தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாத்தான்குளம் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது பன்னம்பாறை சிற்றூர்.தொன்மையான குலதெய்வ வழிபாட்டு மரபுகளுடன் ஊரைச்சுற்றிலும் கோயில்களுடனும் அமைந்துள்ளது. இவ்வூரின் நிலவியல் அமைப்பு பல இலட்சம் ஆண்டுள் பழமையான பாறைகளால் சூழப்பெற்றதாகும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தாங்கள் குடியிருந்த இடங்களுக்குப் பெயர்களை இட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.அவ்வகையில் பன்னம்பாறை என்ற பெயர் குறித்து இங்குள்ள மக்கள் கூறுவதாவது,முற்காலத்தில் பனைகள் நிறைந்திருந்தபடியால் பனைப்பாறையே பன்னம்பாறை என்று திரிபு ஆனது என்றும்,பன்னம் என்றால் சுண்ணாம்பு., சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டபடியால் பன்னம்பாறை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
தொல்காப்பியம் நூலிற்கு
’’வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி…..’’
என பதினைந்து அடிகளில் பாயிரம் எனப்படும் முன்னுரை எழுதியதோடு தொல்காப்பியம் நூல் திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியையும் பதிவு செய்த பனம்பாரனார் என்ற சங்ககாலப் புலவரும் தொல்காப்பியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலைத் தமிழுலகிற்குத் தந்த தொல்காப்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள்;இருவரும் ஒருபள்ளி மாணவர்கள். மேலும் இவருக்குப் பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் எட்டுத்தொகை நூலில் குறுந்தொகை 52 ஆம் பாடலான
‘’ஆர்களிரு மிதித்த நீர்த்திகழ் சிலம்பிற்……’’
எனத்தொடங்கும் பாடலைப் பாடிய புலவரின் பெயரும் பனம்பாரனார் ஆகும். முற்காலத்தில் சங்ககாலப் புலவர்களின் பெயர்கள் அவர்கள் பிறந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட்டன எனவே பனம்பாரனார் பிறந்தது இவ்வூராகலாம் என்ற கருத்தும் ஆய்வும் தமிழறிஞர்களிடம் உள்ளது.
இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இம்மண்.அழகிய நீரோடைகள், குளங்களைக் கொண்டுள்ளது.
இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.
இந்த தொன்மையான பாறையும் அதனைச் சார்ந்த பகுதியும் பல்லாங்குழி ஒடை என்று அழைக்கப்படும் இதற்கு பாண்டிப்பிள்ளைஓடை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவதை பாண்டி விளையாடுதல் என்று தென்பகுதி மக்கள் கூறுகின்றனர்.ஒரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழிகள் செதுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விளையாடி முடிப்பதற்கு ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலே குழிகள் அமைக்கப்பட்டுள்ளன கீழ்புறத்தில் உள்ளதில் ஒன்றில் இருபுறமும் இரண்டிரண்டு குழிகளும் அவற்றிற்கு வால்குழிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்புறத்தில் உள்ள குழி இருபுறமும் ஆறுகுழிகளுடன் தலைப்பகுதியில் இரு குழிகளுடன் உள்ளது.இவ் ஆறு குழியும் குறிப்பிட்ட தூரத்தை ஆறு மடங்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது.பெருவழிப்பாதை இது என்பதற்கு இது சான்றாகும். இப்பாறையைச் சுற்றிலும் நீரோடை ஓடுகின்றது. பார்வதி தேவி குளித்த இடமாக ஓடை கருதப்படுகிறது. சிவனுடைய சூலாயுதத்தால் பாறையில் குத்தித் துளையிட்டு நீருற்றினை ஏற்படுத்திய தீர்த்தக்குழி உள்ளது.ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும், பத்து அடி ஆழம் அளவிலும் உள்ளது.இவற்றில் உள்ள தீர்த்தநீர் சுவையாக இருக்கும் என்கின்றனர். கடுமையான கோடை காலத்திலும் இந்த நீறூற்றில் நீர் வற்றாமலிருக்கும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.இந்த நீரூற்றினைச் சுற்றிலும் சிதைந்த நிலையில் கற்கால மனிதர்களின் ஓவியச்செதுக்கல்கள் கோட்டுருவங்களாக புலப்படுகின்றன.பிராமி எழுத்துக்களா அல்லது உருவக்குறியீடுகளா என்பது மேலாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரூற்றிற்கு இடதுபுறம் சிவனும் பார்வதியும் தேரிலேறி சென்ற ரதத்தின் தடம் உள்ளது.அடுக்குப் பாறையின் அடுக்கு சேருமிடம் இணையாக ரதத்தின் தடம் போல உள்ளது.இதுவே ரதத்தின் தடம் என மக்களால் கருதப்படுகின்றது.
கள ஆய்வினை மேற்கொண்ட கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஆறுமுகனேரியைச் சேர்ந்த முனைவர் த.த.தவசிமுத்து கூறியதாவது,
பல்லாங்குழியானது செம்மையான உளிகளால் செதுக்கப்படவில்லை மாறாக கல்லால் ஆன ஆயுதத்தால் செதுக்கியும்,கடைந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இரும்பின் பயனறியாத கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பல்லாங்குழி செதுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால்,திண்டுக்கல் பழனி அருகே சுமார் 2500 இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப் பல்லாங்குழிகளின் அருகே அமைந்திருந்த பெருவழிப்பாதை ஒன்று மதுரை, பழனி வழியாகக் கேரளா சென்று கடல் வழி வாணிபத்திற்காக கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது பன்னம்பாறையில் திறந்த வெளியான பாறைப்பகுதியில் காணப்படும் இப்பாறைக்குறியீடுகள் தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாகும். இப்பகுதி வழியாக கேரளா,திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பெருவழிப்பாதையும் இருந்திருக்க வேண்டும்.
மேலும், வரலாற்று காலத்திற்கு முந்தைய பழமையான தொல்லியல் சிறப்பு வாய்ந்த பழுப்புநிறச் செம்மண் குறைந்த அளவிலும் பழுப்பேறிய பாறைகளுடன் தொடர்ச்சியாக பன்னம்பாறையைச் சுற்றிலும் நாசரேத், மெஞ்ஞானபுரம் , மானாடு, குதிரைமொழி, சாயர்புரம், தெற்கே திசையன்விளை செம்மண் பரப்புடன் தொடர்புச் சங்கிலியாக இணையதளம் வாயிலாக வான்வழிக்காட்சியில் பார்த்தால் காணப்படுவது வியப்பாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாற்றுக்கும் முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த பழைமையான கற்கால மனிதர்கள் வழ்ந்ததற்கான தடயங்கள் பெரிதும் கிடைத்துள்ளன.இப்பகுதியிலும் கற்கால மனிதன் பயன்படுத்திய குவாட்ஸ் ஆயுதங்கள் கிடைப்பதற்கான எச்சங்கள் காணப்படுகின்றன.
பல்லாங்குழி விளையாட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா,ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான் கென்யா, ஜிம்பாவே, தான்சானியா, சிரியா, ஆப்பிரிக்கா, மேற்குஆசியா, இலங்கை, மலேசியா, போர்னியோ, வியட்நாம், சுமத்ரா, தென்,அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் உள்ளது .
தொல்லியல்,நாட்டுப்புறவியல் சிறப்பு வாய்ந்த இப்பகுதி மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்படுமானால் மேலும் அரிய தொன்மையானச் செய்திகள் கிடைக்கும் என்றார் முனைவர் த.த.தவசிமுத்து

- Get link
- X
- Other Apps
Labels
கல்வெட்டுக்கள்
Labels:
கல்வெட்டுக்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment