""பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே.... சீனக் குடை பிடிக்க அனுமதி "" செய்தி சொல்லும் கல்வெட்டு.... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. சீனாக்குடை என்றால்... பட்டுக்குடை என்றொரு சொல் வழக்குண்டு". அதுபற்றிய அடியேனின் பின்னூடம் இஃது. தினமலர் நாளிதழின் இணயப்பக்கத்தில், 25 - 6 - 2010 ஆம் நாள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் அன்பர் கணேசன் அவர்களின் பேட்டி புகைப்படத்துடன் வந்துள்ளது. அதனை அப்படியே அன்பர்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத் தொடர்பு: அவினாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு. மாற்றம் செய்த நாள்: ஜூன் 25,2010 03:12 அவினாசி: ""தமிழகத்தில் இருந்து சீனாவுக்கு வணிகத்தொடர்பு இருந்துள்ள செய்தி பற்றி, அவினாசியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன,'' என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். அவினாசி, வ.உ.சி., குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேசன்; ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியரான இவர், கொங்கு மண்டலக் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகி...
ART - LITERATURE - CULTURE