தோஷம் செவ்வாய் தோஷம் : செவ்வாய்க்கு அங்காரகன் , குஜன் என்ற வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் தோஷம் திருமணப் பொருத்தத்துடன் , இதுவும் இருவருக்கும் சமமாக உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். செவ்வாய் ஜென்ம லக்னம் , சந்திரன் , சுக்கிரன் இம்மூன்றுக்கும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் , ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து தோஷம் பெற்றிருந்தாலும் , சூரியன் , குரு , சனி , ராகு , கேது இவர்களுடன் சேர்ந்தோ அல்லது இவர்களால் பார்க்கப்பட்டா லோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு. அன்றியும் செவ்வாய் மேஷம் , விருச்சிகம் , மகரம் , சிம்மம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷ பரிகாரம் உண்டு. திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் எப்படி பார்க்கப்பட வேண்டும் என அறியலாம். அ) ஆண் , பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்க வேண்டும். ஆ) ஆண் , பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்கக் கூடாது. இ ) ஆண் , பெண் இருவருக்கும் தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்டபடி அமையாவிட்டால் பொருத்தம் இல்லை. அன்றியும் செவ்வாய் தசை இருவருக்கும் ஏற்கனவே முடிந்...
ART - LITERATURE - CULTURE