் குலவிழிஞம் கைக்கொண்டு
கன்னிப்போர் செய்தருளிக் காந்தளுர்ச்சாலை கலமறுத்து
மன்னுபுகழ் மறையவர்தம் அணிஅம்பலத் தினிதிருந்து
ஆயிரத் தெண்ம ரவிரோதப் பணிப்பணியால் - 10
பறைபேர்த்துக் கல்நாட்டிப் பண்டுள்ள பேர்தவிர்த்து
அளப்பனவும் நிறுப்பனவுங் கயலெழுதி அனந்தபுரத் தெம்மாற்கு
நிலவியபொன் மணிவிளக்கு நின்றெரியப் பத்தமைத்து
ஆங்கமைத்த தாயநல்லூர் அடத்தென்னாட் டரையனென
அறிவகையால் பரிந்துரைத்துத் தென்னவர்தம் குலதெய்வம் - 15
தென்குமரிக் . . .திருநாள் விழாவதனில் தைப்பூசப் பிற்றைஞான்று
வந்திருந்தா ரெல்லார்க்கும் ஆற்றாதே தியாகமிட
அறத்தால் விளங்கிய வாய்ந்த கேள்வி புறத்தாய நாடு பூமகட் களித்து
தெலிங்கவீமன் குளங்கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத்
திசையனைத்தும் உடனாண்ட சிரீபராந்தக தேவர்க்குயாண்டு... ...
1.8.1 (11)
ஸ்வஸ்திஸரீ
பூமடந்தையும் செயமடந்தையும் பொலிந்துதிருப் புயத்திருப்ப
பார்முழுதுங் குடைநிழற்றப் பராக்கிரமத்தான் முடிசூடித்
தென்மதுரா புரித்திரு விளையாட்டத் திற்கண்டு
மன்னரெல்லாம் வந்திறைஞ்ச மலைநாடு கொண்டருளி
மாபார தம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று - 5
தேவாசுர மதுகைதரித்துத் தேனாரு மறையுங்கொண்டருளி
வடவரையிற் கயல்பொறித்து வானவர்கோ னாரம்பூண்டு
திடவாசகக் குறுமுனியாற் செந்தமிழ்நூல் தெரிந்தருளி
செங்கோ லெங்கும் திசையுற நடாத்தி
மன்னிய வீர சிம்மா சனத்தில் - 10
திரைலோக்கிய முழுதுடை யாளொடும்வீற் றிருந்தருளி
மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற்
கொற்ற வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
சிரீ வீரபாண்டிய தேவர்.
1.9.1 (12)
ஸ்வஸ்திஸரீ
பூதல வனிதை மேதக விளங்க
மந்தர மார்பினில் ந்திரை யிருப்பப்
புயவரை தழுவி வயமகள் களிப்ப
மயலறு சிறப்பின் மாமுனி தெரிந்த
யலிசை நாடகம் எழில்பெற வளர
வஞ்சினங் கூற மதக்களிறு நடாத்தி - 5
வெஞ்சின வேங்கை வில்லுடன் ஒளிப்பத்
திக்கடிப் படுத்துச் சக்கரம் செல்லப்
பௌவ மானிலம் பார்த்திபர் பொதுவறத்
தெய்வ மேருவில் சேல் விளையாட
ஒன்றுபுரி நெஞ்சத்து ருவகை பிறப்பின் - 10
முந்நூல் மார்பின் நான்மறை யாளர்
மாக விசும்பின் வானவர்க் கமைத்த
யாக வெள்வி டந்தொறும் யல
ஐம்புலங் கட்கும் அருமைசால் அறுவகைச்
செம்பொருட் சமயம் சீருடன் பரவ - 15
எழுபொழில் கவித்த முழுமதிக் கவிதைத்
திருநிலவு சொரிந்த விருநில வரைப்பின்
வெங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
விண்பொருஞ் சிகர மாதிர வெண்கோட்டு
எண்பெருங் களிறினும் சைமகள் ஏற - 20
ஒன்பது கண்டத்து உயர்புல வேந்தரும்
அன்புடன் வணங்கி அருந்திறை காட்டி
மணித்தட முடிமேல் அடிமலர் சூட
மணிமுடி சூடி வளங்கெழு கவரி
சேரர் செம்பியர் திரண்டரு கசைப்ப - 25
வீரசிங்காதனம் ஏறும் நாப்பண்
கடவுள் மீனன் கற்புத் திகழ
உடன்முடி சூடி உலகம் போற்றச்
செருமலி தானைப் பார்புர வேந்தர்
கடகத்தோளும் ஆகமம் பிரியா - 30
வோடரி நெடுங்கண் ஒண்தொடி மகளிர்
திலதந் தலைமேல் சேவடி வைக்கும்
உலக முழுதுடையாளொடும் வீற்றிருந்
தருளிய மாமதி மதிக்குலம் விளக்கிய
கோமுதற் கோச்சடைய பன்ம ரான - 35
திரிபுவனச் சக்கர வர்த்திகள்
ஸரீ குலசேகர தேவர்க்கு யாண்டு ரண்டாவது
நாள் முப்பததைந்தினால் . . . . .
1.9.2 (13)
ஸ்வஸ்திஸரீ
பூதல மடந்தை புகழொடு பொலிய
வேதமும் தமிழும் மேல்மையில் விளங்கக்
கற்புடை திருமகள் பொற்புயத் திருப்பத்
திக்கிரு நான்கு சக்கர வாளமும்
சூழும் புவனமும் ஏழுங்கவிப்ப - 5
வெண் குடைநீழல் செங்கோல் நடப்ப
நாடொறும் மதியமும் ஞாயிறு வலங்கொள்
ஆடகப் பொருப்பின் அரசுமீ னிருப்ப
சுந்தர மார்பினில் ந்திரன் பூட்டிய
ஆரமும் அலங்கலும் அழகுடன் திகழ - 10
வீணையும் புலியும் வில்லுஞ் சுரம்புக
ஆனை மன்னவர் அடிமலர் சூட
மரபினில் வந்த மணிமுடி சூடி
விளங்கிய கதிரொளி வீரசிம்மா சனத்து
உலகமுழு துடையாரொடும் வீற்றிருந் தருளிய - 15
மாமுதல் மதிக்குலம் விளக்கிய
கோமுதல் கோச்சாடய பன்ம ரான . . .
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்
மாடக்குளக் கீழ் மதுரைக் கோயிலுள்ளாலை
ஸரீவல்லவன் பீடத்துப் பள்ளிப் பீடம் - 20
முனைய தரையனில் எழுந்தருளி யிருந்து
யாண்டு ஒன்பதாவது நாள் நாற்பத்து நாலினால். . .
1.9.3 (14)
ஸ்வஸ்திஸரீ
பூவின் கிழத்தி மேவிவீற் றிருப்ப
மேதினி மாது நீதியிற் புணர
வயப்போர் மடந்தை சயப்புயத் திருப்ப
மாக்கலை மடந்தை வாக்கினில் விளங்கத்
திசையிரு நான்கும் சையிலா வெறிப்ப - 5
மறைநெறி வளர மனுநெறி திகழ
அறநெறிச் சமயங்கள் ஆறும் தழைப்பக்
கானில் வேங்கை வில்லுடன் தொடர்ந்துற
மீனம் கனகாசலத்து வீற் றிருப்ப
எண்கிரி சூழ்ந்த எழுகடல் எழுபொழில் - 10
வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்பக்
கொடுங்கலி நடுங்கி நெடும்பிலத் தொளிப்ப
வில்லவர் செம்பியர் விராடர் மராடர்
பல்லவர் திறையுடன் முறைமுறை பணிய
ருநேமி யளவும் ஒருநேமியோங்க - 15
ன்னமுதாகிய யலிசை நாடகம்
மன்னி வளர மணிமுடி சூடி
விளங்கு கதிரொளி வீரசிம்மா சனத்து
கற்பகநிழற்கிழ் கலைவல்லோர் புகழ்
மன்னவர் தேவியர் வணங்கி நின்றேத்தும் - 20
அன்ன மென்னடை அவனி முழுதுடை
யாளொடும் வீற்றிருந் தருளிய
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சாடய பன்மரான திரிபுனச்
சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு - 25
யாண்டு பதின்முன்றாவதின் எதிராமாண்டு . .
1.10.1 (15)
ஸ்வஸ்திஸரீ
பூமலர்த் திருவும் பொருசய மடந்தையும்
தாமரைக் குவிமுலை சேர்ப்புயத் திருப்ப
வேத நாவின் வெள்ளிதழ்த் தாமரைக்
காதல் மாது கவின்பெறத் திளைப்ப
வெண்டிரை யுடுத்த மண்டிணி கிடக்கை - 5
ருநில மடந்தை உரிமையிற் களிப்பச்
சமயமும் நீதியும் தருமமும் தழைப்ப
மையவர் விழாக்கொடி டந்தொறு மெடுப்பக்
கருங்கலி கனல்கெடக் கடவுள் வேதியர்
அருந்தொழில் வேள்விச் செங்கனல் வளர்ப்பச் - 10
சுருதியும் தமிழும் சொல்வளங் குலவப்
பொருதிற லாழி பூதலஞ் சூழ்வர
ஒருகை ருசெவி மும்மத நாற்கோட்டு
அயிரா வதமுதற் செயிர்தீர் கொற்றத்து
எண்டிசை யானை எருத்த மேறிக் - 15
கண்டநாடு எமதெனக் கயல்களி கூர
கோசலந் துளுவந் குதிரங் குச்சரம்
போசல மகதம் பொப்பளம் புண்டரம்
கலிங்கம் ஈழங் கடாரங் கவுடம்
தெலிங்கஞ் சோனகஞ் சீனக முதலா - 20
விதிமுறை திகழ வெவ்வேறு வகுத்த
முதுநிலக் கிழமையின் முடிபுனை வேந்தர்க்
கொருதனி நாயகன் என்றுல கேத்தத்
திருமுடி சூடிச் செங்கோ லோச்சிக்
கொற்றத் தாளக் குளிர்வெண் குடைநிழல் - 25
கற்றைக் கவரி காவலர் வீச
மிடைகதிர் நவமணி வீரசிங்கா தனத்து
உடன்முடி சூடி யுயர்குலத் திருவெனப்
பங்கய மலர்க்கரங் குவித்துப்பார்த் திபர்வர
மங்கையர் திரண்டு வணங்கும் சென்னியிற் - 30
சுடரொளி மவுலிச் சுடர்மணி மேலிடச்< dd>சிவந்த ணைமலர்ச் சீறடி மதுகரம்
கமலமென் றணுகும் உலகு முழுதுடை
யாளொடு வீற்றிருந் தருளிய
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதற் - 35
கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசுந்தர
பாண்டிய தேவர்க்கு யாண்டு பதினைந்தாவது நாள்
நூற்று எழுபத்தாறினால்.
1.10.2 (16)
-
ஸ்வஸ்திஸரீ
பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப
நாமருவிய கலைமடந்தையும் செயமடந்தையும் நலம்சிறப்ப
கோளார்ந்த சினப்புலியும் கொடுஞ்சிலையும் குலைந்தொளிப்ப
வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட
ருங்கடல் வலயத் தினிதறம் பெருகக் - 5
கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப
ஒருகுடை நீழல் ருநிலங் குளிர
மூவகைத் தமிழு முறைமையின் விளங்க
நால்வகை வேதமும் நவின்றுடன் வளர
ஐவகை வேள்வியும் செய்வினை யற்ற - 10
அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ
எழுவகைப் பாடலும் யலுடன் பரவ
எண்டிசை யளவும் சக்கரம் செல்லக்
கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளுவர்
சிங்களர் தெலிங்கர் சீனர் குச்சரர் - 15
வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர்
பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லாம்
உறைவிட மருளென ஒருவர்முன் னொருவர்
முறைமுறை கடவதம் திறைகொணர்ந் திறைஞ்ச
லங்கொளி மணிமுடி ந்திரன் பூட்டிய - 20
பொலங்கதிர் ஆரம் மார்பினிற் பொலியப்
பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னிசூழ் நாட்டிற் புலியாணைபோ யகலக்
கன்னிசூழ் நாட்டுக் கயலாணைகை வளர - 25
வெஞ்சின வுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையு முறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்றுகவின் நிழற்ற
வாவியும் ஆறு மணிநீர்நலன் அழித்துக்
கூடமா மதிலுங் கோபுரமா டரங்கும் - 30
மாடமா ளிகையும் மண்டபம்பல விடித்துத்
தொழுதுவந் தடையார் நிருபர்தந் தோகையர்
அழுத கண்ணீர் ஆறு பரப்பி
கழுதைகொண் டுழுது கவடிச்செம் பியனைச்
சினமிரியப் பொருது சுரம்புக வோட்டியும் - 35
பொன்முடி பறித்துப் பாணனுக்குக் கொடுத்துப்
பாடருஞ் சிறப்பிற் பருதிவான் தோயும்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சேரர் வளவன் அபி ஷேகமண் டபத்து
வீராபி ஷேகம் செய்துபுகழ் விரித்து - 40
பரராசர் நாமந் தலைவிடுத் துமிழுந்
தறுகண் மதசர யானைமேல் கொண்டு
நீராழி வையம் முழுதும்பொது வழித்த
கூராழியுஞ் செய்ய தோளுமெய் கொண்டுபோய்
அடையப் படாத வருமறைதேரந் தணர்வாழ் - 45
தெய்வப் புலியூர் திருவெல்லை யிற்புக்குப்
பொன்னம்ப லம்பொலிய ஆடுவார் பூவையுடன்
மன்னுந் திருமேனி கண்டுமனங் களித்துக்
கோலமலர் மேலயனுங் குளிர்துழாய் மாலும்
அறியா மலர்ச்சே வடிவணங்கி வாங்கு - 50
மேற்சிறை யன்னம் துயிலொழிய வண்டெழும்
பூங்கமல வாவிசூழ் பொன்னமரா பதியில்
ஒத்துலகந் தாங்கும் உயர்மா மேருவைக்
கொணர்ந்துவைத் தனையசோதி மணிமண்ட பத்திருந்து
சோலைமலி பழனச் சோணாடு தான்ழந்து - 55
மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப
வான்நிலை குலைய வல்லாநிலத்து எல்லை
தான்கடந்து சக்கர வாளகிரிக் கப்புறத்துப்
போன வளவன் உரிமையோடும் புகுந்து
பெற்ற புதல்வனைநின் பேரென்று முன்காட்டி - 60
வெற்றி அடியிணைக்கீழ் வீழ்ந்து தொழுது ரப்பத்
தானோடி முன்னிழந்த தன்மையெல்லாம் கையகலத்
தானே தகம்பண்ணி தண்டார் முடியுடனே
விட்ட அகலிடந்தன் மார்வேளைக் குத்திரிய
ட்ட படிக்கென்றும் துபிடிபா டாகவென - 65
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தொழவிளங்கும்
செங்கயல் கொண்டு ஊன்றுந் திருமுகமும்
பண்டிழந்த சோழ பதியெனும் நாமமும்
தொல்நகரும் மீள வழங்கி விடைகொடுத்து
விட்டருளி ஒருக்கடற் பாரில் வேந்தர்களைக் - 70
குற்றங்கள் தீர்க்குங் கடவுளிவன் என்றெண்ணித்
தளையுற் றடையாதார் தண்ட லிடையிற்
கிளையுற் றெனமுழுதுங் கேட்டருள நன்றேத்தி
வணங்கும் வடகோங்க னைச்சிறையு மீட்டு
களங்கோ ளருநீ ருந்தேரன் மாலை - 75
கழித்தெல் வழங்கி யருளியபின் னொருநாள்
மற்றார முழங்கு முரசக் கடற்றானை
முன்புகுந்து தென்கொங்கர் வந்திட்ட தெண்டனுக்கு
மின்பொங்கச் சாத்தியஆ பரணந்தக்க தெனவழங்கி
ஆறாத பெருநண்பி னவன்சிறையு மீட்டித் - 80
திருமால்ரு மருங்கும்சந்திர சூரியர்சே விக்கச்செங்கண்
கருமால் களிக்கிற்றில் வருமுக்கட் கடவுளென
மாட மதுரையிற் தான்போந்து புவனியிலே
கூட்டுக் கொங்கரையுங் கும்பீடு கொண்டவர்க்குத்
தொல்லைப் புவிக்கு மிணங்காமல் தாஞ்சொன்ன - 85
எல்லைக்குள் நிற்ப சைந்திட்டு ஏற்(ப)க்கொண்டு
வ்வாறு செய்யா தொழியில்ய மனுக்குவெவ்
வேல்விருந் தாக்குதும் உம்மையென விட்டருளி
முன்னம் நமக்கு முடிவழங்கு சேவடிக்கீழ்
ன்னம் வழிபடுவோ மென்னாது பின்னொருநாள் - 90
காலனது புனநா டெனுங்களியா லெதிர்செல்லா
திறைமறுத்த சென்னிவிடு தூசியும் பேரணியும்
ஒக்கச் சுருண்டொதுங்கி வாசியும் வாரணமும்
தெருமடற் கருவக் காலனும் வெட்டுண்ணக்
கண்ணி ரண்டு மயங்கக் கைக்கொண்டு - 95
வேலா வலையத்து வீழ்ந்தவன் போய் மெய்நடுங்க
அம்பருந்து மார்த்த கடல்மண்ட லீகருடல்
வெம்பருந் துண்ண அக்களத்தில் ஆனையின்
வெண்மருப்புங் கையுங் குறைத்தெங்கன் மீனவற்கும்
பால்குடமா மென்றுதான் வீரர்கோன் மாமுகடு - 100
தடவி மழைமடுக்கும் காகநெடும் பந்தற்கே
அவற்றது ஆடலும் கூகையின் பாடலுங்
கண்டும் கேட்டுங் களித்தஉடல் கருங்கூந்தல்
வெள்ளெயி றில்செவ் வாய்பெரிய சூலக்க
வல்லி பலிகொள்கஎன வாழ்த்தி வென்று - 105
பகையின் மிகையொழிய வேந்தலறக் கொன்று
சினந்தணியாக் கொற்றவ நெடுவாள் உயற்கு
செங்குருதி நிறத்தொளி செய்து தெகுபுலத்து
வெண்கவடி வித்த வீர முழுதெடுத்துப்
பாடும் பரணிதனைப் பார்வேந்தர் கேட்பிக்க - 110
ஆடுந் திருமஞ் சனநீர்கள் மண்குளிர
ஆங்கவந் திணைகட்டணத்துக் கற்பு தனக்கரணாய்
ஓங்குரி மைக்குழாம் ஓருகை திசைகொண்டு
மூரி மணிப்பட்டங் கட்டி முடிசூட்டி
மார்பில் அணைத்துவளவ னவன்முதல் தேவியென்று - 115
பேர்பெற்ற வஞ்சி முதலாய பெய்வளையார்
பொங்கு புனற்கும்சப முதலாய்போ லவர்புகழ
மங்கலங்கள் எட்டும் மணிகதவத்தேந்தி
கொடிகொண்ட நெற்றி நிறைந்தக்கோ புரஞ்சூழ
முடிகொண்டசோழபுர மண்டபத்துப் புகுத - 120
திசைதொறும் சொம்பொற் செயத்தம்பம் நாட்டி
வாகைக் கதிர்வேல் வடவேந்தர் தம்பாதம்
மேகத் தழையணிய வீரக் கழலணிந்து
விளங்கிய மணியணி வீரசிம் மாசனத்து
விளங்கெழு கவரி யிருமருங்கசைப்பக் 125
கடலென்ன முழங்கும் களிநல் யானை
வடபுல வேந்தர்தம் மணிப்புயம் பிரியா
லங்கிழை அரிவையர் தொழுதுநின் றேத்தும்
உலக முழுதுடை யாளொடும் வீற்றிருந்து
அருளிய ஸரீகோ மாறபன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசோணாடு - 130
கொண்டுமுடிகொண்டசோழபரத்து வீராபிக்ஷேகம்
பண்ணி அருளிய
ஸரீசுந்தர பாண்டியதேவர்கு யாண்டு - 20 வது
நாள் 37 னால் . . . .
