Skip to main content

திருச்செந்தூர்

கருவறை அருட்திரு ஆதிசங்கரர் சுவாமிகள் திருச்செந்தூர் வந்து,முருகனைப் பாடி, தனது நோய் நீங்கப் பெற்ற வரலாறு உண்டு.சுப்பிரமணியப் புஜங்கம் அன்ற அப்பாடல்கள் அக்காலத்தில் கோயில் கருவறை பாறையினுள் குடையப் பெற்ற குகையினுள் இருந்தது என்று கூறுகிறது. ‘செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும் கந்தமாமலைக் குகை வந்தன காணவே விழியெலாம் போற்றிடும் ஆறுமுகன் குகையிலே கதிரவன் ஆயிரம் செவ்வொளி’ [சுப்பிரமணியப் புஜங்கம்] 5 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மணற் படிவுப் பாறையில் முற்காலப் பாண்டிய மன்னர்களின் குடைவரைச்சிற்பத்திற்குச் சான்று கூறுவதாக குகைக் குடைவரை உள்ளது. பாலசுப்பிரமணியர் கருவறைத் தெய்வமாக பாலசுப்பிரமணியர் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் உள்ளார்.ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட அவரது மேற்கையில் தாயான சக்தி வேல் உள்ளது.கீழ்க்கை அடியவர்களுக்கு வரமளிக்கிறது.இடது மேலே உள்ள கை செபமாலையுடன்,கீழே உள்ள கை தொடையைப் பற்றியவாறு உள்ளது. சூரபத்மனை அழித்த பின்பு அத் தீவினை அகல தம்முடைய தந்தையை வழிபடும் எழிலானத் தோற்றத்துடன் உள்ளார். தம்மைக் காண வந்த தேவர்களை தம்முடைய தலையை லேசாகத் திருப்பி ஓரக்கண்ணால் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது வேறெங்கும் காணயியலாத அற்புதமாகும்.பிரமனின் செபமாலையைக் கொண்டுள்ளதால் பிரமனின் படைப்புத்தொழிலையும் செய்பவராகிறார். பாலசுப்பிரமணியருக்கு வலப்புறம் தந்தையான 5 லிங்கங்கள் 5 லிங்கங்கள் உள்ளன.பின்புறம் செகநாதர் எனப்படும் சந்திர லிங்கமும் இடது புறம் செகநாதர் எனப்படும் சூரிய லிங்கமும் உள்ளனர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற தமிழரின் உயர்ந்த பண்பாட்டினைக் காட்டுவதாக உள்ளது. கருவறையின் முன்பாக அர்த்த மண்டபம் .அதன் வாசலில்காவலர்களாக முருகனின் தளபதிகளும் பார்வதியின் காற்சிலம்பின் நவமணிகளுல் மாணிக்கவல்லியிடம் தோன்றிய வீரபாகுவும்,புட்பராகவல்லியிடம் தோன்றியவீரமாமகேந்திரரும் உள்ளனர். சண்முகர் கருவறையின் முன்பாக இடது புறம் சண்முகர் சந்நிதி உள்ளது.இவர் ஆறு முகமும் பன்னிரு கரமுடன் உள்ளார். சண்முகம் என்றால் ஆறுமுகம் என்று பொருள் படும். தென்திசை நோக்கி நின்ற நிலையில் உள்ளார்.அவருடன் இடப்புறம் வள்ளி நாயகியும்,இடப்புறம் தெய்வானை நாயகியும் உள்ளனர்.பன்னிரு தோள்களிலும் அமைந்துள்ளகரங்களில் வலது கைகளில் அபயம்,பாசம்,சக்கரம்,குறு வாள்,அம்பு,சக்திவேல்,இடதுகைகளில் வரதம், அங்குசம்,சேவற்கொடி,கேடயம்,வில்,வஜ்ரம் ஆகியன உள்ளன. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஆறுமுகனின் எழிலான திருக்கோலத்தைக் கூறுகின்ற போது,வானவருக்கு அருளுதல்,கழுத்தில் தொங்குகின்ற மாலையைப் பிடித்தல்,மார்போடு பொருந்துதல்,தொடை மேல் அமையப்பெற்ற மணியை ஒலித்தல்,தேவிக்கு மாலையைச் சூட்டுதல், துடியைப் பற்றுதல் ஆகிய செயல்களைச் செய்வதாகக் கூறுகின்றார். தற்போதுள்ள ஆறுமுகனின் வடிவம் வேறுபட்டுள்ளது ஆய்வுக்குறியது. வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் சண்முகர் வட்ட வடிவ அலங்காரத் தூண்கள் கொண்ட மூன்றடி உயர மேடையில் உற்சவ மூர்த்தியாக உள்ளார். அர்த்தமண்டபம் கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் [இடை நாழி] உள்ளது. கருவறை பலமற்ற வெள்ளைப்படிவுப்பாறைகளால்அமைந்தது. அதைத்தொடர்ந்து அர்த்த மண்டபம் கருங்கல்லால்அமையப் பெற்றது.மேலும் பாறையைச் சுற்றிலும் மூடியவாறு கருங் கல்லால் கட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம் [இடை நாழி]யில் நின்று திரிசுதந்திரர்கள்முருகனுக்கு அர்ச்சனை மற்றும் பாடல்களைப் பாடித் தொண்டு செய்கின்றனர்.அர்த்த மண்டபத்தின் இரு புறமும்முருகனின் படைத்தளபதிகளான வீரபாகுவும், வீரமகேந்திரரும் உள்ளனர்.அர்த்தமண்டபம் நுழைவு வாசல் நிலையில் விநாயகரின் சிற்பம் உள்ளது. மகா மண்டபம் அர்த்தமண்டபம் [இடை நாழி]யை அடுத்துள்ள மகாமண்டபம் பக்தர்கள் நின்று வழிபடுவதற்குரிய இடமாகும்.எழிலானச் சிற்பங்களுடன் அமைந்துள்ள இம் மகா மண்டபம் கருவறை மூலவரான கிழக்கேப் பாலசுப்பிரமணியருக்கும் உற்சவ மூர்த்தியான தெற்கேப்பார்த்த வள்ளி தெய்வானை சமேதரான சண்முகருக்கும் பொதுவானதாகஅமைந்துள்ளது. மகாமண்டபத்தில் வீரபாகுவிற்கு வலது புறம் உள்ள மேடையில் அருள்மிகு கரியமாணிக்க வினாயகரும், அருள்மிகு பார்வது அம்ம்மனும் உள்ளனர்.இவர்களுக்குப் பின்புறம் சிறிய துளை அமைப்பு உள்ளது.அவ் வழியேப் பார்த்தால் பஞ்ச லிங்கங்கள் தெரிகின்றன. மகாமண்டபத் தூண்கள் சிற்ப சாஸ்திரப்படி அமையப் பெற்றது.நாகபந்தம்,சதுரம், இடைக்கட்டு,குடம், கமலம்,பலகை மற்றும் போதிகையும் உள்ளது.போதிகையின் அமைப்பைக் கொண்டு பார்த்தால் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இம்மண்டபத்தின் வட மேற்கு மூலையில் பஞ்சலிங்கத்தை வழிபடச்செல்வதற்கான குடைவரை வழி உள்ளது.தொடர்ந்து செந்தில் நாயகர் சன்னிதி உள்ளது.அதனுள்ளே கருவூலஅறை உள்ளது. இவ்வறைக்கு இடப்புறம் ஆறுமுக நயினார்[சன்முகர்] கருவறை,அர்த்த மண்டபம் உள்ளது.இவரைச் சுற்றி வருவதற்க்கு சிறிய பாதையும் உண்டு. இச்சன்னிதிக்கு இடப்புறம் உள்ள அறையில் அலைவாயுகந்தப் பெருமான்,அஸ்திரத்தேவர், நடராசர்,வினாயகர்,சேரமான் பெருமான் நாயனார், அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் அய்ம்பொன் படிமங்கள் உள்ளன.இவர்களை வழிபட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியேறினால் தங்கக் கொடிமரத்தைக் காணலாம்.இப்பொழுது முதல் திருச்சுற்றிற்கு வந்துள்ளோம். முதல் திருச்சுற்று தங்கக் கொடிமரத்தைக் கும்பிட்டு விட்டு வலமாகச் சென்றால் தென் கிழக்கு மூலையில் மடைப்பள்ளி உள்ளது.அதற்கு முன்பாக இடது புறம் உள்ள திண்ணையில் சிறிய யாககுண்டம் உள்ளது.தினசரி கோயில் நடை திறந்து வழிபாடு தொடங்கும் போது இந்த யாககுண்டத்திலிருந்து விநாயகருக்குப் பூஜை செய்து அதிலிருந்து நெருப்பினை எடுத்துச் சென்று தீபம் ஏற்றுவது வழக்கம். தொடர்ச்சியாக இரண்டாம் திருச் சுற்றிலிருந்து முதல் திருச்சுற்றிற்கு வரும் ஆறு படிக்கட்டுகளும், அதனுடைய மேற்புறம் வள்ளி,தெய்வானை சமேதராக குமாரவிடங்கப்பெருமானின் சன்னிதியும்உள்ளது.வில்லேந்திய முருகனின் அரியத் தோற்றம்.வலக்கைகளில் முன்கை அம்பினைப் பற்றிக் கொண்டும் ,பின் கை சக்தி வேலினைப் பற்றிக் கொண்டும் உள்ளது.இடக்கைகளில் முன் கை வில்லினைத்தாங்கிப் பிடித்தவாறும்,பின்கை வச்சிராயுதத்தைப் பிடித்தவாறும் உள்ளது கலியுகக் கந்தப் பெருமானின் அருள்திறத்தைக் காட்டுவதாக உள்ளது. குமாரவிடங்கப்பெருமான் வள்ளி,தெய்வானை சமேதராக திருக் கல்யாணங்களுக்கு எழுந்தருளும் பெருமை பெற்றுள்ளதால் ‘மாப்பிள்ளைச் சாமி’ என்று பக்தர்களால் பாசமுடன் அழைக்கப்படுகிறார். கருவறையின் மூன்று வெளிப்[சுவர்களிலும்]பக்கங்களிலும் தேவக்கோட்டங்கள் உள்ளன.தெற்கேயுள்ளதேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியின் அருள் பொழியும் சிற்பம் உள்ளது. சிவபெருமான் ஆசிரியராகக் காட்சி தரும் படிமம் இது.இவரது வலது கால் பீடத்திலிருந்து தொங்கிக்கொண்டு, கீழே விழுந்து கிடக்கும் முயலகனை மிதிதவாறு உள்ளார்.