Skip to main content

Posts

Showing posts from September, 2024

தெ.பொ.மீனாட்சிசுந்தர கிராமணியார் (1901-1980)

தெ.பொ.மீனாட்சிசுந்தர கிராமணியார் (1901-1980) ▪️தென்பட்டினம் பொன்னுசாமி கிராமணியார் திருமகனாகப் பிறந்த தெ.பொ.மீனாட்சி சுந்தர கிராமணியார் , தமிழக மக்களால் 'தெ.பொ.மீ.' என்று மதிப்போடு அழைக்கப் பெற்றவர். ஏறக்குறைய எண்பது ஆண்டுக் காலம் [8.1.1901 - 27.8.1980] தமிழ் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர்: ▪️பன்மொழிப் புலவர் ▪️பல்கலைச் செல்வர் ▪️நடமாடும் பல்கலைக்கழகம் ▪️பெருந்தமிழ்மணி ▪️குருதேவர் ▪️பத்மபூஷண் ▪️கலைமாமணி முதலான பல்வேறு சிறப்புப் பெயர்களாலும் பட்டங்களாலும் சிறப்பிக்கப்பட்டவர். சென்னை மாநகராட்சியின் ஆல்டர்மென், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் செயலர், மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்-கழகத்தின் மொழியியல் துறைத் தலைவர், மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர், திராவிட மொழியியல் கழகத்தின் முதுநிலை ஆய்வாளர், ஆழ்நிலைத் தியானத்தின் தேசியக் குழு உறுப்பினர் -எனப் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்து தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர். சட்டம், வரலாறு, உளவியல், தத்துவம்...