1.11.1 (17)
ஸ்வஸ்திஸரீ
பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப
நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச்
சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ
மையவர் கோன்அன்றிட்ட எழிலாரம் கழுத்திலங்கப்
பகிரதிபோற் துய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் - 5
திகிரிவரைக் கப்புறத்துஞ் செழுந்திகிரி சென்றுலவத்
தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற
வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசைநடப்பச்
செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத்
திறற்புலிபோய் வனமடையக் . . . . . - 10
கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட
ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்
தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன்சிறப்ப
அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும்
திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் - 15
குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்
வச்சிரரும் காசியரும் மாகதரும் . . .
அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய
ருநிலமா முடிவேந்தர் றைஞ்சிநின்று திறைகாட்ட
வடிநெடுவாளும் வயப்பெரும்புரவியும் - 20
தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று
சேரனும் தானையும் செருக்களத் தொழிய
வாரசும் புலரா மலைநாடு நூறப்
பருதிமாமரபிற் பொருதிறல் மிக்க
சென்னியைத் திறைகொண்டு திண்தோள்வலியிற் - 25
பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப்
புரிசையிலடைத்துப் பொங்குவீரப் புரவியும்
செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய
தண்டத் தலைவரும் தானையும் அழிபடத்
துண்டித்தளவில் சோரி வெங்கலுழிப் - 30
பெரும்பிணக் குன்றம் ருங்களனிறைத்துப்
பருந்தும் காகமும் பாறும் தசையும்
அருந்தி மகிழ்தாங்கு அமர்கள மெடுப்பச்
செம்பொற் குவையும் திகழ்கதிர் மணியும்
மடந்தையர் ஆரமார்பும் உடன் கவர்ந்தருளி - 35
முதுகிடு போசலன் தன்னொடு முனையும்
அதுதவ றென்றவன் தன்னை வெற்பேற்றி
நட்பது போலுட் பகையாய் நின்ற
சேமனைக்கொன்றுசினந்தணிந்தருளி
நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய - 40
கண்ணனூர்க்கொப்பத்தைக் கைக்கொண்டருளி
பொன்னிசூழ் செல்வப் புதுப்புனல் நாட்டைக்
கன்னி நாடென காத்தருள் செய்யப்
பெருவரை யரணிற்பின்னருகாக்கிய
கருநா டரசனைக் களிறுதிரை கொண்டு - 45
துலங்கொளி மணியும் சூழிவேழமும்
லங்கை காவலனைக் றைகொண்டருளி
வருதிறை மறுத்து அங்கவனைப்பிடித்துக்
கருருமுகில் நிகளங் காலினிற் கோத்து
வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் - 50
சேந்தமங்கலசெழும்பதிமுற்றிப்
பல்லவன் நடுங்கப் பலபோ ராடி
நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும்
பரும யானையு பரியு முதலிய
அரசுரிமைக் கைக்கொண்டு அரசவற்களித்துத் - 55
தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந்
தொல்லை றைவர் துணைகழல் வணங்கிக்
குளிர்பொழில் புடைசூழ் கோழி மானகர்
அளிசெறி வேம்பின் அணிமலர் கலந்த
தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் - 60
திங்ளுயர் மரபு திகழவந் திருந்த
தன்னசை யால்நன் னிலைவிசை யம்பின்
எண்ணெண் கலைதேர் இன்மொழிப் பாவலர்
மண்ணின்மே லூழி வாழ்கென வாழத்தக்
கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப - 65
வெண்டிரை மகர வேலையி னெடுவரை
ஆயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப்
பாயல் கொள்ளும் பரம யோகத்து
ஒருபெருங் கடவளும் வந்தினி துறையும்
ருபெருங் காவிரி யிடைநிலத் திலங்கு - 70
திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப்
பன்முறை யணிதுலா பார மேறிப்
பொன்மாலை யன்ன பொலிந்து தோன்றவும்
பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள்
வளந்திகழ் மாஅல் உதய வெற்பெனத் - 75
திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை
மரகத மலையென மகிழ்தினி தேறித்
தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும்
கனக மாமுடி கவின்பெறச் சூடிப்
பாராள் வேந்தர் உரிமை அரிவையர் - 80
ருமறுங்கு நின்று விரிபெருங் கவரியின்
மந்த வாடையும் மலயத் தென்றலும்
அந்தளிர்க் கரங்கொண்ட சைய வீச
ஒருபொழு தும்விடாது உடனிருந்து மகிழும்
திருமகளெனத் திருத்தோள் மேவி - 85
யொத்தமுடி சூடி யுயர் பேராணை
திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த
இவன்போ லுலகிலே வீரன் பலத்திற
மதிமுகத் தவனி மாமகளிலகு
கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் - 90
உலகமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய
சிரீகோச் சடைய வன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய
தேவர்க்கு யாண்டு ஏழாவது கன்னி ஞாயிற்று
அபர பட்சத்துத் திரியோதசியும் ஞாயிற்றுக் கிழமையும் - 95
பெற்றஅத்தத்துநாள் .
1.12.1 (18)
ஸ்வஸ்திஸரீ
திருமகள் வளர்முலை திருமார்பு தளைபடப்
பொருமகள் வளர்முலை புயம்புணர்ந்து களிப்ப
வன்மொழி நாமிசைச் சொன்மகள் ருப்பத்
திசைகள் எட்டினும் சைமகள் வளர
ருமூன்று சமயமும் ஒருமூன்று தமிழும் - 5
வேதம் நான்கும் நீதியில் விளங்க
கங்கங் கவுடம் கடாரம் காசிபம்
கொங்கங் குதிரம் கோசலம் மாளுவம்
அருமனம் சோனகம் சீனம் வந்தி
திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் - 10
பெபனந் தண்டகம் பண்டர முதலிய
எப்புவி வேந்தரும் கல்மண்டலீகரும்
மும்முரைசு முழங்கும் செம்மணி மாளிகை
கோயில் கொற்ற வாயில் புகுந்து
காலம் பார்த்து கழலிணை பணிந்து - 15
நல்ல வேழமும் நிதியமும் காட்டிப்
பூவிரி சோலை காவிரி களத்துச்
சோழன் பொருத வேழப் போரில்
மதப்பிற் றாறாக் கதக்களி யானை
துளைக்கைச் சொம்பொற் றொடிக்கையிற் பிடித்து - 20
வளைத்துமேல் கொண்டு வாகைச் சூடி
தலைப்பே ராண்மை தனித்தனி யெடுத்து
கலைத்தவி ரரசர் கவின்பெறத் துதிப்பத்
தெற்ற மன்னர் திதாத்தி யாமல்
ஒற்றை யாழி யுலகு வலமா - 2
ஏனை மன்னவர் தற்கோ டிறைந்து
மீனவர் கோடித் தெருவில் என்க
வடுவரைக் கொடுங்கோல் வழங்கா வண்ணம்
நடுவுநிலை செங்கோல் நாடொறும் நடப்ப
எத்திசை மன்னரும் ருங்கலி கடிந்து - 30
முத்த வெண்குடை முழுநிலவு சொரிய
ஒருமொழி தரிப்பப் புவி முழு தாண்ட
மதமார்பு விளங்க மணிமுடி சூடி
உரைகெழு....பல அரைசியல் வழக்கம்
நெறிப்பட நாட்டுங் குறிப்பி னூரட்டு - 35
சைந்திருப் பாதஞ்செ..திருந்த மந்திரி சரணமை
திகழ்ந்தினிது நோக்கி முரண்மிகு சிறப்பில்
ஈழ மன்னர் லகுவரி லொருவனை
வீழப் பொருது விண்மிசை யேற்றி
உரிமைச் சுற்றமும் உய்குலம் புக்குத் - 40
தருமை யானையும் பலப்பைப் புரவியும்
கண்மணித்தேரும் சீன வடமரும்
நாகத் தோடும் நவமணிக் குவையும்
ஆடகத் திரியும் அரியா சனமும்
முடியும் கடகமும் முழுமணி யாரமும் - 45
கொடியுங் குடையுங் குளிர் வெண் கவரியும்
முரசுஞ் சங்கமும் தனமும் முதலிய
அரைசுகெழு தாய மடைய வாரி
காணா மன்னவர் கண்டுகண் டேங்க
கோணா மலையினும் திரிகூட கிரியினும் - 50
உருகெழ கொடிமிசை ருகயல் எழுதி
ஏனை வேந்தனை ஆனைதிறை கொண்டுபண்
டேவல் செய்யா திகல்செய் திருந்த
சாவன் மைந்தன் நலமிகந் திறைஞ்ச
வீரக் கழலை விரலரைச் சூட்டித் - 55
திருக்கோ லம்அலை வாய்ப்படன் கழித்து
வழங்கி யருளி முழங்கு களிறேறி
பார்முழு தறிய ஓர் ஊர்வலஞ் செய்வித்து dd>தந்தை மரபு என நினைப்பிட்டு
அரைசிட மகிழ்ந்து ஆனூர் புரிச்சு - 60
விரையச் செல்கென விடைகொடுத் தருளி
யாக மடந்தை அன்புடன் சாத்தி
வாகை சூட மதுமணங் கமழ
வசந்தவெண் கவரியின் வாடலுந் தென்றலும்
வேந்தர் வீச வீரசிங்கா தனத்துக் - 65
கபகந் தழுவிய காமர் உள்ளதள்
பொற்றொடி புணர்ந்து மலர்ந்த மலர்க்கெழும்
பாபுரைச் சிற்றடி உலகமுடையாரொடும்
விற்றிருந் தருளிய ஸ்வஸ்திஸரீ கோச்சடைய பன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்க்கு - 70
யாண்டு 11ஆவது நாளள் 173 னால் . . .
1.12.2 (19)
ஸ்வஸ்திஸரீ
கொங்குஈழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து
கங்கை ருகரையும் காவிரியும் கைக்கொண்டு
வல்லானைவென்று தில்லைமா நகரில் வீற்றிருந்து
வீராபி ஷேகமம் விசயாபி ஷேகமும்
பண்ணியருளிய கோச்சடைய வன்மரான திரிபுவனச் - 5
சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டிய தேவர்க்கு யாண்டு
16வது சிம்ம ஞாயிற்று பூர்வபட்சத்து வியாழக்
கிழமையும் தசமியும் பெற்ற மூலத்து நாள் . .
1.13.1 (20)
ஸ்வஸ்திஸரீ
தேர்போ லல்குல் திருமகள் புணரவும்
கார்சேர் கூந்தல் கலைமகள் கலப்பவும்
பார்மகள் மனத்துப் பாங்குட னிருப்பவும்
செங்கோல் நடப்பவும் வெண்குடை நிழற்றவும்
கருங்கலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவும் - 5
கானிலை செம்பியன் கடும்புலி யாளவும்
மீனம் பொன்வரை மேருவில் ஓங்கவும்
முத்தமிழும் மனுநூலும் நால்மறை முழுவதும்
எத்தவச் சமயமும் னிதுடன் விளங்கவும்
சிங்களம் கலிங்கம் தெலிங்கம் சேதிபம் - 10
கொங்கணம் குதிரம் கோசலம் குச்சரம்
முறைமயின் ஆளும் முதுநில வேந்தர்
திறைமுறை காட்டிச் சேவடி வணங்க
மன்னர் மாதர் பொன்னணி கவற்ற
ருபுடை மருங்கும் ஒருபடி யிரட்டப் - 15
பழுதறு சிறப்பிற் செழுவைக் காவலன்
வீரசிங் காதனத்து ஓராங் கிருந்தே
ஆரும் வேம்பும் அணியிதழ் புடையாத்
தாரும் சூழ்ந்த தடமணி மகுடம்
பன்னூ றூழி தொன்னிலம் புரந்து - 20
மாழ்கெனக் குட்டம் மகிழ்ந்துடன் சூடி
அலைமக ள் முதலாம் அரிவையர் பரவ
உலக மழுதுடையாளொடும் வீற்றிருந்
தருளின கோமாற வன்ம ரான
திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீகுலசேகர . - 25
தேவர்க்கு யாண்டு பத்தாவது . . .
1.14.1 (21)
ஸ்வஸ்திஸரீ
திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப
பொருகடல் ஆடை நிலமகள் புணர
கடவுள் மேருவில் கயல் விளையாட
வடபுல மன்னவர் வந்தடி பணிய
நேமி வரைசூழ் நெடுநில முழுவதும் - 5
தரும வெண்குடை நிழலில் தழைப்ப
செங்கோல் நடப்பக் கருங்கலி துறந்து
வேத விதியில் நீதி நிலவ
சேரனும் வளவனும் திறைகொணர்ந் திறைஞ்ச
வீரமும் புகழும் மிகநனி விளங்க - 10
நதிபெருஞ் சடைமுடி நாதன் சூடிய
மதிக்குலம் திகழ மணிமுடி சூடி
விளங்கிய மணியணி வீர சிங்காசனத்து< dd>வீற்றிருந்தருளிய ஸரீகோமாற பன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீ விக்கிரம பாண்டிய - 15
தேவர்க் கியாண்டு ஏழாவதின் எதிர் நாலாமாண்டு . .
1.15.1 (22)
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து சமஸ்த சாகர பரமண்டலத்து
க்ஷமைவினொடும் கருணையெய்தி சமயத்தன்மை
னிது நடாத்தி நிகழா நின்ற சாரிகைக்
கோட்டையில் விக்கிரம பாண்டியன் மடிகையில்
நான்குதிசைப் பதிணென் விஷயத்தோம் சுத்தவல்லி - 5
வளநாட்டுத் தனியூர் ராசாதி ராசச்
சதுர்வேதி மங்கலத் துடையார்
சயங்கொண்ட சோழீஸ்வரமுடையார் திருமுன்
விக்கிர பாண்டியன் திருமண்ட பத்து
நிறைவற நிறைந்து குறைவறக்கூடி - 10
ஸரீகோச்சடைய பன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீசுந்தர பாண்டிய
தேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது கன்னி ஞாயிற்றுப்
பூர்வ பட்சத்துத் திரியோதசியும் வெள்ளிக்கிழமையும்
பெற்ற சோதிநாள் . . .
1.16.1 (23)
சுபமஸ்து
பூமிசை வனிதை மார்பினிற் பொலிய
நாமிசை கலைமகள் நலனுற விளங்கப்
புயவரை மீது சயமகள் புணரக்
கயலிணை யுலகின் கண்ணென திகழச்
சந்திர குலத்து வந்தவ தரித்து - 5
முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து
தென்கலை வடகலை தௌிவுறத் தெரிந்து
மன்பதை புரக்க மணிமுடி புனைந்து
சங்கர சரண பங்கயஞ் சூடிச்
செங்கோ லோச்சி வெண்குடை நிழற்றி - 10
வான வாரியும் மன்னருள் வாரியும்
தான வாரியும் தப்பாது அளித்து
மறக்களை பறித்துநல் அறப்பயிர் விளைத்து
சிங்கையில் அனுரையில் ராசையிற் செண்பையில்
விந்தையி லறந்தையில் முதலையில் வீரையில் - 15
வைப்பாற் றெல்லையில் மன்னரை வென்கண்டு
எப்பாற் றிசையும் சைவிளக் கேற்றிப்
பதிணெண் பாடை பார்த்திவ ரனைவரும்
திறையும் சின்னமும் முறைமுறை கொணர்ந்து
குறைபல ரந்து குறைகழல் றைஞ்ச - 20
அவரவர் வேண்டியது அவரவர்க் கருளி
அந்தணர் அனேகர் செந்தழல் ஓம்ப
விந்தைமுத லகரம் ஐந்திடத்து யற்றிச்
சிவநெறியோங்க சிவார்ச்சனை புரிந்து
மருதூ ரவர்க்கு மண்டப மமைத்து - 25
முன்னொரு தூறு முங்கில்புக் கிருந்த
சிற்பரர் தம்மைத் திருவத்த சாமத்துப்
பொற்கலத் தமுது பொலிவித் தருளிச்
சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு
மண்டபம் அமைத்து மணிமுடி சூட்டி - 30
விழாவணி நடாத்தி விரைப்புன லாடல்
வழாவகை நடாத்தநின் மன்னருள் அதனால்
வற்றா வருவியும் வற்றி வற்கடம்
உற்றவிக் காலத்து உறுபுனல் நல்கென
வேண்டிய பொழுதே வேறிடத் தின்றிச் - 35
சேண்டகு புனலிற் செழும்புன லாட்டி
மின்கால் வேணி விசுவ நாதர்க்குத்
தென்கா சிப்பெருங் கோயில் செய்து
நல்லா கமவழி நைமித் திகமுடன்
எல்லாப் பூசையும் எக்கோ யிலினும் - 40
பொருள் முதலனைத்தும் புரையற நடாத்தித்
திருமலி செம்பொன் சிங்கா சனமிசை
உலக முழுது முடையா ளுடனே
லகு கருணை யிரண்டுரு வென்ன
அம்மையும் அப்பனு மாயனைத் துயிர்க்கும் - 45
ம்மைப் பயனும் மறுமைக் குறுதியும்
மேம்பட நல்கி விற்றிருந் தருளிய
ஸரீஅரிகேசரி பராக்கிரம
பாண்டிய தேவர்க்கு யாண்டு ருபத்தெட்டாவதின்
எதிராவது . . நாள்
மெய்க்கீர்த்திகள் - 2
2. சோழ மன்னர் மெய்க்கீர்த்திகள்
2.1.1 (24)
-
ஸ்வஸ்திஸரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் கடிகை பாடியும் - - - - - - - - -5
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்-10
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸரீகோஇராச கேசரி
வன்மரான ஸரீஇராசராச தேவர்க்கு யாண்டு...
2.1.2 (25)
-
ஸ்வஸ்திஸரீ
........ஜய ஜயவென்று மொழி
பன்னிய வாய்மையிற் பணியப் பொன்னியல்
விசும்பரிற் கதமும் பசும்பரி வெள்ளுளை
நெடுஞ்சுவர் றெடுத்த குறுந்துனைப் படுங்க
நள்ளுறப் பொன்ஞாண் வள்ளுற வச்சத் - - - - - - -5
தனிக்கா லரசு பனக்காற் கங்குற்
குழம்புபடு பேரிருட் பிழம்புபட வுருட்டிய
செஞ்சுடர் மௌலி வெஞ்சுடர் வானவன்
வழிமுதல் வந்த மகிபதி வழிமுதல்
அதிபதி நரபதி அசுவபதி ...ட் - - - - - - - - - - -10
கசபதி கடலிடங் காவலன் மதிமுதல்
வழுதியர் வரைபுக மற்றவர் தேவியர்
அழுதுய ரங்கலி லழுங்கப் பொழுதியல்
வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக்
கலிங்கன் கனெ.....கப் பா...லங்கன் - - - - - - - - 15
அ(ம்)ை(ம) ...................................
புதுமலர் வாகை புனைந்து நொதுமலர்
கங்கபாடி கவ்விக் கொங்கம்
வௌிப்படுத் தருளி யளிபடு திருளிய
சாரல்மலை யட்டுஞ் சேரன்மலை நாட்டுத் - - - - 20
தாவடிக் குவட்டின் பாவடி சுவட்டுத்
துடர்நெய்க் கனகந் துகளெழ நெடுநற்
கோபுரங் கோவைக் குலைய மாபெரும்
யுரிசை வட்டம் பொடிபடப் புரிசைச்
சுதைகவின் படைத்த சூளிகை மாளிகை - - - - - 25
யுதகைமுன் னொள்ளெரி கொளுவி உதகை
வேந்தைக் கடல்புக வெகுண்டு போந்து
சூழ்மண் டலம்தொழ வீமண் டலமுங்
கொண்டு தண்டருளிப் பண்டு தங்கள்
திருக்கு லத்தோர் தடவரை யெழுதிய - - - - - - 30
பொங்குபுலி போத்துப் புதுக்கத் துங்கத்
திக்கினிற் சேனை செலுத்தி மிக்க
வொற்றைவெண் குடைகீழ் இரட்டைவெண் கவரி
தெற்றிய வனலந் திவள வெற்றியுள்
வீற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந் - - - - - 35
தண்டமிழ் நாடன் சண்டப ராக்கிரமன்
றிண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான்
செந்திரு மடந்தைமன் ஸரீராச ராசன்
இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்
புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - - 40
கரந்து கரவாக் காரிகை சுரந்த
முலைமிகப் பிரிந்து முழங்கெரி நடுவணுந்
தலைமகற் பிரியாத் தைய்யல் நிலைபெறும்
தூண்டா விளக்கு..............