இடது காலை மடித்து வைத்து உள்ளார்.ஞானத்தின் வடிவமான கல்லால மரத்தின் கீழ் சின் முத்திரையுடன் புன் முறுவலுடன் உள்ளார்.கூர்ந்து நோக்கிப் பார்த்தால் புன்னகையைக் காணலாம். தட்சிணாமூர்த்தியின் முன்புறம் திண்ணையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் எழில் மிகுச் சிற்பங்கள் தனித் தனியே வரிசையாக வட திசை நோக்கி கை கூப்பியவாறு உள்ளனர்.இவர்களுக்கு அருள் தந்தவாறு கிழக்கு திசையைப் பார்த்தவாறு பார்வதி அம்மன்,வினாயகர்,சிவலிங்கம் உள்ளனர்.தொடர்ந்து கிழக்கு திசையை நோக்கியவாறு வள்ளி அம்மன் கோயில் உள்ளது.கருவறை,அர்த்த மண்டபத்துடன் வடக்கு நோக்கி ஏறி இறங்கும் படிக்கட்டுடன் அமையப் பெற்ற இச்சன்னிதியில் தாமரைப் பூவை இடக்கையில் பிடித்தவாறு வலக்கையை எழிலாகத் தொங்க விட்டவாறு கருணையே வடிவாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.அர்த்த மண்டபத்துடன் வட பகுதியில் சுவாமியின் பள்ளியறை உள்ளது.சுவாமியின் திருப் பள்ளியெழுச்சியைக் காண்பதற்கேதுவாக அர்த்த மண்டபத்தின் தெற்குப் பகுதியில் வாசலொன்று அமைக்கப்பட்டுள்ளது. இச் சன்னிதியில் சாம்பிராணிப் புகை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.குங்குமப் பிரசாதம் வழங்கப் படுகிறது. வள்ளி அம்மன் கோயில் கருவறை ,அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் அதிஸ்டானம்,பிரஸ்தரம்,ஆகியன அதி நுட்பமானகலை நயத்துடன் உள்ளன்.அபிசேக நீர் வெளியேற பிரணாளஅமைப்பு உள்ளது.வள்ளி அம்மனை வழிபட்டு பிரதட்சணமாக [வலதுபுறமாக]வரும் போது பின்புறம் நாகப்பன், சிவபெருமான்,வினாயகர்,அம்பாள்,காசிவிசுவனாதர்,விசாலாட்சி,சங்கரநாராயணர்,நந்தீஸ்வரர்,வேதபுரீஸ்வரர், வாதபுரீஸ்வரர்,நாகனாதேஸ்வரர் ஆகியோர் தனித்தனிப் பீடங்களில் அமர்ந்துள்ளனர் இடதுபுறம் யாகசாலை உள்ளது.யாகசாலையின் முன்னால் கோட்ட தேவதையாக மூலவரான பாலசுப்பிரமணியசாமிஇரண்டடி உயரத்தில் மெய் சிலிர்க்கவைக்கிறார். மூலவரை அருகில் நின்று பார்க்க முடியாத மனக்குறையை இவர் போக்குகிறார். யாகசாலைக்கு இடதுபுறம் தெய்வானை அம்மன் கோயில் உள்ளது.மூன்றரை அடி உயரத்தில் வலக்கையில் குமுத மலரைப் பிடித்தவாறு இடக்கையை எழிலாகத் தொங்க விட்டவாறு ’யாமிருக்கிறோம் பயம் வேண்டாம்’என்றவாறுதேவர்களின் தலைவனான தேவேந்திரனின் தவப்புதல்விதெய்வானை அம்மன் காட்சி தருகிறார். கருவறை, அர்த்தமண்டபம் கலை நயத்துடன் அமைக்கப்பெற்றுள்ளதுஅர்த்தமண்டபத்தின் வெளிச்சுவற்றில் தென் புறம் சூரசம்காரக் காட்சியும், வடபுறம் வள்ளி தினைப்புனத்தைக் காவல் புரியும் காட்சியும் கந்தபுராணத்தை நினைவூட்டுகிறது. தெய்வானை அம்மன் கோயிலுக்கு முன்புறம் மூலவரின் கருவறையின் வடபுற தேவக்கோட்டத்தில் மயிலருகே நிற்கும் மயூரநாதரின் படிமம் காணப்படுகிறது.இவரை வழிபட்டுச்சென்றால் சண்டிகேசுவரரின் கோயில் வரவேற்கும்.சிவன் கோயிலில் அமையப்பெறுமிவர் முருகன் கோயிலில்அமர்ந்துள்ளது ’சிவனும் முருகனும் ஒன்றே’ என்ற அரிய தத்துவத்தை உணர்த்துவதற்கேயாம். தொடர்ந்து திருக்கோயிலின் அய்ம்பொன் படிமக் கண்காட்சிக் கூடம் உள்ளது. இங்கு பிற்கால கட்டபொம்மன் வழிபட்ட சிலைகள்,முற்கால பாண்டியர்கள், சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சிலைகளும் காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன. அதற்கு இடதுபுறம் நடராசப் பெருமானின் கோயிலாகும்.இச்சிலையானது உலாந்தகர்களால் கொள்ளையடிக்கப்பட்டு செந்திலாண்டவனின் அருளால் மீட்கப்பட்ட அருட் பெருமை வாய்ந்ததாகும்.இவரை வழிபட்டுச் சென்றால் சனீஸ்வரர் தனது காக்கை வாகனம் முன் எழிலாக நிற்கிறார்.இவருக்குப் பரிகாரம் செய்தால் தீவினை அகலும்.இச்சன்னிதிக்கு இடப்புறம் பைரவருடைய கோயில் உள்ளது.சேத்திரபாலர் என்றழைக்கப்படும், இவர் நாய் வாகனத்துடன் நின்ற தோற்றத்துடன் உக்கிரமாக உள்ளார்.தினமும் இரவு கோயிலின் திறவுகோல் இவரிடம் ஒப்படைக்கப்பட்டு,மறுநாள் அதிகாலையில் அங்குச முத்திரையால் திறவுகோலைப் பெறுவர்.தினமும் மடைப் பள்ளியின் அடுப்பைப் பற்ற வைத்திட பைரவர் கோயில் தீபத்திலிருந்து தீபம் ஏற்றி அத்தீயைப் பயன்படுத்துகின்றனர்.முதல் சுற்றில்கருவறை, அர்த்தமண்டபம்,மகாமண்டபம் சுவர்களுக்கருகேபரிவாரதெய்வங்களுக்கான பலி பீடங்கள் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று இரண்டாம் திருச்சுற்றுக்குச் செல்வதற்காக முதலாம் திருச்சுற்றின் தங்கக் கொடிமரம் வழியாக மேற்கே வெளியேறினால் செப்புக்கொடிமரம் வருகிறது.இக்கொடி மரத்தை வலமாகச் சுற்றி இரண்டாம் திருச்சுற்றுப் பாதையில்தெற்கேச் சென்று பின்பு மேற்கே வர வேண்டும்.ஆறுமுகப் பெருமானின் தோற்றத்தைக் கண்டுவணங்கி நிமிர்ந்தால் யானை மண்டபம் என்றழைக்கப்படும் அயிராவத மண்டபத்தில் நிற்கலாம்.எழில் மிகு அணிவொட்டித்தூண்கள்,நடராசரின் சிற்பம்,ஆறுமுகமும் பன்னீரண்டு கைகளுடன் முருகனின் தோற்றம்,காளை மீதமர்ந்து திருமணக் காட்சி தரும் பார்வதி அம்மன் சமேத சிவபெருமான், முருகனின் காவலர்களின் மிடுக்கான சிற்பங்கள் ஆகியன காண்போரை வியக்க வைக்கின்றன.வாசலில் சேத்திரப்பாலகர்கள் எட்டு அடி உயரத்தில் உள்ளனர்.உள்ளே சென்று கலியுகக் கடவுளான கந்தனைவழிபடுங்கள், வேண்டுபவற்றைத் தருவான். பயபக்தியுடன் செல்லுங்கள் என்று எச்சரிக்கைச் செய்வது போல உள்ளனர். தொடர்ந்து, மேற்கேச் சென்றால் வலப்புறச்சுவற்றில்சிறிய தட்சிணா மூர்த்தி உள்ளார்.அடுத்து அலங்கார மண்டபம் கன்னி மூலையில் வினாயகர், 108 சிவலிங்கம்,சூரசம்கார மூர்த்தியின் சம்காரக்காட்சிகாணப்படுகிறது. முருகப்பெருமான் அன்னை பார்வதி அள்ளித்த சக்தி வேலால் சூரனை அழித்துஅவனது உடலை இரண்டாகப் பிளப்பது போலவும் அதிலிருந்து மயிலும் சேவலும் தோன்றுவது போலவும் புடைச்சிற்பம் அமைந்துள்ளது. தொடர்ந்து ஆன்மலிங்கம்,அருணகிரிநாதரின் செப்புப் படிமம்உள்ளது. இதனைத்தொடர்ந்து மேலக்கோபுர வாசலிலிருந்து கீழிறங்கும் 27 படிக்கட்டுகள் உள்ளன.இவைகள் நமக்கு விண்ணில் உள்ள 27 நட்சத்திரங்களைக் காட்டுகிறது.இப் படிக்கட்டுகளுக்கு எதிரே மேலக் கோபுர வாசல் வினாயகர் சன்னிதி உள்ளது.பத்து அடி உயரத்தில் கம்பீரத்தோற்றத்தில் இவர் காட்சி அளிக்கிறார். இவருடைய இடது தொடையில்லட்சுமி அம்மனை அமர வைத்து அபயக்கரம் காட்டி தைரியத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். இவரை வழிபட்டுவிட்டு வலமாகச் சென்று இடதுபுறம் பார்த்தால் பள்ளி கொண்டப் பெருமாளின் கோயில் உள்ளது.நிமிர்ந்துப் பார்த்தால் பல லட்சம் ஆண்டு பழமை வாய்ந்த சந்தனாமலையின் ஒரு பகுதியைக் காணலாம். துளசியின் மணம் வீசும் உட்புறம் சென்றால்அரங்க நாதப்பெருமாள் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார்.இடக்கை இடுப்பில் வைத்துள்ளர். வலக்கையில் கீழ்க்கை வரத முத்திரையுடனும், உள்ளங்கை சக்கரப் படையையும் கொண்டுள்ளது. மருமகனான முருகப் பெருமானுக்கு படைக்கலம் தந்தருளும் காட்சியாகும். பாறைப் பகுதியில் ஸ்ரீ கஜலட்சுமியின் மூன்றடி சிற்பமும்,ஆதிசேசனின் மீது ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளின் கிடந்தக்கோலத்தின் பத்து அடி சிற்பமும் முற்காலப் பாண்டிய மன்னர்களின் குடைவரைச் சிற்பக் கலைக்குச் சான்றாக உள்ளது. பல்லவ மன்னர்களுக்கு முன்பாகவே பாண்டிய மன்னர்கள் பாறைகளைக்குடைந்து கோயில் கட்டும் கட்டிடநுட்பங்களைத் தெரிந்திருந்தார்கள் என்பது அரிய செய்தியாகும். ஸ்ரீ செந்தில்கோவிந்தர் மேற்கேத் தலை வைத்து தெற்குநோக்கிப் படுத்துள்ளார்.