கொற்கை தமிழனின் அடையாளம் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முக்காணியிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.ஏரல் வழியாகவும் பழைய காயல் வழியாகவும் வருவதற்கு அரசு பஸ்களும், மினி பஸ்கள் உண்டு.ஆட்டோ மூலமும் வரலாம்.... தற்போதைய கொற்கை.பசுமையான வயல்வெளி.வாழத் தோட்டங்கள் காணுமிடங்களிலெல்லாம் சிப்பிகளும் சங்குகளும் குவியல் குவியலாக. முத்தால் உலகத்தை தன்னிடம் ஈர்த்து வைத்திருந்த கொற்கையா இது.....வாளும் வேலும் வீசி விளையாடிய வீதிகளா இவை.... சங்ககாலம் தமிழனின் பொற்காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தலைசிறந்த துறைமுகமாகக் கொற்கைத் துறைமுகப்பட்டினம் விளங்கியது . பாண்டியர்களின் தலைநகரம் மதுரை , துறைமுகப்பட்டினம் கொற்கை . இதனுடைய சிறிய படகுத் துறைகளாக காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் , குலசேகரப்பட்டினம் விளங்கியது . வணிக மையங்கள் ஏரல்,உமரிக்காடு ,வாழவல்லான், முக்காணி,த்தூர் , ஆறுமுகநேரி , பழையகாயல் , குரும்பூர் , சோனகன்விளை ஆகிய ஊர்கள் . கொற்கைக் குடாக்கடல...
ART - LITERATURE - CULTURE