வரலாற்றுத் தகவல்கள்-
நன்றி
சங்கத்தமிழ் அங்காடிகள்:
*அல்லங்காடி= Night Market
*நாளங்காடி= Day Market
*புனலங்காடி= Wet Market
*அனலங்காடி= Dry Market
*ஊனங்காடி= Meat Market
*மீனங்காடி= Fish Market
*கூலங்காடி= Grain Market
*பழனங்காடி= Fruit Market
*காயங்காடி= Vegetable Market
*அடகங்காடி= Betel Market/வெற்றிலை
அங்காடி எ. தமிழ்ச்சொல்
இலக்கியம்+வரலாறு மிக்கது!
Bazaar/Market-க்குப் போறேன்
என அயல் சொல்லை தயவு செய்து விட்டுவிடுக!
'அங்காடி'க்குப் போறேன் எனபுழங்குங்கள்!
*கடை= தனி ஒரு விற்பனைக் கூடம்
*அங்காடி= பல கடைகள் சேர்ந்த விற்பனைக் கூடம்
*சந்தை= பல அங்காடிகள் சேர்ந்த விற்பனைக் கூடம்!
தமிழ்ச் சிலப்பதிகார அங்காடிகள்
உலகப் புகழ் பெற்றவை!
உண்மையே, வெறும் புகழ்ச்சி இல்லை:)
Greece/Rome கப்பல்கள்
ஈழம்/தமிழகத் துறைமுகம் வந்து
பொன்னைக் கொடுத்து, சரக்கு ஏற்றிச் செல்லும்!
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்= அக400
ரோமாபுரி மன்னன் Tiberiusக்கு,
தலைவலியான தமிழக அங்காடிகள்
சிலப்பதிகாரம்/ மணிமேகலை அங்காடிகளில்,
தமிழர்கள் மட்டுமல்லாது
அயல்நாட்டவரும் (யவனரும்) பணி புரிந்தனர்
இன்று, தமிழக, வடமாநிலப் பணியாளர் போல்!
சுங்கம் விதிக்கப்பட்ட அடையாளமாக
ஒவ்வொரு அங்காடி மூட்டையிலும்
மீன்/புலிச் சின்னம் (பாண்டிய/ சோழ)
பொறிப்பதற்கென்றே தனிப் பணியாளர்கள்:)
தமிழகத்தை விட
ஈழம் கொடிகட்டிப் பறந்த காலம்
சுங்கம்/ விலை குறைவு என்பதால்!:))
சேதுக் கால்வாயில்,
இந்நாள் பெரிய கப்பல் வர முடியாது போனாலும்
அந்நாள் சிறிய கப்பல் வந்து செல்ல முடிந்ததால்
ஈழம்= உலகச் சந்தை!
சோழனும் பாண்டியனும் விதித்த சுங்கம் தவிர்க்க..
ஈழத்தில் துறையேறிய வணிகம்!
தமிழ்த் துறைமுகங்கள்!
ஈழம்:
*மாந்தை (மாதோட்டம்)
*பருத்தித் துறை
*வல்வட்டித் துறை
*உடுதுறை
*ஊர்க்காவற்துறை
*கந்தரோடை (அன்றைய மணிபல்லவம்/ சம்புகோளப் பட்டினம்)
தமிழ்நாடு:
*தொண்டி
*முசிறி
*கொற்கை
*அழகன்குளம்
*நாகை
*காவிரிப்பூம்பட்டினம்
*அரிக்கமேடு
*மரக்காணம்
*மல்லை (மாமல்லபுரம்)
தமிழ்= திராவிடம் எ. விளித்த உலக ஆவணங்கள்!
Periplus of Erythraean Sea காண்க!
தமிழ்-ரோமாபுரி வணிகச் சான்றாக,
Nero மன்னன் பொற்காசு, தமிழ்நாட்டில்! 54-68 CE
/யவனர் தந்த நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்/
காசு எழுத்தை வாசிங்க பார்ப்போம்:)
Caesar எ. கிரேக்க மொழிப் பொருள் என்ன?
Caesar எ. Latin சொல், கருமையைக் (caesiis) குறித்தது!
அது.. யானை/ மயிர்/ கண்.. என பல விதமாக இன்று கூர்ந்து அறியப்படுகிறது:)
இன்னும் இதற்கான மூலச்சொல்லை உறுதியாக அறுதியிட முடியவில்லை!
Comments
Post a Comment