சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்றாவதான திருமுருகாற்றுப்படை பாடியவர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடப்பட்டவன் :: முருகப்பெருமான் திணை :: பாடாண்திணை துறை :: ஆற்றுப்படை பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 317 1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதற் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10 உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன், – மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் . . . .20 செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட்...
ART - LITERATURE - CULTURE