மூக்கறுப்பு கல்வெட்டு :-
..
மைசூர் மன்னர் கந்திருவ நரச ராஜாவுக்கும் மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடையே நடந்த மூக்கறுப்பு போர் நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.
எ வாயேஜ் டு தி ஈஸ்ட் இண்டியா என்னும் நூலை எழுதிய ஜெ.எச்.குரோஸ் மைசூர் படையின் தனித்துவமாக மூக்கறுப்பு இருந்தது. அவர்கள் மிகச்சாமார்தியமாகவும் எளிதாகவும் மூக்கை அறுத்து மைசூருக்கு அனுப்பி வைத்தனர்
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் 1679 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்து தீர்மானம் ஒன்றில் மூக்கறுப்பு செயல்பாடு பற்றிய குறிப்பொன்றும் இடம் பெற்றுள்ளது
(மதுரை நாயக்கர் வரலாறு ,பக்கம் 147 ஆசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர்)
இவை மட்டுமே மூக்கறுப்பு போருக்கு ஆதாரமாய் இருந்தன...கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை.
மதுரை மீது வலிந்து சண்டைக்கு போன மைசூர் அரசர் கந்திருவ நரச ராஜா 1656 ல் சத்திய மங்கலத்துக்குள் ஊடுருவ உத்தரவிட்டார். இந்த சத்தியமங்கலம் சேலம் மாவட்டத்தில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாய் இப்போதும் 1652 ஆம் ஆண்டின் சேலம் மாவட்டத்து எருமைப்பட்டி கல்வெட்டு சான்றாக உள்ளது.
1655-56 ஆம் ஆண்டின் கந்திருவ நரசராஜாவின் ஈரோடு கல்வெட்டு ஒன்று அவரது தளபதி கெம்பையா மதுரையின் தொடர்பில் இருந்ததை கூறுகிறது.
மதுரையையை கைப்பற்றும் நோக்கில் மதுரை அருகே வரை நெருங்கிய கெம்பையா தன் மன்னர் உத்தரவுப்படி வழியில் சிக்கிய ஆண்,பெண்,குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரின் மூக்கையும் அறுத்து ஒரு சாக்குப்பையில் போட்டு மைசூருக்கு அனுப்பி வைத்தான்.
இதில் மீசையோடு(ஆண்) வந்த மூக்குக்கு அதிக வெகுமானம் கொடுக்கப்பட்டதாகவும் ஓர் தகவல் உண்டு..
மதுரை திருமலை நாயக்கர் ராமநாதபுரம் சேதுபதியின் உதவியை நாட அவர் 25,000 படை வீரர்களோடு மதுரையை நோக்கி வந்தார். அவருக்கு துணையாக நாயக்கரின் பாளையகாரர்கள் சேலம் உட்பட 35,000 வீரர்கள் திரண்டனர் இந்த கூட்டுப்படை மைசூர் படையை ஓட ஓட விரட்டி வெற்றி பெற்றது.
இப்போது கூட 2 பேர் சண்டை போடும் போது உன் மூக்கை அறுத்து விடுறேன் பார் என சவடால் விடுவது நாம் அறிந்ததே.இந்த போருக்குப்பிந்தான் இந்த சொலவடை வந்திருக்க கூடும்
பின் திருமலைநாயக்கர் தன் தம்பி குமாரமுத்து நாயக்கர் தலைமையில் மைசூரை நோக்கி படையெடுக்க வைத்தார். பழிக்கு பழியாக இந்த படை மைசூர் ஆட்சிக்கு உட்பட்டவர்களின் மூக்கை அறுத்தது. இறுதியாக மைசூர் மன்னரின் மூக்கையும் அறுத்ததாக ஓர் தகவல் உள்ளது.

இந்த வரலாற்று பிண்ணணியில்தான் நம் பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு ஓர் முக்கியத்துவம் பெறுகிறது.
இனி நம் கல்வெட்டு என்ன சொல்கிறது என பார்க்கலாம்.
1. சின்ன பூபாலராயன் என்று அழைக்கப்படும் சின்னமநாயக்கர் சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை தேருக்கு வடம் செய்து கொடுத்தார். செக்கடிபட்டி கல்வெட்டில் காணப்படும் அதே செய்தி மூக்கறுப்பு கல்வெட்டிலும் பதிவாகியுள்ளது.
2. சேலம் சின்ன பூபாலராயர் குமாரர் லட்சுமண பூபாலராயர் சின்னமசமுத்திரம் மற்றும் கலியாணிகிரி என்ற இடங்களில் மடங்களை ஏற்படுத்தினார்.
3._ விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கருக்காக
தஞ்சாவூர் அடப்ப செவ்வய அச்சுதனாயக்கர்,கறம தேவராயர்,திருச்சிராப்பள்ளி முத்திரையர் அனைவரும் இனிமேல் திருமலைநாயக்கர் நமக்கு சகமாய் இருப்பார் எனவும்,மதுரை,தஞ்சாவூர்,செஞ்சி,படைகள் சேலம் சின்னபூபாலராயரின் ராஜியத்துக்கு வரவேண்டும் என உபசார ஓலை அனுப்பப்பட்டது.இந்த நேரத்தில் உதவ வேண்டும் என வேங்கடப்ப நாயக்கர் திருச்சிராப்பள்ளிக்கு வந்து ராயர்பாளையத்தில் குந்தி

மீசையுடனே மூக்கறுப்பிச்சார்
திருமலை நாயக்கருக்கு ஆதரவாய் பொதுசங்கம் அமைக்கப்பட்டு
பூதானமும் கொடுக்கப்பப்ட்டன ,மடங்கள் அமைக்கப்பட்டன.

4. இந்த தானத்துக்கு அழிவு செய்பவர் கங்கைகரையிலும்,காசியிலும்,பஞ்சமகா பாதகங்கள் செய்தவர்களாகவும், தங்கள் மாதா,பிதாவை கொன்ற பாவத்தை அடைவார்கள்
5. பிருது மூக்கநூரு பொம்மைய நாயக்கர் குமாரன் தாதா நாயக்கர் சதாசோவை.
இவ்வாறு கல்வெட்டு செய்தி முடிகிறது..இதில் ஆய்வு செய்ய ஏராளமான செய்திகள் பொதிந்து உள்ளன..
வரும் காலத்தில் தொடரும் ஆய்வுகளில் இன்னும் சிறப்பான செய்திகள் வெளிப்படலாம்

நன்றி- சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழு
ஆறகழூர் வெங்கடேசன்
பகிர்வுக்கு நன்றி ஐயா
ReplyDelete