Skip to main content

Posts

Showing posts from December, 2021

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் நாடாண்ட நாடாரின் வரலாறு.... ...(Seran Arul)

நன்றி:பாண்டிய நாடாள்வான் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் நாடாண்ட நாடாரின் வரலாறு..... சூரிய சந்திர குலத்துக்கு ஆயிரம் வரலாறு உண்டு, அதில் ஒன்று  கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாக்கண்டத்திலுள்ள கிரீஸ் தேசத்தினின்றும் "கிளமென்ஸ்"என்ற சரித்திர ஆசிரியர் ,தம் உலக சுற்றுப்பிராயணத்தின் இடையே இந்தியாவிற்கும் வந்திருக்கிறார்.அலக்ஸாந்திரியா பட்டணத்தில் பிறந்த அவர் லத்தீன் பாஷையில் 'பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரே( periplus maris erythrae) என்ற பிரபல சரித்திர புஸ்தகம் ஒன்றை இவர் இயற்றிருக்கிறார்.அப்புத்தகத்தில் நாடாண்ட சூரிய சந்திர குல சத்ரிய சான்றோர்களின் அறிய வரலாற்றுத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன,அவை பின்வருமாறு 1.இந்தியாவின் மேல் கடற்கரையில், மைசூருக்கு மேற்கே அக்காலத்தில் அரசுபுரிந்த சாலிவாகணனைச் சேர்ந்த அரசர்களுடைய ஆட்சி முற்றிய பின் சான்றான்களின் ராஜாங்கம் வலுவடைந்தது 2.தென்கன்னடம் ஜில்லாவைச் சார்ந்த கலியாணபுரம் என்னும் துறைமுகம் (சாலியவாகண)சாராகனன்கள் காலத்திற் சிறப்புற்று விளங்கிப் பின்னர் சான்றார்களின் ஆளுகையிலும் செழிப்புற்று ஓங்கிற்று. 3.ஏதேனும் கிரேக்கக் கப்பல் அத்துறை...

பிரதோஷம் வழிபாடு

ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் இன்று தேய்பிறை பிரதோஷம் ( 02/12/2021) 🙏ஓம் நமசிவாய 🕉பிரதோஷம் என்றால் என்ன..? 🕉சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. 🕉சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன...

வைத்தீஸ்வரன் கோயில்

வைத்தீஸ்வரன்_கோவில் *************************************** நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாதர் சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்... பொதுவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவன் இந்த ஸ்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்... 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது ஸ்தலத்தின் சிறப்பு... மக்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க பூலோகம் வந்த தன்வந்திரி முறையாக மருத்துவம் பார்க்காததால், சிவன் மருத்துவராகவும், அம்பிகை மருத்துவச்சியாகவும் தோன்றியதாக ஐதீகம்... தல வரலாறு ******************** சுமார் 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோவில் ஆகும்.... இந்த ஸ்தலத்தில் இறைவன் சிவபெருமான் வைத்தியநாதர் என்றும், அம்பாள் தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்... இந்த வைத்தீஸ்வரன் திருக்கோவிலுக்கு #புள்ளிருக்கு_வேளூர் என்ற வேறு பெயரும் உள்ளது... #புள் என்ற சடாயு பறவை ராஜனும், #இருக்கு என்ற வேதமும், #வேள் என்ற முருகப்பெருமானும், #ஊர் என்ற சூரியன் ஆகிய நால்வரும், இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது... கோவிலின் குளம் சித்தாமிர்தம் குளம் என்று அழ...