Skip to main content

Posts

Showing posts from 2014

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்றாவதான திருமுருகாற்றுப்படை

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்றாவதான திருமுருகாற்றுப்படை பாடியவர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடப்பட்டவன் :: முருகப்பெருமான் திணை :: பாடாண்திணை துறை :: ஆற்றுப்படை பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 317 1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதற் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10 உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன், – மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் . . . .20 செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட்...

பொருநர் ஆற்றுப்படை

பொருநர் ஆற்றுப்படை (இரண்டாம் பாட்டு) பாடியவர் :: முடத்தாமக் கண்ணியார் பாடப்பட்டவன் :: சோழன் கரிகால் பெருவளத்தான் திணை :: பாடாண்திணை துறை :: ஆற்றுப்படை பாவகை :: ஆசிரியப்பா மொத்த வரிகள் :: 248 அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது வேறுபுல முன்னிய விரகறி பொருந குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் விளக்கழ லுருவின் விசியுறு பச்சை …5 எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப் பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவா ழலவன் கண்கண் டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி ….10 எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப் பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின் … 15 ஆய்தினை யரிசி யவைய லன்ன வேய்வை போகிய விரலுளர் நரம்பின் கேள்வி போகிய நீள்விசித் தொடையல் மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி ….20 ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும் சீருடை நன்மொழி நீரொடு சிதறி அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் … 25 கொ...

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை பாடியவர் :: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடப்பட்டவன் :: ஓய்மானாட்டு நல்லியக்கோடன் திணை :: பாடாண்திணை துறை :: ஆற்றுப்படை பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 269 ———————– மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச் செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக் கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக் கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப வேனி னின்ற வெம்பத வழிநாட் காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் . . . .10 பாலை நின்ற பாலை நெடுவழிச் சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன் மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந் தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென . . .20 மால்வரை யழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி ஓதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக் களிச்சுரும் பரற்ற...

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை ———————– பாடியவர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடப்பட்டவன் :: தொண்டைமான் இளந்திரையன் திணை :: பாடாண்திணை துறை :: ஆற்றுப்படை பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 500 ———————– அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற் பாசிலை யழித்த பராஅரைப் பாதிரி வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப் பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக் கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச் சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப் . . . .10 பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக் குறுந்தொடி யேய்க்கும் மெலிந்துவீங்கு திவவின் மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற் பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ வெந்தெறற் கனலியடு மதிவலந் திரிதருந் தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப் பழுமரந் தேரும் பறவை போலக் . . . . .20 கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரித...

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு நனந்தலை யுலகம் வளைஇ நேமியடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப், பாடிமிழ் பனிக்கடல் பருகிவல னேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி -5 பெரும்புயல் பொழிந்த சிறுபுன் மாலை, யருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது -10 பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச், சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி னுறுதுய ரலமர னோக்கி யாய்மக ணடுங்குசுவ லசைத்த கையள் “கைய கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர -15 வின்னே வருகுவர் தாய” ரென்போ ணன்னநர் நன்மொழி கேட்டன மதனா னல்ல நல்லோர் வாய்ப்புட், டெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருத றலைவர் வாய்வது, நீநின் -20 பருவர லெவ்வங் களைமா யோயெனக் காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப் பக்; கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி -25 வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி, யுவலைக் கூரை யழுகிய தெருவிற் கவலை முற்றங் காவ நின்ற -30 தேம்படு ...

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக் காஞ்சி

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக் காஞ்சி —— பாடியவர் :: மாங்குடி மருதனார் பாடப்பட்டவன் :: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் திணை :: காஞ்சி பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 782 ———————– ஓங்கு திரை வியன் பரப்பின் ஒலி முந்நீர் வரம் பாகத் தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறிய வியன் ஞாலத்து வல மாதிரத்தான் வளி கொட்ப விய னாண்மீ னெறி யழுகப் பகற் செய்யும் செஞ் ஞாயிறும் இரவுச் செய்யும் வெண் திங்களும் மை தீர்ந்து கிளர்ந்து விளங்க மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத் . . .10 தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த நோ யிகந்து நோக்கு விளங்க மே தக மிகப் பொலிந்த ஓங்கு நிலை வயக் களிறு கண்டு தண்டாக் கட்கின் பத்து உண்டு தண்டா மிகுவளத் தான் உயர் பூரிம விழுத் தெருவிற் பொய் யறியா வாய்மொழி யாற் புகழ் நிறைந்த நன்மாந்த ரொடு . . .20 நல் லூழி அடிப் படரப் பல் வெள்ளம் மீக் கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை யலியிமிழ் துணங்கைச் சீர்ப் பிணை யூபம் எழுந் தாட அஞ்சு வந்த போர்க்களத் தான் ஆண் டலை அணங் கட...