........ ......... .......சி சொல்லிய - - - - - - - - - - -45
வரைசர்தம் பெருமா னதுலனெம் பெருமான்
பரைசைவண் களிற்றுப் பூழியன் விரைசெயு
மாதவித் தொங்கல் மணிமுடி வளவன்
சுந்தர சோழன் மந்தர தாரன்
திருப்புய முயங்குந் தேவி விருப்புடன் - - - - - - - 50
வந்துதித் தருளிய மலையர் திருக்குலத்
தோரன் மையாக தமரகத் தொன்மையிற்
குலதெய்வ ........ கொண்டது நலமிகுங்
கவசந் தொடுத்த கவின்கொளக் கதிர்நுதித்
துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ்ப் - - - - 55
புளகப் புதவக் களகக் கோபுர
வாயின் மாட மாளிகை வீதித்
தேசாந் தன்மைத் தென்திருக் கோவலூ
ரிசரந் தன்றக் கவன்றது மிசரங்
குடக்குக் கலுழி குணக்கு கால்பழுங்கக் - - - - -60
காளா கருவுங் கமழ்சந் தனமுந்
தாளார் திரளச் சாளமு நீளார்
குறிஞ்சியுங் கொகுடியு முகடுயர் குன்றிற்
பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர்
புதுமத கிடறிப் போர்க்கலிங் கிடந்து - - - - - - -65
மொதுமொது முதுதிரை விலகி கதுமென
வன்கரை பொருதுவருபுனற் பெண்ணைத்
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் - - - - - - 70
மூரிவண் டடக்கைப் பாரித னடைக்கலப்
பெண்ணை மலயர்க் குதவிப் பெண்ணை
யலைபுன லழுவத் தந்தரி க்ஷஞ்செல
மினல்புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக்
கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் - - - - - - 75
பேரட் டான வீரட் டானம்
அனைத்தினு மனாதி யாயது நினைப்பினும்
உணர்தற் கரியது யோகிக ளுள்ளது
புணர்தற் கினியது பொய்கைக் கரையது
சந்தன வனத்தது சண்பகக் கானது - - - - - - - - - - 80
நந்தன வனத்தின் னடுவது பந்தர்
சுரும்படை வெண்பூங் கரும்பிடைத் துணித்தரத்
தாட்டொலி யாலை அயலாது பாட்டொலிக்
கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள்
பசுந்தாட்டிஞ் செந்நெற் பழனத் தசும்பார் - - - - -85
கணி.. ......... ......... .........
......... யவற்றை யருக்க னருச்சனை முற்றிய
நான்மறை தெரிந்து நூன்முறை யுணர்ந்தாங்
கருச்சனா விதியொடு தெரிச்சவா கமத்தொழில்
மூவெண் பெயருடை முப்புரி நூலோர் - - - - - - - -90
பிரியாத் தன்மைப் பெருந்திரு வுடையது
பாடகச் சீறடிப் பணைமுலைப் பாவையர்
நாடகத் துழதி நவின்றது சேடகச்
சண்டையுங் கண்டையுந் தாளமுங் காளமுங்
கொண்டதிர் படகமுங் குளிறுமத் தளங்களும் - - 95
கரடிகை தொகுதியுங் கைம்மணிப் பகுதியு
முருடியல் திமிலை முழக்கமு மருடரு
வால்வளைத் துணையு மெல்வளைத் தணையுங்
கரும்பொலி மேகமுங் கடலுமென கஞலி
திருப்பொலிn திருப்பலி சினத்து விருப்பொலிப்-100
பத்தர்தம் பாடல் பயின்றது முத்தமிழ்
நாவலர் நாற்கவி நவின்றது ஏவலில்
அருஷையோ டரஹரா வெனக்குனித் தடிமைசெய்
பருஷையர் பகுவிதம் பயின்றது கருஷைமுக்
கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது . . . . . 105
மண்ணவர் தொழுவது வானவர் மகிழ்வது
மற்றுமின்ன வளங்கொள் மதிற்ப தாகைத்
தெற்றுங் கொழுநிழற் சிவபுரத் தாற்குப்
பன்னாள் நிறைபெற முன்னா ளுரவோன்
செய்த தானந் தேவன் குடியில் - - - - - - - - - - -110
அலகியல் மரபி னமைந்து உலகியல்
சாண்பன் னிரண்டிற் சமைந்த தனிக்கோல்
போற்றுற வளர்ந்த நூற்றறு பதுகுழி
மாவொன் றாகவந்த வேலி யாறே
காலி லந்தங் களைந்து நீங்கிய - - - - - - - - - - 115
நிலத்தா னீங்கா நெற்றுகை ஆங்கொரு
மாவிற்கு அறுகல மாகக்
கொழுநூற் றவராடுங் கூட்டி யளந்த
எழுநூற் றிருபதி லிறைமகற் குரிமை
நாழி யெட்டான் வாழி யட்டானக் - - - - - - - - 120
கருங்காலொன்றாற் செங்கை யிரண்டிட்டு
அளந்த நெல் லாற்று பதனிற்
களைந்த நிவந்தத் தன்மை நினையில்
உவந்துநஞ் சுண்டவருக் கமுதுண நயந்த
வொத்தெண் வழுவாப் பத்தெண் குத்தல் - - - - 125
பழநெல் லரிசி பன்னிரு நாழிக்குப்
பதினை யிரட்டிநெற் பதினை யிரட்டியுங்
குறுவா ளான நெடுவா ணயனிக்
கோரிரு நாழி யுட்படுத்து யர்ந்த
நெல்நா லெட்டொன நாழி யும்மே - - - - - - - - -130
.......... ......... ....மிளகு முப்பிடிக்கு
செல்லக் கொடுத்த நெல்லஞ் ஞாழியுஞ்
சூழ்கறி துவன்ற போழ்கற் கொள்நெற்
பெருக்கிய நாலுரி யுருக்கிய நறுநெய்
உழக்கரை தனக்கு வழக்கரை வினவில் - - - - - -135
முந்நாழி யுந்தயிர் முந்நாழிக் காங்கறு
நானா ழியுமடைக் காய மிதிற்குப்
பன்னீ ருழக்கும் பரிசா ரகமாள்
நன்னாங் கினுக்கு நெல்லறு நானாழியுந்
திருமடைப் பள்ளிப் பெருமடைக் குதவும் - - - -140
இந்தன வொருவற்குத் தந்தமுந் நாழியும்
ஆகநெற் கலமு மேகநற் றிவசம்
அப்பரி சியற்றலி லறுவகை யிருதுவும்
இப்பரி சியற்றி யெழுந்துநே ரானபின்
புதுமலர் விரிந்து மதுமலர் சோலைப் - - - - - - 145
புள்ளுர் கோவ லுள்ளுர்ப் பழநிலம்
இரட்டுமுக் காலிற் றந்தபதி னைஞ்சும்
மொட்டுக் கல்லை கவர்மூன்று மாவும்
ஆலஞ் செறுவி லஞ்சு மாவும்
திரண்டு பாய்புனற் றெங்காச் செறுவில் - - - - - -150
இரண்டு மாவும் இலுப்பைக்கா லிரண்டும்
நெல்லாலித் தேழும் புல்லா லிப்புறம்
அஞ்செடுங் கூட்டி ஆகிய நிலத்தொகை
அப்புத்திரண் டியல்மா முப்பத் திரண்டு
மேலா றுணர்ந்த நாறா றெண்பயில் - - - - - - - - -155
அந்தண ரனைவர்க்கும் அருச்சனா போகத்
தந்த பின்னைத் தடமலர்ப் பொய்கைப்
போதகர் பழனப் புதுமலர்ச் சோலைச்
சிதாரி பலமஞ்சு மஞ்சாமற் கெட்ட
திரு வைய்யன் கொட்டமில் குணத்தாற் - - - - -160
செம்பொற் புரிசைச் சிவபுரத் தாற்குக்
கோவலந் தணர்பாற் கொண்டு கொடுத்தன
பண்டைக் கோலாற் பண்டைக் குழித்தொகை
மணங்கொண் டீண்டு முணங்கல் பூண்டி
யொப்புத் தொறுமா முப்பத்தறு மாவு - - - - - - - 165
மிகவந் துயர்புனற் பகவந்தக் கழனி
யெட்டு முதலிருபது மாவு மட்டவிழ்
பூத்துழா வியபுனல் மாத்துழான் வேலி
ஏவிய வெட்டு மாவும் வாவியிற்
கோடேறு பழனக் காடேறு மாநிலம் - - - - - - - 170
அஞ்சும் களர்நிலம் பத்துந் நெஞ்சத்து
உள்ளத் தகும்புன லுரவுக்கட லுகாயம்
பள்ளத் திரண்டும் பாவருங் கணியக்
கழனியில் எட்டும் கைகலந் துரைப்பில்
துழணி.... ...... ..கலமென
....மேற்படி காலாற் பாற்பட வளர்ந்த - - - - - - -175
வீங்கு டனவர் பாங்குடன் றொகுத்த
மெய்ஞ் ற்றுரைகையில் மேதகு தூநெல்
அஞ்ற் றிருபத் திருகலம் என்ன
மற்றைத் தொகயில் மதிவளர் சடையோன்
பெற்ற வாரம் பிழையறப் பேசில் - - - - - - - - - -180
ஐம்பதிற் றைஞ்சொடு மொய்ம்புறு பதினொரு
கலத்தொடு முணங்கல் பூண்டியிற் கறைஞெல்
நன்சை நீக்கி புன்சை நானமா
மாத்தாற் கலவரை யான வரையரை
அறுகல மேற்றிப் பெறுகல வளவை - - - - - - - - 185
மூன்றொடு முப்பது குறைந்த முன்னூற்றுக்
கலத்தனில் மற்றக் கண்ணுதற் காக
நிலத்தவ ருவந்த நிவந்தந் நலத்தகு
நாளொன் றினுக்கு நான்முந் நாழி
பானிறத் தன்மைத் தூநிறக் குத்தல் - - - - - - - -190
அரிசியி லான நெல்லு வரிசையிற்
குறுபவள் கூலி யேற்றிப் பெறுவன
பேணிய பழநெற் றூணியுங் காணிய
வையமது புகழு நெய்யமுது முப்பிடி
கொள்ளக் கொடுத்த நெல்லறு நாழியும் - - - - - 195
பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயி
ரொருமுந் நாழிக் கிருமுன் நாழியு
மடைக் காயமுதுக் காறுரி யத்தும்
அந்தண னொருவ னபிஷேகஞ் செய்யத்
தந்தன குறுணி முற்றதைந்த நானாழியு - - - - - 200
மறைய வல்செய் மாணிரண் டினுக்கு
குறைவறக் கொடுத்தநெற் குறுணிநா நாழியும்
ஓராண் டினுக்கு நேராண் டாக
நண்ணிய நக்ஷத்திர மென நல்லோன்
நண்ணிய திருவிளக்கெண்பதுங் கண்ணெனக் - -205
காவியர் கயல்பய லாவியூ ரதனிற்
றிக்குடை யிவரு முக்குடை யவர்தம்
அறப்புற மான திறப்பட நீக்கிச்
சாலி விளைநிலம் வேலி யாக்கி
முதல்வதின் மூன்றே முக்காலே யரைக்கா - - - 210
லிதன்தனி வந்த யியல்வகை யுரைப்பில்
ஓப்பத்திரு வனையவர் முப்பத்திருவர்
பாடல் பயின்ற நாடக மகளிர்கும்
நெஞ்சா சார நிறைவொடு குறையாப்
பஞ்சா சாரியப் பகுதி யோர்க்கும் - - - - - - - - 215
நறைப்புது மலர்விரி நந்த வானம்
இறைப்புத்தொழில் புரிந்த விருத்தவத் தோர்க்கும்
யோகி யொருவனுக்கு நியோக முடைநில
........ .......... .......... வாழியர்
...செஞ்சடை கடவுடன் றிருவாக் கேழ்வித் - - -220
தஞ்சுடைக் கடிகையன் றனக்கும் நெஞ்சில்
விதித்த முறைமை மதித்து நோக்கி
யின்னவை பிறவு மிராச ராசன்
தன்னவை முன்னற் தத்துவ நெறியி
லறங்கள் யாவையு மிறங்கா வண்ணம் - - - - - - 225
விஞ்ஞா பனத்தால் மிகவௌிப் படுத்தோன்
அன்பது வேலயி லடைக்குன் றகர்கும்
ஒன்பது வேலி யுடைய வுரவோன்
கொம்பர் நாடுங் குளிர்மலைச் சோலை
அம்பர் நாடன் ஆலங்குடிக் கோன் - - - - - - - -230
தெண்டிரைப் பழனத் திரைமூர் நாடன்
வண்டிரைத் துயர்பொழில் மணற்குடி நாடன்
நேரிய னருமொழி நித்தவி னோதன்
காரிய மல்லதோர் காரிய நினையா
தாராண் டலமைக் கற்பக சதுசன - - - - - - - - 235
பேராண் டலைமைக் புணர்புயத் துரவோன்
கூத்தொழில் கேளா தேத்தொழில் முனைந்த
கண்டகர் கரிசறத் துரிசறக் கலிசெக
மண்டல சுத்தியில் வயப்புலி வளர்த்தோன்
வான்பால் மதியும் வலம்புரி யிடம்புரி - - - - -240
யான்பால் வதியும் விரிசடைக் கடவுள்
நெற்றிக் கண்ணும் நிலத்தவர் நினைந்த
தெற்றிக் கண்ணுஞ் சிந்தா மணியும்
போலப் பிறந்த புகழோன் கோலக்
கருங்களிற் றுழவன் கம்பத் தடிகள் - - - - - - -245
மாதி விடங்கு வருபரி வல்ல
வீதி விடங்கன் மென்கருப் பாலைத்
தலந்தருத் தண்டலைத் தடநீர்
நலந்தரு பொன்னி நாடுகிழவோனே. - - - - - 249
..........
..........
..........
..........
..........
..........
..........
..........
சென்னிதிறல் ஸரீஇராசராச தேவர்க்கு யாண்டு
..........
2.2.1 (26)
-
ஸ்வஸ்திஸரீ
திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
துடர்வன வேலிப் படர்வன வாசியும் - - - - - - - - 5
சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
நண்ணற்கு அருமரண் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த - - - - - - - -10
சுிந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்திரை ஈழ மண்டலம் முழுவதும்
எறிபடைக் கேரளர் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுங் சங்கதிர் வேலைத் - - - - -15
தொல் பெருங்காவல் பல்பழந் தீவும்
செருவில் சினவி இருபத்து ஒருகால்
அரைசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத் தீவரண் கருதி
இருத்திய செம்பொன் திருத்தகு முடியும் - - - 20
பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு
ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடும்
பீடியல் இரட்ட பாடி ஏழரை
இலக்கமும் நவநிதிகுலப்பெரு மலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் - - - - - - - 25
முதிர்பட வல்லை மதுர மண்டலமும்
காமிடை வளைய நாமணைக் கோணமும்
வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும்
பாசுடைப் பழன மாசுணித் தேசமும்
அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரவையில் - - - -30
சந்திரன் தொல்குலத் திந்திர ரதனை
விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்
பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்
கிட்டருஞ் செறிமிளை யொட்ட விக்ஷயமும்
பூசுரர் சேர்நல் கோசல நாடும் - - - - - - - - - -- 35
தன்ம பாலனை வெம்முனை யழித்து
வண்டமர் சோலை தண்ட புத்தியும்
இரண சூரனை முறணுறத் தாக்கித்
திக்கணைக் கீர்த்தி தக்கண லாடமும்
கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் - - - - - - 40
தங்காத சாரல் வங்காள தேசமும்
தொடுகடல் சங்கு கொட்டன்மகி பாலனை
வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி
ஒன்திறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்
நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும் - - - - - 45
வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வன்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து 50
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறைசீர் விசயமும் துறைநீர்ப் பண்ணையும் - - 55
நன்மலை யூரெயில் தொன்மலை யூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும் - - - - - - - -60
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும் - - - - -65
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸரீஇராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு
...........வது- - - - - - - - - - - - - - - - - - 70
2.3.1 (27)
-
ஸ்வஸ்திஸரீ
திங்களேர் பெறவளர் அங்கதிர் கடவுள்
தொல்குலம் விளங்கத் தோன்றி மல்கிய
வடதிசை கங்கையும் தென்திசை இலங்கையும்
குடதிசை மகோதையும் குணதிசைக் கடாரமும்
தண்டினில் கொண்ட தாதைதன் மண்டல - - - - - - - 5
வெண்குடை நிழலெனத் தண்குடை நிழற்றித்
திசைதொறும் செங்கோல் ஓச்சி இசைகெழு
தென்னவன் மானா பரணன் பொன்முடிப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து
வேணாட் டரசரைச் சோணாட் டொதிக்கிக் - - - - - - 10
கூவகத் தரசரைச் சேவகந் தொலைத்து
வேலைகொள் காந்தளூர்ச் சாலைகல மறுத்தற்பின்
தன்குலத் தவனிபர் நன்குதரு தகைமையில்
அரசிய லுரிமை முறைமையி லேத்தி
வில்லவர் மீனவர் வேள்குலச்ச ளுக்கியர் - - - - - - - 15
வல்லவர் முதலாய் வணங்கி வீற்றிருந்து
தராதலம் படைத்த திக்கேழும் துதிகெழு
செயங்கொண்ட சோழ னென்னும் மதிகெழு
கோவிராச கேசரிபன்மரான உடையார் ஸரீஇராசாதிராச
தேவர்க்கு யாண்டு .................................. - - - - - -20
2.3.2 (28)
-
ஸ்வஸ்திஸரீ
திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ்
நிலமகள் நிலவ மலர்மகள் புணர்ந்து
செங்கொல் லோச்சி கருங்கலி கடிந்துதன்
சிறியா தாதையும் திருத்தமை யானையும்
குறிக்கொள்தன் இளங்கோக் களையும் நெறிபுணர் - 5
தன்திருப் புதல்வர் தம்மையும் துன்றெழில்
வானவன் வில்லவன் மீனவன் கங்கன்
இலங்கையர்க் கிறைவன் பொலங்கழற் பல்லவன்
கன்ன குச்சியர்க் காவலன்எனப் பொன்னணிச்
சுடர்மணி மகுடம் சூட்டிப் படர்புகழ் - - - - - - - - - 10
ஆங்கவர்கு அவர்நாடு அருளிப் பாங்குறு
மாதா தைமுன் வந்த போதலர்
தெரியல் விக்கிரம நாரணன்தன் சக்கரன்
அடிபடுத் தருளி கந்தவன் அவதரித்து
ஒருபதாம் நாளால் திருமணி மொளலி - - - - - - - -15
வாழியா பன்எதிர் சோழனெனப் புனைந்து
மன்னுபல் ஊழியுள் தென்னவர் முவருள்
மானா பரணன் பொன்முடி ஆனாப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து
வார்அள வியகழல் வீரகே ரளனை - - - - - - - - - -20
முனைவயிற் பிடித்துதன் ஆனை கிடுவித்து
அத்திவாரணக் கயிற்றால் உதைப்பித் தருளி
அந்தமில் பெரும்புகழ் சுந்தர பாண்டியன்
கொற்றவெண் குடையும் கற்றைவெண் கவரியும்
சிங்கா தனமும் வெங்களத்து இழிந்துதன் - - - - - -25
முடிவிழத் தலைவிரித்து அடிதளர்ந்தோட
தோல்லை முல்லையூர் துரத்தி ஒல்கலில்
வேணாட் டரசரை ச் சோணாட்டு ஒதிக்கி
மேவுபுகழ் இராமகுட முவர்கெட முனிந்து
மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டுதன் - - 30
நாடுவட்டு ஓடிக் காடுபுக்கு ஒளிப்ப
வஞ்சியம் புதுமலர் மலைந்தாங்கு எஞ்சலில்
வேலைகெழு காந்தளூர்ச் சாலைகலம் அறுப்பித்து
ஆகவ மல்லனும் அஞ்சக் கேவுதன்
தாங்கரும் படையால் ஆங்கவன் சேனையுள் - - - - 35
கண்டப் பய்யனும் கங்கா தரனும்
வண்டமர் களிற்றொடு மடியத் திண்திறல்
விருதர் வக்கியும் விசையா தித்தனும்
தருமுரட் சாங்க மய்யனும் முதலினர்
சமர பீருவொத் துடைய நிமிசுடர் - - - - - - - - - - 40
பொன்னொடு அய்ங்கரிப் புரவியொடும் பிடித்துத்
தன்னாடை யிற்சயங் கொண்டு துன்னார்
கொள்ளிப் பாக்கை உள்ளொளி மடுப்பித்து
ஓருதனித் தண்டால் பொருகடல் இலங்கையர்க்
கோமான் விக்ரம பாகுவின் மகுடமும் - - - - - - - - 45
முன்றனக்கு உடைந்த தென்றமிழ் மண்டலம்
முழுவதும் இழந்து ஏழ்கடல் ஈழம்
புக்க இலங்கேச னாகிய விக்ரம
பாண்டியன் பருமணி மகுடமும் காண்டங்கு
தன்னது ஆகிய கன்னக்குச் சியினும் - - - - - - - - - 50
ஆர்கலி ஈழம் சீரிதென் றெண்ணி
உளங்கொள் நாடுதன் னுறவோடும் புகுந்து
விளங்குமுடி கவித்த வீரசலா மேகன்
பொருகளத் தஞ்சிதன் கார்களி றிழந்து
கவ்வையுற் றோடிக் காதலி யொடுந்தன் - - - - - - - 55
றவ்வையை பிடித்துத் தாயை மூக்கரிய
ஆங்கவ மானம் நீங்குதற் காக
மீண்டும் வந்து வாட்டொழில் புரிந்து
வெங்களத்து உலந்தஅச் சிங்களத் தரைசன்
பொன்னணி முடியும் கன்னரன் வழிவந்து - - - - - - -60
உறைகொள் ஈழத் தரைசனா கியசீர்
வல்லவன் மதன ராசன் எல்லொளித்
தடமணி முடியும் கொண்டு வடபுலத்து
இருகா லாவதும் பொருபடை நடாத்தி
கண்டரன் தினகரன் நாரணன் கணவதி - - - - - - - -65
வண்டலர் தெரியல் மதுசூ தனனென்று
எனைப்பல வரையரை முனைவயிற் றுரத்தி
வம்பலர் தருபொழில் கம்பிலி நகருள்
சளுக்கியர் மாளிகைத் தகர்ப்பித்து இளக்கமில்
வில்லவர் மீனவர் வேள்குலச் சளுக்கியர் - - - - - - 70
வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர்
சிந்துணர் ஐயணர் சிங்களர் பங்களர்
அந்திரர் முதலிய அரைசரிடு திரைகளும்
ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும்
உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து75
விசுவலோகத்து விளங்க மனுநெறி நின்று
அஸ்வமேத யாகஞ்செய் தரசுவீற் றிருந்த
சயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்
கோவிராச கேசரி பன்ம ரான
உடையார் ஸரீஇராசராசதேவர்க்கு - - - - - - - - - - - 80
யாண்டு ................
