Solai Balakrishnan
நன்றி
திருவெள்ளறை.
முதல் மறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1219 ஆண்டு சோழ நாட்டின் மீது படை எடுத்துச் சென்று சோழ மன்னன் மூன்றாம் இராசராச சோழனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.
சுந்தரபாண்டியன் படைடுப்பில் சோழரின் பழைய தலைநகராகிய உறையூரும், தஞ்சாவூரும் பாண்டிய நாட்டுப் போர்வீரர்களால் கொளுத்தப்பட்டன.
சோழர்களின் பல மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் ஆடரங்களும் மணிமண்டபங்களும் இடிக்கப் பட்டு நீர்நிலைகளும் அழிக்கப் பெற்றன.
கரிகாற்பெருவளத்தான் சோழன் தன் மீது பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்குப் பரிசிலாக வழங்கிய இருந்த பதினாறு கால் மண்டபம் ஒன்று தான் சோழ நாட்டில் இடிக்கப்படாமல் விடப்பட்டதென்றும் பிற எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் திருவெள்ளறையில் செய்யுளாக உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டு கூறுகின்றது.
கரிகாற்சோழன் புலவர் உத்திரங்கண்ணனுக்கு பரிசிலாக கொடுத்த மண்டபம் என்பதை தெரிந்து சுந்தரபாண்டியன் தமிழ்ப் புலவரின் நினைவாக உள்ள மண்டபத்தை அழிக்காமல், மாறாக தான் அதை மட்டும் காப்பாற்றினேன் என்று திருவெள்ளறைக் கல்வெட்டுப் பாடலில் செதுக்கி வைத்தான்.
திருவெள்ளறைக் கல்வெட்டு செய்யுள்.
திருவெள்ளறை கோயில் உள்ளே செல்லும் போது அங்குள்ள இரண்டாம் கோபுரத்தின் நுழைவுப் பகுதியின் இருபுறமும் தமிழ் எழுத்தில் சுந்தரபாண்டியனின் இரண்டு கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.
'வெறியார் துளவத் தொடைச்செய் மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே'
....
திருவெள்ளறைக் கல்வெட்டில் காணப்படும் இப்பாடலில் கூறப்பெற்ற கண்ணன் என்பவர், சோழன் கரிகாற்பெருவளத்தான் மீது பட்டினப்பாலை என்ற நூலை இயற்றி உள்ள கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானே ஆவார்.
உருத்திரங் கண்ணனார் புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு வழங்கி அந்நூலைத் திருமாவளவன் பெற்றுக்கொண்ட செய்தி கலிங்கத்துப் பரணியால் அறியக்கிடக்கின்றது.
இப்பெரும் தொகையோடு நூல் அரங்கேற்றப்பெற்ற பதினாறுகால் மண்டபத்தையும் கரிகாற்சோழ பெருமான் புலவர் கோமானுக்கு வழங்கினார்.
கரிகாலன் எழுதி முடித்தான்
208
இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்
தெழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
உரைசெய் பல்புகழு மொன்றுமொழி யாத பரிசே. 31
Comments
Post a Comment