Skip to main content

Posts

சான்றோர்-நாடான் (இலக்கியவாணன் நாடார்)

திருவாலவாய நாடார் கல்விச் சேவை

1910ல்  விருதுநகரில் 1ம், 2ம் வகுப்பு நடத்தும் நோக்கில் பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை திருவாலவாய நாடார் என்பவர் தொடங்கி இருக்கிறார். வீடு வீடாகப் போய் பெற்றோரிடம் கெஞ்சி பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்து படிக்க வைத்திருக்கிறார். 1916லேயே 5ம் வகுப்பு வரை,பின்னர் 1922ல் 7ம் வகுப்பு வரை என வளர்ந்த பள்ளி "க்ஷத்ரிய பெண்கள் பள்ளி" என்ற பெயரால் அழைக்கப்பட்டு இன்று 110 வருடங்களைக் கடந்து நிற்கிறது. இங்கே காமராஜரின் தங்கை நாகம்மாளும் சில வருடங்கள் படித்ததாகக் கூறப்படுகிறது.  சரி, இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? பொதுவாகவே தமிழ்நாட்டில் பெண் கல்வி, பெண்ணுரிமை இது பற்றியெல்லாம் நீதிக்கட்சியும் பெரியாரும் மட்டுமே பேசியது போல் திராவிட ஆதரவாளர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நீதிக்கட்சியும் பெரியாரும் பேசுவதற்கு முன்பே பாரதியார் பேசினார் என்பது ஒருபுறம். மறுபுறம்,1913ல் திராவிட சங்கம் உருவானது. பின்னர் 1916ல்தான் அது நீதிக்கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதற்கெல்லாம் முன்பே 1910ல் இப்படி பெண்கள் பள்ளி உருவாகி இருக்கிறது என்ற தகவல் தெரிந்தால், "திராவிட...

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் நாடாண்ட நாடாரின் வரலாறு.... ...(Seran Arul)

நன்றி:பாண்டிய நாடாள்வான் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் நாடாண்ட நாடாரின் வரலாறு..... சூரிய சந்திர குலத்துக்கு ஆயிரம் வரலாறு உண்டு, அதில் ஒன்று  கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாக்கண்டத்திலுள்ள கிரீஸ் தேசத்தினின்றும் "கிளமென்ஸ்"என்ற சரித்திர ஆசிரியர் ,தம் உலக சுற்றுப்பிராயணத்தின் இடையே இந்தியாவிற்கும் வந்திருக்கிறார்.அலக்ஸாந்திரியா பட்டணத்தில் பிறந்த அவர் லத்தீன் பாஷையில் 'பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரே( periplus maris erythrae) என்ற பிரபல சரித்திர புஸ்தகம் ஒன்றை இவர் இயற்றிருக்கிறார்.அப்புத்தகத்தில் நாடாண்ட சூரிய சந்திர குல சத்ரிய சான்றோர்களின் அறிய வரலாற்றுத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன,அவை பின்வருமாறு 1.இந்தியாவின் மேல் கடற்கரையில், மைசூருக்கு மேற்கே அக்காலத்தில் அரசுபுரிந்த சாலிவாகணனைச் சேர்ந்த அரசர்களுடைய ஆட்சி முற்றிய பின் சான்றான்களின் ராஜாங்கம் வலுவடைந்தது 2.தென்கன்னடம் ஜில்லாவைச் சார்ந்த கலியாணபுரம் என்னும் துறைமுகம் (சாலியவாகண)சாராகனன்கள் காலத்திற் சிறப்புற்று விளங்கிப் பின்னர் சான்றார்களின் ஆளுகையிலும் செழிப்புற்று ஓங்கிற்று. 3.ஏதேனும் கிரேக்கக் கப்பல் அத்துறை...

பிரதோஷம் வழிபாடு

ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் இன்று தேய்பிறை பிரதோஷம் ( 02/12/2021) 🙏ஓம் நமசிவாய 🕉பிரதோஷம் என்றால் என்ன..? 🕉சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. 🕉சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன...

வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தீஸ்வரன்_கோவில் *************************************** நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்... பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்... 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு... மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்... தல வரலாறு ******************** சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோவில் ஆகும்.... இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும், அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்... இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு #புள்ளிருக்கு_வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது... #புள் என்ற சடாயு பறவை ராஜனும், #இருக்கு என்ற வேதமும், #வேள் என்ற முருகப்பெருமானும், #ஊர் என்ற சூரியன் ஆகிய நால்வரும், இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது... கோவிலின் குளம் சித்தாமிர்தம் குளம் என்று அழ...

ஜென்ம நட்சத்திரம் வரும்போது..

     நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு  அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள்  குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம்  செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்......................... உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது?  எப்படி செல்ல வேண்டும்?  அங்கு சென்றால் கிடைக்கும்  பலன் என்ன! ............... *1)   அசுவினி* கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லி...

தங்கத் தமிழகம்

#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?  சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.* அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. *#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.* இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? *எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ...