Skip to main content

Posts

Showing posts from 2017

கூடல்அழகர் கோயில் சிற்பம்

KOODAL ALAGAR PERUMAL TEMPLE - JALAS ( WINDOWS) அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் - ஜன்னல்

நெடுவாசல்

கோவை அருகே உள்ள வேடபட்டியில் தமிழ் பிராமி எழுத்து பெறிப்பு கண்டுபிடிப்பு தமிழகத்தில் முதன் முதலாக ஈம தாழி என்று எழுத்து கிடைத்தது உள்ளது

Nelliappar Temple

திருவரங்கம் பெரியகோயிலில் பெருமாள் தேவன் மண்டபம்

திருவரங்கம் பெரியகோயிலில் பெருமாள் தேவன் மண்டபம் எங்கே உள்ளது? 18ஆம்படி ஸேவை எங்கு, எப்போது நடைபெற்றது? 1) அகளங்கன் திருச்சுற்று என்று அழைக்கப்படும் 5ஆவது திருச்சுற்றின் வட கிழக்கு மூலையில் அமைந்துள்ளது ஆயிரங்கால் மண்டபம். இதுவே பெருமாள்தேவன் மண்டபம் என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயிலினுள்ளே மிக நீண்ட அகலமும் நீளமும் கொண்ட மண்டபம் இது ஒன்றுதான். இதன் நீளம் 503 அடி. அகலம் 138அடி. இதில் ஒரு வரிசைக்கு 54 தூண்கள் 16 வரிசைகள் காணப்படுகின்றன. கண்ணுக்கு இலக்காகும் தூண்கள் 864. வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சுவற்றில் பொதிந்துள்ள தூண்கள் 64. இந்த மண்டபத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கினால் அது மூன்றடுக்களில் அமைந்துள்ளதைக் காணலாம். ஆயினும் Fergusson என்ற வரலாற்று ஆசிரியர் 953 தூண்கள் உள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளார். 2) ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அவற்றிலும் தூண்கள் அமைந்துள்ளன.அவை முறையே, வடக்கிலிருந்து சங்கராந்தி மண்டபம், திருமாமணி மண்டபம், கனு மண்டபம் எனப் பெயரிடப்பட்டுள்ளன. தெற்குப் பகுதியில் ஒரு தூணின் உயரம் 19 அடி. மண்டபத்தின் மேலே ச...

மலையடிக்குறிஞ்சி. திருநெல்வேலி மாவட்டம்.

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் கி.பி.626 ஆம் ஆண்டு இன்றைய தேதிக்கு கணக்கிட்டால் சரியாக 1389 ஆண்டுகளுக்கு முன் சேவூர் சாத்தன் ஈரன் என்பவனால் பாண்டிய மன்னன் கோ மாறன் சேந்தனுக்காக குடையப்பட்ட குடைவரை கோயிலில் உள்ள உள்ளங்கை அளவே கொண்ட ஒரு சிற்பம். தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் டார்ச் வசதியுடன் பார்த்தால் தெரியும் துல்லியமான வேலைப்பாடுகள் மின்சாரம் ஏதுமில்லா அந்த காலத்தில் வழிந்தோடும் வியர்வைக்கு நடுவே தீப்பந்த வெளிச்சத்தில் அந்த திப்பந்தத்தின் அனலையும் தாங்கிக் கொண்டு இத்தனை அருமையான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பத்தை கொடுக்க முடிந்திருக்கிறதென்றால் அதில் எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும். இதையெல்லாம் தேடிச்சென்று ரசிப்பதற்கு கூட ஆட்கள் இல்லை என்று நினைக்கும் போது இவையெல்லாம் ஐரோப்பாவில் இருந்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கமே எழுகிறது. மலையடிக்குறிஞ்சி. திருநெல்வேலி மாவட்டம்.

ஐவர்மலை திண்டுக்கல் மாவட்டம்

ஐவர்மலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் மேற்கில் உள்ளது. சண்முக நதியின் மேற்கு கரையில் வண்டி வாய்க்கால் என்னும் இடத்தில் இடதுபக்கம் பிரிந்து கொழுமம் செல்லும் வழியில் பாப்பம் பட்டி பிரிவுக்கு அருகில்சாலையின் இடது புறம் பிரிவுப்பாதையில் செல்லவேண்டும். பிரிவின் முகப்பில் ஆர்ச் கட்டப்பட்டு இருக்கும் இதன் வழியாக சென்றால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு மலைகள் இருக்கும் இந்த இரு மலைகளில் பாதையின் கிழக்கில் உயர்ந்த மழையும் அதன் எதிர்புறம் சாலையின் மறுபுறம் மேற்கில் உள்ள மலையே அயிரை மலையாகும். இது கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அயிரை மலை என்று சங்க இலக்கியங்களிளும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறது. அயிரை என்ற சொல்லுக்கு மீன், கொற்றவை, என்று பொருள்கள் உண்டு. இம்மலையின் இடைநிலையில் யக்க்ஷி கோவில் உள்ளது. இது ஒரு சமணப் பள்ளியாக இருந்துள்ளது. இங்கு சமண சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. இயக்கி, யக்க்ஷி உருவங்களும் கனாப்படுகின்றன. சமணர்களின் இருபத்து நான்கு தீர்த்தங்கர்களில் இருபத்தி மூன்றாவது தீர்ந்தங்கராரான பார்சுவநாதர் சிற்பம் உள்ளது. மானாக்கியர் இச் சி...

சப்த கன்னியர் திருச்சி வெள்ளறை

பைரவர் சங்ககிரி கோட்டை

திருக்குறுங்குடி. திருநெல்வேலி மாவட்டம்.

Mahishasura Mardini

Maa aschen!! ‘Durga's triumph as Mahishasura Mardini’ Mahabalipuram Sculpture panel 8th cent AD [Pallava period] Mahabalipuram contains 14 cave temples and several of these unique structures contain significant works of ancient art. One of them is ‘Mahishasura Mardini Cave’ which has several beautiful reliefs depicting commendable artistic abilities of sculptors in Pallava times. Eight-armed Goddess Durga slays the buffalo- headed Demon King Mahishasura during the battle and is the central episode of the scripture... and it is very much possible that the temple got its name from this demon. The Goddess is accompanied by eight euphoric ganas along with female warriors all armed with weapons of destruction. Durga's weapons were given to her by various Gods… Rudra's trident, Vishnu's discus, Indra's thunder bolt Brahma's kamandalu, Kuber's ratnahar etc... Indeed a very beautifully sculpted, high relief panel THANKS-RUPY DAS.

காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்:

காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்: தமிழ்நாட்டு குடைவரைகளில் காணக் கிடைக்கும் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் பல்லவர், பாண்டியர், முத்தரையர் அரச மரபினரால் உருவாக்கப்பட்டவை. கணக்கற்ற குடைவரைகளைப் பல்லவர்கள் அகழ்ந்திருந்த போதும் பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்களின் எண்ணிக்கையில் ஏழில் ஒரு பங்கையே வட தமிழ் நாட்டுக் குடைவரைகளில் காண முடிகிறது. பல்லவர் பூமியில் அருகிக் காணப்படும் பிள்ளையார், தென் தமிழ் நாட்டில் பாண்டியர், முத்தரையர் சீராட்டைப் பெற்றுச் செழித்தமை, அவர் தம் குடைவரைகளில் பரவலாகக் காணப்படும் சிற்பங்கள் உணர்த்தும் உண்மையாகும். தமிழகக் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்கள் அரச மரபினர் வாரியாக.... 1. பாண்டியர்: 21 2. முத்தரையர்: 3 3.பல்லவர்கள்: 4 மொத்தம் : 28 பாண்டியர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்: 1. பிள்ளையார்பட்டி 2. செவல்பட்டி 3. திருக்கோளக்குடி 4. மலையக்கோயில் 5. தேவர்மலை 6. அரிட்டாப்பட்டி 7. திருமலைப்புரம் 8. குன்றக்குடி கிழக்கு குடைவரை 9. திருக்கோகர்ணம் குடைவரை அர்த்த மண்டபம் 10. திருக...