2.3.3 (29)
-
ஸ்வஸ்தி ஸரீ
திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ்
நிலமகள் நிலவ மலர்மகள் புணர்ந்து
செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து
தந்தையர் தமயர் தம்பியர் தன்திரு
மைந்தரென் றிவரை மணிமுடி சுட்டிக் - - - - - - - - - - 5
கன்னி காவலர் தென்னவர் மூவருள்
வானகம் இருவருக் கருளிக் கானகம்
ஒருவனுக் களித்துப் பொருசிலைச் சேரலன்
வேலைகெழு காந்தளூர்ச் சாலைகல மறுத்து
இலங்கையர்க் கரசரையும் அலங்கல்வல் லபனையும் -10
கன்ன குச்சியர்க் காவலனையும் பொன்னணி
முடித்தலை தடிந்துதன் கொடிப்படை ஏவிக்
கன்னா டகர்விடு கடகரி புரளத்
தன்னா டையிற்றமிழ்ப் பரணிகொண் டொன்னார்
வச்சிர நெடுவாள் விச்சயன் வெருநௌித்து - - - - - - 15
அஞ்சி ஓடத்தன் வஞ்சியம் படையால்
ஆங்கவன் பிதாவை மாதாவோடு சதர்மலி
வீங்கு நீர்ப் பூண்டூர் வெஞ்சமத் தகப்படுத்து
அயப்படை ஆகவ மல்லன் பயத்தொடும்
வரவிடும் ஒற்றரை வொருவரப் பிடித்து - - - - - - - - -20
ஆங்கவர் மார்பில் ஆகவ மல்லன்
யாங்ஙணம் அஞ்சினன் என்ன நன்கெழுதிச்
செலுத்திய பின்னைத்தன் புலிக்கொடிப் படைஞர்
ஒட்டவரி வாரண வரசைக் கடல்புரைச்
சிறுதுறைப் பெருந்துறைத் தெய்வவீம ரசியென்று - -25
உறுதுறை மூன்றிலும் ஒளிர்புன லாட்டுவித்து
ஆங்கவர் ஏத்த கிரியினில் ஓங்கிகல்
உழுலையெறெழுதி உயர்ஜயஸ் தம்பம்
எழில்பெற நிறுத்திதன்கழல்பணிந் தொழுகும்
அரசர்க ளோடுசென் றாடிப் பொருபுலி - - - - - - - - -30
வீதரன கொடியொடு தியாகக்கொடி யெடுத்து
ஒன்னலர் கவர்ந்த தொன்னிதிப் பிறக்கம்
இரவலர் ஆனோர்க்கு ஈந்தவன் தண்டத்துக்கு
அவர் வெல்புரவி நுளம்பனும் காளி
தாசனும் விளம்பரும் தார்ச்சா முண்டனும் - - - - - - 35
போர்க்கொம் மய்யனும் வில்லவர் அரசனும்
வெஞ்சமத் திரியஅவர் பெருநிதி கவர்ந்து
கூர்ச்சரை சாரணை உப்பளர் கொய்மலர்
பசுந்தலை தராதயி லப்பன் தடிந்துமுன்
தகைவன தப்பைமுன் அப்பகை செகுத்து- - - - - - - 40
உப்பளன் வழியிற் தப்பிய வரசர்
ஆங்கது மீட்க மாட்டாது தனது
பூங்கழல் சரணெனப் கூ,க்கவர்க் கருளித்
தடமுடி மீட்டுக் கொடுத்து அவரரண்
அவருக் களித்த தடங்கவன தப்பையைப் - - - - - - -45
பறித்துடன் கொண்டு போது றைப்புனல்
இரட்ட பாடியெரி மடுத்தவ் விரட்டம்
ஏழரை இலக்கமும் மதிமுன் ஆண்டு
அறத்துறைத் தஞ்சியும் அஞ்சா கரத்து
வெஞ்சமங் கருதி விடவந்த பெற்கடை - - - - - - - - 50
முன்பெரி தவர்க்குக் குறைவரந் தொன்னலர்
அறைகழல் தன்புகழ் ...மா பாட்டரில்
ஒருவனை பெண்ணுடை உடுத்தி ஒருவனை
அஞ்சு சிகைபடச் சிறப்பித்து நொந்தழி
ஆகவ மல்லியும் ஆகவ மல்லனும் - - - - - - - - - - - -55
என்றுபெயர் எடுத்து அன்றவன் விடுத்த
பெற்கடை தன்னுடன் போக்கி வற்குடன்
விட்டினி விடாதுசென் றொட்டி முதுகிடப்
பொருதுதன் கதப்புலி தண்டின் முன்னோர்
கைமலை தடவி கல்யாண புரம்என்னுந் - - - - - - - - 60
தொல்நகர் துகளெழத் தகைப்பித் தன்னகர்
அரசுறை கருமா ளிகைப்பொடி யாக்கி
ஆங்கது காத்து நின்ற பங்கழல்
அடலா கத்தன் முதலினர் கடகளிற்று
அரசர் முப்பத்து ஐங்கரி யோடும் - - - - - - - - - - - 65
பரியோடும் பட்டுகப் பொருதஅப் பொருநகர்
விசைய ராசேந் திரன்என் றாங்கிக
வீராபி ஷேகம் செய்து சீர்கெழு
விசுவலோ கத்து விளங்குமனு நெறிநின்று
அசுவமே தஞ்செய் தரசுவீற் றிருந்த - - - - - - - - - 70
ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்
கோவிராசகேசரி வன்மரான உடையார் ஸரீராசாதிராச
தேவர்க்கு யாண்டு .......... ...........
2.4.1 (30)
-
ஸ்வஸ்திஸரீ
இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு
கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டிப்
பேராற்றங்கரை கொப்பத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்தவன்
ஆனையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும்
அடங்கக் கொண்டு
விஜயாபி ஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கோப்பர கேசரி வன்ம ரான
உடையார் இராசேந்திர தேவர்க்கு யாண்டு
..........
2.4.2 (31)
-
ஸ்வஸ்திஸரீ
திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்தன்
முன்னோன் சேனை பின்னது வாக
எதிரமர் பெறாது எண்டிசை நிகழப்
பறையது கறங்கின வார்த்தை கேட்டு
இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு
கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டி
பேராற்றங் கொப்பத்து வந்தெதிர் பெருத
ஆகவ மல்லன்தன் அடல்சேனை எல்லாம்
பாராது நிகழப் பசும்பிணம் ஆக்கி
ஆகவ மல்லன் புரக்கிட்டோடஅவன்
ஆனையும் குதிரையும் ஒட்டக நிரைகளும்
பெண்டிர் பண்டாரமும் அகப்பட பிடித்து
விபவமும் கொண்டுவ விஜயாபி ஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கோப்பர கேசரி வன்ம ரான
உடையார் இராசேந்திர தேவர்க்கு யாண்டு
.....................
2.4.3 (32)
-
ஸ்வஸ்திஸரீ
திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்தன்
முன்னோன் சேனை பின்னது வாக
முன்னெதிர் சென்ற இரட்டபாடி
ஏழரை இலக்கமும் கொண்டு தன்னாணையில்
முன்னாணை செல்ல முந்நாள் தவிர்த்துக்
கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டி
எதிரமர் பெறாது எண்டிசை நிகழப்
பறையது கறங்கின வார்த்தை கேட்டு
இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு
கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டி
பேராற்றங் கொப்பத்து வந்தெ
பறையது கறங்க ஆங்கது கேட்டுப்
பேரா ற்றங் கொப்பத்து வந்து
எதிர் பெருத ஆகவ மல்லன்
தன் பெருஞ் சேனை எலாம்பட பொருது
பாரது நிகழப் பசும்பிண மாக்கி
ஆங்கவன் அஞ்சி புறக்கிட்டோட
மற்றவன் ஆனையும் குதிரையும் ....
ஒட்டகத்தோடுபெண்டிர் பண்டாரமும்
கைக்கொண்டுவிஜயாபி ஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கோப்பர கேசரி வன்ம ரான
உடையார் இராசேந்திர தேவர்க்கு யாண்டு
.....................
2.4.4 (33)
-
ஸ்வஸ்திஸரீ
திருமாதர் புவியெனும் பெருமாதர் இவர்தம்
மாதே வியர் களாக மீதொளிர்
வெண்குடை உயர்த்துத் திண்கலி பெயர்த்துத்தன்
சிறிய தாதை யாகிய எறிவலி
கங்கை கொண்ட சோழனைத் பொங்கிகல் - - - - - - - - - 5
இருமுடிசோழ னென்றும் பொருமுரண்
தன்திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழைத் தெம்முனை அடுதிறல்
சோழ பாண்டியன் என்றும் கோழிமன்
தொடுகழல் வீர சோழனைத் தொல்புகழ்க் - - - - - - - - - 10
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வாள்வலி தடக்கை மதுராந் தகனைச்
சோழ கங்கன் என்றும் தோள்வலி
மேவிகல் பராந்தகத் தேவனை தோள்வலி
சோழ அயோத்திய இராசனென்றும் - - - - - - - - - - - - - -15
திருஉளத்து அன்பொடு கருது காதலருள்
இத்தலம் புகழ் ராசேந்திர சோழனை
உத்தம சோழ னென்றும் தொத்தணி
முகையவிழ் அலங்கல் முடிகொண்ட சோழனை
இகல்விசையாலயன் என்றும் புகர்முகத்து - - - - - - - - - 20
ஏழுஉயர் களிற்றுச் சோாழ கேரளனை
வார்சிலை சோழ கேரளன் என்றும்
திண்திறல் கடாரம் கொண்ட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
சனக ராச னென்றும் கனைகடல் - - - - - - - - - - - - - - - -25
படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழ னென்றும் செந்தமிழ்
பிடிகலி இரட்ட பாடிகொண்டசோழனைத்
தொல்புவி ஆளுடைச் சோழ கன்ன
குச்சி ராச னென்றும் பின்னும்தன் - - - - - - - - - - - - - - - 30
காதலர் காதலர் தம்முள் மேதகு
கதிராங் கனைகழல் மதுராந் தகனை
வெல்படைச் சோழ வல்லப என்று
மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
நிருபேந்திர சோழ னென்றும் பருமணிச் - - - - - - - - - - -35
சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படிமிசை
நிகழு நாளினுள் இகல்வேட்டெழுந்துசென்
றொண்திறல் இரட்ட மண்டல மேய்தி
நதிகளும் நாடும் பதிகளு னனேகமும்
அழித்தனன் வளவனென்று மொழிப்பொருள் கேட்டு - - - -40
வேகவெஞ் சளுக்கி ஆகவ மல்லன்
பரிபவம் எனக்கீதென் றெரிவிழித்து எழுந்து
செப்பருங் கிர்த்திக் கொப்பத் தகவையில்
உடன்றெதி ரேன்றமர் தொடங்கிய பொழுதவன்
செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினும் - - - - - - - - - - - -45
தன்திருத் தொடையிலுங் குன்றுறழ் புயத்திலும்
தைக்கவுந் தன்னுடன் கதகளிறு ஏறிய
தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையுற்
றொருதனி யனேகம் பொருபடை வழங்கியும்
மொய்ம்பமர்சளுக்கி தம்பிஜய சிங்கனும் - - - - - - - - - -50
போரபுலி கேசியும் தார்தச பன்மனு
மானமன் னவரில் மண்டலி அசோகையனும்
ஆன வண்புகழ் ஆளுமா ரையனும்
தேனமர் மட்டவி ழலங்கல்மொட் டையனும்
திண்திறல் நன்னிநுளம்பனு மெனுமிவர் முதலியர் - - - - -55
எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி
வன்னிய ரேவனும் வயப்படை துத்தனும்
கொன்னவில் படைக்குண்ட மயனும் என்றின
வெஞ்சின் வரைசரோ டஞ்சிய சளுக்கி
குலகுல குலைந்து தலைமயிர் விரித்து - - - - - - - - - - -60
முன்னுற நௌித்துப் பின்னுற நோக்கிக்
கால்பறிந் தோடிமேல்கடல் பாயத்
துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு
சத்துரு பயங்கரன் கரபத்திரன் மூல
பத்திர சாதப் பகட்டரை சனேகமும் - - - - - - - - - - - - -65
எட்டுவடை பரிகளும் ஒட்டக நிரைகளும்
வராகவெல் கொடிமுதல் இராசபரிச் சின்னமும்
ஓப்பில் சத்தியவ்வை சாங்கப்பைஎன் றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவையர் ஈட்டமும்
இனையன பிறவும் முனைவயிற் கொண்டு - - - - - - - - - - -70
விசையாபிஷேகம் செய்துதென் றிசைவயிற்
போர்படை நடாத்திக் கார்கட லிலங்கையில்
விறற்படைக் கலிங்கமன் வீரசலா மேகனைக்
கதக்களிற் றொடும்படக் கதிர்முடி கடிவித்து
இலங்கையற் கிறைவன் மான்ா பரணன் - - - - - - - - - - - -75
காதலரி இருவரை களத்திடைப் பிடித்து
மாப்பெரும் புகழ்மிக வளர்த்த
கோப்பர கேசரி பன்மரான
உடையார் ஸரீ இராசேந்திர தேவர்க்கு யாண்டு
................
2.4.5 (34)
-
ஸ்வஸ்திஸரீ
திருமாதர் புவியெனும் பெருமாதர் இவர்தம்
மாதே வியர்க ளாக நீதியுள்
நிகழும் நாளினுள் இகல்வேட் டெழுந்து
செற்றரு முனைக்கொப் பத்து ஆகவ
மல்லனொடு போர்ச்செயம் புரியுங் காலை - - - - - - - - -5
அரிநிகர் தன்திருத் தமய னாகிய
...............னில் ராசாதி ராசன்முன்
நேராம் அரசரை நெடும்விசும் பேற்றி
அந்தர வாளத்து அரம்பையர் எதிர்கொள
இந்திர லோகம் எய்திய பின்பு - - - - - - - - - - - - - - - 10
குந்தளர் நற்படை குடைந்துதன் கடற்படை
கெடக்கண் டஞ்சல் அஞ்சலென் றருளித்தன்
குஞ்சரமேறிக்கன னாடகர்மெற் கூற்றெனத்
தெரிகணை கடாவிப் பொருபடை வழங்கி
மொய்ம்பியல் சளுக்கி தம்பிசய சிங்கனும் - - - - - - - -15
போர்ப் புலிகேசியும் தார்த்தச பன்பனும்
நன்னி நுளம்பனும் எனுமிவர் முதலியர்
எண்ணிலி யரசரை விண்ணகத் தேற்றி
ஆயிடைஎதிர்ந்த கார்சிலை துரந்த
செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினும் - - - - - - - - - -20
தன்திரு தொடையினும் குன்றுரு புயத்தினும்
தாக்கவுந் தன்னுடன் கதக்களிரு ஏறிய
தொடுகழல் வீரர் மடியவும் வகையாது
ஒரதனி அனேகம் பொருபடை வழங்கி
மொய்ம்பியல் சளுக்கிதன் மிக்கவே ழத்தை - - - - - - 25
மிடல்கெடமீட்டுவித்து ஒற்றரை வெருவ
வன்னுறத் துரந்து (உ)ற்சயன் மற்றவன்
தற்படை போகவிட்டு அப்பகடு இழிந்து
குலகுலு குலைந்து தலைமயிர் விரித்து
முன்னுற நௌித்துப் பின்னுற நோக்கி - - - - - - - - - - 30
வன்னிய ரேவனும் நன்படை துத்தனும்
கொன்ன வில்படைக் குய்ய மய்யனும்
என்றின வெஞ்சின அரசரோடு அஞ்சி
வெருவி விழித்தோட வென்கொண் டாங்குறும்
கரபத் திரமுதல் பொருகளிரு அனேகமும் - - - - - - - 35
பதியின் தொகுதியும் உரியதே வியரையும்
வராகவெல் கொடிமுதல் இராசபரிச் சந்தமும்
இனையன பிறவும் முனைவயிற் கொண்டு
போர்க்கல னாகத்துப் பார்திவ ரானோர்
முன்னரும் செய்தறி யாதன பின்நாள்- - - - - - - - - - - -40
செய்துமென்று எண்ணற் கரியது கைக்கலந்து
அன்றினர் படைதடர்த் தன்திர மேனியில்
பசும்புண் பொழிநீர் புதமப் புனலால்
நீக்கின போல நோக்கருங் களத்தே
விசையாபி ஷேகம் விசைமிகச் செய்து - - - - - - - - - -45
வீரசிங் காசனம் திரியவிட்டுப் போந்து
காங்கா புரிபுகுந் தருளி இன்றுதொறும்
ொவறும் செய்தறியாதன செய்யா
நின்றுஇக லொழுக்கம் நேர்ந்து தன் திருக்
காதல னான போதலர் தெரியல் - - - - - - - - - - - - - -50
கங்கை கொண்ட சோழனையும் ஆங்கவன்
திருமக னான இருநிலங் காவலன்
ஆள வந்த பெருமானையும் வென்றிகொள்
தன்திருத் தம்பியர் தம்முள் வன்திறல்
வளவன் மும்முடிச் சோழனையும் களப்படை - - - - - - -55
வீரசோ ழனையும் வெல்படைமது ராந்தகனையும்
பாரணி திரள் தோள் தன்திருமகன் இராசேந்திரசோழனையும்
தராபதி இருமுடிச் சோழன் ராசாதிராசன்
சுருதிநன் குணரும் சோழ பாண்டியன்
வார்சிலைத் தானைக் கரிகால் சோழனென்றும் - - - - -60
சோழகங்கன் தொடுகழல் உத்தம சோழனென்றும்
சுடர்நவ மணிபுனை திருமுடி சூட்டித்
தென்னவர் முதலியர் நிருபரைத் தாங்கவர்
இருநிலம் ஆள நிலமவர்க் கருளிக்
கார்கடல் இலங்கையில் போர்ப்படை நடாத்தி - - - - 65
மிடர்படை கலிங்கர்மன் வீரசலா மேகனைக்
கதக்களிற் றோடும் கதிர்முடி தடிந்து
அதன்பின் போந்து எயில்கொப் பத்து
வந்தழி சளுக்கி வந்து எய்திய
பரிபவம் இந்நா ளிகலமர் செய்து - - - - - - - - - - - - -70
நீங்குவன் என்று சிந்தையில் கருதி
இன்ப மாயினன் இன்றுபந் தமர்பல
வீரந் தலைநின் றுவர்கடல் கிளந்த
தெனப்படை பரப்பி வந்து தோன்றிஅன்
ஆர்கலி முடக்காற் றமர்புரிய வந்த - - - - - - - - - - -75
தண்ட நாயகன் வாலா தேவனும்
திண்திறல்வல் லியர்முதல் பலபடை அரசரும்
போர்களத் தவிய இருகையன் முதலினர்
மன்னவர் தம்மொடு மைந்தன்விக் கிலனொடு
தன்னிலை யழிந்து சளுக்கிகெட் டுடைதர
மண்டமர் புரிந்துதன் தண்டின்முன் தான்சென்று . . . .80
ஒருதனி வேழமுற்று உடலியாங்கு அவனை
இருமடிமேன்மேன் கொண்டருளிப் பொருவழி
மாப்பெரும் புகழ்மிக வளர்த்த கோப்பர
கேசரிபன்ப ரான உடையார் ஸரீஇராசேந்திர தேவர்க்கு
யாண்டு ......
2.5.1 (35)
-
ஸ்வஸ்திஸரீ
திருமகள் விளங்க இருநில மடந்தையை
ஒருகுடை நிழற்கீழ் இனிதுநிற்பப் புணர்ந்து
தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய
கோவிராச கேசரிவன்ம ரான
உடையார் ஸரீ இராசமகேந்திர தேவர்க்கு யாண்டு
......
2.5.2 (36)
-
ஸ்வஸ்திஸரீ
அடல் களிற்றால் ஆகவ மல்லனை
முடக்காற்றில் முதுகிடு வித்து
மற்றவனசெய சிங்கனோடும்
வருதண்டினைப் பொருதண்டினால்
வெற்றிகொண்டு வெண்குடைநிழல்
வீரசிங்கா தனத்து வீற்றிருந்தருளின
கோவி ராசகேசரி வன்மரான
உடையார் ஸரீ இராசமகேந்திர தேவர்க்கு யாண்டு
.........
2.6.1 (37)
-
ஸ்வஸ்திஸரீ
வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்
செங்கோ லோச்சி கருங்கலி கடிந்து
தென்னனை தலைகொண்டு சேரனை திரைகொண்டு
சிங்கள தேசம் அடிபடுத்து வெங்களத்து
ஆகவ மல்லனை ஐம்மடி வென்கண்டு - - - - - - - - -5
வேங்கை நாடு மீட்டுக் கொண்டு
தன்னுடன் பிறந்த முன்னவர் விரதம்
முடித்து தன்கழல் அடைந்தமன் னவர்க்குக்
கிடாரம் எறிந்து கொடுத் தருளி...
வந்தடி பணிந்த விசயா தித்தற்கு - - - - - - - - - - 10
மண்டலமருளித் தன்னடி அடைந்து
அருளு கின்ற விக்ரமா தித்தனை
எண்டிசை நிகழக் கண்டிகை சூட்டி
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
எறிந்துகொடுத் தளிய கூடல் சங்கமத்து - - - - - -15
ஆகவ மல்லனை அஞ்சு வித்து
விக்கலனையுஞ் சிக்கணனையும் உடைபுறங் காண்டு
மற்றவன் மகா தேவிய ரோடும்
வஸ்து வாக னங்கைக் கொண்டு
இரண்டாம் விசையும் குறித்த களத்து - - - - - - - -20
ஆகவ மல்லனை அஞ்சு வித்து
வேங்கை நாடு மீட்டுக் கொண்டு
தன்னுடன் பிறந்தமுன்னவர் விரதம்
முடித்து மூன்றாம் விசையும்சொ மேஸ்வரன்
கட்டின கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம் - - - - - -25
கம்பிலி சூட்டு கரடிக் கல்லில்
ஜயஸ்தம்பம் நாட்டித் தேவநாதன் முதல்
மாசா மந்தரை சக்கரக் கோட்டத்துத்
துரத்தி யவர்களுக் குரிய தாரம்
பிடித்துக் குன்ன குச்சியும் மீட்டு - - - - - - - - - - -30
எ6லை கடந்து நிலையிட்டு
விஜய சிம்மா சனத்து
உலகமுடை யாளொடும் விற்றிருந் தருளின
கோவிராச கெசரி வன்ம ரான
உடையார் ஸரீவீரஇராஜேந்திர தேவர்க்கு யாண்டு -35
...........
2.6.2 (38)
-
ஸ்வஸ்திஸரீ
திருவளர் திரள்புயத் திருநில வலயந்
தன்மணிப் பூணெனத் தாங்கிப் பன்மணிக்
கொற்றவெண் குடைநிழற் குவலயத் துயிர்களைப்
பெற்ற தாயினும் பேணி மற்றுள
அறைகழல ரையர்தன் னடிநிழ லொதுங்க - - - - - - - - -5
உறைபிலத் துடைகலி யொதுந்க முறைசெய்து
அரும்பெறல் தமயனை ஆளவந் தானை
இரும்புவி புகழும் இராசாதி ராசன்
..... புகழொளி மணிமுடி சூட்டித்
தன்திருப் புதல்வனாகிய மதுராந் தகனை - - - - - - - - 10
வாளேந்து தானை சோளேந் திரனென
எண்திசைத் திகழ எழில்முடி சூட்டித்
தொண்டைமண் டலங்கொடுத் தருளித் திண்திறல்
மைந்த னாகிய கங்கை கொண்ட சோழனை
ஏழுய ரியானைச் சோழபாண்டியன் என்று - - - - - - - - -15
ஈண்டுயர் மணிமுடி இசைபெறச் சூட்டிப்
பாண்டிமண் டலங்கொடுத் தருளி ஆண்டகை
வடிகொண்ட கதிர்வேல் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழனெனச் சுடர்முடி சூட்டி
அந்தமில் பெருஞ்சிறப் பருளித் தன்கிளை - - - - - - - -20
எவ்வேறு உலகத் தவர்குரிய
வேறுவேறு அருளி இகலிமுனை யிருந்து
விரைமலர்த் தெரியல் விக்கலன் தன்னொடு
வரிசிலைத் தடகடகை மாசா மந்தரைக்
கங்க பாடி களத்திடை நின்றுந் - - - - - - - - - - - - - -25
துங்கபத் திரைபுகத் தரத்தி யாங்கவர்
வேங்கைநன் நாட்டிடை மீட்டுமவர் விட்ட
தாங்கரும் பெருவலித் தண்டுகெடத் தாக்கி
மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச்
செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவன் - - - - - - - -30
ஒருமக ளாகிய விருகையன் தேவி
நாகலை ெஉன்னுந் தோகயஞ் சாயலை
முகத்தொடு மூக்குவே றாக்கிப் பகைத்தெதிர்
மூன்றாம் விசையினும் ஏன்றெதிர் பொருது
பரிபவம் தீர்வெனக் கருதிப் பொருபுனற் - - - - - - - -35
கூடல் சங்கமத் தாகவ மல்லன்
மக்க ளாகிய விக்கலன் சிங்கணன்
என்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை
வென்றடு தூசிமுனை விட்டுத் தன்துணை
மன்னருந் தானும் பின்னடுத் திருந்து - - - - - - - - - -40
வடகட லென்ன வகுத்தவத் தானையைக்
கடகளி றொன்றாற் கலக்கியடல்பரிக்
கோசலைச் சிங்கணக் கொடிபட முன்னர்த்
தூசிவெங் களிற்றொடுந் துணித்துக் கேசவ
தண்ட நாயகன் தார்க்கேத் தரையன் - - - - - - - - - -45
திண்டிரற் மாரையன் சினப்போத் தரையன்
நிரேச்சய னிகல்செய்பொற் கோதைமூ வத்தியென்று
ஆர்த்தடு துப்பில் அனேகசா மந்தரைச்
சின்னா பின்னஞ் செய்து பின்னை
முதலி யான மதுவண னோட - - - - - - - - - - - - - - 50
விரித்த தலையொடு விக்கல னோடச்
செருத் தொழிலழிந்து சிங்கண னொட
அண்ணன் முதலியர் அனைவரும் அமர்போர்ப்
பண்ணிய பகடிழிந் தொட நண்ணிய
ஆகவ மல்லனும் அவர்க்கு முன்னோட - - - - - - - -55
வேகவெங் களிற்றினை விலக்கி வாகைகொண்டு
அங்கவர் தாரமும் அவர்குல தனமும்
சங்கும் தொங்கலும் தாரையும் பேரியும்
வெண் சாமரையும் மேக டம்பமும்
சூகரக் கொடியும் மகரதோ ரணமும் - - - - - - - - - 60
ஒட்டக நிரையம் உலோக சனமும்
புட்பகப் பிடியும் பெருகளிற் றீட்டமும்
பாய்பரித் தொகையொடும் பறித்துச் சேயொளி
வீரசிங் காதணம் பார்தொழ வேறி
எழில்தர உலக முழுதுடை யாளொடும் - - - - - - - -65
விசையமணி மகுடம் இசையுடன் சூட்டி
திசைதொறும் செங்கோல் செலுத்தி இசைவின்றி
தத்துமாப்புரவி பொத்தப்பி வேந்தனை
வாரணை வனகழற் கேரளன் தன்னைச்
சனநா தன்றன் தம்பியைப் போர்களத் - - - - - - - - 70
தலங்கல்சூழ்ப் பசுந்தலை யரிந்து பொலங்கழற்
தென்னனைச் சீவல் லவன்மகன் சிறுவன்
மின்னவில் மணிமுடி வீரகே சரியை
மதவரை யொன்றா லுதைப்பித்து உதகையிற்
கேரளர் தங்குல செங்கீரை யோடும் - - - - - - - - - -75
வேரரப் பரிந்தோடி மேல்கடல் வீழ
வாரண மருகுளி செலுத்தி வாரியில்
எண்ணருங் களிற்றின் இரட்டரைக் கவர்ந்த
கன்னியர் களிற்றொடுங் கட்டிப் பண்ணுப்
பிடியொடு மாங்கவர் விடுதிரை கொண்டுமீண்டு - - -80
கொண்டாற் றுறவிற் குறித்தவெம் போரிற்
தண்ட நாயகர் தம்மில் தண்திறல்
மல்லியண் ணனையு மஞ்சிப் பயனையும்
பில்குமதக் களிற்றுப் பிரமதே வனையுந்
தண்டார் அசோகையன் தன்னையும் ஒண்திறல் - - 85
சத்தியண் ணனையும் சந்திவிக் கிரகப்
பத்தி யண்ணன் தன்னையும் அத்தகு
தேமரு தெரியல் வீமயன் றன்ணையும்
மாமதி வங்கா ரனையும் நாமவேற்
கங்கனை நுளம்பனைக் காடவர் கோனை - - - - - - 90
மங்மத யானை வைதும்ப ராயனை
இருந்தலை யரிந்து பெரும்புனற் றனாது
கங்கை மாநகர் புகுந்தபின் திங்களின்
வழிவரு சளுக்கி பழியொடு வாழ்வதிற்
சாவது சால நன்றென்று ஏவமுற்று - - - - - - - - - - -95
உன்னிய சிந்தைய னாகி முன்னம்
புதல்வரும் தானும் முதுகிட் டுடைந்த
கூடலே களமெனக் குறித்தக் கூடலில்
வாரா தஞ்சினர் மன்ன ரல்லர்
போர்ப்பெரும் பழிப்பிரட்ட ராக வென்றி - - - - - - -100
யாவரு மறிய எழுதிய சபத
மேவரும் ஓலை விடையொடும் கொடுத்து
இரட்டபாடி பிரட்டரில் மேதகு
கங்கா கோத்தனை ஏவ அங்கவன்
வந்தடி வணங்கி வாசகம் உணர்த்தலும் - - - - - - - -105
சிந்தையும் முகமும் திருப்புயம் இரண்டும்
ஏந்தெழில் உவகையொடு இருமடங்கு பொலியப்
போந்தப் போர்க்களம் கூகுந்து கரந்தையில்
வல்லவர் கோனை வரவு காணாது
சொல்லிய நாளின் மேலுமொர் திங்கள் - - - - - - - - 110
பார்த்தி ருந்த பின்னைப் பேர்த்தவன்
கால்கெட வோடி மேல்கட லொளித்தலும்
தேவ நாதனும் சித்தயும் கேசியும்
மூவரும் தனித்தனி முதுகிடப் பாவரும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமு - - - - - - - - - - - - - 115
முரட்டொழில் அடக்கி முழங்கெரி யூட்டி
வெங்கதப் புலியேறு வியந்து விளையாடத்
துங்கபத் திரைக்கரைச் செயபத் திரத்தூண்
நானிலம் பரச நாட்டி மேனாள்
வந்த பிரட்டனை வல்லவ னாக்கிச் - - - - - - - - - - -120
சுந்தர கண்டிகை கட்டிப் (பின்னும்)
புரசை யானைப் புழைக்கயிற்பிழைத்திவ்
உலக மறிய ஓடிய பரிசொரு
பலகையிற் பழுதற எழுதிய பின்னை
சார்த்தின உரையுஞ் சளுக்கி பதம்பெற்ற - - - - - - -125
பூத்தின மார்வொடும் பூட்டிப் போர்த்துந்
தான்கைக் கொண்ட வேங்கைநன் னாடு
மீட்டுக் கொண்டலால் மீள்கிலங் கேட்டுநீ
வல்ல னாகில் வந்துகாக் கென்று
சொல்லி யெடுத்தவத் தானை விசைய - - - - - - - - - 130
வாடையொடு அடுத்தபே ராற்றிற் றடுத்த
சனநா தனையும் தண்டநா யகனாம்
இனமார் கடகளிற்று இராசமய் யனையும்
முப்பர சனையு முதலாக உடைய
அப்பெருஞ் சேனையை அடவியிற் பாய்ச்சிக் - - - - -135
கோதா விரியிற் றன்போ தகநீர்
உண்ணக் கலிங்க முங்கடந் தப்பால்
சக்கரக் கோட்டத்து அப்புறத் தளவு
மேவருந் தானைத் தாவடி செலுத்தி
வேங்கைநன் நாடு மீட்டுக் கொண்டுதன் - - - - - - - - 140
பூங்கழற்கு அடைக்லம் புகுந்த படைக்கலத்
தடக்கை விசயா தித்தற் கருளி
விசைகொடு மீண்டுவிட்டு அருளி இகலிடைப்
பூண்டசயத்திருவோடுங் கங்கா புரிபுகந்து
அருளி அங்கே ராசாதி ராசனெனத் - - - - - - - - - - 145
தராதிப ராகத்தம் நியமித்து இயற்றிப்
படியில் மன்னவ ரடிதொழு தேத்த
இனமணிப்பீடத் திருந்துவேங்கைநன் நாட்டினிற் கொண்ட
இருநிதிப் பிறக்கம் வரிசையிற் காட்டி
ஆழிய நிகளமும் அகற்றி ஆங்கவர் - - - - - - - - - - 150
வாழிய விரதமாற்றிப் பூழிமஞ்
செய்துவரம் பாகச் செங்கோல் செலுத்தி
மேதினி விளக்கி மீதுயர் வீரத்
தனிக்கொடி தியாகக் கொடியொடு மேற்பவர்
வருக என்று நிற்பப் போர்த்தொழில் - - - - - - - - - -155
உரிமை யில்எய்தி யரசு வீற்றிருந்து
மேவரு மனுநெறி விளக்கிய
கோவிராச கேசரி வனம ரான
உடையார் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு யாண்டு
..........
2.6.3 (39)
-
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்
செயல்வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்துவாழ
வெண்மதிபோல் குடைவிளங்க வேலவேந்தர் அடிவணங்க
மண்மடந்தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச்
சக்கரமுஞ் செங்கோலும் திக்கனைத்துஞ் செலநடக்கக் - - 5
கற்பகாலம் புவிகாப்பப் பொற்பமைந்த முடிபுனைந்து
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவன முழுதுடை யாளொடும் வீற்றிருந்
தருளிய கோப்பர கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு -10
யாண்டு ............
2.7.1 (40)
-
ஸ்வஸ்திஸரீ
திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டிலம்
மன்னுயிர் தோறும் இன்னருள் சுரந்து
நிறைகழல் பரப்பி நிற்ப முறைமையிற்
செங்கோல் திசைதொறும் செல்லத் தங்கள்
குலுமுதற் பகுதியின் வலிசேர் புவனிக்கும் - - - - -5
ஒற்றை யாழி உலாவ நற்றவத்
திருநிலச்செல்வியும் இருநிலப் பாவையும்
கீர்தியுங்கிள்ளையும் போர்தனிப் பூவையும்
மதுவையிற்புணர்ந்து பொதுமை துறந்துதன்
உரிமைத்தேவிய ராக மரபினில் - - - - - - - - - - -10
சுடர்மணி மகுடம் சூடி நெடுநில
மன்னவர் முறைமுறை தன்னடி வணங்க
வீரமும் தியாகமும் ஆரமெனப் புனைந்து
வீர சிம்மா சனத்து உலக
முழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளி - - - - - - 15
மாப்புகழ் மனுவுடன் வளர்த்த
கோப்பர கேசரி வன்ம ரான
உடையார் ஸரீஅதிராசேந்திர தேவர்க்கு யாண்டு
........
