திருக்குறள்
3. காமத்துப்பால்3.1 களவியல்3.1.1 தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. | 1081 |
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. | 1082 |
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. | 1083 |
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். | 1084 |
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. | 1085 |
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண். | 1086 |
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். | 1087 |
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. | 1088 |
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து. | 1089 |
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. | 1090 |
3.1.2 குறிப்பறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. | 1091 |
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. | 1092 |
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். | 1093 |
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். | 1094 |
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் | 1095 |
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். | 1096 |
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. | 1097 |
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். | 1098 |
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. | 1099 |
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. | 1100 |
3.1.3 புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. | 1101 |
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. | 1102 |
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. | 1103 |
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்? | 1104 |
வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள். | 1105 |
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். | 1106 |
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. | 1107 |
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. | 1108 |
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். | 1109 |
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. | 1110 |
3.1.4 நலம்புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். | 1111 |
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. | 1112 |
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. | 1113 |
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. | 1114 |
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை. | 1115 |
மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். | 1116 |
அறுவாய் நிறைந்த அவிர்மத க்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. | 1117 |
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மத. | 1118 |
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. | 1119 |
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். | 1120 |
3.1.5 காதற்சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். | 1121 |
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. | 1122 |
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். | 1123 |
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. | 1124 |
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். | 1125 |
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எம் காத லவர். | 1126 |
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. | 1127 |
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. | 1128 |
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ் வூர். | 1129 |
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும் இவ் வூர். | 1130 |
3.1.6 நாணுத்துறவுரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. | 1131 |
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. | 1132 |
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். | 1133 |
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. | 1134 |
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். | 1135 |
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். | 1136 |
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். | 1137 |
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். | 1138 |
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. | 1139 |
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. | 1140 |
3.1.7 அலரறிவுறுத்தல்
அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். | 1141 |
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். | 1142 |
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. | 1143 |
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. | 1144 |
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. | 1145 |
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. | 1146 |
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். | 1147 |
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். | 1148 |
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. | 1149 |
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர். | 1150 |
களவியல் முற்றிற்று3.2 கற்பியல்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. | 1151 |
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. | 1152 |
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். | 1153 |
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. | 1154 |
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. | 1155 |
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. | 1156 |
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. | 1157 |
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. | 1158 |
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ. | 1159 |
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். | 1160 |
3.2.2 படர்மெலிந்திரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். | 1161 |
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். | 1162 |
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து. | 1163 |
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். | 1164 |
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். | 1165 |
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. | 1166 |
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். | 1167 |
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. | 1168 |
> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. | 1169 |
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். | 1170 |
3.2.3 கண்விதுப்பழிதல்
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. | 1171 |
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்? | 1172 |
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. | 1173 |
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. | 1174 |
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். | 1175 |
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. | 1176 |
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். | 1177 |
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். | 1178 |
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். | 1179 |
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. | 1180 |
3.2.4 பசப்புறுபருவரல்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற. | 1181 |
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. | 1182 |
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. | 1183 |
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. | 1184 |
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது. | 1185 |
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. | 1186 |
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. | 1187 |
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல். | 1188 |
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். | 1189 |
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். | 1190 |
3.2.5 தனிப்படர்மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. | 1191 |
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அள க்கும் அளி. | 1192 |
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. | 1193 |
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். | 1194 |
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை. | 1195 |
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. | 1196 |
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். | 1197 |
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். | 1198 |
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. | 1199 |
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. | 1200 |
3.2.6 நினைந்தவர்புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. | 1201 |
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல். | 1202 |
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். | 1203 |
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். | 1204 |
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல். | 1205 |
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் உற்றநாள் உள்ள உளேன். | 1206 |
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். | 1207 |
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. | 1208 |
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. | 1209 |
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. | 1210 |
3.2.7 கனவுநிலையுரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. | 1211 |
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். | 1212 |
நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். | 1213 |
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. | 1214 |
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. | 1215 |
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். | 1216 |
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது. | 1217 |
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. | 1218 |
நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். | 1219 |
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். | 1220 |
3.2.8 பொழுதுகண்டிரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. | 1221 |
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. | 1222 |
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். | 1223 |
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். | 1224 |
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை? | 1225 |
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். | 1226 |
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். | 1227 |
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. | 1228 |
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. | 1229 |
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். | 1230 |
3..2. 9 உறுப்புநலனழிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். | 1231 |
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். | 1232 |
தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். | 1233 |
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். | 1234 |
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். | 1235 |
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. | 1236 |
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து. | 1237 |
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். | 1238 |
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். | 1239 |
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. | 1240 |
3.2.10 நெஞ்சொடுகிளத்தல்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. | 1241 |
காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. | 1242 |
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். | 1243 |
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. | 1244 |
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். | 1245 |
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. | 1246 |
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு. | 1247 |
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. | 1248 |
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு. | 1249 |
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். | 1250 |
3.2.11 நிறையழிதல்
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. | 1251 |
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். | 1252 |
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். | 1253 |
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். | 1254 |
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. | 1255 |
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். | 1256 |
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். | 1257 |
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. | 1258 |
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு. | 1259 |
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். | 1260 |
3.2.12 அவர்வயின்விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். | 1261 |
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. | 1262 |
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். | 1263 |
கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு. | 1264 |
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. | 1265 |
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. | 1266 |
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் விரன். | 1267 |
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. | 1268 |
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. | 1269 |
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். | 1270 |
3.2.13 குறிப்பறிவுறுத்தல்
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு. | 1271 |
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. | 1272 |
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு. | 1273 |
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. | 1274 |
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. | 1275 |
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து. | 1276 |
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. | 1277 |
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. | 1278 |
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது. | 1279 |
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. | 1280 |
3.2.14 புணர்ச்சிவிதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. | 1281 |
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் காமம் நிறைய வரின். | 1282 |
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண். | 1283 |
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் னெஞ்சு. | 1284 |
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. | 1285 |
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. | 1286 |
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. | 1287 |
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. | 1288 |
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். | 1289 |
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. | 1290 |
3.2.15 நெஞ்சொடுபுலத்தல்
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. | 1291 |
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. | 1292 |
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். | 12983 |
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. | 1294 |
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. | 1295 |
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. | 1296 |
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு. | 1297 |
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. | 1298 |
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. | 1299 |
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. | 1300 |
3.2.16 புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. | 1301 |
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். | 1302 |
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். | 1303 |
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. | 1304 |
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. | 1305 |
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. | 1306 |
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று. | 1307 |
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. | 1308 |
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. | 1309 |
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. | 1310 |
3.2.17 புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. | 1311 |
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. | 1312 |
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. | 1313 |
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. | 1314 |
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். | 1315 |
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். | 1316 |
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. | 1317 |
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. | 1318 |
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. | 1319 |
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. | 1320 |
3.2.18 ஊடலுவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளக்கு மாறு. | 1321 |
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். | 1322 |
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. | 1323 |
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. | 1324 |
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. | 1325 |
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. | 1326 |
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். | 1327 |
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. | 1328 |
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. | 1329 |
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். | 1330 |
Comments
Post a Comment