ஸ்ரீ பூதேவி[மண்மகள்]பாதத்தருகேயும்,ஸ்ரீ நீளா தேவி [ஆயர் மகள்] ஸ்ரீ பூ தேவி அருகிலும்,ஸ்ரீ தேவி [ஸ்ரீ லட்சுமி] பெருமாளின் தலையருகேயும் அமர்ந்துள்ளனர்.கொப்பூள்க் கொடியிலிருந்து எழுந்த தாமரை மலரில் நான்முகக் கடவுளாகிய பிரமன் அமர்ந்துள்ளார்.வானத்தில் தேவர்கள் இருப்பது போன்ற புடைச் சிற்பங்கள் உள்ளன.கஜல்ட்சுமியின் திரு உருவம் செந்தாமரையில் அமர்ந்துள்ள எழில்மிகுத் தோற்றம் இனியதாகும்.இருபுறமும் யானைகளிரண்டு குடத்து நீரால் அம்மனுக்கு அபிசேகம் செய்யும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். செந்தில் கோவிந்தர் சன்னிதிக்கு எதிரே கருடாழ்வார் பெருமாளைக் கும்பிட்டவாறு குத்துக் காலிட்டவாறு உள்ளார்.இவரையும் கண்டு பின்பு கிழக்கு நோக்கி வரவேண்டும் தொடர்ந்து தெற்கேத் திரும்பினால் செப்புக் கொடிமரத்தைக் காணலாம்.இக் கொடி மரத்தின் வழியே மூலவரான பால சுப்பிரமணியரைக் காணலாம்.இக் கொடிமரத்திற்கு கீழ்புறம் சுவற்றில் சிறிய துளை ஒன்று உள்ளது.இதில் காதை வைத்துக் கேட்டால் ஒம் என்ற சப்தம்கேட்கும்.கடலலைகள் என்னேரமும் முருகப் பெருமானை ஒம் என்னும் மந்திரச் சொற்களால் அர்ச்சனை செய்கின்றன.கொடி மரத்தின் முன் புறம் கம்பத்தடி வினாயகரின் சிறிய சன்னிதி உள்ளது. இவ்வாறு இரண்டாம் திருச்சுற்றை சண்முகரின் சன்னிதி வரை சென்று நிறைவு செய்யலாம். இரண்டாம் திருச்சுற்றின் தென் கிழக்கு மூலையில் பக்தர்கள் வெளியேறுவதற்கான வழியொன்று உள்ளது . இம்மூலையில் ஆயிரமாண்டுகள் பழைமை வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன. கி.பி.875 இல் இரண்டாம் வரகுண பாண்டியன் முருகப்பெருமானின் வழிபாட்டிற்காக 1400 பொற்காசுகளைவழங்கி அதன் வட்டியிலிருந்து வழிபாடு, திருவிழாக்களை நடத்தியதை அக்கல்வெட்டு கூறுகிறது. சண்முகர்சிலையின் அற்புதம் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.திருமலைக்கு கப்பல் படை இல்லாததும் தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கஇயலாமல் போனதும் அந்நியரின் கையும் மதமும் வேறூன்ற வித்திட்டது.கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.கொற்கைக் குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும்,சங்குகளும், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் அக்கொள்ளையர்களின் கொள்கைகளாகயிருந்தன. கி.பி.1635 இல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலையுடன் நட்புடனிருந்ததால் தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலைமன்னர் கண்டு கொள்ளவில்லை.ஏனென்றால்திருமலைக்கும் இராமனாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத உதவியாலும்,படை உதவியாலும் திருமலை வெற்றி பெற்றார்.இந்த உதவி எதிரொலியே கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருக்கச் செய்தது.எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்கள் மற்றும் பிற மக்களும் பல இன்னல்களைஅனுபவித்தனர்.காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவுமிருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது.டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர்.கி.பி.1648 இல் போர்ச்சுக்கீசியர்களூக்கு ஆதரவான திருமலை,டச்சுக்காரர்களை காயல்பட்டினத்திலிருந்து வெளியேறச் செய்தார்.இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்து கொண்டதாக நினைத்த டச்சுக்காரர்கள்திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியதுடன்,அங்கிருந்த அப்பாவி இந்துக்களைக் கொள்ளையிட்டனர்.வீடுகளுக்குத் தீயிட்டனர்.தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர்.கடற்கரைக் கோயிலின் பாறைக் குடைவரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து றிந்தனர்.கற்சிற்பங்களை உடைத்தனர்.அங்கிருந்த எழில்மிகு அய்ம்பொன் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோயில்,வெயிலுகந்தம்மன் கோயில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன்நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.தங்களுடைய தெய்வத்தை களவாடிச் செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்களாகிய தலத்தார் [அனைத்து ஜாதி மக்கள்] தங்கள் கையில் கிடைத்தஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர்.வேதங்களோதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர்.திரிசுதந்திரர்கள் உட்பட பலர் உள்ளூர் மக்கள் மாண்டனர்.டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கிப் பயணமானர். திருச்செந்தூரைத் தாண்டுமுன்னே திடீரெனபுயல்,மழை தாக்கியது. தெய்வமென்று பாராமல் சிலைகளைத் தூக்கி வந்ததுதான் காரணம் என்பதை உணர்ந்தனர். டச்சுக்காரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து விடக் கூடாது என்பதற்காக சண்முகரின் சிலை,நடராஜப்பெருமானின் சிலை ஆகியவற்றை கடலினுள் எறிந்தனர்.முருகனின் அற்புதத்தால் புயலும்,மழையும் நின்றது. டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகனின் கோயிலைக் கையெடுத்துக் கும்பிட்டு எஞ்சிய கோடிக்கணக்கான நகைகளுடன் இலங்கை சென்றனர்.தென்பகுதிக்கு திருமலையின் வரிவசூல் செய்யும் அலுவலராகப் பணியாற்றிய வடமலையப்பப்பிள்ளை தூங்கும் போது முருகப்பெருமான் கனவில் காட்சி தந்து கடலினுள் தாமிருக்கும் இடத்தின் மீது ஒரு எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் வானத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்று கூறி மறைந்தார்.தம்முடைய பணியாளர்கள்,நண்பர்கள்,கடலில் முத்துக் குளிக்கும் மீனவர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு கடலுக்குள் படகில் சென்றார்.சிறிது தூரம் சென்றவுடன் முருகன் கனவில் கூறியது போல வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.மெய் சிலிர்த்த அவர்கள் முருகா முருகா என்று மெய்மறந்து முழக்கமிட்டு தலை மீது கைகூப்பினர்.அங்கே எலுமிச்சம்பழம் ஒன்று தந்தது. அந்த இடத்தில் குதித்தனர்,என்னே அற்புதம் சண்முகர்சிலையும்,நடராஜர் சிலையும் கிடைத்தது.நடராஜர் சிலையின் பீடத்தில் திருநள்ளாறு என்று எழுதப்பட்டிருந்தது.மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர்.உடைந்த மூலவர் சிலை புதிதாகச் செய்யப்பெற்று பிரதிஷ்டை செய்யப் பெற்றது. குடமுழுக்கு நடைபெற்றது.டச்சுக்காரர்களின் கொள்ளையால் மனம் வருந்திய திருமலைகொள்ளையடித்துச் செல்லப்பட்ட எஞ்சியப் பொருட்களை மீட்டால்தான் மக்கள் மதிப்பார்கள் எனக் கருதி டச்சுக்காரர்கள் கோரிய பொன்னை தமது காயல்பட்டினம் கணக்கப் பிள்ளை மூலமாக இலங்கைக்குக்கொடுத்தனுப்பி மீட்டார்.கடலினுள் டச்சுக்காரர்களைச் சிலையைப் போடவைத்ததும்,சிலை இருந்த இடத்தைக் காட்டியதும் செந்திலாண்டவனின் அற்புதங்களுள் சிறப்பாகும். நக்கீரனுக்கு அருள்புரிந்த முருகன் முக்கண்ணனான சிவபெருமானோடு எற்பட்ட வாக்குவாதத்தினால்,பெரு நோயான குஷ்டத்தால் அவதிப்பட்ட நக்கீரர் தினமும் சிவனைத் தவறாமல் வழிபட்டு வருகின்றார்.