2.8.1 (41)
-
ஸ்வஸ்திஸரீ
திருமன்னி விளங்கும் இருகுவ டனையதன்
தோளும் வாளும் துணையெனக் கேளலர்
வஞ்சனை கடந்த வயிரா கரத்துக்
குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில்
சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத் - 5
திக்கு நிகழதர் திறைகொண் டருளி
அருக்க னுதையத் தாசையி லிருக்கும்
கமலம் அனைய நிலமகள் தன்னை
முந்நீர்க் குளித்த வந்தாள் திருமால்
ஆதிக் கேழல் ஆகிஎடுத் தன்ன - 10
யாதுஞ் சலியா வகையினிது எடுத்துத்
தன்குடை நிழற்கீழ் இன்புற இருத்தில்
திகிரியும் புலியும் திசைதொறும் நடாத்திப்
புகழுந் தருமமும் புவிதொறும் நிறுத்தி
வீரமும் தியாகமும் மானமும் கருணையும்தன் - 15
உரிமைச் சுற்றமாகப் பிரியாத் தராதலம்
நிகழச் சயமும் தானும்வீற் றிருந்து
குலமணி மகுடம் முறைமையில் சூடித்
தன்கழல் தராதிபர் சூடச் செங்கோல்
நாவலம் புவிதொறும் நடாத்திய - 20
கோவிராச கேசரி வன்ம ரான
உடையார் ஸரீஇராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு 2 ஆவது
2.8.2 (43)
-
ஸ்வஸ்திஸரீ
பூமேல் அரிவையும் போர்ச்செயப் பாவையும்
தேமே வியதிருப் புயங்களில் திளைப்பவங்
கோமே விலங்கு கோட்டிய யானையும்
யானுமென் கையில் துலங்கு பொற்... ...
படையுமெய்த் துணையென் றருளிப் பலங்கிளர் - 5
தாரா வரசர் தாமிசை கொள்ளப்
போர்த்திரு வொடுபெரும் புகழ்நிறுத்தி நீரார்
கடல்சூழ் உலகில் கடும்போர் மன்னர்
அடற்போர் வம்மென் றறைகூவருள் படர்புகழ்
அயிரா பதத்தோ டயிரா பதமென - 10
வயிரா கரத்து வாரணம்வாரி செயிராப்
பொன்வேங்கை நாடும் பொருகடல் இரட்டமும்
தன்வேங்கை நாட்சக்கரம் நடாத்தி முன்னாள்
வெற்றிக் கொடியொடு வீரமும் ஓங்கக்
கொற்றக் குடைக்கீழ் கொடைக்கொடி ஏந்தி பெற்றக்கோன் -15
திருப்புக லூர்தென் திருவனைய புகழ்நிறை
புவன முழுதுடை யாளொடும் வீர
சிம்மா சனத்து வீற்றிருந் தருளின
கோவிராச கேசரி வன்ம ரான
உடையார் ஸரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு
6 - ஆவது....
2.8.3 (43)
-
ஸ்வஸ்திஸரீ
புகழ் சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியில்
பொன்னேமி யளவும் தன்னேமி நடப்ப
விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச்
சக்கரக் கோட்டத்து விக்ரமத் தொழிலாற்
புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம் - 5
வயிா கரத்து வாரி அயிர்முனைக்
குந்தள வரசர் தன்தள மிரிய
வாளுரை கழித்துத் தோள்வலி காட்டிப்
போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி
வடதிசை வாகை சூடித் தென்றிசை - 10
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
புவிமகள் தனிமையும் தவிர்த்துப் புனிதப்
பொன்னி யாடை நன்னிலப் பாவையின்
திருமணி மகுட முரிமையிற் சூடித்
தன்னடி யிரண்டும் தடமுடி யாகத் - 15
தொன்னில வேந்தர் சூட முன்னை
மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறும் செல்ல வெண்குடை
இருநில வளாக மெங்கணும் தனாது
திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி - 20
மேருவிற் புலிவிளை யாட வார்கடற்
தீவாந் தரத்துப் பூபாலர் திறைவிடு
கலஞ்சொரி களிருமுறை நிற்ப விலங்கிய
தென்னவன் கருந்தலை பருத்தலைத் திடத்தன்
பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப இந்நாள் - 25
பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னும்
சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை
வில்லெதிர் கோடா விக்கலன் கல்லதர்
நங்கிலி துடங்கி மணலூர் நடுவெனத்
துங்க பத்திரை யளவும் எங்ஙனும் - 30
அளத்தியில் இட்ட களிற்றினது ஈட்டமும்
பட்டவெம் பரியும் விட்டதன் மானமும்
கூறின வீரமும் கிடப்ப வேறின
மலைகளு முதுகு நௌிப்ப இழிந்த
நதிகளும் சுழன்றுடைந் தோட விழுந்த - 35
கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத்
தந்தா ளுகந்து தானும் தானையும்
பன்னா ளிட்ட பலபல முதுகும்
பயந்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும்
பழியிகந்து கொடுத்த புகழின் செல்வியும் - 40
வாளார் ஒண்கண் மடந்தையர் ஈட்டமும்
மீளாது கொடுத்த வெங்கரி நிரையும்
கங்கமண் டலமும் சிங்கண மென்னும்
பாணி யிரண்டும் ஒருவிசைக் கைக்கொண்டு
ஈண்டிய புகழொடு பாண்டி மண்டலங்- - 45
கொள்ளத் திருவுளத் தடைத்து வெள்ளம்
வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும்
தந்திர வாரியும் உடைத்தாய் வந்து
வடகடல் தென்கடல் படர்வது போலத்
தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர் - 50
ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
வெரிநளித் தோடி அரணனெனப் புக்க
காடறத் துடைத்து நாடடிப் படுத்து
மற்றவர் தம்மை வனசரர் திரியும்
பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற - 55
விசையத் தம்பந் திசைதொறும் நிறுத்தி
முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு
மத்தவெங் கரிபடு மய்யச் சையமும்
கன்னியுங் கைக்கொண்டு புனிதத் தென்னாட்டு
எல்லை காட்டிக் குடமலை நாட்டுள்ள - 60
சாவே ரெல்லாந் தனிவிசும் பேற
மாவே றியதன் மருதனித் தலைவரைக்
குறுகலர் குலையக் கோட்டா றுட்பட
நெறிதொறும் நிலைகளிட்டு அருளித் திறல்கொள்
வீரசிம் மாசனந் திரியவிட் டருளிப் - 65
வடதிசை வேங்கை மண்டலங் கடந்து
தாங்கலர் கலிங்கமும் கனல்எரி பரப்ப
விலங்கல்போல் விலங்கிய வேந்தர் விட்டவெங்
களிறொடு பட்டுமுன் புரள்பொரு கோபத்
தொடுபோர் முகமதிர் வருகோ மட்டையன் - 70
மாதவன் எதிர்பட எங்கராயன் இகலவர்
எச்சணன் மாப்றளா(ழா) மதகரி இராசணன்
தண்டுபதி ஆகிய தலைச்சே னாபதி
மண்டலி தாமய னெண்பர்த் திசைமுகன்
பொத்தயன் கேத்தணன் செருச்சே னாபரி - 75
என்றிவர் அனைவரும் வென்றவேழத் தொடுபட்டு
மற்றவர் கருந்தலை யோடு வெண்ணிணங்
கழுகொடு பருந்தலை எங்கணும் பரப்ப
உயர்த்துக் கருங்கட லடையத் தராதரம்
(தெரிந்து) திரந்து கலிங்க மேழும்கைக் கொண்டு - 80
பொங்கொளி யாரமும் திருப்புயத் தலங்கலும்
வீரமும் தியாகமும் விளங்கப் பார்மிசைச்
சிவனிடத் துமையெனத் தியாக வல்லி
உலகு உடையா ளிருப்ப அவளுடன்
கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலதம் - 85
ஏழிசை வல்லபி ஏழுலக முடையாள்
வாழிகை மலர்ந்தினி திருப்ப வூழியும்
திருமா லாகத்துப் பிரியா தென்றும்
திருமக ளிருந்தென வீரசிம்மா சனத்து
உலகமுடை யாளொடு வீற்றிருந் தருளிய - 90
கோவிராச கேசரி வன்ம ரான
திரிபுவன சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க
சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத் தைந்தாவது
துலாஞாயிற்று பூர்வபட்சத்து வியாழக்கிழமையும்
சப்தமியு பெற்ற உத்திரட்டாதி நாள்..
2.8.4 (44)
-
ஸ்வஸ்திஸரீ
புகழ்மாது விளங்க சயமாது விரும்ப
நிலமகள் நிலவ மலர்மகள் புணர
உரிைாமயிற் சிறந்த மணிமுடி சூடி
மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர
விக்கலன் சிங்கணன் மேல்கடல் பாய - 5
ஏனை மன்னவர் இரியலுற் றிழிதரத்
திக்கனைத் துந்தன் சக்கரம் நடாத்தி
விஜயாபி ஷேகம் பண்ணி அருளிய
செம்பொன் வீர சிம்மா சனத்து
அவனி முழுதுடை யாளொடும் வீற்றிருந் - 10
தருளிய கோவிராச கேசரி பன்மரான
சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு
யாண்டு நாற்பத்தாறாவது.
2.8.5 (45)
-
ஸ்வஸ்திஸரீ
பூமியும் திருவும் தாமெய்ப் புணர
விக்கிர மத்தால் சக்கரம் நடாத்தி
விசயாபி ஷேகம் பண்ணி வீர
சிம்மா சனத்துப் புவன முழுதுடை
யாளொடும் வீற்றிருந் தருளின - 5
கோவிராச கேசரி வன்ம ரான
உடையார் ஸரீஇராசேந்திர சோழ
தேவர்க்கு யாண்டு 4 ஆவது..
2.8.6 (46)
-
ஸ்வஸ்தி ஸரீ
பூமன்னு பாவை காமுற்று முயங்க
இருநிலக் கிழத்தியைத் திருமணம் புணர்ந்து
(கலைமுயற் செல்வி முதன்மைப்)
போர்மகள் காப்ப சீர்மகள் போற்ற
வானிலப் புரவி இரவிகுலம் விளங்க
பாற்கடல் தெய்வம் பள்ளி நீங்கி - 5
நாற்கடல் வட்ட நாடொறுந் திருத்தி
எண்டிசை யானை தண்டுடன் நிற்வக்
காவல் தெய்வம் ஏவல் கேட்ப
கலிப்பகை ஓட்டிப் புலிக்கொடி எடுத்துத்
தென்னவர் கேரளர் தெலுங்கர் சிங்களர் - 10
கன்னடர் விலாடர் கலிங்கர் முதலாய்க்
கொற்றவர் வந்து குடிமை செய்ய
ஒற்றை வெண்குடை உலகு கவிப்ப dd>ஊழிப் பல்கொடி ஆழி நடாத்திச்
செம்பொன் வீர சிம்மா சனத்துத் - 15
திரிபுவன முழுதுடை யாளொடும் வீற்றிருந்
தருளிய கோவிராச கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ
தேவர்க்கு யாண்டு 2 வது..
2.9.1 (47)
-
ஸ்வஸ்திஸரீ
பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தரப்
பாமாலை மலிந்த பருமணித் திரள்புயத்து
இருநில மடந்தையொடு சயமக ளிருப்பத்
தன்றுணை மார்பந் தனதெனப் பெற்றுத்
திருமகள் ஓருதனி யிருப்பக் கலைமகள் - 5
சொற்றிறம் புணர்ந்த கற்பின ளாகி
விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொறும்
திகிரியொடு செங்கோல் நடப்ப அகில
புவனமும் கவிப்பதோர் புதுமதி போல
வெண்குடை மீமிசை நிற்பக் கருங்கலி - 10
யொளித்துவன் பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத்
தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவும்
கலிங்க மேழும் கனலெரி பருகவும்
வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்
கலிங்க மேழும் கனலெரி பரப்பி - 15
ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி
வேங்கை மண்டலத்து ஆங்கினி திருந்து
வடதிசை வாகை சூடித் தென்றிசைத்
தருமமும் தவமும் தானமுந் தழைப்ப
வேதமும் மெய்ம்மையும் ஆதியுகம் போலத் - 20
தலைத்தலை சிறப்பவந் தருளி வெலற்கரும்
போர்ப்புலி ஆணை பார்த்திவர் சூட
திருமணி மகுடம் முறைமையிற் சூடி
மன்னுயிர்க் கெல்லாம் இன்னுயிர்த் தாய்போல்
தண்ணளி பரப்பித் தனித்தனி புரந்து - 25
மண்முழுதுங் களிப்ப மணிநா வொடுங்க
கோயில் கொற்ற வாயில் புறத்துத்தன்
விசயமும் புகழு மேன்மே லோங்க
ஊழி ஊழியிம் மாநிலங் காக்கத்
திருமணிப் பொற்றோட்டு எழுதுபத் தாண்டு - 30
வருமுறை முன்னே மன்னவர் சுமந்து
திறைநிறைத்துச் சொரிந்த செம்பொற் குவையாற்
தன்குல நாயகன் தாண்டவம் புரியுஞ்
செம்பொன்அம் பலஞ்சூழ் திருமா ளிகையும்
கோபுர வாயிற் கூடசா லைகளும் - 35
உலகுவலங் கொண்ட ஓளிவிளங்கு நேமிக்
குலவரை உதயக் குன்றமொடு நின்றெனப்
பசும்பொன் வேய்ந்த பனிவளர்ப் பீடமும்
விசும்பொளி தழைப்ப விளங்குபொன் வேய்ந்து
இருநிலந் தழைப்ப விளங்குபொன் வேய்ந்து - 40
பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும்
உயர்பூரட் டாதி உத்திரட் டாதியில்
அம்பலம் நிறைந்த அற்புதக் கூத்தர்
இம்பர் வாழ்வு எழுந்தருளு தற்குத்
திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து - 45
பருதிரள் முத்தின் பயில்வடம் பரப்பி
நிறைமணி மாளிகை நெடுந்திரு வீதிதன்
திருவளர் பெயரால் செய்துசமைத் தருளிப்
பைம்பொற் குவித்த பரிகலம் முதலாற்
செம்பொற் கற்பகத் தொடுபரிச் சின்னமும் - 50
அளவில் லாதன ஒளிபெற வமைத்துப்
பத்தா மாண்டிற் சித்திரைத் திங்கள்
அத்தம் பெற்ற ஆதித்த வாரத்துத்
திருவளர் மதியின் திரியோதசிப் பக்கத்து
இன்னன பலவும் இனிதுசமைத் தருளித் - 55
தன்னொரு குடைநிழற் தலமுழுதுந் தழைப்பச்
செழியர்வெஞ் சுரம்புகச் சேரலர் கடல்புக
அழிதரு சிங்களர் அஞ்சிநெஞ் சலமரக்
கங்கர் திறையிடக் கன்னடர் வெந்நிடக்
கொங்கர் ஒதுங்கக் கொங்கணர் சாயமற்று - 60
எத்திசை மன்னரும் தத்தமக்கு அரணெனத்
திருமலர்ச் சேவடி உரிமையில் இறைஞ்சத்
தொல்லையே ழுலகுந் தொழுதெழத் தோன்றிய
முல்லை வாணகை முக்கோக் கிழானடி
உமையொடுஞ் சங்கரன் இமையச் சிமையத்து - 65
இருந்தெனப் பொருந்தி யுடனினி திருப்ப
ஆங்கவன் மகிழும் கங்கையொப் பாகிய
தெரிவையர் திலதம் தியாக பதாகை
புரிகுழல் மடப்பிடி புனிதகுண வனிதை
திருபுவன முழுதுடையா ளிவன்திரு வுள்ளத்து - 70
அருள்முழு துடையா ளெனவுட னிருப்பச்
ஊழியந் நெடுமால் ஆகத்துப் பொருந்தி
பிரியா தென்றுந் திருமகள் இருந்தென
மாதர் மடமயில் பூதலத் தருந்ததி
அரணியல் கற்பில் தரணிமுழு துடையாள் - 75
இவன்திரு மார்வத்து அருளொடும் இருப்பச்
செம்பொன் வீர சிம்மா சனத்து
முக்கோக்கிழா னடிகளோடும் வீற்றிருந் தருளிய
கோப்பர கேசரி வன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீவிக்கிரம சோழ - 80
தேவர்க்கு யாண்டு ஐஞ்சாவது.
2.9.2 (48)
-
ஸ்வஸ்திஸரீ
பூமாது புணரப் புவிமாது வளர
நாமாது விளங்க ஜயமாது விரும்பத்
தன்னிரு பதமலர் மன்னவர் சூட
மன்னிய உரிமையில் மணிமுடி சூடிச்
செங்கோல் சென்று திசைதொறும் வளர்ப்ப - 5
வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக்
கலிங்கம் இரியக் கடல்மலை நடாத்தி
வலங்கொள் ஆழி வரைஊழி நடாத்தி
இருசுடர் அளவும் ஒருகுடை நிழற்கீழ்
முக்கோக் கிழான்அடிக ளோடும் செம்பொன் - 10
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கோப்பர கேசரி பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் உடையார் ஸரீ விக்கிரம
சோழ தேவர்க்கு யாண்டு 10-ஆவது.
2.9.3 (49)
-
ஸ்வஸ்திஸரீ
கோக்கவி மூர்க்க ஸரீவிக்கிரம சோழ தேவர்க்குத்
திருவெழுத் திட்டுச் செங்கோல் ஓச்சி
வெள்ளி வெண்குடை மிளிர ஏந்தி
நாடுவளம் படுத்து நையுங்குடி ஓம்பி
ஆறில்ஓன்று கொண்டு அல்லவை கடிந்து - 5 dd>கோவீற் றிருந்து குடிபுறங் காத்து
பெற்ற குழவிக்கு உற்றநற் றாய்போல
திருமிகு சிறப்பில் செய்யா நின்ற
திருநல்லி யாண்டு நாற்பத்தொன் றாவது<
2.10.1 (50)
-
ஸ்வஸ்திஸரீ
பூமருவிய புவியேழும் புவிசூழ்ந்த பொருப்பேழுந்தன்
நிழல்மருவிய தனிவெண்குடை நீடூழிகள் நிலாப்பரப்பக்
கோடாத தனிச்செங்கோல் கொள்கைசான்ற அறுசமயமும்
வாடாதாவைம் பூதங்களும் மறைநான்கும் முத்தமிழும்
இருபிறப்பினோ டொருமுதலாய் வருநாணமும் களிக்கறியும் - 5
பருவமாரியும் பலவிளைவும் பழுதின்றி முழுதுமாகக்
கடலிடையெழு சுடரன்ன கதனன்ப ரவிரொளி
அடலாழிமா நிலத்துக்கண் டகரெனும் வல்லிருள்
முதலற வெற்ிந்திட் டெய்திமன் னவர்க்கு
இடியும் ஒத்துஎத் திசையிலும் மற்றுலாவ - 10
பொருபுலியும் புல்வாயும் ஒருதுறைநீ ருடண்ண
உள்வெறுவுற் றுடல்நடுங்கும் புள்ளுமாவு முடன்புணர்ந்து
கடுங்குலைஞர் குரம்பைநிழல் இடும்பையஒன்றி இனிதுவகை
மறந்தலைநின் றொருவரொரு வரையிறந்து அலையுறாது
இனிதொழுக பெரும்புலவரு மருங்கவிஞரு நாப்புறுநல் - 15
இசைப்பாணரும் கோடியருங் குயிலுவரும் நாடுநாடுசென்
றிரவலராய் இடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ்படைப்பச்
செல்லென்னத் தென்னவருஞ் சிலையானைச் சேரலரு
மாவியானைக் காலிங்கரும் வராகக்கொடி வடவிரட்டரும்
வேழிக்கொடி விறல்வேந்தரும் வீணைக்கொடிச் சிங்களரும் - 20
பாழிப்படை பரமன்னரும் மணிநிறை வொடுகழலைப்
பொன்னார்தந்த தனித்தண்டில் தன்மப்புலி தழைத்தோங்க
நாமாது சிறந்தோங்க திருமுழுது நயந்துபுல்கப்
பூமாது திருமார்பிற் பொலிவெய்தி வீற்றிருப்பத்
திருமடந்தையெண் திசைவிளங்கத் திருப்புயமெனும் பொருப்பிரண்டினும் - 25
போர்மடந்தையும் நிலமடந்தையும் பிரியாது புணர்ந்திருப்பப்
பெருநாள் முதற்கும் பிறப்புடன்முன் மூன்றுலகு
ஏத்தவரு நாயகி திருமடந்தையும் படிதோற்கு
மாதர் மஞ்ஞையும்
பருதிகுல தனிவிளங்கப் பாரிலெழு சந்திரோதயம் - 30
திகுவாணை உடனாணைத் திசைநடாத்தும் தியாகவல்லி
கலக வெங்கதிர் மணிமுடி கவித்துப்
புவனநறுந் துணைப்பூங்கொம்பு புவனமுழு துடையாளும்
புகுந்தனைய பெருங்கற்பில் மலாடகுல மணிவிளக்குத்
திருந்துநித்தில(த) மணிமுறுவல் தெரிவைமுக்கோக் கிழானடிகளும் - 35
ஊழியூழி பிரியாது வாழிமணம் புணர்ந்திருப்பச்
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
கோவிராச கேசரி பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க சோழ - 40
தேவர்க்கு யாண்டு 2-ஆவது தனு ஞாயிற்று
அமரபட்சத்து நவமியும் திங்கட்கிழமையும்
பெற்ற அத்தத்தினாள்...
