தற்புகழ்ச்சி விரும்பாத தலைவர் ************************************** காமராசரும், தாயார் சிவகாமி அம்மாளும் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் மாநகரில் அகில இந்திய செயற்குழு கூடியது. காமராஜ், சத்திய மூர்த்தி, பக்தவச்சலம் முதலியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்தனர். ``வெள்ளையனே வெளியேறு'' போராட்டம் அந்தச் செயற்குழுவில்தான் அறிவிக்கப்பட்டது. மறுநாளே காந்தியடிகள், நேரு போன்ற தலைவர்களை வெள்ளைக்கார அரசு கைது செய்தது. மாநிலம் வாரியாக பிரபலங்களைக் கைது செய்யவும் முடிவு செய்தது. ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்ட காமராஜ் நேரடியாகச் சென்னை சென்றால் வழியிலேயே கைது செய்யப்படலாம் என எதிர் பார்த்தார். தான் கைதாகும் முன் செயற்குழு முடிவைத் தமிழகம் எங்கும் அறிவித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார். ஆந்திராவில் ரெயிலை விட்டு இறங்கி சில நாட்கள் தங்கினார். பின் சென்னைக்கு ரெயில் ஏறினார். அரக்கோணம் ஸ்டேஷனிலேயே இறங்கினார். ஸ்டேஷன் பிளாட்பாரம் முழுக்க போலீஸ். அவர்கள் காமராஜை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வேறு குறியாக இருந்ததால் காமராசரை கவனிக்கவில்லை. காமராசர் அரக்கோணம் சோளங்கிபுரம் ராணிப்பேட...
ART - LITERATURE - CULTURE