ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் ------------------------------------------------------- ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் ஆறுமுகநேரி லேபர் சால்ட் சமுதாயக் கூடத்தில் ஆலோசகர் பி.எஸ்.ஆர்.ஜெயானந்தன ் தலைமையில் நடைபெற்றது.காமராஜ் சோமசுந்தரி பள்ளிக் குழந்தைகள் இறை வணக்கம் பாடினர்.சங்கத் தலைவர் எஸ்.கணேஷ் பெருமாள் வரவேற்புரை ஆற்றி,ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு தாக்கல் செய்தார்.கே.வாலகுரு முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் த.த.தவசிமுத்து கலந்து கொண்டார். ஆறுமுகநேரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.பொன்ராஜ், என்.ராஜாசிங், டி.பாஸ்கர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் உள்ளூர் உப்பு உற்பத்திக்கு ஆதரவு தரும் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர்களான ஜெயின் குழுமத்திற்கும், நிறுவன நிர்வாக மூத்தஉதவித்தலைவர் ஜெயக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிக்கப்பட்டது. சங்க ஆண்டுவிழாவின்போது சென்ற ஆண்டு 10,12 ஆகிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தஆறுமுகநேரி பகுதி பள்ளி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது என்றும்,.சங்க...
ART - LITERATURE - CULTURE