2.10.2 (51)
-
ஸ்வஸ்திஸரீ
பூமன்னு பதுமம் பூத்த ஏழுலகும்
தாமுன்செய் தவத்தால் பருதிவழித் தோன்றி
நெடுமா லிவனென நெடுமுடி சுடி
இருநில மகளை உரிமையிற் புணர்ந்து
திருமகள் பணைமுலைச் செஞ்சாந் தளைந்து - 5
பருவரை மார்பம் பனிவரை நிகர்ப்பச்
செயமகள் செழுந்தண் சந்தனச் சுவட்டால்
புயமிரு கயிலைப் பொருப்பெனத் தோன்ற
நாமகள் தானமும் கோமகள் செவ்வாய்ப்
பவளச் சேயோளி படைத்தனன் யானெனத் - 10
தவள நன்நிறந் தனித்துடை யோனெனப்
புகழ்மகள் சிந்தை மகிழும்நன் னாளிலும்
ஓருகுடை நிலவும் பொருபடைத் திகிரி
வெயிலினுங் கருங்கலி இருளினைத் துரப்ப
நீடுபல் லூழி ஏழ்கடல் புறத்திலும் - 15
கோடாச் செந்தனிக் கோலினி துலாவ
மீனமும் சிலையும் சிதைந்துவா னுயரப்
பொன்நெடு மேருவில் புலிவீற் றிருப்ப
உம்பரி யானை ஓரெட் டினுக்குந்
தம்ப மென்னத் தனித்தனி திசைதொறும் - 20
விசையத் தம்பம் நிற்பப் பசிபகை
ஆதி யானது தீது நீங்கி
மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க
மாதவர் தவமும் மங்கையர் கற்பும்
ஆதி யந்தணர் ஆகுதிச் சுடரும் - 25
மீதெழு கொண்டல் விசும்புதண் புனலும்
மேதினி வளனும் சாதி ஓழுக்கமும்
நீதி யறமும் பிறழாது நிகழப்
பாவும் பழனப் பரப்பும் பணைக்கை
மாவு மல்லது வன்றளைப் படுதல் - 30
கனவிலும் கண்டாற் கரிதென வருந்தி
புடையிலும் பல்வேறு புள்ளின மல்லது
சிறையெனப் படுதல் ஈன்றி நிறைபெருஞ்
செல்வமோ டவனிவாழ் பல்லவர் தெலுங்கர்
மாளவர் கலிங்கர் கோசலர் கன்னடர் - 35
கடாரர் தென்னவர் கேரளர் சிங்கணர்
கொங்கணர் சேதியர் திரிகத்தர் வங்கர்
அங்கர் வத்தவர் அவந்தியர் மத்திரர்
கங்கர் சோனகர் கைகயர் சீனரென்று
அறைகழல் வேந்தரும் பல்லாணை சூழ - 40
முறைமையி லுரிந்த திறைகொணர்ந் திறைஞ்சவும்
அம்பொன் மலர்க்கொடி செம்பியன் கிழானடி
ஓருமருங் குடனமர்ந் திருப்ப அருள்புரி
சிமையப் பொற்கோட் டிமையப் பாவையும்
சிவனருள் பெற்று புவன முழுதுடை - 45
யாளிவள் திருமணி மார்வத் தருள்முழு
துடையா ளெனவுட னிருப்பச் செம்பொன்
வீரசிம்மா சனத்து புவன முழுதுடை
யாளொடும் வீற்றிருந் தருளிய
கோவிராச கேசரி பன்ம ரான - 50
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க
சோழ தேவர்க்கு யாண்டு 7 ஆவது
2.10.3 (52)
-
ஸ்வஸ்திஸரீ
பூமேவு வளர்திருப் பொன்மார்பு புணர
நாமேவு கலைமகள் நலம்பெரிது சிறப்ப
விசைய மாமகள் வெல்புயத் திருப்ப
இசையின் செல்வி எண்டிசை வளர்ப
நிருபர்வந் திறைஞ்ச நீணில மடந்தையைத் - 5
திருமணம் புணர்ந்து திருவளர் திருமா
மணிமுடி கவித்தென மணிமுடி சூடி
மல்லை ஞாலத்துப் பல்லுயிர்க் கெல்லாம்
எல்லையில் இன்பம் இயல்பினில் எய்த
வெண்குடை நிழற்றச் செங்கோல் ஓச்சி - 10
வாழிபல் லூழி ஆழி நடப்பச்
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவன முழுதுடை யாளொடும் வீற்றிருந்
தருளிய கோவிராசகேசரி வன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க - 15
சோழ தேவர்க்கு யாண்டு
ஏழாவதின் எதிராவது
2.11.1 (53)
-
ஸ்வஸ்திஸரீ
பூமருவிய திருமாதும் புவிமாதும் செயமாதும்
நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்துபுல்க
அருமறை விதிநெறி அனைத்துந் தழைப்ப
வருமுறை யுரிமை மணிமுடி சுடித்
திங்கள் வெண்குடைத் திசைக்களிறு எட்டுந் - 5
தங்கு தனிக்கூடந் தானென விளங்கக்
கருங்கலி படிமிசைச் செங்கோல் துறப்பப்
பொருவலி யாழி புவிவளர்த் துடன்வர
வில்லவர் இரட்டர் மீனவர் சிங்களர்
பல்லவர் தெலிங்கர் பார்த்திவர் பணிய - 10
எண்ணருங் கற்பில் மண்ணகம் புணர்ந்து
செம்பொன் வீர சிம்மா சனத்து
உலகுடை முக்கோக் கிழானடிக ளோடும்
வீற்றிருந் தருளிய கோப்பர கேசரி
வன்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் - 15
ஸரீ இராச ராச தேவர்க்கு யாண்டு பதினைந்தாவது
தை மாசத்துப் பூர்வபட்சத்து புனர்பூசமும்
சதுர்த்தசியும் வியாழக் கிழமையுமான நாள்........
2.11.2 (54)
-
ஸ்வஸ்திஸரீ
பூமருவிய பெருப்பேழும் புனைநித்தி லத்தாம
நெடுங்குடை பொழிந்த தவளாவெண்ணிலாக் குளிர்பொதியச்
சுடர்சக்கர வெற்பிற்றன் நடைச்சக்கரம் வெயிலெறிப்பச்
சினப்புலியுஞ் செங்கோலும் அனைத்துயிர்க்குங் காவல்பூணப்
பணியைணுமிசைப் பரஞ்சோதி பாற்கடல்நின் றெழுந்தருளி - 5
மணிநெடுமுடி கவித்தானென மண்மடந்தையைக் கைப்பிடித்து
மலர்மடந்தை மணியார வரைமார்பிற் குடிவாழ
புலமடந்தை கொழுநனாகிப் போர்மடந்தையை மணம்புணர்ந்து
பருதிமுதற் குலம்விளங்கச் சுருதிகள்.......னவே ரருள்வாய்ப்ப
விழுந்தஅரி சமயத்து அள....எடுத் தாதியுகம் - 10
கொழுந்துவிட்டுத் தழைத்தோங்கக் ேகுாமாதறங் குளிர்தூங்க
மாரிவாய்த்து வளஞ்சுரக்கத் தாரணியோர் பிணிநீங்க
நல்லோர்தங் கற்புயர நான்மறையோர் துறைவளர
எல்லோருந் தனித்தனியே வாழ்ந்தனம்யாம் எனமகிழ்ந்து
ஓருவருடன் ஓருவர்க்கும் ஓன்றினுடன் ஓன்றுக்கும் - 15
வருபகைய கத்தின்றி விழைந்துகாத லுடன்சேர
இந்தி ரன்முதற் திசாபாலர் எண்மரும்ஓரு வடிவாகி
வந்தபடி யெனநின்று மனுவாணை தனிநடாத்திய
படியானையே பிணிப்புண்பன வடிமணிச்சிலம்பே யரற்றுவன
செல்லோடையே கலக்குண்பன வருபுனலே சிறைப்படுவன - 20
மாவே வடுப்படுவன மாமலரே கடியவாயின
காவுகளே கொடியவாயின கள்ளுண்பன வண்டுகளே
பொய்யுடையன வரைவேயே போர்மலைவன எழுகனியே
மைய்யுடையன நெடுவரையே மருளுடையன இளமான்களே
கயற்குலமே பிறழ்ந்தொழுகும் கைத்தாயரே கடிந்தொறுப்பார் - 25
இயற்புலவரே பொருள்வைப்பார் இசைப்பாணரே கூடஞ்செய்வார்
என்று கூறி இவன்காக்கும் திருநாட்டி னியல்இதுவென
நின்றுகாவல் நெறிபூண்டு நெறியல்லது நினையாது
தந்தையில்லோர் தந்தையாகியுந் தாயரில்லோர் தாயராகியும்
மைந்தரில்லொரு மைந்தரகியும் மன்னுயிர்கட் குயிராகியும் - 30
விழிபெற்ற பயனென்னவும் மெய்பெற்ற அருளென்னவும்
மொழிபெற்ற பொருளென்னவும் முகம்பெற்ற பனுவலென்னவும்
எத்துறைக்கும் இறைவனென்னவும் யாஞ்செய்.......
2.12.1 (55)
-
ஸ்வஸ்திஸரீ
கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரும்
அடல்சூழ்ந்த போர்மாதரும் சீர்மாதரும் அமர்ந்துவாழ
நாற்கடல்சூழ் புவிஏழும் பாற்கடல் புகழ்பரப்ப
ஆதியுகம் ஆமென்னச் சோதிமுடி புனைந்தருளி
அறுசமயமும் ஐம்பூதமும் நெறிநின்று புவிகாக்கத் - 5
தென்னவரும் சேரலரும் தெலிங்கர்களும் கன்னடரும்
சிங்களரும் கொங்கணரும் கலிங்கர்களும் விராடர்களும்
பல்லவர்கள் முதலாய பார்மன்னர் வந்திறைஞ்ச
கொற்றவர் வந்து குடிமை செய்ய
ஒற்றை வெண்குடை உலகுதனி கவிப்ப - 10
வாழி பல்லூழி ஆழி நடாத்திச்
செம்பொன் வீர சிம்மா சனத்து
உலகுடை முக்கோக் கிழானடிக ளோடும்
வீற்றிருந் தருளிய கோவிராசகேசரி பன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள்
மதுரையும் ஈழமும் கொண்டருளின - 15
ஸரீ ராசாதி ராச தேவர்க்கு யாண்டு 4 ஆவது
நாள் 323 இனால்..
2.12.2 (56)
-
ஸ்வஸ்திஸரீ
பூமருவிய திசைமுகத்தோன் படைத்தபெரும் புவிவிளங்க
தேமருவிய பசுந்துளவித் திருநெடுமால் இவனென்ன
நீராழி புடைத்து தயகுலத் தவதரித்து
கருங்கலியின் இருளொதுங்கக் கதிர்வெண்குடை நிலாவெறிப்ப
வருங்கதிரின் வெயில்விரிக்கும் மணிமகுடம் புனைந்தருளி - 5
மண்களிப்பவும் மனங்களிப்பவும் மலர்மடந்தையர் முதல்மங்கையர்
கண்களிப்பவும் தண்ணளிப்பெருங் கருணையால்முதற் காவல்பூண்டு
செம்பொன் வீர சிம்மா சனத்து
புவன முழுதுடை யாளொடும் வீற்றிருந்
தருளிய கோவிராச கேசரி வன்மரான - 10
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ இராசாதிராச
தேவர்க்கு யாண்டு 5-ஆவது..........
2.12.3 (57)
-
ஸ்வஸ்திஸரீ
கடல்சூழ்ந்த பாரேழும் திசையெட்டும் காத்துநின்று
தடமாமதி எனவிளங்கித் தரளவெண்குடை நிலாவெறிப்ப
ஆழிவரை வரப்பாக அடற்கலியைப் பிலித்தொதுக்கி
ஊழிதொறும் புகழோங்க ஓராழி வெயில்பரப்பக்
கயல்சிலையில் சால்விளைய களிறாரெயில் கரங்குவிப்பப் - 5
புயலாழியிற் போற்றிசெய்யப் புவிமேருவில் வீற்றிருப்பத்
திருவாணையுஞ் செங்கோலும் திசையெட்டுங் காவல்கொள்ளப்
பெருவாழ்வுபெற் றுயிரனைத்தும் பிழை...த்த...க்கவரச்
சமையமாறுந் தலையெடுப்பத் தருமமும்அரு மறையுமோங்க
அமைவில்லா மனுவொழுக்கம் ஆதியாம்படி நிலைநிற்க - 10
ஓர்ப்பினுந்தம் முறுகனவினும் ஒன்றோடொன்று பகையின்றிப்
போர்ப்புலியும் புல்வாயும் புக்கொருதுறை நீருண்ணப்
பொன்னிநதியும் பொய்யாது புயலும்புனல் கரவாது
மன்னியநதி வளம்பெருக்க விளைவயலின் வளம்சுரக்கப்
போகபூமி யிதுவென்னப் போகமெல்லாம் வந்தீண்டி - 15
ஏகுசூைாணு அருசருீாமு எழுபொழில்களும் பெற்தெனப்
பாற்கடலிற் கார்க்கடல் படிவாழ முடிசூடி
ஆர்த்தவம ராபிஷேகம் செய்திலரசர் திளைத்தாட
எவ்வுலகமும் இருள்நீங்க வந்தகோமான் இவனென்று
கவ்வைதீரக் கலிகாலத்து ஆதிகாலங் காட்டினனென - 20
இவன்காக்கும் புவியனைத்தும் யாவையும்நினைந் தீன்றருளி
அவன்காக்கும் எனஅகில லோகங்களும் அடியடையக்
குலைபடுவன தெங்குகளே கோட்படுவன இளங்கமுகே
அலைபடுவன நீர்நிலையே அதிர்படுவன இடியேறே
தளம்படுவன ஓர்வரம்பே தடைபடுவன கோபுரமே - 25
உளம்படுவன சூன்மகளிரே ஒறுப்புண்பன மதகளிறே
தடுப்புண்பன கொட்டகமே.......
கள்ளுண்பன பூங்கொடியே கறைபடுவது நிறைமதியே
பட்டுண்பன அணியல்குலே பரிந்தாற்றுவ பரியாகமே
குறைபடுவ குழற்சுருளே குழைவில்லன மணிக்கொங்கையே - 30
மறைபடுவன சூழ்காஞ்சியே மால்கொள்வன வணங்கிடையே
என்றுபாடிப் பார்வேந்தர் இளங்களிற்றின் மேல்போகச்
சென்றிறைஞ்சிப் பார்வேந்தர் திருவாசற் புறம்நிற்பச்
சேரலருந் தென்னவரும் சிங்களரும் கொங்கணரும்
பேரரசு பெறவேண்டிப் பிரியாது சேவிப்பத் - 35
தம்மரசு தாம்பெற்றுத் தம்முடனே முடிசூடி
அம்மருங்குந் தேவியர்கள் அணிமங்கலம் பெற்றருள
வாளரசர் தலைகாக்க ஆதவகுல மரபில்வந்த
சோழகுல மணிவிளக்குச் சோழகுல மாணிக்கம்
மடநாண்முதற் கணநான்கின் வடிவுகொண்டு வளவசேகரன் - 40
உடனாணையுந் திருவாணையும் உடன்செல்ல முடிகவித்தாள்
மண்ணரசர் வந்திறைஞ்ச மகுடம்புனை வளவனுடன்
பெண்ணரசும் பெருந்தாயமும் பெற்றருளும் பெண்பெருமாள்
உறையூரும் பேருரகையும் உதகையுமது ராபுரியும்
முறைமுறை யாண்டருளி முளரிநகர் துறந்தவன்னம் - 45
பொன்னாசனஞ் சிங்கவணை பொலங்கற்பகப் பூஞ்சோலை
முன்னேவல் நித்தல்முறை முறையேபெறுமுாலப்பெருமாள்
அளகநுதற் கயல்நயனத் தம்பொற்குழைக் கொம்பென்ன
உளமகிழவந் தருளியஉல குடையமுக்கோக் கிழானடியுடன்
வாழிவாழி மணம்புணர்ந்து ஊழிவுழி பலவேங்கிச் - 50
செம்பொன் வீர சிம்மா சனத்து
லகுடை முக்கோக் கிழானடிக ளோடும்
வீற்றிருந் தருளிய கோவிராச கேசரி
வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீராசாதிராச
தேவர்க்கு யாண்டு 10 ஆவது மீன ஞாயிற்றுப் பூர்வபட்சத்துத் - 55
திரியோதசியும் செவ்வாய்க் கிழமையும்பெற்ற மகத்துநாள்.
2.13.1 (58)
-
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்
செயல்வாய்த்துத் திருமகளும் செயமகளும் சிறந்துவாழ
வெண்மதிபோற் குடைவிளங்க வேல்வேந்தர் அடிவணங்க
மண்மடந்தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச்
சக்கரமும் செங்கோலும் திக்கனைத்தும் செலநடப்பக் - 5
கற்பகாலம் புவிகாக்கப் பொற்பமைந்த முடிபுனைந்து
வீரபாண்டியன் மகன்பட வெழுகம்பட மறப்படைபடச்
சிங்களப்படை மூக்கறுப்புண்டு அலைகடல்புக வீரபாண்டியனை
முதுகிடும் படிதாக்கி மதுரையும் அரசும்நாடும் - 10
அடைந்த பாண்டியற்கு அளித்தருளி மெய்ம்மலர்ந்த
வீரக் கொடியுடன் தியாகக் கொடியெடுத்துச்
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவன முழுதுடை யாளொடும் வீற்றிருந்
தருளிய கோப்பர கேசரி வன்மரான - 15
ஸரீ குலோத்துங்க தேவர்க்கு யாண்டு 9 நாள் 88......
2.13.2 (59)
-
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாத நான்மறையின்
செயல்வாய்ப்பத் திருமகளும் ஜயமகளும் சிறந்துவாழ
வெண்மதிபோற் குடைவிளங்க வேல்வேந்தர் அடிவணங்க
மண்மடந்தை மணங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச்
சக்கரமும் செங்கோலும் திக்கனைத்துஞ் செலநடக்கக் - 5
கற்பகாலம் புவிகாக்கப் பொற்பமைந்த முடிபுனைந்து
வனவேங்கையும் மடமானும் வந்தொருதுறை நீருண்ணக்
கொன்வேங்கைக் கொடியுயர்த்திக் கொற்றவர்தம் கொடிபணியச்
சுங்கமில்லாச் சோணாடெங்குஞ் சோற்றுமலை கண்டருளித்
தென்னவன்வந் தடிபணியச் சிங்களவன் தலைமலையாற் - 10
தென்னீழங் கொள்கவென்னத் திரைகடலை அடைக்கவென்ன
மன்னுதிரு வாற்படையால் மலைகொண்டு வழிபடுத்தி
(தென்)இலங்கையர்கோன் தலையரிந்த திருநெடுமால் இவனென்னத்
தென்னவனைத் தலையரிந்து தேசமெல்லாம் இருளகற்றித்
தகமிகு தனுவதனால் அரணுடைப் படைவிழுத்திச் - 15
செங்கோலும் புலிக்கொடியும் தேசமெல்லாம் செறுநடாத்தி
பொன்னுமுத்தும் புகழ்மதுரையும் புக்கனைத்துங் கொண்டருளித்
திக்கானை யிருநான்குஞ் சயஞ்செய்து கொடிவாங்கிக்
கன்னடருங் காலிங்கருந் தென்னவருஞ் சேரலருஞ்
சிங்களரும் முதலாய (மன்னவர்கள்) திறைகொணர்ந்து சேவிப்பப் - 20
பொன்னிசூழ் நாடெங்கும் போர்மகளிர் காவலரும்
நாற்திசையுங் காவல்பூண்டு செல்லருநெடுங் கொடியாளத்
திருக்கயிலைச் சிவனருளால் மேவலரைச் சதமடக்கி
வெற்றிமிகு வேந்தன்போர் மன்னவர்தம் முடிபுனைந்து
செம்பொன் வீர சிம்மா சனத்துப் - 25
புவன முழுதுடை யாளொடும் வீற்றிருந்
தருளிய கோப்பர கேசரி வன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன்
முடித்தலையுங் கொண்டருளிய ஸரீ குலோத்துங்க
சோழ தேவர்க்கு யாண்டு 18ஆவது.
