#தூத்துக்குடிமாவட்டம் #சாத்தான்குளம் அருகே #கொம்பன்குளம் #ஸ்ரீகோதாசமேதாராஜகோபாலசுவாமி கோயிலில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப் பெற்றது. சாத்தான்குளத்திலிருந்துசுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் கொம்பன்குளம் என்ற சிற்றூர் உள்ளது. இங்கு ஸ்ரீ கோதா சமேதா ராஜ கோபாலசுவாமி திருக்கோயில் சிற்பக்கலை நயத்துடன் அமைந்துள்ளது. பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பெற்று, விஜயநகர காலத்தில் மண்டபங்களும் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் பெரும்பகுதி வெள்ளைக் கற்களால் அமையப்பெற்றது. மூலவராக ஸ்ரீ ராஜ கோபாலசுவாமி நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். வலப்புறம் ஸ்ரீ கோதாநாச்சியார் இடப்புறம் பெரிய திருவடியான கருடாழ்வார் கை கூப்பி சுவாமியைக் கும்பிட்டவாறு உள்ளார். இக்கோயிலின் மற்றொரு சிறப்பு #சக்கரத்தாழ்வார் தனிசன்னிதியில் அருள் பாலிப்பது. திருமாலின் ஆயுதங்கள் ஐந்து. ஐம்படைகளெனப்படும். அவை சங்கு, சக்கரம், கதை,வில், மற்றும் வாள் ஆகியனவாகும்.சங்கு பாஜ்சசைன்னியம் என்றும் சக்க...
ART - LITERATURE - CULTURE