தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகி றார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் 'அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே பழனி மலை'. தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டாவராக வீற்று உள்ளார். புராதான காலத்தின் துவக்கம் முதலே சித்தர்களும், முனிவர்களும் பழனி மலையில் தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் அதிகப் புனிதத் தன்மையை அடைந்தது. பல மன்னர்களும் கொடையாளிகளும் அந்த ஆலயத்துக்கு பல வகைகளிலும் தங்களுடைய ஆதரவை வழங்கி உள்ளார்கள். தமிழக முன்னணிப் பாடகர்கள் பலர் தண்டாயுதபாணியின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய தமிழ் பாடல்களைப் பாடி உள்ளார்கள். துடித்...
ART - LITERATURE - CULTURE