அவ்வயம்,கைலாசம் சென்று சிவனைத் தரிசித்தேத் தீருவது என்ற தீர்மானத்தில் செல்லும்போது திருப்பரங்குன்றத்தில் குளமொன்றினருகில் அமர்ந்து வழிபடத் தொடங்கினார் அப்போது அங்கிருந்த கல்முகி என்ற பூதம் அவரைச் சோதிக்க அரசமரமொன்றிலிருந்து ஒரு அரச இலையை விழச் செய்தது.அவ்விலையானது கீழே இருந்த தண்ணீரில் விழுந்து,அதன் ஒரு பாதி மீனாகவும் மறு பாதி பறவையாகவும் மாறியது .இக்காட்சியைக் கண்ட நக்கீரர் மெய்மறந்து நின்றார்.சிவ பூஜை செய்ய மறந்த நக்கீரனை கல்முகி பூதம் உடனே கைது செய்து திருச்சீரலைவாயில் [திருச்செந்தூர்] உள்ள குகையொன்றில் சிறை வைத்தது.தன்னை விடுவிக்க அத்தனை தெய்வங்களையும் போற்றித்துதித்தும் பயனில்லாததால் ,தம்மை உற்ற தெய்வம் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கந்தப் பெருமானே என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை என்ற நூலை பாடினார்.நிறைவாக, ’உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின் செல்லேன் பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே’ என்று மனமுருகப் பாடியதும் சக்தி வேலாயுதத்துடன் தோன்றிய முருகன் நக்கீரரை மீட்டார்.அவருடன் சிறை வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.முருகனின் திருவிளையாடலால் தமிழின் பெருமையை ஆறுபடை வீடுகளின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்பும் அற்புதமான சங்க இலக்கியம் தமிழனுக்குக் கிடைத்தது. ஆதிசங்கராச்சாரியரின் நோய் தீர்த்த செந்தூரான் கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்ற அவர் தன்னுடைய தாயார் தண்ணீரெடுக்கச் செல்லும் ஆறு வெகு தூரத்தில் உள்ளது என்பதற்காக அவ்ஆற்றையே தன்னுடைய வீட்டிற்கு அருகில் திரும்பி ஓடச்செய்த ஆற்றல் மிக்கவர். மிகப்பெரிய சித்தரான அவரை காச நோய் தொற்றிக்கொண்டது. அதிலிருந்து மீள் முடியாமல் துன்பமடைந்தார்.சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். அப்போது தோன்றிய சிவன்,அசுரனை சம்காரம் செய்த அற்புதத் தலமான திருச்செந்தூர் செல்வாய் அங்கு எம்முடைய அம்சமாக வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானைப் பணி ; உன்னுடையநோயைக் குணமாக்கும் ஆற்றல் கலியுகக் கந்தனிடமே உள்ளது என்றார்.ஆகாய வழியாக செந்தூர் வந்த சங்கரர், முருகப்பெருமானை குகைக் குடைவறையில் ஆதிசேஷன்[பாம்பு] முருகனின் பாதங்களைப் பூஜை செய்யும் அற்புதக் காட்சியைக் கண்டார்.தீராத தன்னுடைய வயிற்றுவலியைத் தீர்த்து வைத்திட முருகனிடம் வேண்டி கோயிலில் வழங்கிய விபூதியையும்,பன்னீர் இலையையும் உண்டார்.என்னே அற்புதம் அடுத்த நொடியில் அவரது நோய் அகன்றது.உடனே முருகனைப் போற்றி சுப்பிரமணிய புஜங்கம்[புஜங்கம் என்றால் பாம்பு என்று அர்த்தம்] என்ற நூலைப் பாடினார்.’’கண்டால் நின் இலை நீறு கைகால்வலிப்புக்-காசம் கயம்குட்ட முதலாய நோயும்-விண்டோடு மேபூத பைசாசம் யாவும்-வினையாவுமே செந்தி அமர்தேவ தேவே’’என்ற பாடலுடன் சிறப்பு வாய்ந்தது. அருணகிரிநாதருக்கு வழி காட்டிய முருகன் திருவண்ணாமலையில் பிறந்து சராசரி மனிதனாக சிற்றின்பத்தில் வீழ்ந்து நோய்வாய்ப்பட்ட அருணகிரிநாதர் ,மனமுடைந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி அதிலிருந்து கீழே விழ;முருகப்பெருமான் அவரைத்தாங்கி பிடித்தார்.முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார்.மனமுருக வழிபட்ட பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழிஎல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரி வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது.திருச்செந்தூரில் முருகனில் சிவனைக் கண்ட அருணகிரியார் ’கயிலை மலையனைய செந்தில்’ என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும் திருத்தாண்டவம் ஆடிக்காட்டினார்.இக்காட்சியை தற்போது கோயிலில் நடைபெறும் ஏழாம் திருவிழா நாளில் ‘சிவப்புச் சாத்தி’செய்யப்படும் நாளில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார். குமரகுருபரருக்கு அருளிய முருகப்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் சைவவேளாளர் மரபைச் சேர்ந்த சண்முகசிகாமணி கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் பிறந்த குமரகுருபரர் தமது மூன்று வயதளவிலும் வாய் பேசாமல் ஊமை போலிருந்தார்.அது கண்ட பெற்றோர் பெருந்துயரடைந்தனர்.இதற்கிடையில் பிறந்த இரண்டாவது குழந்தை வாய் பேசியது.இதனால் மேலும் மனம் வருந்தினர்.அய்ந்து வயதானது குமரகுருபரனுக்கு, ஊமைக் குழந்தையை தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் முருகனின் கோயிலுக்கு வந்தனர்.முருகனின் சன்னிதி முன்பு குழந்தைக் கிடத்தினர் 40 நாட்கள் விரதமிருந்தனர்,தினமும் மனமுருக வேண்டிக்கொண்டனர்.யாதொரு பலனும் தெரியவில்லை.மனமுடைந்த தம்பதியர் நாளை ஒரு நாள் பார்ப்போம் முருகன் அருளீயாவிடில் நாமிருவரும் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்ற மனமுறுதியைக் கொண்டனர்.காலையில் கடலில் நீராடி கொடிமரத்தடியில் மகனைக் கிடத்தி விட்டு முருகனைத் தரிசிக்கச் சென்றனர்.அந்நேரம் முருகன் கோயில் அர்ச்சகர் வடிவில் வந்து குமரகுருபரன் முன்பு ஒரு வெண்டாமரைப் பூவொன்றினைக் காட்டி இது என்ன என்று கேட்டார்.அது நாள் வரையிலும் பேசாமலிருந்த ஊமைக் குழந்தை ’பூ’ என்றது.’சைவம் தழைக்கப் பாடு’என்று முருகன் கட்டளையிட்டு மறைந்தார்.’பூ மேவு செங்கமலப் புத்தேளும் 'என்ற பாடல் அடியை முதலாகக் கொண்டு கந்தர் கலி வெண்பா நூலைப் பாடி முருகனின் பெருமைக்குப் பெருமைச் சேர்த்தார்.ஊமையாய் இருந்தவனை கவி பாடச் செய்து குமரி முதல் காசி வரை பாடலால் உலகம் போற்றச் செய்த அற்புதம் செய்தார் நமது செந்திலாண்டவர். திருச்செந்தூரில் மாத பூஜையும் -பலன்களும் ------------------------------------------- தை தை மாதம் அகில் தூபமிட்டு வழிபட்டால் சிவ தரிசனம் காணலாம்.அனைத்து சங்கராந்திகளிலும் முகாரம்ப தீர்த்தத்திலும் ,கந்த புஷ்கரணி தீர்த்தத்திலும் நீராடி விட்டு சிறு பயறு கலந்த செந்நெல் அரிசிச் சோற்றை முருகனுக்குப் படைத்து வழிபட்டால் நூறு யாகம் செய்த பயனடையலாம். மாசி மாசி மாதம் வதனாரம்பத்தீர்த்தத்தில் நீராடி செந்திலாண்டவரை வழிபட்டால் இப்பிறவி கடைசியாகும். பங்குனி பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அமரபட்சத்து நவமி திதிகளில் கடலில் நீராடி கந்தனை வழிபட்டால் எல்லா பாவங்களும் அகலும். சித்திரை சித்திரை மாதம் முகாரம்பத் தீர்த்தத்தில் குளித்து பூரணச் சந்திரன் காலத்திலும்,உத்திர, தட்சிணாயக் காலங்களிலும் வேலவனைத் தொழுது நின்றால் முருகனருளை உடனே பெறலாம். வைகாசி வைகாசி மாதம் சுக்கிலபட்சம் மூன்றாம் திதியிலும் விசாக நட்சத்திரத்தின் போதும் வள்ளிமணாளனை திருச்செந்தூரில் வழிபட்டால் துக்கங்கள் அகலும்,நோயற்ற வாழ்வு பெறலாம். ஆனி ஆனி மாதத்தில் பூரணச் சந்திரன் காலத்திலும் கிருத்திகை நாளிலும் வழிபட்டால் தொலையாத பாவங்கள் தொலைந்து போகும். ஆடி எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் பசுந்தயிர் கலந்த சோற்றை ஜெயந்தினாதருக்குப் படைத்து வழிபட்டால் முருகனுடைய பாதங்களை அடையலாம். ஆவணி ஆவணி மாதம் ஒவ்வொரு நாளும் வழிபடுவோர் நூறு யாகம் செய்த நற்பயனைப் பெறுவர். புரட்டாசி புரட்டாசி மாதம் திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்க்குத் திதி கொடுத்தால் முன்னோர்கள் தேவருலகை அடைவார்கள். அய்ப்பசி இம்மாதம் உத்திர தட்சிணாயக் காலங்களில் கந்தபுஷ்கரணியில் நீராடி வழிபட்டால் மறு பிறவி கிடையாது. கார்த்திகை கார்த்திகை மாதம் முப்பது நாளும் பசு நெய்யில்தீபமிட்டால் முருகனின் பாதத்தை அடைவர்.