2.13.3 (60)
-
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து மண்வளரப் புலியானையும் சக்கரமும்
செயல்வாய்த்த மனுநூலும் செங்கோலும் திசைநடக்கக்
கொற்றவன்தன் திருமகிழ கொடுங்கலிகெடக் குளிர்வெண்குடைக்
கற்பகாலம் படிகவிக்கக் கதிரவன்குல முடிகவித்துத்
தனியாைணு விட்டாண்மை செய்துவட மன்னவரைத்- 5
திறைப்படுத்தி முனிவாறக் கச்சிபுக்குத் திசைகவர்ந்து
தண்டொன்றால் வழுதிமைந்தனை மூக்கரிந்து தமிழ்மதுரை
கொண்டுவிக்கிரம பாண்டியர்க்குக் கொடுத்துமீண்டபின் பரிபவத்தால்
எடுத்துவந்து நெட்டூரில் எதிர்ந்தவீர பாண்டியனை
முடித்தலைகொண் டமர்முடித்தவன் மடக்கொடியை வேழம்ஏற்றித் - 10
திருவிழந்த தென்னவனும் சேரலனும் வந்திறைஞ்சி
அரியணையின் கீழிருக்க அவன்முடிமேல் அடிவைத்துப்
படிவழங்கி வில்லவர்க்குக் கொற்றவர்பொறாத் திருவழங்கி
வீரகேரளன் விரல்தரித்து வெனைகொண்டு வந்திறைஞ்சப் - 15
பாரறிய வாழ்வருளிப் பரிகலத்தில் அழுதளித்துப்
பருதிகுலப் பதியென்னும் திருநாமம்பரித்த பாண்டியர்க்கு
இருநிதியமும் பரிச்சட்டமும் இலங்குமணிக் கலனும்நல்கித்
தியாகவீரக் கொடியெடுத்து வாகைவீரக் கழல்கட்டித்
திக்கெட்டு மேவல்கேட்பச் சக்கரவெற்பில் புகழெறிப்பச் - 20
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவன முழுதுடை யாரொடும் வீற்றிருந்
தருளிய கோப்பர கேசரி வன்மரான
திருபுவனச் சக்கரவர்த்திகள் மதுரைகொண்டு பாண்டி
யன் முடித்தலை கொண்டருளிய ஸரீ குலோத்துங்க சோழ - 25
தேவர்க்கு யாண்டு 19ஆது விருச்சிக ஞாயிற்று அமர
பட்சத்துச் செவ்வாய்க்கிழமையும் பெற்ற பூசத்து நாள்..........
2.13.4 (61)
-
ஸ்வஸ்திஸரீ
திருவாய்க் கேழ்வி முன் உடைத்தாக...
அறம்வளரக் கற்பமையப் புகழ்பெருகமனு நெறிதழைப்ப
.... நியாயம் நடாத்துகின்ற செயங்கொண்டசோழ மண்டலத்துப்
பெடைநாட்டு விஷயமான முடைநாட்டு விஷயத்தோமும்
பெராத்திநாட்டு விஷயத்தோமும் பகடைநாட்டு விஷயத்தோமும் - 5
தவாடநாட்டு விஷயத்தோமும் கலாறத்தைநாட்டு விஷயத்தோமும்
மங்கடையச் சளுக்கிநாட்டு விஷயத்தோமும் பூங்கைநாட்டு விஷயத்தோமும்
தொங்கைப்பூங்கை நாட்டு விஷயத்தோமும் சகலிநாட்டு விஷயத்தோமும்
பொத்தப்பிநாட்டு விஷயத்தோமும்உட்பட்ட பெரியநாட்டு விஷயத்தோமும்
சகயாண்டு ஆயிரத்து ஒருநூற்று ஒருபத்து ஒன்பதால் - 10
பிங்கலசம் வத்சரத்து மதுரையும் ஈழமும் கொண்டு
பாண்டியனை முடித்தலைகொண் டருளின
ஸரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு பத்தொன்
பதாவது.........ஞாயிற்றுப் பதினைந்தாந் தேதியான
வெள்ளிக்கிழமையும் ரேவதியும் பெற்றநாள்................
2.14.1 (58)
-
ஸ்வஸ்திஸரீ
புயல்வாய்த்து மண்வளர புலியாணையுஞ் சக்கரமும்
செயல்வாய்த்துத் திருமகளும் சிறந்து வாழ
வெண்மதிபோல் குடைவிளங்க வேல்வேந்த ரடிவணங்க
மண்மடந்தை மனங்களிப்ப மனுநீதி தழைத்தோங்கச்
சக்கரமுஞ் செங்கோலும் திக்கனைத்துஞ் செலடைத்தக் - 5
கற்பகாலம் தவதரித்து தேசமெல்லா மிருள்நீங்கித்
தென்திசையில் போத்தண்டு போரமைத்துத் திரியவாங்கிச்
செருவினையால் சிறைபிடித்துத் தென்னவனைத் திறைகொண்டு
திருவடிக்கீ ழடைவித்து வடதிசையில் போந்தண்டு
மகாமேருவைப் பிறக்கிட்டு அடலெழும் புகழ்பரப்பிப் - 10
பரிபவத்தால் வந்தெதிர்த்துத் திருவரங்கம் புகழ்விளங்கத்
தியாகவீரக் கொடியெடுத்து வாகைவீரக் கழல்கட்டித்
திக்கெட்டும் ஏவல்கேட்பச் சக்கரவெற்பில் புகழ்எறிப்பச்
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவன முழுதுடை யாளொடும் வீற்றிருந் - 15
தருளிய கோப்பர கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள்
மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன்
முடித்தலை யுங்கொண்டு வீராபி ஷேகமும்
விஜயாபி ஷேகமும் பண்ணி யருளின - 20
ஸரீ திரிபுவன வீரதேவர்க்கு யாண்டு 34 ஆவது
கன்னி ஞாயிற்று பூர்வபட்சத்துத் தசமியும்
திங்கட்கிழமையும் பெற்ற திருவோணத்து நாள்.........
2.14.2 (63)
-
ஸ்வஸ்திஸரீ
திருவாய்க் கேழ்வி முன்னாகத்
திரிபுவனச் சக்கர வர்த்திகள்
மதுரையும் ஈழமும் கருவூரும்
பாண்டியன் முடித்தலையுங் கொண்டு
வீராபி ஷேகமும் விஜயாபி ஷேகமும் - 5
பண்ணியருளிய திரிபுவன வீரதேவர்க்குயாண்டு 33 ஆவது...........
2.15.1 (64)
-
ஸ்வஸ்திஸரீ
சீர்மன்னி இருநான்கு திசைவிளங்கு திருமடந்தையும்
போர்மன்னு ஜெயமடந்தையும் (புகழ்மடந்தையும்) மணம்புணர
அருமறைகள் நெறிவாழ அருந்தமிழோர் கிளைவாழ
பொருவில்மனு நெறிவாழப் பொன்மகுடம் கவித்தருளி
வெங்கோபக் கருங்கலிப்பகை விடநாக வடிப்படர - 5
செங்கோலும் கொடிப்புலியும் திகிரிவரை வரம்பளக்க
எண்முகத் தெண்கரிக்கும் எடுத்ததனிக் கூடமென
அண்டகூட முறநிமிர்ந்து முழுமதிக்குடை நின்றழகெரிப்ப
நடுவுநின்று குடிகாத்து நன்றாற்றுந் திறம்பொருது
கடிதிழைத்த உட்பகையும் புறப்பகையும் அறக்கடிந்து - 10
பொலந்திசதி பதினான்கு புவனங்களும் அடிப்படுத்தி
இயங்குகதிர் வடமேருவில் இருந்தவயப்புலி யேறென்னச்
செம்பொன்வீர சிம்மாசனத்து புவனமுழு துடையாளொடும்
வற்றிருந் தருளியகோ விராசகேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராசராச தேவர்க்கு - 15
யாண்டு 16ஆவது...........
2.15.2 (65)
-
ஸ்வஸ்திஸரீ
உத்தம நீதி உயர்பெருங் கீர்த்தி
முத்தமிழ் மாலை முழுமையும் நிரந்த
சித்திர மேழிப் பெரியநாட் டோமும்
நான்குதிசைப் பதினெண் பூமித் திசைத்திசை
விளங்குதிசை ஆயிரத் தைஞ்ஞூற்றுவ ரோமும் - 5
பவமண் டலத்து நாட்டுச் செட்டிகள்
தவனச் செட்டிகள் ஜயபா லர்களும்
நம்மக்கள் அறுபத்து நாலுமுனை யுமுனை
வீரக் கொடியாரும் பேரருஞ் சிற்பரும்
சிறப்புடைக் கலனை யாரும் கோலக் - 10
காரார் கற்பகக் காவில்
நிறைவற நிறைந்து குறைவறக் கூடி
இருந்த இராசராசப் பெருநிரவியோம்
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ இராசராச தேவர்க்கு
யாண்டு பத்தொன்பதாவது கும்ப நாயிற்றுப்
பூர்வபட்சத்து பஞ்சமியும் வியாழக்கிழமையும்... ... ...
2.16.1 (67)
-
ஸ்வஸ்திஸரீ
பூமியும் திருவும் தாமெய்ப்புணர
விக்கிர மத்தால் சக்கரம் நடாத்தி
விஜயாபி ஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து
புவன முழுதுடை யாளொடும் - 5
வீற்றிருந் தருளிய கோவிராச கேசரி
வன்மரான இராஜேந்திர சோழ தேவர்க்கு
யாண்டு நாலாவது...
2.16.2 (66)
-
ஸ்வஸ்திஸரீ
பூமியும் திருவும் தாமெய்ப்புணர்ந்து
விக்கிர மத்தால் சக்கரம் நடாத்தி
விஜயசிம் மாசனத்து வீற்றிருந் தருளிய
கோவிராச கேசரி வன்மரான
உடையார் ஸரீ இராஜேந்திர சோழ தேவர்க்கு - 5
யாண்டு இரண்டாவது...
மெய்க்கீர்த்திகள் - 3
3. விசயநகர மன்னர் மெய்க்கீர்த்திகள்
3.1.1 (68)
-
சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ
ஸரீமன் மகா மண்டலேசுவர
அரி ராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன்
மூவராய கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - 5
இந்து ராயசுரத்ராண இராசாதி ராசன்
இராச பரமேசுவரன்
பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர
கசவேட்டை கண்டருளிய பிரதாப - 10
இம்மடி தேவராய மகாராயர்
பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற
சகாப்தம் 1373 ன் மேல் செல்லா நின்ற
பிரசாபதி வருஷத்து மீனஞாயிற்று
அமரபட்சத்து நவமியும் வியாழக் கிழமையும்
பெற்ற திருவொணத்து நாள் ..... - 15
3.2.1 (69)
-
ஸ்வஸ்திஸரீ
மண்டல மகாமண்டலீசுரன்
அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன்
மூவராய கண்டன்
இராசாதி ராச இராய பரமேசுரன் - 5
ஸரீவீரப் பிரதாப கசவேட்டை கண்டருளிய
தேவராய மகாராயர் குமாரர்
மல்லிகார்ச்சுன தேவ மகாராயர்
பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற
சகாத்தம் 1378ன்மேல் செல்லா நின்ற- - 10
தாதுவருஷத்து மகர ஞாயிற்று அமரபட்சத்து
துதிகையும் புதவாரமும் பெற்ற மகத்துநாள்....
3.3.1 (70)
-
ஸ்வஸ்திஸரீ நமஸ்துங்க சிரச்சும்பி
- - - சந்திரசாமர சாரவே
திரைலோக்கிய நகராரம்ப
- - - முலஸ்தம்பாய சம்புவே
ஸ்வஸ்திஸரீ
விசயாப்யுதய சாலிவாகன சகாப்தம்
1439 தின் மேல் செல்லா நின்ற ஈசுவர
சம்வத்சரம். . . .
ஸரீமன் மகாமண்டலேசுவர அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன் - 5
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்
பூர்வதட்சிண பச்சிம உத்தரசதுர்ச் சமுத்திராதிபதி
ஸரீவீரப்பிரதாப ஸரீவீர கிருஷ்ணதேவ மகாராயர்...
...திருவுளம் பற்றின தர்ம சாசனராயசம் - 10
3.4.1 (71)
-
ஸரீமன்மகா ராசாதிராச ராச பரமேசுர
ஸரீவீரப் பிரதாப மூவராய கண்ட
அரிராய விபாட அஷ்திக்கு ராய
மனேபயங்கர பூர்வ தட்சிண பச்சிம
சமுத்திராதிசுர ஸரீவிருஅச்சுதைய தேவ - 5
மகாராயர் பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற
சகாத்தம் 1451 இன் மேல் செல்லா நின்ற விரோதி
சம்வத்சரத்து விருச்சிக ஞாயிற்று அமரபட்சத்து
பஞ்சமியிலே........
3.5.1 (72)
-
சேதுவந்யே சகஸ்யாப்தே
ஸரீமான் வேங்கட தேசிக
சிந்தாமணி மகாக்கிராமம்ஸரீ ரங்கசாயிய
தத்தவான் சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ
ஸரீமன் மகா இரா.. இராச இராச பரமேசுவர - 5
ஸரீவீரப் பிரதாப ஸரீமன் சதாசிவ இராச
மகாஇராயர் பிருதி ராச்சியம் பண்ணி
அருளாநின்ற சகாப்தம் 1467 தன் மேல்
செல்லாநின்ற விசுவாவசு சம்வத்சரத்து பால்குண
மாசத்து சுக்லபட்சத்து சப்தமியும் சோம - 10
வாரமும் பெற்ற ரோலிணி நட்சத்திரத்து.....
3.5.2 (73)
-
சுபமஸ்து
ஸ்வஸ்திஸரீ
ஸரீமன் மகாமண்டலேசுவர மேதினி மீசர
கண்டகடாரி சாளுவ அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவ ராய கண்டன்
\முவராயர கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - 5
துலுக்கர் தளவிபாடன் துலுக்கர் மோகந்தவிர்த்தான்
பூர்வ தட்சிண் பச்சிம உத்தர
சத்த சமுத்திராதி பதி
எம்மண்டலமங் கொண்டருளிய
இராசாதி ராச ராச பரமேசுவர - 10
ஸரீவீரப் பிரதாப ஸரீசதாசிவ தேவ மகாராயர்
பிருதிவி இராச்சியம் பண்ணியருளா நின்ற சகாத்தம்
1471 ன் மேல் செல்லா நின்ற சவுமிய வருடம்
ஆனிமாதம் 13ஆம் தேதி சோமவாரமும் பிரதமையும்
பேற்ற மூல நட்சத்திரத்து நாள் ...... - 15
3.5.3 (74)
-
சுபமஸ்து ஸ்வஸ்திஸரீ
ஸரீமன் மகாமண்டலேசுவர
மேதினி மீசரகண்ட கடாரி
சாளுவ அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவ ராய கண்டன்
முவராயர கண்டன் - 5
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்
நவகோடி நாராயணுன் சதாசிவ தேவ மகாராயர்
பிருதிவி ராச்சியம் பண்ணியருளா நின்ற
சகாத்தம் 1483 இதன்மேல் செல்லாநின்ற
துன்மதி வருஷம் மகரஞாயிற்றுப் பூர்வ பட்சத்து - 10
தசமியும் ரோகிணியும்பெற்ற புதவாரத்து நாள்..
3.6.1 (75)
-
ஸ்வஸ்திஸரீ
ஸரீமன் மகாமண்டலேசுவரன் அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவ ராய கண்டன்
முவராயர கண்டன் கண்டர கண்டன்
கண்டயப் பிரதாபன் கடாரிச் சாளுவன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் - - -5
ஒருபரி கொண்டு திரள்பரி வோட்டும் உபய குலோத்துங்கன்
எம்மண்டிலமுங் கொண்டு ஈழமும் திறை கொண்ட
இராசாதி ராசன் இராச கெம்பீரன்
இராச நாரணகுல திலகன் இராசாக்கள் தம்பிரான்
கோட்டத்து மன்னியர் கண்டன் - 10
சோரிமன்னியர் சூரியன் சேடிமன்னியர் காலான்தகன்
தொண்டை மண்டில ஸ்தாபனா சாரியன்
சோழ மண்டில ப்ரதிஷ் னாசாரியரன்
பாண்டி மண்டிலத்துப் பதுமனா சாரியன் - 15
மறுமன்னியர் கோடாரி குறுமன்னியர் கோளரி
துலுக்கர் தளவிபாடன் துலுக்கர் மோகந்தவிர்த்தான்
அரிதள விபாடன் அரியர்மோகந் தவிர்த்தான்
ஒட்டியர் தள விபாடன் ஒட்டியர்மோகந் தவிர்த்தான்
தொட்டியர் தள விபாடன் தொட்டியர்மோகந் தவிர்த்தான் 20
தக்கார்க்குத் தக்கன் தர்க்க வினோதன்
தண்டுவார் மிண்டன் சகலகுணாபி ராமன்
துங்காபி ராமன் துங்க ரேவந்தன்
சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்கு விசயன்
பரிக்கு நகுலன் கொடைக்கு கர்ணன் - 25
பொறுமைக்குத் தருமர் பூருவ தட்சிண
பச்சிம உத்தர சத்தசமுத் திராதிபதி
அசுவபதி கசபதி தனபதி நரபதி
நரவேட்டை கண்டருளிய மல்லிகார்ச்சுன தேவமகாராயர்
பிரபுடதேவ மகாராயர் இராமதேவ மகாராயர் - 30
கிருஷ்ணதேவ மகாராயர் விருப்பாட்ச தேவமகாராயர்
ஆனைகுந்திதேவ மகாராயர் திருமலைதேவ மகாராயர்
ஸரீரங்க ரங்கதேவ மகாராயர் பிருதிவி இராச்சியம்
பண்ணியருளா நின்ற சாலிவாகன சகாத்தம் 1489
கலியுக சகாத்தம் 4899 இதன் மேல் செல்லாநின்ற - 35
காளயுக்தி வருஷம் கார்த்திகை மாதம் 8ம் தேதி
மங்கள வாரமும்... கூடின சுபதினத்தில் .......
3.7.1 (76)
-
ஸ்வஸ்திஸரீ
ஸரீமன் மகாமண்டலேசுவரன்
அரிராய விபாடன்
பாஷைக்குத் தப்புவ ராய கண்டன்
முவராயர கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு விடாதான் - 5
இலங்காபுரியின் திறை கொண்டு வென்றருளிய
ஸரீவசந்தசராயர் பிருதிவி ராச்சியம்
பண்ணி யருளாநின்ற காலத்தில் கலியக
சகாப்தம் 4900க்கு மேல் (1490 சகம்)
வீரவசந்தராயர் நயனாருக்கு ஆண்டு - 10
மூன்றாவதில் விபவ வருஷம் கார்த்திகை மாதம் ...
Comments
Post a Comment