கற்கால மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 5 குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் நுண்கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல சிறிய குகைகள் உள்ளன. அவற்றில் 3 குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் அமைந்துள்ளன. இந்த பாறை ஓவியத்தில் வேட்டைகாட்சிகள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மனிதர்கள் சிலர் ஒரு புலியை சுற்றி வளைத்து தாக்குவது போன்ற காட்சி சிறப்பாக தீட்டப்பட்டுள்ளது.மற்றொரு கூட்டத்தினர் விலங்கை சுற்றி வளைத்து பிடித்து தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்கிற காட்சியையும், கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதர்களையும் சூரியன் காட்சியையும் வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்துக்கொண்டு வரும் மனிதனையும் வரைந்துள்ளனர்.மேலும் யானையின் உருவத்தையும் கருவுற்ற விலங்குகளின் உருவத்தையும் தீட்டி இருக்கின்றனர்.இதை தொல்லியல் ஆய்வாளரும் தமிழ் ஆசிரியருமான சங்கரநாராயணன் கண்டுபிடித்துள்ளார். நுண் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், இடைக்காலம் என தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான சான்ற...

வெங்கடாசலபுரம் செக்கு கல்வெட்டு

தஞ்சை பெரிய கோயில்

தமிழக கோயிற்கலை வரலாற்றில், தஞ்சை பெரிய கோயில் திருச்சுற்று மாளிகையில் எடுக்கப்பெற்ற பரிவார ஆலயமான உமா பரமேஸ்வரி ஆலயமே தனியாக அம்மன் கோயில் உருவாக்கும் மரபை தோற்றுவித்த முதற் கோயில் எனக் கூறலாம்.இந்த மரபை தோற்றுவித்த அம்மன்னன் அதற்குரிய கல்வெட்டு சான்றுகளை யும் நமக்கு விட்டுச்சென்றுள்ளார்.வடக்கு திருச்சுற்று மாளிகையில் காணப்பெறும் கல்வெட்டு ஒன்று இந்த செய்தியை நமக்கு தெரிவிக்கின்றது. கல்வெட்டு உள்ள இடம்:- பிற்கால பாண்டியர் காலத்து அம்மன் ஆலயத்திற்கு நேர் பின்புறத்தில் வடக்கு திருச்சுற்று மாளிகை. மன்னன்:- முதலாம் இராசராசன். காலம்:- இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டு. கி.பி.1014. 1. ஸ்வஸ்திஸ்ரீ: உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வர.... 2. ம் உடையார்க்கு ஸ்ரீகாரியம் செய்கின்.... 3. ற ஆற்றூடையான் நக்கன் தோன்றி.... 4. உடையார் கோயிலில் திருச்சுற்று மாளி.... 5. கையில் ஆலயத்து உமாபரமேஸ்வரியார்க்கு.... 6. உடையார் ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்.... 7. பதாவது வரை கொடுத்தன கல்லில் வெட்டியபடி ஆல.... 8. யத்து உமாபரமேஸ்வரியார்க்கு சாத்தி அருளக் குடுத்த தாலி.... 9. ஒன்று பொன் ஆடவல்லானால் இருகழஞ்சரை இவர்க்கே ஸ்ர...

தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப் பட்ட மிக அரிய தமிழ்க் கல்வெட்டு

தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப் பட்ட மிக அரிய தமிழ்க் கல்வெட்டு இதுவாகும். பெருந்துறைமுகமாகவும் மாநகரமாகவும் வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கிய கேண்ட்டன் என்னும் நகரம் தென்சீனாவின் மிக முக்கியமான பட்டினம். இந்தக் கல்வெட்டு கேண்ட்டன் நகருக்கும் வடக்கே 500 மைல் தூரத்தில் உள்ள ச்சுவான் ச்சௌ என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. ச்சுவான் ச்சௌ என்பதும் ஒரு முக்கிய துறை முகப்பட்டினமாக ஒரு காலத்தில் விளங்கியது. தமிழகத்துக்குச் சீனாவுடன் நேரடியாகவும் மற்ற நாடுகளின் மூலமும் நெருங்கிய தொடர்பு இருந்தது. கேண்ட்டன் முதலிய பட்டினங்களில் தமிழர்கள் குடியேற் றங்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர். குறிப்பாக வர்த்தக நிறுவனங்களும் கூட்டுற வுக் கழகங்களும் வர்த்தக மையங்களை நிறுவியிருந்தனர். குப்லாய்கான் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய அரசனான செங்கிஸ்கானுடைய நான்காவது மகனின் மூன்றாவது மகன். இவர் தான் பெய்ஜிங் நகரைக் கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினார். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவர் திகழ்ந்தார். புகழ்பெற்ற யுவான் அரச மரபை தொடங்கியவர். தமிழ்நாட்டில் பிற்காலப்...

ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீ இராசராசன்அவர்கள் துணைவியார்கள் உடன்

“பஞ்சவன் மாதேவி” பள்ளிப்படை

“பஞ்சவன் மாதேவி” பள்ளிப்படை கோயிலுக்குபோகணும்….வழி….என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, “ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. “பட்டீஸ்வரம்” தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான “பழையாறை” செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!. தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த “பஞ்சவன் மாதேவி” , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த ...

Isai (Music) Tamil inscription

Ancient Tamil Civilization's photo. Ancient Tamil Civilization's photo. Ancient Tamil Civilization's photo. Ancient Tamil Civilization's photo. Arachalur Music Inscription The cave inscriptions in Arachalur town, about 20 km from Erode. These are Isai Tamil – one of the three literary divisions of Tamil – inscriptions which date to the 2nd century B.C. The inscriptions, which were discovered by Raju, are important as they talk about dancing notes (tala). Isai (Music) Tamil inscription in ruins The oldest Isai Tamil inscription, dating back to the 2nd century, is no longer visible clearly. Soot, ash and stones have rendered illegible the inscription, which is in Tamili. It is in a cave, on the western end of the hillock in Arachalur. The inscriptions are tala notes (adavu) that a Bharatnatyam dancer dances to. It has five lines and as many rows, resembling a five-row - five-column matrix. It has been arranged in such a way that read either from left to right or ...

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.நாயக்கர் காலம்.

ஆழ்வார் திருநகரி

பலகணி (ஜன்னல் ) கலைநுணுக்கத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. - ஆழ்வார் திருநகரி. Thanks- K.Govindarajan

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.திருநெல்வேலி மாவட்டம்

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.திருநெல்வேலி மாவட்டம்

The temple of Swami Nellaiappar and Sri Kanthimathi Ambal

The temple of Swami Nellaiappar and Sri Kanthimathi Ambal is situated in the heart of the city. The river Tambravarani referred to by poets as "Porunai" flows round the town. In the distant past the town was a bamboo forest; hence it was known in those days as "venuvanam". One of the famous temples in Tamil Nadu steeped in tradition and history and also known for its musical pillars and other brilliant sculptural splendours, this is one of the largest temples in South India. Siva is said to have been worshipped by Agastya in a bamboo grove and by Rama after having killed Mareecha some nine miles away at Manoor. There is also a shrine to Vishnu near the sanctum, signifying the belief that Nellai Govindan (Vishnu) visited Tirunelveli to officiate the divine marriage of Shiva and Kantimathi. A little to south of Swami Nellaiappar Gopuram stands the Gopuram of Sri Kanthimathi Ambal temple. Thanks-Athma Nathan