கார்த்திகைநட்சத்திரத்தன்று நெல்லி இலையால் முருகனை அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம். மார்கழி மார்கழி மாதம் அமர பட்சத்து சப்தமி,நவமி திதிகளில்அர்ச்சனை செய்து வழிபட்டால் முருகனின் மாமாவான மாயவனின் அருளைப் பெறலாம். தினமும் நடைபெறும் பூஜைகள் விபரம் -------------------------------------- 05.00 காலை கோயில் நடை திறத்தல் 05.10 காலை சுப்பிரபாதம் [திருப்பள்ளி எழுச்சி] 05.30 காலை விசுவ ரூப தரிசனம் 05.45 காலை கொடிமர வணக்கம் 06.15 காலை உதய மார்த்தாண்ட அபிசேகம் 07.00 காலை உதய மார்த்தாண்ட தீபாராதனை 08.00 காலை கால சாந்தி தீபாராதனை 10.00 காலை கலச பூஜை 10.30 காலை உச்சி கால அபிசேகம்தீபாராதனை 12.00 பகல் உச்சி கால தீபாராதனை 05.00 மாலை முதல் 05.30 மாலை வரை சாயரட்சை தீபாராதனை 07.15 இரவு அர்த்த சாம அபிசேகம் 07.45 இரவு ராக்கால தீபாராதனை 08.00 இரவு ஏகாந்தம் போற்றி அர்ச்சனை 08.15 இரவு அர்த்த ஜாம பூஜை 08.30 இரவு ஏகாந்தம் சேவை 08.45 இரவு பள்ளியறை தீபாராதனை 09.00 இரவு நடை திருக்காப்பிடுதல் வருடாந்திர சிறப்புப் பூஜை விபரம் -------------------------------- 1. சித்திரை வருடப்பிறப்பு 05.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.15 2. மாதாந்திர வெள்ளி தோறும் 4.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00 3. வைகாசி விசாகம் வருடப்பிறப்பு 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.00 4. வைகாசி விசாகம் மறுநாள் 04.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00 5. ஆவணித் திருவிழா 1 ஆம்திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00 6. ஆவணித் திருவிழா 2 ஆம்திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 7. ஆவணித் திருவிழா 7 ஆம்திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00 8. அய்ப்பசி விசு 05.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00 9. தீபாவளித் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 10.கந்தசஷ்டி 1 ஆம் திருநாள் 02.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 11.கந்தசஷ்டி 2 ஆம் திருநாள்3.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 12.கந்தசஷ்டி 3 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 13.கந்தசஷ்டி 4 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 14.கந்தசஷ்டி 5 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 15.கந்தசஷ்டி 6 ஆம் திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம்02.00 16.கந்தசஷ்டி திருக்கல்யாணம் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 17.கார்த்திகை மாதப்பிறப்பு 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.15 18.மார்கழி 1 ஆம் தேதி முதல்-30 வரை 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 19.தை 1 ஆம் தேதி 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம்04.00 20.ஜனவரி 1 ஆம் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 21.தைப் பொங்கல் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 22.காணும் பொங்கல் 04.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.15 23.தைப் பூசம் 02.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 3.15 24.தைப்பூசம் முன்தினம் 04.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.00 25.மாசித்திருவிழா 1 ஆம் திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00 26.மாசித்திருவிழா 2 ஆம் திருநாள் 03.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00 27.மாசித்திருவிழா 7 ஆம் திருநாள் 01.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00 28.பங்குனி உத்திரம் 04.00 உதயமார்த்தாண்ட அபிசேகம் 5.00 சண்முகர்சிலையின் அற்புதம் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.திருமலைக்கு கப்பல் படை இல்லாததும் தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கஇயலாமல் போனதும் அந்நியரின் கையும் மதமும் வேறூன்ற வித்திட்டது.கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.கொற்கைக் குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும்,சங்குகளும், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் அக்கொள்ளையர்களின் கொள்கைகளாகயிருந்தன. கி.பி.1635 இல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலையுடன் நட்புடனிருந்ததால் தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலைமன்னர் கண்டு கொள்ளவில்லை.ஏனென்றால்திருமலைக்கும் இராமனாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத உதவியாலும்,படை உதவியாலும் திருமலை வெற்றி பெற்றார்.இந்த உதவி எதிரொலியே கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருக்கச் செய்தது.எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்கள் மற்றும் பிற மக்களும் பல இன்னல்களைஅனுபவித்தனர்.காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவுமிருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது.டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர்.கி.பி.1648 இல் போர்ச்சுக்கீசியர்களூக்கு ஆதரவான திருமலை,டச்சுக்காரர்களை காயல்பட்டினத்திலிருந்து வெளியேறச் செய்தார்.இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்து கொண்டதாக நினைத்த டச்சுக்காரர்கள்திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியதுடன்,அங்கிருந்த அப்பாவி இந்துக்களைக் கொள்ளையிட்டனர்.வீடுகளுக்குத் தீயிட்டனர்.தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர்.கடற்கரைக் கோயிலின் பாறைக் குடைவரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து றிந்தனர்.கற்சிற்பங்களை உடைத்தனர்.அங்கிருந்த எழில்மிகு அய்ம்பொன் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோயில்,வெயிலுகந்தம்மன் கோயில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன்நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.தங்களுடைய தெய்வத்தை களவாடிச் செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்களாகிய தலத்தார் [அனைத்து ஜாதி மக்கள்] தங்கள் கையில் கிடைத்தஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர்.வேதங்களோதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர்.திரிசுதந்திரர்கள் உட்பட பலர் உள்ளூர் மக்கள் மாண்டனர்.டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கிப் பயணமானர். திருச்செந்தூரைத் தாண்டுமுன்னே திடீரெனபுயல்,மழை தாக்கியது. தெய்வமென்று பாராமல் சிலைகளைத் தூக்கி வந்ததுதான் காரணம் என்பதை உணர்ந்தனர். டச்சுக்காரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து விடக் கூடாது என்பதற்காக சண்முகரின் சிலை,நடராஜப்பெருமானின் சிலை ஆகியவற்றை கடலினுள் எறிந்தனர்.முருகனின் அற்புதத்தால் புயலும்,மழையும் நின்றது. டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகனின் கோயிலைக் கையெடுத்துக் கும்பிட்டு எஞ்சிய கோடிக்கணக்கான நகைகளுடன் இலங்கை சென்றனர்.தென்பகுதிக்கு திருமலையின் வரிவசூல் செய்யும் அலுவலராகப் பணியாற்றிய வடமலையப்பப்பிள்ளை தூங்கும் போது முருகப்பெருமான் கனவில் காட்சி தந்து கடலினுள் தாமிருக்கும் இடத்தின் மீது ஒரு எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் வானத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்று கூறி மறைந்தார்.தம்முடைய பணியாளர்கள்,நண்பர்கள்,கடலில் முத்துக் குளிக்கும் மீனவர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு கடலுக்குள் படகில் சென்றார்.சிறிது தூரம் சென்றவுடன் முருகன் கனவில் கூறியது போல வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.மெய் சிலிர்த்த அவர்கள் முருகா முருகா என்று மெய்மறந்து முழக்கமிட்டு தலை மீது கைகூப்பினர்.அங்கே எலுமிச்சம்பழம் ஒன்று தந்தது. அந்த இடத்தில் குதித்தனர்,என்னே அற்புதம் சண்முகர்சிலையும்,நடராஜர் சிலையும் கிடைத்தது.நடராஜர் சிலையின் பீடத்தில் திருநள்ளாறு என்று எழுதப்பட்டிருந்தது.மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர்.உடைந்த மூலவர் சிலை புதிதாகச் செய்யப்பெற்று பிரதிஷ்டை செய்யப் பெற்றது. குடமுழுக்கு நடைபெற்றது.டச்சுக்காரர்களின் கொள்ளையால் மனம் வருந்திய திருமலைகொள்ளையடித்துச் செல்லப்பட்ட எஞ்சியப் பொருட்களை மீட்டால்தான் மக்கள் மதிப்பார்கள் எனக் கருதி டச்சுக்காரர்கள் கோரிய பொன்னை தமது காயல்பட்டினம் கணக்கப் பிள்ளை மூலமாக இலங்கைக்குக்கொடுத்தனுப்பி மீட்டார்.கடலினுள் டச்சுக்காரர்களைச் சிலையைப் போடவைத்ததும்,சிலை இருந்த இடத்தைக் காட்டியதும் செந்திலாண்டவனின் அற்புதங்களுள் சிறப்பாகும். நக்கீரனுக்கு அருள்புரிந்த முருகன் முக்கண்ணனான சிவபெருமானோடு எற்பட்ட வாக்குவாதத்தினால்,பெரு நோயான குஷ்டத்தால் அவதிப்பட்ட நக்கீரர் தினமும் சிவனைத் தவறாமல் வழிபட்டு வருகின்றார்.அவ்வயம்,கைலாசம் சென்று சிவனைத் தரிசித்தேத் தீருவது என்ற தீர்மானத்தில் செல்லும்போது திருப்பரங்குன்றத்தில் குளமொன்றினருகில் அமர்ந்து வழிபடத் தொடங்கினார் அப்போது அங்கிருந்த கல்முகி என்ற பூதம் அவரைச் சோதிக்க அரசமரமொன்றிலிருந்து ஒரு அரச இலையை விழச் செய்தது.அவ்விலையானது கீழே இருந்த தண்ணீரில் விழுந்து,அதன் ஒரு பாதி மீனாகவும் மறு பாதி பறவையாகவும் மாறியது .இக்காட்சியைக் கண்ட நக்கீரர் மெய்மறந்து நின்றார்.சிவ பூஜை செய்ய மறந்த நக்கீரனை கல்முகி பூதம் உடனே கைது செய்து திருச்சீரலைவாயில் [திருச்செந்தூர்] உள்ள குகையொன்றில் சிறை வைத்தது.தன்னை விடுவிக்க அத்தனை தெய்வங்களையும் போற்றித்துதித்தும் பயனில்லாததால் ,தம்மை உற்ற தெய்வம் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கந்தப் பெருமானே என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை என்ற நூலை பாடினார்.நிறைவாக, ’உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின் செல்லேன் பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே’ என்று மனமுருகப் பாடியதும் சக்தி வேலாயுதத்துடன் தோன்றிய முருகன் நக்கீரரை மீட்டார்.அவருடன் சிறை வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.முருகனின் திருவிளையாடலால் தமிழின் பெருமையை ஆறுபடை வீடுகளின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்பும் அற்புதமான சங்க இலக்கியம் தமிழனுக்குக் கிடைத்தது. ஆதிசங்கராச்சாரியரின் நோய் தீர்த்த செந்தூரான் கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்ற அவர் தன்னுடைய தாயார் தண்ணீரெடுக்கச் செல்லும் ஆறு வெகு தூரத்தில் உள்ளது என்பதற்காக அவ்ஆற்றையே தன்னுடைய வீட்டிற்கு அருகில் திரும்பி ஓடச்செய்த ஆற்றல் மிக்கவர். மிகப்பெரிய சித்தரான அவரை காச நோய் தொற்றிக்கொண்டது. அதிலிருந்து மீள் முடியாமல் துன்பமடைந்தார்.சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். அப்போது தோன்றிய சிவன்,அசுரனை சம்காரம் செய்த அற்புதத் தலமான திருச்செந்தூர் செல்வாய் அங்கு எம்முடைய அம்சமாக வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானைப் பணி ; உன்னுடையநோயைக் குணமாக்கும் ஆற்றல் கலியுகக் கந்தனிடமே உள்ளது என்றார்.ஆகாய வழியாக செந்தூர் வந்த சங்கரர், முருகப்பெருமானை குகைக் குடைவறையில் ஆதிசேஷன்[பாம்பு] முருகனின் பாதங்களைப் பூஜை செய்யும் அற்புதக் காட்சியைக் கண்டார்.தீராத தன்னுடைய வயிற்றுவலியைத் தீர்த்து வைத்திட முருகனிடம் வேண்டி கோயிலில் வழங்கிய விபூதியையும்,பன்னீர் இலையையும் உண்டார்.என்னே அற்புதம் அடுத்த நொடியில் அவரது நோய் அகன்றது.உடனே முருகனைப் போற்றி சுப்பிரமணிய புஜங்கம்[புஜங்கம் என்றால் பாம்பு என்று அர்த்தம்] என்ற நூலைப் பாடினார்.’’கண்டால் நின் இலை நீறு கைகால்வலிப்புக்-காசம் கயம்குட்ட முதலாய நோயும்-விண்டோடு மேபூத பைசாசம் யாவும்-வினையாவுமே செந்தி அமர்தேவ தேவே’’என்ற பாடலுடன் சிறப்பு வாய்ந்தது. அருணகிரிநாதருக்கு வழி காட்டிய முருகன் திருவண்ணாமலையில் பிறந்து சராசரி மனிதனாக சிற்றின்பத்தில் வீழ்ந்து நோய்வாய்ப்பட்ட அருணகிரிநாதர் ,மனமுடைந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி அதிலிருந்து கீழே விழ;முருகப்பெருமான் அவரைத்தாங்கி பிடித்தார்.முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார்.மனமுருக வழிபட்ட பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார்.வழிஎல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரி வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது.திருச்செந்தூரில் முருகனில் சிவனைக் கண்ட அருணகிரியார் ’கயிலை மலையனைய செந்தில்’ என்று சிறப்பித்துப் பாடினார்.செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார்.முருகப்பெருமானும் திருத்தாண்டவம் ஆடிக்காட்டினார்.இக்காட்சியை தற்போது கோயிலில் நடைபெறும் ஏழாம் திருவிழா நாளில் ‘சிவப்புச் சாத்தி’செய்யப்படும் நாளில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார். குமரகுருபரருக்கு அருளிய முருகப்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் சைவவேளாளர் மரபைச் சேர்ந்த சண்முகசிகாமணி கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் பிறந்த குமரகுருபரர் தமது மூன்று வயதளவிலும் வாய் பேசாமல் ஊமை போலிருந்தார்.அது கண்ட பெற்றோர் பெருந்துயரடைந்தனர்.இதற்கிடையில் பிறந்த இரண்டாவது குழந்தை வாய் பேசியது.இதனால் மேலும் மனம் வருந்தினர்.அய்ந்து வயதானது குமரகுருபரனுக்கு, ஊமைக் குழந்தையை தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் முருகனின் கோயிலுக்கு வந்தனர்.முருகனின் சன்னிதி முன்பு குழந்தைக் கிடத்தினர் 40 நாட்கள் விரதமிருந்தனர்,தினமும் மனமுருக வேண்டிக்கொண்டனர்.யாதொரு பலனும் தெரியவில்லை.