தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் திருவாயிலில் மாமன்னன் ராஜராஜன் சிற்பம்.......ஓர் ஆய்வு. தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு நுழைவு வாயில்கள் , ராஜ கோபுரங்கள ,முறையே கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் எனப்படுகின்றன. இரண்டாவதாக உள்ள ராஜராஜன் திருவாயில் பிரமாண்டமான இரண்டு துவாரபாலகர்களுடன் ,பல புராண சிற்பங்கள்,எண்திசை காவலர்கள்,வினாயகர், முருகன்,துர்க்கை,என பல தெய்வ வடிவங்களையும் ,முனிவர்கள் சிலைகளையும் தாங்கி நிற்கின்றது. இதில் இரண்டு தளங்களுக்கு மேலுள்ள சிகரத்தின் மையத்தில் உள்ள மாடத்தில், சிவபெருமான் இடது தொடையில் உமையவள், எதிரில் வணங்கிய நிலையில் நின்று கொண்டு இருப்பவரை பார்த்தவண்ணம் அமர்ந்து இருக்கிறாள். இந்த உயர்ந்த இடத்தில, நின்று ராஜராஜீஸ்வரம் உடையாரை வணங்கிக் கொண்டிருப்பது யார், ? மன்னனாகத்தானே இருக்கமுடியும்..? சில் ஆய்வாளர்கள் இவரை, நாயக்க மன்னன் செவ்வப்பனாக இருக்கலாம் என்கின்றனர். இதே கோபுரத்தில் உள்ள முருகன் வடிவத்திற்கு அருகில் இருப்பவரும் செவ்வப்பன் என்கிறனர். தலையில் உள்ள சாய்வு கொண்டையயை வைத்து இக்கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.வேறு ஆதாரம் ஏ...