ஆறுமுகனேரியில் சுமார் 700 ஆண்டு பழமையான திருவாழிக்கல் மாயக்கூத்தன் பெயரிட்டது அறியப்பட்டுள்ளது ஆறுமுகனேரி அடைக்கலாபுரம் சாலையிலில் ஓர் பழமையான எல்லைக்கல் இருப்பதறிந்த எம்.ராஜ்குமார் கூறியதன் பேரில், திருச்செந்தூர் அரசுஆண்கள் மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் அ.கார்த்திகேயன் அவருடன் வந்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர், அரசின் தொல்லியல் துறையின் கோடைகாலக் கல்வெட்டு பெற்ற முனைவர் த,த,தவசிமுத்து இதுகுறித்து கூறியதாவது ; தற்போது ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் செல்லும் பெட்ரோல் பல்க் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் கிடைத்துள்ள திருவாழிக்கல்லில் கீழே உள்ள எழுத்துக்கள் வெள்ளைக்கல் என்பதால் அழிந்துள்ளன, இக்கல் சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதலாம். இக்கல்வெட்டில்’’ மாயக்கூத்தன்’ என்ற வரிகள் காணப்படுவது சிறப்பாகும்.திருவாழிக்கல் ( ஆழி – சக்கரம் ) பெருமாள் கோயில் வழிபாடு தடையற நடைபெறுவதற்காக முன்பு அக்காலத்தில் அரசு அதிகாரம் பெற்ற அலுவலரின்...