உலகின் முதல் நடராஜமுர்த்தி தரிசனம். அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில், செப்பறை (தாமிரசபை) இராஜவல்லிபுரம். தில்லை ஆனந்த கூத்தப் பிரான் செப்பறை வந்து சேர்ந்த வரலாறு சுருக்கமாக.... உலகின் முதல் நடராஜர் சிலை. (சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை..) அழகிய கூத்தர் எழுந்தருளியுள்ள தாமிரசபையே -செப்பு அறை- செப்பறை என்று தலத்தின் பெயரானது. சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான். அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான். திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களு...
ART - LITERATURE - CULTURE