மனமுடைந்த தம்பதியர் நாளை ஒரு நாள் பார்ப்போம் முருகன் அருளீயாவிடில் நாமிருவரும் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்ற மனமுறுதியைக் கொண்டனர்.காலையில் கடலில் நீராடி கொடிமரத்தடியில் மகனைக் கிடத்தி விட்டு முருகனைத் தரிசிக்கச் சென்றனர்.அந்நேரம் முருகன் கோயில் அர்ச்சகர் வடிவில் வந்து குமரகுருபரன் முன்பு ஒரு வெண்டாமரைப் பூவொன்றினைக் காட்டி இது என்ன என்று கேட்டார்.அது நாள் வரையிலும் பேசாமலிருந்த ஊமைக் குழந்தை ’பூ’ என்றது.’சைவம் தழைக்கப் பாடு’என்று முருகன் கட்டளையிட்டு மறைந்தார்.’பூ மேவு செங்கமலப் புத்தேளும் 'என்ற பாடல் அடியை முதலாகக் கொண்டு கந்தர் கலி வெண்பா நூலைப் பாடி முருகனின் பெருமைக்குப் பெருமைச் சேர்த்தார்.ஊமையாய் இருந்தவனை கவி பாடச் செய்து குமரி முதல் காசி வரை பாடலால் உலகம் போற்றச் செய்த அற்புதம் செய்தார் நமது செந்திலாண்டவர். கோபுரம் கட்டிய தேசிகமூர்த்தி சுவாமிகள் கோயில்களையும் திருப்பணிகளையும் கோபுரங்களையும் நாடாண்ட அரசர்களும் அரசிகளும் அதிகாரிகளும் செய்த வரலாற்றைக் கண்டுள்ளோம்.திருச்செந்தூரில் இத்தகைய வரலாற்றை புரட்டிப் போட்டுள்ளார் ஒருதுறவி. திருச்செந்தூர் கோயிலின் இராஜ கோபுரத்தைக் கட்டியவர் ஒரு ஆண்டியே.அதிகாரபலம்,பொருளாதார பலமிக்கவர்கள் நிறைந்த,அக்காலத்தில் தமது கோபுரத்தைக் கட்டத் தகுந்தவர் அத்துறவியே என்பதை அடையாளம் காட்டினார் முருகப்பெருமான்.அந்நாளில் தம் அடியவரான தேசிகமூர்த்தி என்பாரின் கனவில் தோன்றிய செந்திலாண்டவர் தம்முடைய கோபுரத் திருப்பணியை மேற்கொள்ளப் பணித்தார்.தேசிகமூர்த்தி திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஒடுக்கத் தம்பிரானாக இருந்தார்.அருள்மிகு தூண்டிகை விநாயகர் கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருப்பணி மடத்தில் தங்கி கோபுரப் பணியைத் தொடங்கினார். வேண்டுபவர்க்கு வேண்டுவன யாவற்றையும் அருளும்செந்திலாண்டவனின் அருளால் சந்தனாமலை பாறை மீது அஸ்திவாரம் போட்டுக் கல் தச்சு வேலைகளைத் தொடங்கினார்.உள்ளூர் மக்கள் வெளியூர் மக்கள் என சாரை சாரையாக வேலைக்கு வந்தனர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளியூரிலிருக்கும் வசதிபடைத்தவர்கள்,ஊர்களின் பொதுவான தலைமையிடமும்,பல்வேறு இன மக்களின் பங்களிப்பு வேண்டுமென, அவர்களிடமும் நன்கொடை வேண்டிப்பெற்றார்.அவ்வப்போது நன்கொடை வந்ததால் செலவுகளும் வேலைகளும் நடந்துகொண்டேயிருந்தன இந்நிலையில் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாத நிலையை முருகன் ஏற்படுத்தினார்.பக்தர்களைச் சோதிப்பது இறைவனின் பொழுது போக்கு அல்லவா.தம்முடைய இக்கட்டான நிலையைக் கண்டு..என்ன செய்வது என்று மனம் வேதனையடைந்த தேசிகமூர்த்தி செந்திலாண்டவனை நோக்கிக் கும்பிட்டார்.முருகா...உன் பெயர் கூறி நான் வழங்கும் திருநீறு அவரவர் வேலைக்கேற்ற ஊதியமாக மாற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.மாலை வந்தது வேலையை முடித்து சம்பளம் பெறவேண்டி பணியாளர்கள் சாமியை நோக்கி வந்தனர்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலை விபூதிப் பொட்டலத்தைக் கொடுத்தார்.அப்பொட்டலத்தை தூண்டிவிநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைக் கும்பிட்டு திறந்து பாருங்கள் என்று கூறினார். வேலையாளர்கள் அப்பொட்டலத்தை தூண்டிவிநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைக் கும்பிட்டு திறந்து பார்த்தனர்.என்னே ஆச்சரியம்...அவரவர்கள் செய்த வேலைக்கேற்ற ஊதியம் அதனுள் இருந்தது.இவ்வாறு பணிகள் தொடர்ந்தது.தேசிகமூர்த்திசாமிகளின் தன்னலமற்றத் தொண்டு,அருட்சுடர் விடும் கண்கள்,என்னேரமும் முருகனின் மீதான பக்தி,திருப்பணி மீதான கவலை இவற்றைக் கண்ட முருக பக்தர்கள் தங்களுடைய ஊரில் பல்வேறு சமுதாய மக்களுக்கும் வரி போட்டுப் பணம் பிரித்து கோபுரத் திருப்பணிக்காக வழங்கியுள்ளனர்.இது குறித்த செப்பேடுகள் இன்றளவும் தலை நிமிர்ந்து உள்ளது.சாத்தூர் செப்பேடு,ஏழாயிரம் பண்ணைச்செப்பேடு,சாத்தூர் நென்மேனி,வடமலைபுரம் செப்பேடு,சிவகாசி செப்பேடு,தட்டப்பாறை வணிதம் பட்டயம் ஆகியன கோபுரத்திருப்பணிக்காக சாதி பேதமின்றி பொன்னும் பொருளும் வழங்கிய தகவலைத் தருகிறது.ஒன்பது நிலைக் கோபுரத்தில் ஆறு நிலைகள் எழுந்து நின்றன.சுற்று வட்டார மக்களில் வசதி படைத்தோர்,எளியோர் என முருகனடியார் பலரிடமும் ந்ன்கொடைப் பெற்றாகிவிட்டது.மீண்டும் மீண்டும் அவர்களையேச் சென்றுப் பார்ப்பது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது.மனம் வருந்திய தேசிகமூர்த்தி கண்ணீர் சிந்தினார்.அன்றிரவு கனவில் தோன்றிய முருகன்,’அருகிலுள்ள காயல்பட்டிணத்தில் வசிக்கும் வள்ளல் சீதக்காதியைச் சென்று பார்.உன் மனக்குறை தீரும் என்று கூறி மறைந்தார்.அதே போன்று பெறு வணிகரான சீதக்காதியின் கனவிலும் தோன்றிய முருகன் நாளை எனது பக்தன் வருவார்,அவரிடம் உன்னிடமுள்ள ஒரு மூடை உப்பைக் கொடு என்று கூறி மறைந்தார்.மறு நாள் இசுலாம் சமயத்தைச் சேர்ந்த சீதக்காதியைச் சென்றுப் பார்த்தார்.முருகன் தன் மீது கொண்ட பாசத்தால் மனம் நெகிழ்ந்த சீதக்காதி ஒரு மூடை உப்பைக் கொடுத்தனுப்பினார்.உப்பு மூடையுடன் திருப்பணி மடத்திற்கு வந்த தேசிகமூர்த்திக்கு முருகனின் உத்தரவின் பொருள்,உப்பு மூடையைத் திறந்துப் பார்த்தபின்பு விளங்கியது.என்னே அற்புதம்...உப்பு மூடை அனைத்தும் தங்க காசுகளாக இருந்தன.கோபுரத்தின் ஒன்பது நிலைகளும் கும்பகலசத்துடன் உயர்ந்தன.உவகையுடன் குடமுழுக்கு நாளைத் திட்டமிட்டு பணிகள் நடந்து வந்தன.அன்றிரவு செந்திலாண்டவன் தேசிகமூர்த்தியின் கனவில் தோன்றி,தேசிகமூர்த்தி உன்னுடையப் பணிகள் நிறைவுற்றன,உடனே காந்தீஸ்வரம் செல்.அங்குதான் நீ இருக்க வேண்டுமென கட்டளையிட்டார்.முருகனின் கட்டளையேற்ற தேசிகமூர்த்தி உடனே காந்தீஸ்வரம் சென்றார்.கோபுர குடமுழுக்கு நடைபெற்றபோது அங்கிருந்தே அனைத்து நிகழ்ச்சிகளையும் முருகனருளால் கண்டு கழித்தார்.தற்போதுள்ள ஆழ்வார்திருநகரிக்கு கிழக்கே உள்ள ஆழ்வார்தோப்பு என்னும் நாடாழ்வார்களின் ஊரில் காந்தீஸ்வரம் உள்ளது.அருள்மிகு ஏகாந்தலிங்கேஸ்வரர் கோயிலின் வடபுறம் உள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கி தவமியற்றினார். இவருடைய ஜீவசமாதி இங்குள்ளது.இன்றும் மக்கள் வழிபட்டு தங்களுடைய நோய்களையும் கவலைகளையும் போக்கிக் கொள்கின்றனர்.கோபுரத்திருப்பணி முருகனின் தொண்டனான ஆண்டி ஒருவரின் விடாமுயற்சியையும்,பிற சமயமான இசுலாம் சமயத்தை சேர்ந்த சீதக்காதி மீது முருகப்பெருமான் கொண்ட நம்பிக்கையையும் பாசத்தையும் காட்டுகிறது. வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் முருகனுக்குத் தொண்டு செய்யும் திரிசுதந்திரர் குடும்பத்தில் வென்றிமாலை பிறந்தார்.தொடக்கக் காலக்கல்வி கசந்தது.செந்திலாண்டவன் கோயிலைச் சுற்றுவது,முருகனின் நாமத்தை எந்நேரமும் கூறுவது,மனம் போலப் பாடுவது எனத் தொடர்ந்து வந்தார்.தந்தையின் கண்களுக்கு பொறுப்பற்றப் பிள்ளையாக வென்றிமாலைக் காட்சி அளித்தார்.வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியாக அமையுமென திருக்கோயில் மடப்பள்ளியில் கையாளாகச் சேர்த்து விட்டார்.முருகனின் பூஜைக்காக பிரசாதங்கலைச் சமைத்து வழங்கவேண்டியது இவரது பொறுப்பு.