மதுரை
மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூணில் உள்ள பெண் சிற்பம், மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது
போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவள் கையில் ஒரு பனை
ஓலையில் செய்யப்பட்ட கூடை ஒன்று வைத்துள்ளாள் . அந்த கூடையை கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் அழைப்பர். நுட்பமான வேலைப்பாடு . அவள் மூன்று குழந்தைகளுக்குத் தாயானவள் போலும், ஒரு
குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை
நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள்
இந்த பழக்க,வழக்க முறைகள் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில்
பார்க்கலாம், , குழந்தை ஒன்று அவளின் மார்பில் பால் குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம்
நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள்
போல?
மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று
உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் ,
மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கமாகப் பற்றிகொண்டும், கைவிரலால்
அந்த குழந்தையையும் பாதுகாத்துக் கூட்டிசெல்கிறாள்.
அன்பு
மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல்
இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தான்.
தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம்
கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான்.
நிலைநிறுத்திய பிறகு சிற்பங்களைச் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை
அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அர்பணிப்பும்
இதிலேயே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில்
பொறிக்கவில்லை .இத்தகையச் சிற்பிகள் நம் தமிழ் நாட்டில்
வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் பல தலைமுறைக்களைக்கடந்து வந்திருக்கிறது என்ற நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
இத்தகைய கலைப்படைப்புக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை
அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும்
மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,
திறமையும் அற்பனிப்பையும் சொல்ல வேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்க
வேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது,
பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம்
கண் முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டி கேட்க வேண்டும் அவர்களிடம்
நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .
மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கமாகப் பற்றிகொண்டும், கைவிரலால் அந்த குழந்தையையும் பாதுகாத்துக் கூட்டிசெல்கிறாள்.
அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தான். தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்களைச் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அர்பணிப்பும் இதிலேயே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை .இத்தகையச் சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் பல தலைமுறைக்களைக்கடந்து வந்திருக்கிறது என்ற நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
இத்தகைய கலைப்படைப்புக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும், திறமையும் அற்பனிப்பையும் சொல்ல வேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்க வேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண் முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டி கேட்க வேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .
- Get link
- X
- Other Apps
Labels
சிற்பங்கள்
Labels:
சிற்பங்கள்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment