கருவறை அருட்திரு ஆதிசங்கரர் சுவாமிகள் திருச்செந்தூர் வந்து,முருகனைப் பாடி, தனது நோய் நீங்கப் பெற்ற வரலாறு உண்டு.சுப்பிரமணியப் புஜங்கம் அன்ற அப்பாடல்கள் அக்காலத்தில் கோயில் கருவறை பாறையினுள் குடையப் பெற்ற குகையினுள் இருந்தது என்று கூறுகிறது. ‘செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும் கந்தமாமலைக் குகை வந்தன காணவே விழியெலாம் போற்றிடும் ஆறுமுகன் குகையிலே கதிரவன் ஆயிரம் செவ்வொளி’ [சுப்பிரமணியப் புஜங்கம்] 5 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மணற் படிவுப் பாறையில் முற்காலப் பாண்டிய மன்னர்களின் குடைவரைச்சிற்பத்திற்குச் சான்று கூறுவதாக குகைக் குடைவரை உள்ளது. பாலசுப்பிரமணியர் கருவறைத் தெய்வமாக பாலசுப்பிரமணியர் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் உள்ளார்.ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட அவரது மேற்கையில் தாயான சக்தி வேல் உள்ளது.கீழ்க்கை அடியவர்களுக்கு வரமளிக்கிறது.இடது மேலே உள்ள கை செபமாலையுடன்,கீழே உள்ள கை தொடையைப் பற்றியவாறு உள்ளது. சூரபத்மனை அழித்த பின்பு அத் தீவினை அகல தம்முடைய தந்தையை வழிபடும் எழிலானத் தோற்றத்துடன் உள்ளார். ...
ART - LITERATURE - CULTURE