இவ்வாறிருக்கும்போது ஒருநாள் செந்திலாண்டவனைச் சிந்தித்து தியானத்தில் இருந்து விட்டார் வென்றிமாலை.பூஜைக்கு வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்படவில்லை. சண்முகருக்கு பூஜைக்கு வேண்டிய பிரசாதத்தை வாங்க வந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.எதற்கும் உதவாதவன் என்று கூறி நையப்புடைத்து விரட்டி விட்டனர்.மனம் வருந்திய வென்றிமாலை கடற்கரையில் அமர்ந்து சிந்தித்தார்.இனி உயிரோடிருப்பதில் அர்த்தமில்லை என்று கடலில் விழுந்து உயிரை விடத் துணிந்தார்.அந்நேரம் நில் என்ற குரல் கேட்டது முதியவர் வடிவில் வந்த முருகன் வென்றிமாலையைத் தடுத்து,செவலூர் என்ற ஊரில் வாழும் கிருஷ்ண சாஸ்திரியைப் பார்,என்று கூறி மறைந்தார். வென்றிமாலை செவலூர் சென்று முருகனின் கட்டளையை சாஸ்திரிகளிடம் கூறினார்.மனம் மகிழ்ந்த சாஸ்திரி,தாம் வட மொழியில் பாடிவைத்திருந்த திருச்செந்தூர்மகாத்மியத்தை [திருச்செந்தூர் தலபுராணம்]தமிழில் பாடக் கூறினார்.எப்படிப் பாடுவேன்...ஏதோ நாவில் வந்ததைப் பாடி வந்தேன்.தமிழே சரியாக அறியாத நான் எப்படிப் பாடுவது...என்றார்.செந்திலாண்டவனை நினைத்துப் பாடு என்றார் சாஸ்திரி.முருகனை நினைத்துப் பாடலைத் தொடங்கினார்.வென்றிமாலையின் அறிவிலும் நாவிலும் முருகன் குடி கொண்டான்.சிவபெருமானை முதலாவதாக வைத்து 899 பாடல்களை இனிய,எளிய தமிழில் பாடினார்.வென்றிமாலையின் கவித்திறன் கண்ட கிருஷ்ண சாஸ்திரி ‘வென்றிமாலைக் கவிராயர்‘என்ற பட்டத்தை வழங்கினார்.தாம் பாடிய திருச்செந்தூர் தல புராணச் சுவடிகளுடன் திருச்செந்தூர் வந்தார் தாமியற்றியப் பாடல்களை அரங்கேற்றப் போகிறேன் என்று கூறினார்.அவருடைய உறவினர்கள் வென்றிமாலைக்குப் பித்துப் பிடித்து விட்டது என்று கேலி பேசினர்.கோயில் நிர்வாகிகளிடம் அரங்கேற்றம் செய்வது குறித்து அனுமதி வேண்டினார்.சமையல் கூடத்தில் வேலை செய்தவனாவது கவிதை பாடுவதாவது என்று புறம் தள்ளினர் கோயில் நிர்வாகிகள்.தனக்கும் தனது திருச்செந்தூர் தல புராணநூலுக்கும் நேர்ந்த அவமானத்தால் மனமுருகி அழுதார்.தலபுராணச் சுவடிகளை கடலினுள் எறிந்து விட்டு தவமிருந்தார்.நீண்டநாள் தவத்தால் முருகனடி சேர்ந்தார்.கடலில் இட்ட ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச்சென்று ஈழநாட்டில் பனைமுனை என்ற இடத்தில் கறை ஏறியது.அவ் ஏடுகள் முருகனடியார் ஒருவரது கையில் கிடைத்தது.அந்நூலையும் அதன் பொருளையும் அறிந்த அடியார் மெய்சிலிர்த்தார் முருகன் தனக்குக் கொடுத்த பிறவிப் பயன் என்று கொண்டாடினார்.தினமும் ஏடுகளுக்குப் பூ இட்டு தூப தீபம் காட்டி பூஜை வைத்து வழிபட்டார்.அந்நாளில் கொடிய நோய் ஒன்று அவ்வூரில் பரவியது.பலர் மாண்டனர்.ஆனால் திருச்செந்தூர் தல புராணம் இருந்த அடியார் வீட்டிலும், அத்தெருவிலும் நோய் புகவில்லை ; பரவவில்லை.இவ்வற்புதம் ஈழ நாடு முழுவதும் பரவியது.வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் அரங்கேற்ற நினைத்த தலபுராணம் அயல் நாடுகளில் மக்களின் உள்ளங்களில் அரங்கேறியது.திருச்செந்தூரில் வேதமோதும் திரிசுதந்திரர் குடும்பத்தில் தோன்றிய வென்றிமாலை முருகனின் அருள் தொண்டராவார். செந்தூர் முருகனுக்கு நேர்த்திக்கடன்கள் திருச்செந்தூர் முருகனுக்கு நேர்த்திகடன்கள் செலுத்துவதை வாழ்க்கையின் பெரும் பேறாக மக்கள் கருதுகின்றனர்.முடியெடுத்தல்,காது குத்துதல், பால்குடம் எடுத்தல்,காவடி எடுத்தல்,தங்கத்தேர் இழுத்தல், உண்டியலில் பணம் போடுதல்,தங்க நகைகளைப் போடுதல்,வேல் செய்து உண்டியலில் போடுதல், விளைபொருட்களைக் கொண்டு வந்து வைத்தல், ஆடு,மாடுகளை நேர்த்திக்கடனாக விடுதல்,துலாபாரம் செலுத்துதல்,அர்ச்சனை செய்தல், விளக்குக்கு நெய்கொடுத்தல்,அபிசேகம் செய்தல்,பூமாலைக் கொடுத்து அலங்காரம் செய்தல்,மாவிளக்கு வைத்தல்,அன்னதானம் செய்தல் என பக்தியால்செய்யப்படுகின்றன.முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் முருகனின் அருளிருந்தால் மட்டுமே நினைத்தபடி கைகூடி வரும்.இவற்றுள் காவடி எடுத்தல் என்ற நேர்த்திக்கடன் முருகனுக்கு மிகவும் விருப்பமானதாகும். காவடி குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள் பிரச்சனைகள் ஆகியவற்றிற்குத் தீர்வு காண்பதற்கும், நோய்களிலிருந்து விடுபடவும்,தோசங்களிலிருந்து விடுபடவும் முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்று நேர்த்திகடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வார்கள்.தங்களுடைய தோளில் எடுத்துச் சென்று சமர்ப்பிப்பது காவடி ஆகும்.இக்காவடியில் எடுத்துச் செல்லும் நேர்த்திப் பொருட்களின் அடிப்படையில்அதனுடைய பெயர்அழைக்கப்படும். பால்க்காவடி,பன்னீர்காவடி,இளநீர்காவடி,சர்க்கரைக்காவடி,எண்ணெய்காவடி, மச்சக்காவடி,சர்ப்பக்காவடி,அலகுக்காவடி,அக்கினிக்காவடி,பறக்கும்காவடி, ரதக்காவடி முதலியன பக்தர்களால் அதிகம் விரும்பி எடுக்கப்படும் காவடிகளாக உள்ளன,

Comments

Popular posts from this blog

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ...

சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்

      சங்க இலக்கியம் காட்டும் கொற்கைத் துறைமுகம்     சங்ககாலத்தின் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரையும் , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய துணை துறைமுகங்களாக பழையகாயல் , காயல்பட்டினம் , வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் உமரிக்காடு , ஆத்தூர் , ஆறுமுகநேரி , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்களில் இருந்தன .கொற்கைக் குடாக்கடலின் மேற்குக்கரையில் கொற்கைத் துறைமுகப்பட்டினம் அமைந்திருந்தது . கொற்கைக் குடாக்கடல் நிலப்பகுதிக்குள் ஜந்துமைல் வரை ஊடுவியிருந்தது . தாமிரபரணி ஆறு இக்குடாக்கடலினுள் ஓடிவந்து கலந்தது . ஆறுகள் கடலில் கலக்குமிடத்தில் முத்துச்சிப்பிகள் இயல்பாக உருவாகும் . கொற்கைக் குடாவில் உயர்வகை முத்துச்சிப்பிகள் உருவாயின . வலம்புரிச்ச்ங்குகளும் ஏராளமாக விளைந்தன . மன்னர்கள் அணிந்த முத்து “ ஏகவடம் “ ஆகும் .ரோமபுரி ராணி முதல் தமிழகத்துப் பெண்கள் வரை கொற்கை முத்தை தங்களுடைய அணிகலனாக அணிவதை விரும்பினர் . 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹரப்பா...

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்

தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்                                                      தொல் பழங்காலத்திற்கு முன்பாகவே தமிழர்கள் தங்களுடைய கலை மற்றும் அழகுணர்ச்சியை அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தினர்.    இயற்கையைத் தெய்வமாகவும் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட தமிழ் இன மக்கள் தங்களுடைய முதல் அணிகலனை இயற்கையின் எழில்மிகு கற்கள் , பூக்கள் ,   கொடி , ஓலை[1]ஆகியனவற்றை அணிந்து மகிழ்ந்தான். இது தொடர்ச்சியாக உலோகங்களுக்கும் அடிகோலின. கலைத்திறனை வெளிப்படுத்தும் பயன்படு பொருளாகவும் ஒவ்வொரு காலத்திலும் அணிகலன்கள் விளங்குகின்றன.          மனிதகுலத்திற்கு    புலன்கள் அவசியமாக கருதப்பெற்றன.தமிழன் அப்புலன்களின் உறுப்புகளுக்கு அழகூட்டிட அணிகளால் சிறப்புற மெருகூட்டினான்.சங்க இ...