தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக விளங்குகிறது கருங்குளம் வெங்கடாஜலபதி திருக்கோயில். மூலவர் வெங்கடாஜலபதி தனித் தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக, சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தினை பொறுத்தவரை மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். சைவ-வைணவ இணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது இத்தலம். சப்த ரிஷிகளும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து வேத வேள்வி புரிந்து வந்தனர். வேதவதி எனும் தீர்த்தத்தில் தங்கியிருந்தனர். அப்போது, ஸ்வேத முனிவரிடம் வகுளகிரி மலையானாகிய வைகுண்டநாதரின் புகழை கூறுமாறு பிற முனிவர்கள் வேண்டிக் கொண்டனர். அவர் விரிவாகக் கூறினார். பாஞ்சல நாட்டை சித்ராங்கதன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கிருதமாலா. சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த அவனுக்கு தன் முப்பதாவது வயதில் வயிற்று வலி ஏற்பட்டது. ராஜ வைத்தியம் தோற்றுப் போனது. நீங்காத வலியால் அவதிப்பட்டான். இதற்கு மரணமே தேவலாமோ என்று எரிச்சலுற்றான். அப்போது நாரதர் அங்கே வந்தார். அவனுடைய வேதனையை க...
ART - LITERATURE - CULTURE