நன்றி:பாண்டிய நாடாள்வான் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் நாடாண்ட நாடாரின் வரலாறு..... சூரிய சந்திர குலத்துக்கு ஆயிரம் வரலாறு உண்டு, அதில் ஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாக்கண்டத்திலுள்ள கிரீஸ் தேசத்தினின்றும் "கிளமென்ஸ்"என்ற சரித்திர ஆசிரியர் ,தம் உலக சுற்றுப்பிராயணத்தின் இடையே இந்தியாவிற்கும் வந்திருக்கிறார்.அலக்ஸாந்திரியா பட்டணத்தில் பிறந்த அவர் லத்தீன் பாஷையில் 'பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரே( periplus maris erythrae) என்ற பிரபல சரித்திர புஸ்தகம் ஒன்றை இவர் இயற்றிருக்கிறார்.அப்புத்தகத்தில் நாடாண்ட சூரிய சந்திர குல சத்ரிய சான்றோர்களின் அறிய வரலாற்றுத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன,அவை பின்வருமாறு 1.இந்தியாவின் மேல் கடற்கரையில், மைசூருக்கு மேற்கே அக்காலத்தில் அரசுபுரிந்த சாலிவாகணனைச் சேர்ந்த அரசர்களுடைய ஆட்சி முற்றிய பின் சான்றான்களின் ராஜாங்கம் வலுவடைந்தது 2.தென்கன்னடம் ஜில்லாவைச் சார்ந்த கலியாணபுரம் என்னும் துறைமுகம் (சாலியவாகண)சாராகனன்கள் காலத்திற் சிறப்புற்று விளங்கிப் பின்னர் சான்றார்களின் ஆளுகையிலும் செழிப்புற்று ஓங்கிற்று. 3.ஏதேனும் கிரேக்கக் கப்பல் அத்துறை...
ART - LITERATURE - CULTURE