அழகர்மலைப் பாறை ஓவியங்கள்

அழகர்மலைப் பாறை ஓவியங்கள்: மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அழகர் மலையில் பஞ்சபாண்டவர் குகை என அழைக்கப்படும் குகையில் செந்நிறப் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்படுக்கை, தீர்தங்கரர் சிற்பம் போன்ற வரலாற்றுக்கு முதன்மையான பதிவுகள் உள்ளன. இவற்றைப்பார்க்க நாம் போயிருந்தபோது நமக்கு அருகிலுள்ள உப்போடைப்பட்டி எனும் ஊரைச்சேர்ந்த பூசாரி செல்வம் நமக்கு வழிகாட்டி அழைத்துச்செல்ல, உடன் அவரின் ஆறு வயது மன் பெரியகருப்புவும் ஆர்வத்துடன் வந்துக்கொண்டிருந்தான். இவற்றைக்காண்பதற்குச் செல்ல கற்களால் படிக்கட்டுகள் போன்று அமைக்கப்பட்டும், இரும்பு ஏணிகள் பொறுத்தப்பட்டும் உள்ள கடினமான பாதையில் செல்ல வேண்டும். மலையின் பெரியபாறைப் பகுதிகளுக்கிடையே இயற்கையாகவே அமைந்த அழகிய சுனையுடன் கூடிய குகையின் பாறைச்சுவரில் ஆங்காங்கே பதிமூன்று இடங்களில் சிவப்புநிறத்தில் வரையப்பட்ட ஓவியங்களைக் காணலாம். இவற்றுள் பல சிதைந்துவிட்டிருக்கின்றன. இவற்றுள் முதன்மையானவை மனித உருவமும், குதிரைப் போன்ற விலங்கின் மீதமர்ந்த நிலையிலுள்ள ஒருவனை மற்றொருவன் அழைத்துச்செல்வதுபோல வரையப்பட்டதும் ஆகும். இதில் மனித உருவத்தைப் பொருத்தவரை அந்த உருவம...

சோழர் காலத்தில் கட்டப்பட்ட மதகு

இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட சோழ கங்கம் ஏரி.தற்போது வறண்ட நிலையில்.மேலும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மதகு அமைப்பு. Thanks-Anbalagan Aarumugam

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் திருவாயிலில் மாமன்னன் ராஜராஜன் சிற்பம்.......ஓர் ஆய்வு.

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் திருவாயிலில் மாமன்னன் ராஜராஜன் சிற்பம்.......ஓர் ஆய்வு. தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு நுழைவு வாயில்கள் , ராஜ கோபுரங்கள ,முறையே கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் எனப்படுகின்றன. இரண்டாவதாக உள்ள ராஜராஜன் திருவாயில் பிரமாண்டமான இரண்டு துவாரபாலகர்களுடன் ,பல புராண சிற்பங்கள்,எண்திசை காவலர்கள்,வினாயகர், முருகன்,துர்க்கை,என பல தெய்வ வடிவங்களையும் ,முனிவர்கள் சிலைகளையும் தாங்கி நிற்கின்றது. இதில் இரண்டு தளங்களுக்கு மேலுள்ள சிகரத்தின் மையத்தில் உள்ள மாடத்தில், சிவபெருமான் இடது தொடையில் உமையவள், எதிரில் வணங்கிய நிலையில் நின்று கொண்டு இருப்பவரை பார்த்தவண்ணம் அமர்ந்து இருக்கிறாள். இந்த உயர்ந்த இடத்தில, நின்று ராஜராஜீஸ்வரம் உடையாரை வணங்கிக் கொண்டிருப்பது யார், ? மன்னனாகத்தானே இருக்கமுடியும்..? சில் ஆய்வாளர்கள் இவரை, நாயக்க மன்னன் செவ்வப்பனாக இருக்கலாம் என்கின்றனர். இதே கோபுரத்தில் உள்ள முருகன் வடிவத்திற்கு அருகில் இருப்பவரும் செவ்வப்பன் என்கிறனர். தலையில் உள்ள சாய்வு கொண்டையயை வைத்து இக்கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.வேறு ஆதாரம் ஏ...