Devadhas நன்றி சேரர்களின் ஆட்சியில் சேரநாட்டில் அயல்நாட்டு வணிகத்துக்கு தங்கநாணயங்கள் புழக்கத்தில் இருந்தது . இதற்கு Venetian sequins என பெயர். இத் தங்க காசுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்தது. சுத்த தஙகம் ஆனதால் ஆபரணங்கள் செய்யவும் இத்தங்ககாசுகள் பயன் படுத்தினர். இக்காசுகளை திருவிதாங்கூர் அரசு மக்களை மிரட்டி பறித்து அவற்றை கோவில் வேள்வியில் நம்பூதிரிகளுக்கு அளித்தனர். இவற்றை கைப்பற்ற கடினமாக இருந்ததால் திவான் ரமணிங்கர் இத்தங்ககாசுகள் செல்லாது என அறிவித்துவிட்டு இதனைப் போன்று ஆங்கிலேய நாணங்களுடன் இரண்டு புதிய நாணயங்களை அடித்தனர். பழைய தங்கக்காசுகளை சாணார் காசு என குறிப்பிட்டுள்ளனர். தற்போது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ஆறு அறை நகைகள் கணக்கெடுப்பில் இக்காசுகள் 70கிலோ இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.
ART - LITERATURE - CULTURE