செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன
2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு ப ற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்) தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்? தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) : உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்கா...